கல்லா மண்ணா?

உங்களுக்கு ஒரு ஆளிருந்து அந்த ஆளும் நீங்களும் ஒரு ரூம்ல (தள்ளி தள்ளி) உக்காந்துருக்கீங்கனு வைங்க. 

நீங்க ஒரு வேல பாத்துட்டு இருக்கீங்க. 

உங்க ஆளு வேற ஒரு வேல மும்முறமா பாத்துட்டு இருக்காங்க.

இப்ப நீங்க மும்முறமா வேல பாத்துட்டு இருக்க உங்க ஆள ஓரக்கண்ல பாத்துட்டே இருக்கீங்க. 

ஆரம்பத்துல தாம்பாட்டுக்கு வேலைல ஈடுபட்டுட்டிருந்த உங்க ஆளு, திடீர்னு எதோ உறுத்த, உங்களப் பாப்பாங்க. அப்பிடி பாக்கறப்ப, 

நாம் பார்க்க எத்தனிக்கையில்

நம்மை ஏற்கனவே பார்த்துக்கொண்டிருக்கும்

கண்கள், கண்களல்ல,

அவற்றுக்குக் காதல் என்று பெயர்

எனும் கவிதைக்கொப்ப, பும்முறுவுவாங்கல்ல?

அது எவ்ளோ அழகா இருக்கும்?





இப்ப நீங்க எந்த சத்தமும் குடுக்காம, ஜஸ்ட் ஓரக்கண்ணாலதான் பாக்கறீங்க, அது எப்பிடி அவங்களுக்கு தெரிஞ்சது? எப்புடியோ தெரியுதுல்ல? அதுதான் இயற்கையின் ஓர் அதிசயம். 

இதே அதிசயத்துனாலதான் ஒர்க்ப்ரம்ஹோம் அரசியல்வாதி விஜய் தன்னோட இடுப்ப பாக்கறத ஓவராக்டிங் ஜோதிகாவினால கண்டுபுடிக்க முடிஞ்சது. பூராம் ப்யூர் சயன்ஸ். 


எக்சாம் எனும் பரிட்சை ஹால்ல கேக்கற கேள்விக்கி பதில் தெரியுதோ இல்லையோ, நாம பாட்டுக்கு செவ்வனே எழுதிட்டிருப்போம். அதுவே அந்த இன்விஜிலேட்டர் நம்மள பாத்தாப்டின்னா நமக்கு முட்ட ஆரமிச்சிரும். (இப்பிடித்தான் வேலைக்கி சேந்த புதுசுல நம்ம அப்லிகேசன்ல எதுவோ பொளந்துகிச்சு. மொத்த டீமும் நைட்டு முழுக்க உக்காந்து ஒக்குட்டுட்டு இருந்துது. அப்பத்தான் சேந்த ஜூனியராதலால நாமளும் நம்ம சத்துக்கு காப்பி பேஸ்ட்டுகள அள்ளித் தெளிச்சிட்டு இருந்தோம். பெரிய இஷூங்கறதால பெரிய முதலைகளும் அன்னக்கி ராத்தங்கிருச்சு. ஒவ்வொருத்தரும் பண்ற வேலைகள பாத்துட்டே வந்த நம்ம பாசோட பாசு எம்பின்னால வந்து நின்னு என்ன கோடடிக்கிறேன்னு பாத்தாப்ல. குருடன் யானைய தடவி கத சொல்றாப்ல அந்த monolithத்த தடவிட்டிருந்தேன். எங்கருந்து என்ன எரர் அடிக்கிதுன்னே தெரியல. ஒவ்வொரு முக்கிய பாய்ண்ட்டுக்கும் கீழ அண்டர்லைன் போடுறாப்ல ஒவ்வொரு வரிக் கோடுக்கும் கீழ console.log போட்டுப் பாத்துட்டு இருந்தேன். இந்தாளு பின்னாடி வந்து நின்னுட்டான். அன்னக்கி மட்டும் டைட்டு ஜட்டி போட்டுட்டு போவலன்னா ஆயே வந்துருக்கும். எதோ பெங்களூர் குளுரோட புண்ணியத்துல டைட் ஜீன்ஜட்டி காப்பாத்துச்சு. ஒரு கன்சோல் லாகு சேக்கறது, மேவன் பில்டு பண்றது அவுட்புட்ல undefinedடுனு பாத்ததும் மறுக்கா புது கன்சோல் லாகு போடுறதுனு நானும் சளைக்காம வலு குடுக்க ஆரமிச்சதும் இவங்கிட்ட நின்னா அது நமக்குத்தான் ஔமானம்னு நெனச்சு பெரிய பாசு வெலகிட்டாப்டி. நைட்டு மூனு மணிக்கி நடக்குது இது. மற்க்க மாட்டேன் டூட் அந்த நாள.)

இதுல கவனிக்க வேண்டிய அம்சம் என்னன்னா, நம்மள யாரும் கவனிச்சா நாம பதட்டமாகிடுறோம். பதட்டம் ஆகலன்னாலும் நம்ம செயல்பாட்டுல அல்லது இயல்புல ஒரு மாற்றம் வந்துருது. தன்ன கவனிக்கனும்னே சிலபல ஆபாயில்கள் சிலாவலி வேலையெல்லாம் செய்யும். அந்த அய்ட்டங்கள மண்டைல பத்தி விட்டுறலாம். ஆனா இந்த அப்சர்வருங்கற அய்ட்டம் அறிவியல்லயும் சரி, தத்துவத்துலயும் சரி, ஆன்மிகத்துலயும் சரி, நீக்கமற நிறைஞ்சிருக்கு. 


"The observer is the observed."  - அப்பிடிங்கற JKவோட வாக்கியம் ரொம்ப பேமஸ். 

நாம கடவுள பாக்க அலையுறோம். கடவுள் (இருந்தார்னா) நம்மள பாத்துட்டிருப்பாப்டி. அப்ப, நாம பாக்க விரும்பற அவர் பாக்கற நம்மள அவர் பாக்கறப்ப அவர் நம்மள பாக்கறாரா இல்ல நாம பாக்க விரும்பற அவரயா? - இத சொன்னது ஜேகே இல்ல, அயம் தான். 


பிசிக்ஸ்ல double-slit experiment அப்பிடின்னு ஒன்னு இருக்குறது பலருக்கு தெரிஞ்சுருக்கும். நம்மள
"Wammaala இதாண்டா சினிமா"னு பிரம்மிக்க வச்ச yet another concept. 






இந்த எக்ஸ்பரிமண்ட்டப் பத்தி புளிபோட்டு எழுதலாம். ஜாலியாருக்கும். ஆனா படிக்கறவங்களுக்கு போரா இருக்கலாம். அதனால நீட்டி மொழக்கி எழுதாம ஒரே மீம்ல சொல்றேன். இத விட க்ரிஸ்டல் க்லியரா சொல்ல முடியாது. 




சரி ரெண்டு மீம்ல சொல்றேன். 






இதையும் மீறி படிச்சே ஆவேன்றவங்களுக்காக உப்பு, புளி. மொளகாய் இங்கே:


சயண்டிஸ்ட்ஸ் என்ன பண்றாங்க, ஒளித்துகள்கள துப்பாக்கிலருந்து புல்லட் வராப்ல டிஷூம் டிஷூம்னு செவுத்துல ஷூட் பண்றாங்க. 

ஒரு பழைய அட்டப்பெட்டிலருந்து ஒரு அட்டைய பிச்சு, அதுல ரெண்டு ஸ்டம்ப் மாதிரி ஓட்ட போடுறாங்க. 

அப்பறம் அந்த அந்தத் தடுப்ப செவுத்துக்கும் ஒளித்துப்பாக்கிக்கும் நடூல வெக்கிறாங்க. 

இப்ப ஒளித்துப்பாக்கி ஒளித்துகள இந்த தடுப்பு மேல அடிச்சிட்டே இருக்காங்க.

சப்போஸ் அந்த தடுப்பு மேல படுற துகள் என்ன பண்ணும்? அங்கயே ஒளிச்சமாதி ஆகிரும். 

ஆனா ஓட்ட வழியா போற துகள்? செவுத்துல போயி முட்டும். 

சுடுறது ஒரே துப்பாக்கி. ஒளித்துகள் ரெண்டு ஓட்டைல எந்த ஓட்டை வழியா வேணும்னாலும் போவக்கூடும். அப்பிடி ரெண்டு ஓட்டை வழியாவும் போன ஒளி செவுத்துல போயி படும்ல. அப்பிடி தொடர்ந்து பட்டுட்டே இருந்தா என்னாகும்? எறும்பு ஊரக்கல்லும் தேயும். ஒளி ஊர்ந்தா தேயாது. ஆனா நியண்டர்தால் வடக்கனுக கண்ட எடத்துலயும் துப்பி வெக்கற பான் கறையாட்டம் ஒளிக்கறை செவுத்துல விழும். ரெண்டு ஓட்ட வழியா வந்து விழுந்தது ரெண்டு கறையாத்தான இருக்கணும்? அதுதான மனுசத்தனம்? அப்பிடித்தான் ஒளியும் விழுந்துச்சு. 

பாலச்சந்தரோட இரு கோடுகளாட்டம் தெரிஞ்சது செவுத்துல. 

சரி இது ஓடிகிட்டு இருக்கட்டும் இந்தா போயி டீ குடிச்சுட்டு வந்துர்லாம்னு சயண்டிஸ்டுக போய்ட்டு வந்து பாத்தா சீரங்கம் கோவில் செவுராட்டம் கோடு கோடா இருக்கு செவுத்துல. 

அடங்கொக்க மக்கா என்னடா இதுன்னு மறுக்கா டெஸ்ட் பண்ணிருக்கானுக. அப்ப பாத்தா ரெண்டு கோடு தான் விழுந்துருக்கு. ஒரு வேள ரொம்ப நேரம் லைட்டடிச்சா நெறய கோடு வரும் போலனு மணிக்கணக்கா பண்ணிருக்கானுக, ம்ஹூம், ஊஹலக ஜலபுல தனுசானுருச்சு லைட்டு. சரி இந்தா ஒன்னுக்கு உட்டுட்டு வருவோம்னு போய்ட்டு வந்து பாத்தா மறுக்கா கோடு கோடாருக்கு. 

அப்பத்தான் அந்த உண்மைய கண்டுபுடிச்சானுக. நாம பாக்கறப்ப ஒரு மாதிரியும் பாக்காதப்ப ஒரு மாதிரியும் பிகேவ் பண்ணிருக்கு ஒளித்துகள். தட் கண் நோக்கினால் மண் நோக்குவாள். மண் நோக்கினால் என் நோக்கி, எலே நீ ஆர்டிஸ்ட்டுங்கற நிரூபிச்சிட்டலே என்பாள். 

சரி நேரடியா ஆளிருந்தா தான இந்த வேல பாக்குதுன்னு மறைந்திருந்துலாம் அந்த மர்மத்த பாத்தானுக. ஆனா எப்புடியோ தெரிஞ்சுகிட்ட ஒளி ங்கொப்பனுக்கும் பேபேன்னுருச்சு. 

தான் கவனிக்கப்படுறத எப்படியோ கவனிச்சிடுது ஒளி. இந்த கிண்டர்கார்ட்டன் புள்ளைகள லைன்ல போவச்சொன்னா மிஸ்ஸு பாத்தா ஒழுக்கமா லைன்ல போவும்ங்க. அப்பிடி இப்பிடி திரும்புனா கெய்யக்கெய்யனு லைனு கலஞ்சுரும். அதே வேலைய பாக்குது லைட்டும். 

பாய்மாருக தொழுகைல நிக்கறப்ப, நீங்க கடவுள பாக்கறதா நெனச்சுட்டு நில்லுங்கனு நபிகள் சொல்லிருக்காப்டி. அப்பிடி கற்பன பண்ணிட்டு நிக்க முடியலனு நபித்தோழர்கள் சொல்ல, சரி அதுக்கு கூறில்லாதவங்க கடவுள் உங்கள பாத்துட்டிருக்கார்னாச்சும் நெனச்சுட்டு நில்லுங்கனு சொன்னதா ஒரு அதீஸ் இருக்கு. இந்த அப்சர்வர் being அப்சர்வ்டு கான்சப்ட்ட இந்த தொழுகை சம்மந்தப்பட்ட அதீசோட பொருத்திப் பாக்கறேன். நம்மள ஒருத்தர் கவனிக்கிறார்னு சப் கான்ஷியசா நெனைக்கிறப்ப கொஞ்சம் கான்ஷியஸ்னஸ் வந்து ஓர்மையோட நிக்க வரும். அதுவே ஒரு வகையில வேற எங்கயும் கவனம் சிதறாம (கவனம் பெற்ற லைட்டு வேவா சிதறாத மாதிரி) போக்கஸ் பண்ணி மெடிடேடிவா இருக்க உதவும். முயற்சி பண்ணி பாக்கணும். ஆப்டரால் நமக்குள்ள இருக்கறதும் இறைவனின் நூர் ஆகிய ஒளி தானே?

இதக்கண்டி பாய்கள்ட்ட வித்தா செம்மயா போனியாவும். என் கெரகம் இங்க உக்காந்து பெண்டுக்கு வீலெடுத்துட்டிருக்கேன். 





Comments