தலைவிடு

 ஒரு நாள் குலுங்கிட்டே பராக்கு பாத்துட்டுருந்தேன். ஆட்டோல போனதால குலுக்கல். அப்ப தூரத்துல, வெகுதூரத்துல ஒரு லேடி காக்காய்க்கி டிஃபன் குடுத்துட்டுருந்தாங்க. ரெண்டு மூனு நாலு காக்காய்க அந்தம்மாவச்சுத்தி வந்துட்டிருந்துச்சு, ஆல்ரெடி ரெண்டு காக்கா மொதல் பந்தியில உக்காந்து சாப்ட்டுட்டு இருந்துது. அவங்களுக்கும் காக்காய்சுக்கும் இருந்த கெமிஸ்ட்ரிய பாத்தா அது ரெகுலரா நடக்குற இவண்ட்டுன்னு புரிஞ்சது. 


ஆகா என்னே பறவைநேயம்னு மொதல்ல தோணினாலும் அப்பறமா யோசிச்சா எதோ ஒன்னு உறுத்துச்சு. அந்தக்காக்காய்களுக்கு அவங்க சோறு போடுறாங்களா இல்ல சிறை வைக்கிறாங்களான்னு. ஒரு இட்டிலி சோத்துருண்டையக் காட்டி அந்த காக்காங்க சுதந்திரமா பறந்து திரியறத தடுத்து சிறை வைக்கிறாங்கனு தோணுச்சு. டெய்லியும் இந்த நேரத்தில இந்த எடத்துக்கு வந்தன்னா கொஞ்சம் சோத்துப்பருக்க ஓசில சுளுவா கெடைக்குங்கறது விடுதலையா? 


நாமளும் டெய்லி பேண்ட்டு சட்ட மாட்டி ஆபிசுக்கு அடிச்சுப்புடிச்சுப் போறமே அதுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்? ரீசண்ட்டா ஒரு மீம் பாத்தேன், நாம வீட்ல குடியிருந்து ஆபிஸ் போறமா இல்ல ஆபிஸ்ல குடியிருந்து வீட்டுக்கு வரமான்னு. இப்பிடி எதுக்கு எது பண்றோம்னே தெரியாதளவு கலந்து கட்டி லைஃப்னு ஒன்னு போயிட்டிருக்கு. அத லைஃப்னு மொதல்ல சொல்லலாமான்னே தெரியல. எக்சிஸ்டன்ஸ்னு வேணா சொல்லலாம். 


காக்காய்க்கி சோத்தப் போட்டு அத ஒரு ருட்டீனுக்குள்ள மாட்ட வெக்கிறாப்லதான நம்ம வேலைகளும் நம்மள சிக்க வெச்சிருக்கு? அதுக்குன்னு எல்லாத்தையும் அத்து விட்டுட்டு ஜாலிலோனு சுத்தலாம்னு சொல்ல வரல. விருப்பப்பட்டவங்களுக்கு செஞ்சிகிட்டு, விருப்பப்பட்டவங்கள செஞ்சிக்கிட்டு, விருப்பப்பப்பட்டத செஞ்சிட்டு இருக்கறதுதான வாழ்க்க? அப்பிடித்தான இருக்கனும்? இல்ல இல்லையா?


-=-=-=-


நம்மளோட எக்சிஸ்டிங் போன் டொங்கலாகி சக்கராத் நெலமைக்கி போயிட்டதால தேர்ட் ஹேண்ட்ல ஒரு சேம்சங் போன் வாங்குனேன். அது அயல்நாட்டினர் யூஸ் பண்ணது. எல்லாத்தையும் எச்சி தொட்டு அழிச்சுட்டு அக்கௌண்ட் கிரியேட் பண்றப்ப இந்திய நம்பர குடுத்தா அந்தத்தாய்லி அவனே இந்தியான்னா வாந்திதான்னு பிக்ஸ் பண்ணிட்டு வாந்தில மெய்ல் அனுப்பறான். இத்தனைக்கும் லொகேசனோ மொழியோ எதுமே சூஸ் பண்ணல. வெறும் இந்திய நம்பர் குடுத்ததுக்கே இந்தப்பாடு. பூராப்பயலையும் செமிச்சிரனும். 








-=-=-=-

கிரிஜா சொன்னால் அதில் உண்மை இருக்கும். படிக்க. நடக்க.







Comments