விளம்பரம்

சில ஆண்டுகளாகத் தொடர்பே இல்லாமலிருந்து ஒரு காண்டாக்டிடமிருந்து திடீரென ஒரு நாள் காலை ஒரு மெசேஜ். 




இப்படி திடுதிப்பென்று ஆரம்பித்தால் ஒன்று கல்யாணமாகப்போகிறது, அல்லது கடன் கேட்கப்போகிறார்கள் - இப்படித்தான் இந்த பேட்டர்ன் சென்றிருக்கிறது இதுவரை. 

இந்த காண்டாக்ட்டுக்கு ஓரு சில வருடங்களுக்கு முன் எற்கனவே கல்யாணம் ஆகிவிட்டிருந்தது தெரியும். ஆகவே கேட்கவிருப்பது கடனோ என்ற ஐயம். அதெல்லாம் வசதியான வீட்டுக்குத்தானே வாக்கப்பட்டிருப்பது, அதனால் கடனாயிருக்க வாய்ப்பில்லை எனவும் சமாதானம் செய்துகொண்டது மனது. சரி ஒரு வேளை பிள்ளை பிறந்த சேதியோ எனவும் தோன்றியது. இல்லையே இதுவரை டைவேஸ் முதலிய டார்க் செய்திகளுக்குத்தானே நமக்கு ஓலை வரும், நற்செய்திகளுக்கெல்லாம் இராதே என நினைத்தவாறு பதிலுரைத்தேன். 




பதிலுரைத்தது ஒரு வேகத்திலிருந்தாலும், கடன்கிடன் கேட்டுடக்கூடாது ஏண்டவா எனும் பிரார்த்தனைகளுமிருந்தது நிஜம். குளிர்காலக் காலையில், வெளிச்சம் கூட வராத வேளையில் ஏழரைகள் கூடிவிடக்கூடாது என்ற எதிர்பார்ப்போடு இருக்கையில் அடுத்த ரிப்லை வந்தது. 



 இதைக் கண்டதும் தான் ஒரு நிம்மதிப் பெருமூச்சு வந்தது. ஹப்பாடா நல்ல சேதி என்று.




ஆனால் பெண்டிர்க்கு இருக்கும் வைராக்கியம் என்பது தனியே ஆராயப்படவேண்டிய ஒன்று. நாம் பார்த்ததிலேயே அதி இருண்மையான வாழ்க்கையைச் சந்தித்த நபர்களில் இவரொருவர். கிட்டத்தட்ட பத்தாண்டுகள். செல்வராகவன் கதையெழுதி அதை பாலா டைரக்ட் செய்தால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட கதை. எதுவுமே நிரந்தரமல்ல, hang on to it, things will eventually change என்பதற்கிணங்க இப்போது விடியலைப் பெற்றிருக்கிறது. 



நாம் செய்தது ஏதுமில்லை, ஆலோசனைகள் கேட்டபோது நாமறிந்த ஆப்சன்களைச் சொன்னது. அதன் நல்லது பொல்லாப்புகளைச் சொல்லி அதற்கேற்ப ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் சொன்னது மட்டுமே. ஆனால் அதை சிரமேற்கொண்டு, எல்லாவிடத்திலுமிருந்து கண்காணாது சென்று, புதியவற்றைக் கற்று, ஒரு பெரும் நிறுவனத்தில், அதுவும் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்து டண்டணக்கா என ஆடும் இத்தருணத்தில், தொடர்பற்ற எத்தனையோ சிறு வேலைகள் பார்த்து, தற்போது இப்படி ஒரு உறுதியான கரியரில் சேர்வதெல்லாம் KGF அளவிலான சாதனை. இவரின் முன்கதை அறிந்தால் இது எத்தகைய சாதனை என்பதை உணர முடியும். 

நம்மாலானது, நமக்குக் கிடைக்காத கைடன்சை நாமறிந்தோருக்கு வழங்குவது. இப்படி ஒரு வழி இருக்கிறது, சென்று பார் என நமக்குச் சொல்லும் முன்னத்தி ஏரில்லாத நிலையை நமைச்சுற்றி இருப்போர்க்கு இல்லாமலாக்குவது. உண்மையிலேயே அன்று சற்று ஓவர்வெல்மிங்காகவே இருந்தது. 


கற்றுக்கொள்ளும் ஆர்வமும் அதைவிட நன்றியுணர்வுமிக்க இவர் பல இடங்களுக்கு நிச்சயம் செல்வார் என்பது உள்ளங்கை வெள்ளிக்கனி. இன்னும் பத்தாண்டுகளில் இவர் இருக்கும் இடம் நாம் அண்ணாந்து பார்க்கக்கூடிய அளவில் இருக்கும் என்பதில் சந்தேகம் கிஞ்சித்தும் இல்லை. வாழ்க அவர் பல்லாண்டு. 




இதெல்லாம் ஏன் சொல்லப்படுகிறதென்றால், நம்மை நாடி வருவபர்க்கு நம் சக்திக்குட்பட்டு நம்மாலானவற்றைப் பகிர்ந்து வருகிறோம். அதைச் சிக்கெனப் பிடித்து ஏறுபவர்கள் ஏறுகின்றனர். அதை விடுத்து ஸ்டாக்கிங் செய்வது, அனானிமிட்டி தரும் தைரியத்தில் சைக்கோ வேலைகள் செய்பவர்கள் முகம் குப்புற விழுகின்றனர். அதற்காகச் சொல்கிறேன். பாடம் கற்பார்களா, சம்மந்தப்பட்டவர்கள்? 



-
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!




-

Comments