ஒரு டிசம்பர் அதிகாலைல ரயில்வேடேசனுக்கு போறப்ப, அதிகாலைனு சொன்னாலும் அது இருட்டிகிட்டு தான் இருந்துது, ஜியாக்ரஃபி அப்பிடி, ஊழியக்காரர்கள் நின்னுட்டு இருந்தாங்க.
இலவச பைபில் தரோம், இலவச பைபில் வகுப்பு, உங்களின் வெற்றியை ஏசு உறுதியளிக்கிறார், இப்பிடி போர்டு வச்சு ரெண்டு பேர் எப்பவும் புன்னகை அப்பிய முகத்தோட நிப்பாங்க. அது ஏன் எப்பவும் ரெவ்வெண்டு பேரா நிக்கறாங்கனு யோசிச்சதுண்டு.
ஒருக்கா தெரியாம ஐகாண்டாக்ட் ஆகி விட, அவங்க சிரிக்க, நாம வேற எதோ சிந்திக்கிறாப்ல பர்சத்தேடுற சாக்குல முகப்பார்வைய திருப்ப வேண்டியதாப்போச்சு. அதுக்கப்பறம் தூரத்துலருந்து வரப்பவே அவங்க நிக்கறாங்கனு தெரிஞ்சா மண் நோக்கித்தான் கண் நோக்கும்.
நம்மூர்ல ஊழியக்காரனுக பண்றதெல்லாம் என்ன ஊழியம்? அத அட்டூழியம்னு வேணும்னா சொல்லலாம். இங்க அந்த குளிர்ல, ரிலிஜியஸா நிப்பாங்க. நாம்பாத்த அன்னைக்கி மைனஸ் மூனு டிகிரி குளிர், இன்னொரு நாள் அவ்ளோ குளிரோட சேத்து மழ வேற. மத்த நாட்கள்ல நின்னத விட இந்த ரெண்டு நாள்லயும் அவங்க நின்னதுதான் ஆச்சரியமா இருந்தது. இத்தனைக்கும் அவங்கட்ட இதுவரைக்கும் யாரும் நின்னு டைம் கேட்டு கூடப் பாத்ததில்ல (ஸ்டேசன்ல மணிக்கூண்டு இருக்குங்குறது வேற விசியம், ஒரு இதுக்குச் சொல்றேன்). இப்பிடி யாருமே கண்டுக்கலன்னாலும் எப்பிடி அவ்ளோ உறுதியா சடையாம நிக்கிறாங்கன்றது உண்மைலியே வியப்பான விசியம். இவனுகட்ட இல்லாத காசா வசதியா, அப்பிடி இருந்தும் எது ஒங்கள இப்பிடி கும்மிருள் குளிர்லயும் பனியிலயும் காத்து நிக்க வெக்குதுனு ஒருநாள் கேக்கணும்னு ஆச. ஆனா கேட்டதுதான் சாக்குன்னு சட்டுனு சபையில சேத்து உட்டுருவானுங்களோனு தான் தயக்கம்.
எதனாலனு தெரியாம டிப்ரசன் ஆட்கொண்ட காலம் கொஞ்சமுண்டு. அப்பலாம் பேசாம இவனுகட்ட சேந்துரலாமா, ஒருவேள உண்மையிலயே அந்திமக்கால வெற்றிய இயேசு கொண்டு வரவரா ஏன் இருக்கக்கூடாதுனுலாம் தோணிருக்கு. இல்லன்னா ஒரு டீலிங் போட்டு விசுவாசி ஆகிர்லாம்னு யோசிச்சதுண்டு. அதாவது காலேஜு, ஆஸ்பத்திரி கட்டிக்குடுக்கணும் நம்மூருக்கு. அதுக்குப் பகரமா நம்மூர்லருந்து ஊழியத்துக்கு ஆள் சேத்துக்குடுக்கறது நம்ம பணி. கும்முடுற சாமிப்பேரு எதுவாருந்தா என்ன, அத வச்சு நாலு பேருக்கு ஹையர்ஸ்டடீசும் வைத்தியமும் கெடச்சா போதாதா?
ரீல்சுகள்லயும் சில சமயம் நேர்லயும் பாத்ததுண்டு. பாய்களும் இப்பிடி இலவச குரான் குடுக்குறோம்னு வச்சு தெருமுனை பிரச்சாரம் பண்ணிட்டிருப்பாங்க. நம்மளப் பொருத்தவரை கடவுள கண்டடையிறது, அல்லது கடவுளுக்கான தேடல், கடவுளுணர்தலுங்கறது highest form of self realization or thinking process. அத இப்பிடி ரோட்ற மசாலாப்பொரி வாங்கறாப்ல அடைய முடியுமான்றதே சந்தேகம்.
கமல் ஒரு படத்துலயோ பேட்டிலயோ சொல்லிருப்பாப்டி, இதுவரைக்கும் யார்னா ஒங்கட்ட வந்து அடக்க முடியாம பக்தி முட்டிட்டு வருது, பக்கத்துல கோயில் எங்க இருக்குன்னு கேட்டதுண்டா? மாறாக, அர்ஜண்ட்டா யூஸ் பண்ணனும் பக்கத்துல பாத் ரூம் எங்கர்க்குனு தான கேட்டுருக்காங்க, அப்ப நாம எத அதிகம் கட்டனும்னு சொல்லிருப்பார்.
இதே ஸ்டேண்டுதான் நமக்கும். நாமளும் இது வரைக்கும் பிரம்மா குமாரி, அரேராமா அரே கிரிஷ்ணா, கஞ்சா ஜகதீஷ், டபுல் ஸ்ரீ நித்யானந்தா ஆகியோர் பிட்நோட்டிசும் சரி, சிலபல வகுப்புகளும் பங்குபெற்றதுமுண்டு. ஆனா அதெல்லாம் இது உண்மையான ஆன்மீகம் இல்லனு புரிய வெச்சுதே தவிர அத நோக்கிப் போக வெக்கல. இதெல்லாம் இத்தனைக்கும் நாமளே சிரத்தையெடுத்து என்னதான் சொல்றானுகனு எடுத்துப் படிச்சது. அதுவே இப்பிடி இருக்க, பிட்நோட்டிஸ் டைப்புல ஒரு மதபுக்க குடுத்தா அதனால மனமாற்றமோ இல்ல அதுவரைக்கும் ஃபாலோ பண்ணிட்டிருக்க வாழ்க்கைய அப்பிடியே போட்டுட்டு ஆப்போசிட் சைடு ரிச்சுவல்களா செய்ய முடியுமானு தெரியல.
ஏன்னா, ஒரு கட்டத்துல நாமன்றது நம்மளோட ருடீன் & ரிச்சுவல்ஸ்தான? சில காலத்துக்குப்பிறகு தப்புனாலும் பரவால நாஞ்செய்றது எனக்கு கன்வீனியண்ட்டா இருக்குனு நம்மள நாமளே சமாதானப்படுத்திக்கிட்டு அதையே தொடருறோம்ல. இன்னம் பலர், தன்னோட வழக்கத்த மாத்துறது தாங்களே அழியறதுக்கு சமம்ங்கறாப்ல எந்த எல்லைக்கும் போயி தங்கள தாங்களே டிஃபண்ட் பண்றதும் பாத்துருக்கோம்ல.
கடவுள் கடைத்தெருவில் விறக்கப்படும் பண்டமா?
=======
எல்மாவோ!!!
Comments
Post a Comment
Pass a comment here...