நமக்குத் தெரிஞ்ச அண்ணன் ஒருத்தன். அவனோட கல்லூரிக்கால ஆளு பேரு அபிராமின்றதால வானவில் பட ரிலீசப்ப கைக்காச போட்டு அந்தப்படத்துக்குக் கூட்டிட்டு போயிருந்தான். அதுவும் போரடிக்காத (இப்ப பாத்தா பல கிரிஞ்சுகள் கொண்ட) நல்ல படம் தான். அதுல அர்ச்சூன் அபி மற்றும் பிரகாஷ்ராஜ் எல்லாரும் ஐயேயெஸாவனும்னு இருக்கவங்க. அர்ச்சூன் வழக்கம்போல கிராமத்துல பொறந்து ப்லா..ப்லா..
எல்லாப்பாட்டுக்களும் கூட நல்லாத்தான் இருக்கும். அபியின் மைக்ரோ மத்தியப்பிரதேசம் நொடிப்பொழுதே தோன்றும் பாடலான வெளிநாட்டு காற்று தமிழ்பேசுதேவ விட ஏனோ இந்த ஆசை மகனே ஆசை மகனே எந்திரி, நாளை நீதாண்டா மந்திரி பாட்டு மைண்ட்ல ஒட்டிகிச்சு (இப்பவரைக்கும்). வரியப்பாத்தாலே தெரியும் இது மகன மோட்டிவேட் பண்ற எளிய தகப்பன் பாட்டு. அதுல என்னன்னா, எஸஸெல்சி படிக்கிறவனே கருக்கல்ல எந்திரிச்சு படிக்கிறப்ப ஐயேயெசுக்குப் படிக்கிறவன் நடுராத்திரிலியேல்ல கண்ணு முழிக்கணும்? இந்த பன்னிமாடு மட்டப்பகல் வரைக்கும் தூங்குது, அத எந்திரிக்கச் சொல்லி அப்பன் பாட்டு. இப்பிடி சுள்ளுனு வெயில் தெறிக்கற வரைக்கும் பொணமாட்டம் தூங்குறவன்லாம் பரிச்சைல வெளங்கவா?
(ஆனா கதையில இவன விட வைப்ரண்ட் கேரக்டர் உள்ள பிரகாஷ் ராஜ் தோத்துப்போவாருங்குறதுதான் சாபம்)
========
குழந்தை பெத்துக்க மாட்டோம்னு இதுக்கு முன்ன எந்த ஜெனரேசனும் சொன்னதில்ல. இந்த ஜெனரேசன்ல அது சாதாரணமாகிருக்கு. அதுக்கு சொல்லப்படுற காரணம் குழந்தை வளர்ப்பு ரொம்ப செலவு பிடிக்குது, அதுகள வளக்கறது பல parametersla சிரமமான காரியம்னும். இன்னும் 20 வருசத்துல முதியோர் கூட்டம் அதிகரிக்கும். அப்ப இளைஞர்களா இருக்கவங்களுக்கு முதியவர்கள பராமரிக்கிறது பல வகையில சிரமமாகும். அப்ப சமூகத்துல கருணைக் கொலை அல்லது விருப்ப மரணம் நார்மலைஸ் ஆக்கப்படும். இப்ப எப்பிடி குழந்தை பெத்துக்க மாட்டோம்னு சொல்றது சாதாரணமோ, அதே மாதிரி பெரியவங்கள (உயிர்) நீக்கம் செய்யலாங்கறது சாதாரணமாகும்.
---
சமீப விமான விபத்துகளுக்கப்புறம் survival rate of seats analysisகள் நடந்து, லாஸ்ட் பெஞ்சினர்தான் அதிகம் தப்பியுள்ளனர் எனும் சேதி வந்ததும் அந்த சீட்டுகளுக்கு டிமாண்டுகள் அதிகரித்திருக்கிறது. இதுல காமடி என்னன்னா கொள்ளக்காசு குடுத்து உக்கார்ற பிசினஸ்/பஸ்ட் க்லாஸ் எல்லாம் பஸ்ட் பெஞ்சினரா இருக்கவனுக தான். ப்லேனு கம்பனிக பஸ்ட் க்லாஸ மாத்தி வச்சு பின்னுக்கு கட்டுனானுகன்னா உண்மையிலயே உலகம் கேபிடலிஸ்டுகளாலும் இல்லுமினாட்டிகளாலும் ஆளப்படுதுனு வச்சுக்கிடலாம்.
அதுல பாருங்க, சமீபத்துல பொளந்துட்டு போன எல்லா ப்லேனும் போயிங்கோடதா இருக்கு. ஆகவே விசுவாசிகளே உங்கள் மனத்தை ஏர்பஸ்ஸின் பால் திருப்புங்கள்னு ஒரு பிரச்சாரமும் போயிட்டிருக்கு. கொஞ்ச நாள் முந்தி போயிங்குல பிரச்சன இருக்குன்னு சொன்ன ஒரு விசில்புலோயர் மர்மமான முறையில இறந்தது பலருக்கு நெனவிருக்கலாம். என்ன ஏழரையிருக்கோ தெரியல. நமக்கு வேற அடுத்த சில டிரிப்புகள் அதே போயிங் அதே டெய்லர்ட்ட இருக்குது. ப்லேன் பொளந்து செத்துகித்து போனா டப்பாசு வெடிச்சு சாக்கிலேட் குடுக்க நம்மள புடிக்காத நர்சுக வேற இருக்குதுக.
-
Deep:
-
புத்தாண்டுக்கு ஒருத்தன் More Vacations, More Sex, More Money என மெசேஜியிருக்கிறான். வாழ்த்தியுள்ளானா அல்லது ஐட்டமாகப் போகச் சொல்கிறானா என்று தெரியவில்லை.
Comments
Post a Comment
Pass a comment here...