ஞாயிறு மதியங்கள் குறித்து ஒரு மகான் சிலபல கோட்சுகளும் கவிதையும்லாம் எழுதிருக்கார். ஞாயிறு மதியத்தப்போலவே மற்றொரு டைமிங்கும் கொஞ்சம் குறிப்பிடத்தக்கது. ஏன் குறிப்பிடத்தக்கதுன்னா அதுவும் யுனீக்கானது, ஒரு மாதிரி தெரப்யூட்டிக்கானது. அது காலைல பத்தர மணிக்கி மேல பன்னண்டர மணிக்குள்ளயான நேரம். ரயில் கடந்த டேசன், கல்யாணம் முடிஞ்ச மண்டபம், சாவு எடுக்கப்பட்ட கேத வீடு மாதிரி இந்த நேரத்துக்கு ஒரு அமானுஷ்ய அமைதி இருக்குது. நண்டுகள் ஸ்கூலுகளுக்கு கெளம்பிப்போனதும், டைடக்கின் பண்ணி அலுவலர்கள் கடைகண்ணிகளுக்குப் போனதும் நிகழும் இந்த ஜென் நேரம்.
சினிமாக்கள்ல டே/நைட்டுனு எத்தன சீன் பாத்துருப்போம். அதுல பொதுவா எந்த மணித்தியாலங்கள் காட்டப்படுதுனு கவனிசிருக்கீங்களா? மணி சாராருந்தா கோல்டன் அவர். அவரும் கோல்டன், அவர் காட்டும் அவரும் கோல்டன். மத்தவங்க ஆபிஸ் கெளம்பர/திரும்பற பரபர நேரம், சாந்திரம் சூரியன் சாஞ்சதும் வர புலூஸ்கை நேரம், நைட்டு பார்ட்டி டைம் இப்பிடிக் காட்டுவாங்க. தியாகராஜன் குமாரராஜாவப் பிடிக்கும் மில்லியன் காரணிகள்ல ஒருலியன் காரணம் இவர் தான் இந்த post 1030am நேரத்த காட்றது. அதுவே ஒரு புதுவித ஃபீல குடுத்துடுது.
திகு மட்டுந்தான் தொக்கா, வேற பலரும் காட்டிருக்காங்க, ஸ்க்ரீன்ல ஓரமா 10:30ஏம், 11:63ஏஎம்னுலாம் வந்துருக்கேன்னு சொன்னா புளிச்சுனு கொட்டத்தான் வேணும். அந்த நேரத்த காட்டறது வேற, அந்த நேரத்த அப்பிடியே கடத்தறது வேற. ஆரண்ய காண்டமாருக்கட்டும் சூப்பர் டீலக்சாருக்கட்டும். ரெண்டுலயும் அத்தன சுவாரசியமா காட்சிகள் ஒருபக்கம் நவுந்துட்டிருக்கப்ப இன்னொரு சைடு மந்தமான சைலன்ஸ் இருக்கும். அதுக்குக் காரணம் காட்சிகள் நடக்கற அந்த நேரத்த விசுவலாவும் துணையொலிகளாலும் உணர வச்சதுதான்.
இந்த நேரத்துணுக்க அனுபவிக்க எல்லாருக்கும் குடுத்து வச்சிருக்குமான்னா இல்ல. ரோட்டோரத்துலயோ ரோட்டுக்கு நடூலயோ வீடிருக்கவங்களுக்கு இது வாய்க்காது. நல்ல ஒதுங்குன தெருவுலயோ ரெசிடென்சியல் ஏரியாலயோ வாய்ப்பதிகம். இந்த நேரமும் கொஞ்சம் சுணங்க வைக்கிறதுதான். பசங்கள ஊட்டுக்காரர்கள வேலைக்கு அனுப்பிட்டு இல்ல லேடிசுகள் ஆஞ்சு ஓஞ்சு கொஞ்சம் அசர்றதும் இந்த நேரந்தான். அப்பிடி நா ஒன்னும் பிசி பீப்பில் கெடையாதுங்கறவங்களையும் அந்த அசாத்தியமைதி கண்ண சொக்க வெச்சிரும். மதிய நேரத்து சோத்து மயக்கம்னு ஒரு படம் வந்துச்சே. அந்தப்படத்த பாக்கைலல்லாம் நா தூங்கிருவேன். பரிசோதனை முயற்சியாவே பண்ணிப்பாத்தேன். தூங்க வச்சிருச்சு. அதுக்குக் காரணம் அந்த கலர் டோனும் அந்த நேரமும் தான்.
எப்பிடி சில குறிப்பிட்ட நேரங்கள் ப்லெசண்ட்டா ஃபீல் பண்ண வெக்கிதோ அதே மாதிரி இந்த திகு நேரம் ஜிகுஜிகுனு வெக்கும்.
=-=-=-
சமீபத்தில் ஓர் ஆஸ்பத்திரி விஜயம். நட்புகள் பதற வேண்டாம், இன்னும் சிலபல வருடங்களுக்கு பாடிக்கு எதுவும் ஆகாது, உயிர் தப்பிவிடும் என டாக்டர் அறுதியிட்டு உறுதி கூறியிருக்கிறார். வழக்கம்போல சிலபல கண்ணில் பட்டன.
இப்பிடி கவர்மண்ட் கதறிகிட்டு நோட்டிஸ் போர்டுலியே எச்சரிக்கை விடுக்குதுன்னா எப்பேர்ப்பட்ட கிறுக்குத்தனம்லாம் பாத்துருப்பானுக கிறுக்குசுப்பையனுக?
போலவே பல எடங்கள்ல பாத்தாச்சு. ஹோர்டிங், பேம்ப்லட், கார்டுகள்னு பொதுவா இந்த டிடீபில இருக்கவனுக டிப்போ எதுவும் செக் பண்றதே இல்ல. முந்தின்னா பரவால்ல, இப்ப கூகுலாண்டகை இருக்கைல என்ன கேடு? ஒரு தட்டுல தெரிஞ்சிடப்போகுது. பிரச்சினை என்னன்னா, நாம சரியா பண்ணிருக்கமானு பாக்கணுன்ற அறிவுக்கூறுபாடே எவங்கிட்டயும் இல்ல. நாம போட்டது சரிதாங்குற மெதப்பிருந்தா எப்பிடி க்வாலிட்டி செக் பண்ணிப்பாக்கத்தோணும்?
NCERT Text books are absolute sangi material only. இன்னொரு சார்பில்
ReplyDeletehttps://youtu.be/i0pO9wcnhCE?feature=shared
https://youtu.be/v8sj8pHSFuE?si=ZTzzczWadt0Se-s3
ReplyDeleteAll these are text book material