வினாவென எதுவுமில்லை
விடைகளாக விரிக்கப்பட்டன
அத்தனையும் ஏற்கனவே.
விடைகளே வினாக்களாகத் தெரியும்
வினோதமே வினோதம்.
விடைகளை விடைகளென அறிவதற்கே
வாழ்க்கை அனைத்தும்.
இத்தனைத் திறந்த வெளியிருக்க
திரைகொண்டிருக்கும் கண்கள்.
மனத்திரை விலக்கி
அகக்கண் திறந்து
விடையைப் பார்ப்பவனே
பார்ப்பான்.
Comments
Post a Comment
Pass a comment here...