திருப்பரிசு



இருவது வரிசத்துக்கு முன்ன உள்ளங்கைக்கடக்கமான குட்டிப்பெட்டில போட்டு ஒரு மைக்ரோ குரான் நண்பர் ஒருத்தர் பரிசாக்குடுத்தார். அதுல போட்டுருக்கத படிக்க ஒரு பூதக்கண்ணாடியும். அப்ப சிறுவயசுல சிலித்துகிட்டு சுத்தினதால அதெல்லாம் பொக்கிசமா வச்சுத் திரிஞ்சேன். காலவோட்டத்துல அந்தப் பரிசு எங்க எப்பிடி காணாமப்போச்சுன்னு தெரியல. இப்ப மறுக்கா அப்பிடி ஒரு பரிசுக்குர்ஆன வீட்ல பாத்தேன். யாரோ வீட்லருக்க பொடிசுகளுக்கு கிப்ட் பண்ணிருக்காங்க போல. இப்ப இந்தப்பரிச பாக்க அபத்தமாத்தோணுது. குர்ஆனோட பர்ப்பசையே இப்பிடியாப்பட்ட பரிசுகள் கேலிக்குள்ளாக்கறாப்லயும் தோணுது. ஆல்சோ இதுல கலைச்செழுமை இருக்கான்னா அதுவுமில்ல. இதுவே கையால குறுக்கி எழுதப்பட்டதுன்னா அதுக்கு ஒரு மதிப்பிருக்கும். வெறும் ஃபாண்ட்ட சின்னதாக்கி ப்ரிண்டிங் மிசின்ல நிமிசத்துல இப்பிடி மொத்தரேட்டுல அடிச்சுத்தள்றதுல என்ன சிறப்பு இருந்துடப்போகுது? மற்றும் இத யாரும் வாசிக்கப்போறதில்ல. அதுல உள்ள என்ன அடிச்சிருக்குன்னு கூட பலருக்குத் தெரியப்போறதில்ல. வசனங்கள் மிஸ்ஸிங்கோ, பேப்பர்கள் தப்பா ப்ரிண்ட் செய்யப்பட்டிருந்தாலோ, இல்ல குர் ஆன் வசனத்தத்தவிர வேற எதயுமோ அடிச்சிருந்தாக்கூட தெரியாது. ஒரு நம்பிக்கையில பக்தியாவும் ஆசையாவும் வாங்கி அலமார்ல வச்சிக்கிடுறாங்க பாய்மக்கள். அதுவும் இது கண் படுறாப்ல இருக்குமான்னா அதுவும் கெடையாது. இத்துணூண்டு இருக்கறது எப்பிடி அல்மார்ல இருந்தாத்தெரியும்? நாமளா எடுத்துக் காட்டினாத்தான் உண்டு. And இப்பிடி துக்கடா சைஸ் குர்ஆன எல்லாரும் ஆனமட்டும் பாத்திருக்கவும் செய்வாங்க. ஆக இதுனால விளையுற ஒரு நன்மையும் இல்ல. சும்மா தற்காலிக சந்தோசத்துக்கு வேணா வாங்கி இப்பிடி வீட்ட அடச்சு வச்சுக்கிடலாம். அல்லாசாமி இத படிங்கடா, படிக்கறது மட்டுமில்லாம ஆராஞ்சு பாருங்கடானு தலப்பாடா அடிச்சிக்கிறாப்டி குர்ஆன்ல. அது அநாவசியம், மைக்ரோ குர் ஆன் அடிக்கிறோம் பாருன்னு சிலாவலிச்சிட்டுருக்குது பாய்ச்சமூகம். 





--==--==--==--


இவன நம்பிலாம் மனுசன் ஏற முடியுமா வண்டில? சாவறதுனா நீம்போயி சாவுடா பேப்பயலே, எதுக்கு உள்ள இருக்கவனும் ஒங்கூட வரனும்? 



ரேபிடோ ஆட்டோவில போறதவிட பைக்குல போறது சுவாரசியமா இருக்கு. 80% ஆட்கள் எப்பிடியாச்சும் பேச்சுக் குடுக்க ஆரமிச்சு அவனுகளோட கதைகள சொல்ல ஆரமிச்சிடுறானுக. நாம சும்மா ஊங்கொட்டிட்டுப் போனாப்போதுமாருக்கு. இந்த மேற்குறிப்பிட்ட ரைடுல அந்தாளு எதோ ஒரு கம்பனியில ஐயெஸ்ஸோ ஆடிட்டரா இருந்தாப்டியாம். வேலைலாம் நல்லாத்தான் இருந்துச்சாம். ஆனா பிசினஸ் பண்ணனும்னு ஒரு வேகம் வந்து வேலைய குவிட் செஞ்சுட்டு சேத்து வச்ச காசல்லாம் வச்சு பிசினஸ் ஆரமிக்கலாம்னு இருந்தாப்டியாம். என்ன பிசினஸ்யான்னதுக்கு இந்தியாலருந்து காய்கறி வஸ்துகள கல்ஃபுக்கு ஏத்துமதி பண்றதாம். அதுக்கு லைசன்ஸ் எல்லாம் வாங்கி வச்சுட்டேன்னு அதுக்கான அட்மினிஸ்டர் வேலைகள் எல்லாத்தையும் வெளக்கினாப்டி. ஆனா பிசினஸ் ஆரமிக்க முன்ன அவங்க ஒய்ஃபு ப்ரெஷர் போட்டு ஒய்ஃபோட அம்மாக்கு ஒடம்புக்கு முடியலன்னோ அல்லது வேற தேவைன்னோ எல்லா காசையும் வாங்கிட்டாங்களாம். அதனால பிசினஸ் செய்ய முடியாம போச்சுன்னு ஒய்ப் சைடு குறித்த கம்ப்லைண்ட்டா வாசிச்சாப்டி. சரிய்யா எக்ஸ்போர்ட் பிசினஸ் ஆரமிக்கிற சரி, ஒனக்கு ஆர்டர்லாம் வந்துருச்சான்னதுக்கு, அதுலாம் இன்னம் வரலன்னாப்டி. அப்பறம் எத வச்சு ஆரமிச்சனு கேட்டா கல்ஃபுல அந்தாளோட ப்ரெண்ட்ஸ் சிலர் இருக்காங்களாம், அவனுக கல்புல நெறைய விஜிடபில்ஸ் சேலாவுது, நீ அங்கருந்து அனுப்பி வைய்யி நாங்க இங்க வித்து காட்றோம்னு சொன்னானுகளாம். சரி விஜிடபில்ஸ் நீ ப்ரொடூஸ் பண்றியானு கேட்டா அதுவும் இல்லியாம். குஜராத்லருந்து வாங்கி அவனுக மூலமாவே எக்ஸ்போட் பண்ணுவாப்டியாம். ஆக ஆடரும் ரெடி இல்ல, ப்ரொடூசும் உன்னுதில்ல சப்லைக்கும் இன்னொருத்தன நம்பித்தான் இருக்கனு மனசுல நெனச்சுட்டு, மேல சொல்லுங்க பாஸ் ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்குன்னேன். அந்தாளும் விடாம எப்பிடியாச்சும் பிசினஸ்ல ஜெயிச்சிருவேன் பாஸ், அதுவரைக்கும் சாப்பாட்டு தேவைக்காக ரேபிடோ ஓட்டுறேன்னாப்டி. வயசு 55க்கு மேல இருக்கும். நீ மேல பேசுன்னுட்டு திஸ் முமண்ட்ல கேட்டுட்டு வந்தேன்...





Comments