இராணுவப் படங்கள் ஒருபுறமிருக்கட்டும், ராணுவர்கள் வீடு திரும்பும் homecoming வீடியோக்களில் கூட நமக்குப் பெரிய உவப்பிருந்ததில்லை. அத்தகைய வீடியோக்கள் பெரும்பாலும் ஹோல்சம் என்ற அட்டை மாட்டி இனிப்புக் கண்ணீர்களோடு பகிரப்படும். ஏதோ வீடு திரும்பியவன் கொடியை நாட்டியது போலவோ இல்லை புதுக் கண்டுபிடிப்பு ஏதும் நிகழ்த்திக்காட்டியது போலவோ கமண்ட்டில் கிடந்து உருளுவார்கள் மக்கள். கொல செஞ்சுட்டு வந்தவந்தான நீயி? என்பதாகத்தான் அவனை நம்மால் பார்க்க முடிந்திருக்கிறது எப்போதும்.
மிலிட்டரியிலிருந்து வந்தவன் என்ன செய்துவிட்டு வந்தான்? அவனைப் பார்த்ததும் பாந்தோடி வந்து அணைத்துக்கொள்கிறதே இவனை எதிர்பார்த்துக்காத்திருந்த மகனோ மகளோ ஒன்று, இதே போல தன் தந்தையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு மகனோ மகளோ கடைசிவரை தன் தந்தையைப் பார்க்காமல் போகும் கொலையைச் செய்து வந்திருக்கிறான். அவனுக்கு ஓல்சம்தான் ஒரு கேடு.
மேலும் உலகம் முழுக்கவே ராணுவத்தினர்களின் சேட்டைகள் உலகறிந்ததே. இந்த நாடு அந்த நாடு என்று அந்த வித்தியாசமும் இதற்கில்லை. வடகிழக்கிலும் தென்கிழக்கிலும் மத்தியக்கிழக்கிலும் அவர்களின் லட்சணம் கிழிந்து தொங்குவதைப் பார்த்துப் பார்த்து கண்கள் சலித்ததுதான் மிச்சம்.
ராணுவத்தினர் இயற்கைப் பேரிடர் மற்றும் விபத்துதவிக்கு மட்டுமே தேவைப்படக்கூடிய நாள் என்றைக்கு வருகிறதோ அதுதான் வசந்த நாள். ஆனால் அது உடோபியன் கனவு என்பது தான் நிதர்சனம்.
2024லிலும் சக மனிதனைத் தாக்கிக் கொன்றுதான் ஒரு பிரச்சினையைத் தீர்க்கமுடியுமென்றால் as a humans we failed big time என்பதே பொருள். சரி இப்படி கொன்றுகுவித்த பின்னாவது அமைதி வந்ததா என்றால் அதுவும் இல்லை. தன் தனிப்பட்ட ஈகோவுக்காகவும் இன்செக்யூரிட்டிக்காகவும் ஆறாக குருதியோட்டியும் மனிதப்பதர்களுக்கு ரத்தத்தாகம் அடங்குவதாயில்லை.
என்னைக்கேட்டால் இவை அத்தனைக்குப் பின்னும் இருப்பது fragile male egoதான். (பரிட்சார்த்த முயற்சியாகவாவது) உலகின் அத்தனைத் தலைமைப் பொறுப்பிலும் பெண்களை அமர்த்தினால் பெரும் மாற்றம் வரக்கூடிய வாய்ப்புண்டு. அத்தனைப் போர்களுக்கும் காரணம் ஆண்கள் மற்றும் ஆண் திமிரே. பெண்கள் பதவியேற்றால் போர் வராதா எனக்கேட்டால், வரும். அப்போதும் வரும், எல்லா நாடுகளுக்கு மத்தியிலும் பனிப்போர் வரும். ஒரு நாடு இன்னொரு நாட்டோடு பேசாது, மூஞ்சியைத் திருப்பிக்கொண்டு போகும், வியாபார, பொருளாதாரத் தடைகள் கூடப் போடும். ஆனால் நிச்சயம் ரத்தம் சிந்தாது. மற்றொரு உயிரைக் குடிக்காது. நேருக்கு நேர் பார்க்க நேரிட்டால் கொணட்டிவிட்டுச் செல்லும். ஆனால் நிச்சயம் ஒரு தாலி அந்து விழாது. அனாதைகள் உண்டாக மாட்டர்.
ராணுவம், போர் குறித்து எப்போதும் நினைவுக்கு வருவது இதுதான்.
இறுதியாக,
அமரன் பார்க்கவில்லை, மேற்கூறிய காரணங்களால் பார்க்கவும் போவதில்லை. என்னதான் ஷாம்பூ போட்டுக் குளிப்பாட்டிக்காட்டினாலும் ஓநாயின் கோரைப்பற்களை அழகாக்க முடியாது. போலவே மற்றொரு ஐயமும் எழுகிறது. அது ஏன் எப்போதும் முகுந்த் வரதராஜன்கள் பற்றியும், நம்பி நாராயணன்களைப் பற்றியும், கோபிநாத்களைப் பற்றியும் மட்டுமே படங்கள் வருகின்றன? ஏனையோர் இந்த நாட்டுக்காக உயிர்த்தியாகங்கள் செய்வதில்லையா? அல்லது சாதனைகள் புரியவில்லையா? முகுந்தை அறிந்த நமக்கு, சரவணனை ஏன் தெரியவில்லை?
************
வெளிநாட்டு வேலை தேடுவோருக்கு:
Comments
Post a Comment
Pass a comment here...