வேல செய்ற கடைல புதுசா ஒரு ஒரல இடிக்க குடுத்துருக்கானுக. ஆன்-கால்னு. நம்ம கட சாமான பயன்படுத்துற கஸ்டமர்களுக்கு எதும் சைக்கில் பெண்டு நிமுத்தறதோ பஞ்சர் கிஞ்சர் ஒட்றதோ தேவை இருந்தா சி.எஸ் எனப்படும் கஸ்டமர் சப்போட்டு கிட்ட மெயிலோ, மெசேஜோ காலோ போட்டு ஒக்குட சொல்லுவானுக. பெரும்பாலும் சியெஸ் டீமே இஷூவ சரி பண்ணிரும். அப்பிடி அவங்களால முடியாதது அடுத்த நிலையான டெக்னிகல் சப்போர்ட் எனப்படும் டீயெஸுக்கு வரும். இந்தப் பெரிய அதிகாரிக இண்டு இடுக்குலாம் பூந்து சரி பண்ணிருவானுக. அப்பிடி அவனுகளாலயும் முடியலன்னா ஆன் காலுக்கு வரும். தன்ராஜாலயே முடியலயாம்னு நாம அத ஆராஞ்சு விடையோ, விளக்கமோ அளிக்கணும்.
இதுல பெரும்பாலான இஷூஸ் குறிப்பிட்ட க்லையண்டுக்கு மட்டும் திடீர்னு நடந்துருக்கும். சிலது தொடர்ந்து நடக்கும். சிலது விட்டு விட்டு, இப்பிடி பலதும் நடக்கும். ஆனா இதெல்லாம் ஏன் நடக்குதுனே தெரியாது. அப்பிடியாப்பட்ட கேசுகதான் நம்மட்ட வரும். சில நாட்கள்ல ஒரே நேரத்துல நாலஞ்சுனு கும்மலா வந்துரும். ஆரம்பத்துல இது ரொம்ப அயற்சியா இருக்கும். தலையும் புரியாம காலும் புரியாம ஒவ்வொன்னையும் டீபக் பண்ணக்குள்ள மண்டமுழி பிதிங்கிரும்.
மலையாளப்படங்கள, குறிப்பா மர்டர் மிஸ்டரி படங்கள அதிகமா பாக்க ஆரமிச்சதாலயா என்னனு தெரியல, இந்த இஷூஸ் குறித்த பர்ஸ்பக்டிவ் திடீர்னு ஒருநாள் லைட்டு போட்டாப்ல மாறிருச்சு. ஒவ்வொரு இஷூவும் ஒரு கொல கேஸ். அது எப்பிடி நடந்துச்சுன்னு கண்டுபுடிக்கிற போலிஸ்/டிடக்டிவ் நாமனு மனசு தன்னாலயே கற்பன பண்ணிக்கிச்சு. எதனால எப்பிடி அந்த மாதிரி ஆச்சுனு தெர்ல. ஆனா திடீர்னு ஒரு நாள் பளிச்சுனு தோணுச்சு. அன்னைலருந்து இஷூனாலே குதூகலமாகிடுது மைண்டு. வர்லாம் வர்லாம் வானு எத்தன வந்தாலும் பாத்துக்கலாம்னு ஆகிடுச்சு.
தலவால் புரியாத ஒவ்வொரு பிரச்சனையவும் ஒவ்வொரு ஆங்கில்ல ஆராஞ்சு இன்னின்னது இன்னின்னதனால ஆச்சுன்னு டீடைல் அனாலிசிஸ் போட்டு அதுக்கு தீர்வும் போட்டு முடிக்கிறப்ப ஒரு ஆர்கசம் வருது பாருங்க. அனுபவிச்சாத்தான் தெரியும். அத ஆன்சர்கசம்னு சொல்லலாம்.
மொதல்ல கொழப்ப கொழப்ப, எப்புடியும் ஒன்னய சில நாள்ல கண்டுபுடிச்சு முடிச்சவுத்துருவேன், அன்னக்கி இருக்கு ஒனக்குனு தோணும். ஒரு சின்ன பர்ஸ்பக்டிவ் சேஞ்ச், சவால்களக்கண்டு துவண்டத போக்கறதில்லாம சவால்கள ஆர்வமா எதிர்பாத்து அத எஞ்சாய் பண்ற அளவுக்கு கொண்டு வரும்னு எதிர்பாக்கல.
லிட்டரலி ஒவ்வொரு இஷூவையும் ஒரு கேஸ் மாதிரிதான் ஏண்டில் பண்ணிட்டிருக்கேன். My analysis and conclusion as followsசுனு போட்டாலேபோதும், படிக்காதவன் சிவாஜி மோடு ஆன் ஆகிடும்.
போன வாரம் ஒரு இஷூ இப்பிடித்தான் போக்கு காட்டிட்டிருந்துச்சு. அத செக் பண்ண டெவலப்பருக்கு அந்த பிரச்சினைலருந்து வேற ஒரு புது இஷூ வர, நமக்கு இன்னொரு இஷு. ஆக திரீசூலம் மாதிரி வரவும் சரி வாயா ஸ்க்ரீன் ஷேர் பண்ணி ஒவ்வொன்னா பாப்போம்னு பாத்தப்ப கோடுல இருந்த ஒரு சில மிஸ்மேட்ச் ஏகப்பட்ட குளறுபடிய பண்ணிருக்குனு தெரிஞ்சுது. ரூட் காஸ் என்னனு கண்டுபுடிச்சதும் நம்மள மீறி ஒக்காளவோலி இதுதான் எல்லாத்துக்கும் காரணமானு வாய்விட்டு சொல்லிட்டேன். எதிர்முனைல இருந்த டெவலப்பர், ஆஹ்! இட்ஸ் அ பேட் வேர்டுன்னான். அவன் ஒரு ரொமானியன். தமிழ் தெரியாது. ஆமா அது கெட்டவார்த்ததான். ஒரு எக்சைட்மெண்ட்ல சொல்லிட்டேண்டா. ஆனா ஒனக்கு.எப்பிடி அது கெட்ட வார்த்தைனு தெரியும்னதுக்கு, ஐ கேன் சென்ஸ் இட்டுன்னான். எப்பிடி கண்டுபுடிச்சான்னு தெர்ல. கெட்டவார்த்தைகளுக்கு ஒரு உலகப்பொது அலைவரிசை இருக்கு போல.
-----------------------------------------
PhotoCrafty!
Comments
Post a Comment
Pass a comment here...