billion pavilion

லச்சாதிபதி கோடீஸ்வரன்னு சொல்றானுகல்ல, அப்பிடின்னா என்னனு ஒருக்கா பல்லுக்குத்திட்டே தேடிப்பாத்ததுல நல்ல தகவல்கள் நாலு கெடச்சது. அதுக்கு முன்ன இந்த லட்சம் கோடிங்கறத விட்டுட்டு மில்லியன் பில்லியனுக்கு மாறிக்கறது ஒடம்புக்கு நல்லது. ஏன்னா நம்மூருல மட்டுந்தான் அதக்கட்டிட்டு அழுதுட்டிருக்கானுக. வெளியூருக்காரனுகளுக்கு அப்பிடின்னா என்னனே தெரியல. ஒங்க நாட்டு/மாநில/ஊரு மக்கள் தொகை எத்தன மில்லியன்னு கேக்கறானுக, நாம இங்கருக்க கோடிகள லச்சங்களாக்கி அத மறுக்கா பத்துப்பத்து லச்சங்களுக்குக் கூறாக்கி அத மில்லியனுக்கு ஈக்குவேட்டி எண்ணிக்கைய சொல்றதுக்குள்ள குறுக்கு வலி வந்துருது. குலோபலைஸ் ஆகிவிட்ட உலகத்துல இனியேனும் அந்த ஒட்டட லக்ஷ், கரோடுகள கைவிட்டு millionகள pillionனிலேத்தி உருப்பட வழிபார்ப்போமாக.

நிற்க. 

இப்ப மில்லினியர் கதைக்கி வருவோம். ஒருத்தன எப்ப லச்சாதி/கோடீசுவரன்னு சொல்லுவோம்னா, definition என்ன சொல்லுதுன்னா அவனுகட்ட இருக்க கைக்காசு, அசையும் அசையா சொத்து, முதலீடு எல்லாம் சேத்து (நிலுவைக் கடன்கள் எல்லாம் கழிச்ச பிறகு),  லச்சங்கள்ல எஞ்சியிருந்தா அவன் லச்சாதிபதி. இதுவே கோடியில இருந்தா கோடீஸ். 

மில்லினியர்னா யாருகிட்ட அவனோட நாட்டு நாணய மதிப்புல இருக்க எல்லா வகைக் கடனையும் கழிச்சபின்னாடி காசாவோ சொத்தாவோ பத்து லட்சம் இருக்குதோ அவன் அந்த நாட்டு மில்லினியர். இது ஏன் அந்த நாட்டு மில்லினியர்னு சொல்றோம்னா பண மதிப்பு ஒவ்வொரு நாட்டுக்கும் மாறுபடும். இந்தியால இருக்க பத்து லச்சத்த வச்சு அவன இந்திய மில்லினியர்னு சொல்லலாம், ஆனா அந்தக்காச வச்சு அவன் ஜோடியா அமரிக்காக்கு ரெண்டு வாரம் டூரு போனான்னா மொத்தக்காசும் நக்கிட்டுப் போயிரும். அதனால ஒரு நாட்டுல மில்லினியரா இருக்கவன் எல்லா நாட்டுலயும் மில்லினியரா இருப்பான்னு சொல்ல முடியாது. (எனவே என்னாரை சகோதரர்களல்லாம் வாய்க்கு வந்தத பழிச்சுக்கொட்டாதீங்க. பாவம் அவனவனுக்கு என்னன்ன ப்ரச்சனைகளோ - பொதுநலம் கருதி)

பண வீக்கத்துல வீங்கிப்போன பல நாடுகள்ல ஒரு முட்ட வாங்கவே மில்லியன் கணக்குல கரன்சி கொண்டு போனும். அத வச்சு அவன மில்லினியர்னு சொல்ல முடியாதுல்ல. இதனாலயே பெரும்பாலும் மில்லினியர்கள அவ்வளவா ஆட்டைக்கி சேத்துக்கிட மாட்டாங்க. அவனுக வாங்கு திறன் நாடு நாடுக்கு மாறுபடுங்கறதால. 

இதுக்கு அடுத்த கட்டம் தான் பில்லினியர். ஒரு மில்லியன் அப்பிடிங்கறது பத்து லட்சம். ஒரு பில்லியன் அப்பிடிங்கறது ஆயரம் மில்லியன். அதாவது இவன் சாதா கோடீஸ்வரனில்ல, கொக்கர கோடீஸ்வரன். பத்து லட்சம் இண்ட்டூ ஆயரம்னா எவ்ளோ வரும்னு கால்குலேட் பண்ணித் தெரிஞ்சுக்கங்க. Irrespective of the country, பில்லினியரோட வாங்கு திறன் ஓரளவு நல்லாவே இருக்கும். பல நாடுகள்ல ஆளும் அரசையே அவனுகதான் வாங்கி நாட்டு நடமாட்டத்த தீர்மானிக்கறவனுகளா இருக்கானுக. 


சரி எதையும் ஒரு எடுத்துக்காட்டோட படிச்சா மனசுல தங்கும்னு எங்க அறிவியல் டீச்சர் சொன்னதால ஒரு கேஸ்டடி:


இந்தாப்போச்சுல்ல அக்டோபர், அப்ப அதாநின்றவனுக்கு $116 billion (நூத்திப்பதினாறு பில்லியன் டாலர்) சொத்திருக்கறதா Forbes சொல்லுது. 

எழுத்துலயும் வார்த்தைலயும் பாத்தா இதோட ஸ்கேல் நமக்குப் புரியாது. ஆகவே இத இப்பிடி பாருங்க. 

உங்க குடும்ப உறவுகளல்லாம் சேத்தா ஒரு நூறு பேரு வருவாங்களா? 

அந்த நூறு பேரும் ஒவ்வொரு நாளைக்கும் ஆயிரம் டாலர். அதாவது எண்பத்தஞ்சாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறாங்கன்னு வைங்க. Note the point, நூறு பேரு மொத்தமா எம்பத்தஞ்சாயிரம் இல்ல, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நாளைக்கும் எம்பத்தஞ்சாயிரம்.

இப்பிடி தினமும் சம்பாதிச்சா அதாநிகிட்ட இருக்க இன்னைய சொத்து மதிப்ப அடைய 3178 வருசங்கள் ஆவும். அதாவது முவ்வாயிரத்து நூத்தி எழுவத்தெட்டு வருசம். எப்பிடி? வருசத்தின் ஒவ்வொரு நாளைக்கும் கிட்டத்தட்ட ஒரு லட்சம்னு சம்பாதிச்சாலும் அவனோட சொத்து மதிப்ப அடைய முவ்வாயிர வருசம். 

இப்பிடி ஒரு கூட்டமே சேந்து சம்பாதிச்சாலும் ஆயரக்கணக்கான வருசங்கள் ஆவக்கூடிய சொத்த வெறும் பத்தே வருசத்துல ஒருத்தன் சம்பாதிக்கிறான்னா அவனுக்கு எப்பிடிப்பட்ட சக்தி இருக்கணும்? 

2013ல அதாநியோட சொத்து $4.9 பில்லியன்னு ரிப்போட் சொல்லுது. 

2013ல 4.9 பில்லியன் டாலர்லருந்து 2024ல 116 பில்லியன் டாலர், கிட்டத்தட்ட 2267.35% சதவிகித சொத்து அதிகரிப்பு. 

வெறும் பத்தே வருசத்துல இப்பிடிப்பட்ட முன்னேற்றம் அடைய எவ்ளோ உழைப்ப கொட்டியிருக்கனும் அந்த நேர்மையோத்தமர். இந்த மணித்திருநாடு அவர் பின்னாடி இருந்தே ஆக வேண்டியது காலத்தின் கட்டாயம். 






Interesting Info about your taxes:




foodforthought:

பணம் ஆயிரம் கதவுகள் வழி வெளியே வழிந்தோடும். ஒரே ஒரு எலிப்பொந்து வழியே முட்டி மோதி உள்ளே வரும். 

 

Comments