அசஞ்சிகை17

மீ, டோட்டல்லி:




------

அயலகப் பயணம் முடிஞ்சு திரும்பறப்ப செக்கின் போடுற எடத்துல வழக்கமா லக்கேஜ போட்டுட்டு போர்டிங் பாச வாங்கிட்டு கெளம்பறதுனு ரெண்டு மூனு நிமிசத்துக்குள்ள முடிஞ்சுரும். இந்த வாட்டி கிட்டத்தட்ட பத்துப் பதினாறு நிமிசம் ஆகிருச்சு.

மொதல்ல பாஸ்போட்ட வாங்குனவன் என்னக்கி இந்த நாட்டுக்கு வந்தீங்க, எதுக்காக வந்தீங்க, என்ன வேல பாக்கறீங்கனுலாம் கேக்க ஆரமிச்சான். இதுலாம் இமிகிரேசன்லதான கேப்பானுக டிக்கட் ஒட்றவனுக்கு எதுக்கு இவ்ளோ டீடைல்சுலாம்னு நெனச்சிட்டிருக்கப்பவே ரெசிடண்ட் பர்மிட்ட கேட்டான். அத கைல குடுத்ததும் திருப்பி திருப்பி பாத்தவன் அதுல இருக்க போட்டோவ சொரண்டிலாம் பாக்க ஆரமிச்சிட்டான்.

அதப்பாத்ததும் நமக்கு சுரீர்னு ஆகிருச்சு. என்னடா பண்ற கிறுக்குப்பயலேனு கேட்டதுக்கு நெறய இந்தியர்கள் இந்திய பாஸ்போட்ட வச்சு போலி டாகுமெண்ட் செஞ்சு ஐரோப்பாவுக்கு இல்லீகலா போறாங்க. அத தடுக்கச்சொல்லி உத்தரவு வந்துருக்கு. அதான் கௌண்டர்லியே ப்ராசஸ ஸ்டிக்ட் பண்ணிட்டோம்னான்.

பாஸ்போட்ல எல்லா பக்கத்தையும் போட்டோ எடுத்து அவன் சூபர்வைசருக்கு அனுப்புறேன்னு சொன்னான். அவன் பாத்துட்டு எதோ ரிப்லை பண்ணதும் வேற எதாச்சும் ப்ரூஃப் இருக்கான்னு கேட்டான். ஏண்டா பாஸ்போட் ரெசிடண்ட் பர்மிட்ட விட வேற என்னடா வேணும்னு இருந்துச்சு. ஆனா சரி அவன் வெறும் டாகுமண்ட் சரிபார்க்குற ஏஜண்ட்டுதான், இவன நொந்து பயனில்லனு, இண்டர்நேசனல் லைசென்ஸ் வேணும்னா இருக்கு வேணுமானு அத எடுத்து குடுத்தேன். அது முழுக்க டச்சுல இருக்கும். அதப்பாத்து அவனுக்கு என்ன வெளங்குச்சோ, திருப்பி குடுத்துட்டான். இதுக்கெடையில செக்கின் பண்றதுக்கு நின்ன கியூ பெருசாகிருச்சு. இவன் நம்மட்ட இத்தன நேரம் அத்தன டாக்குமெண்ட வாங்கி சரிபாக்குறதப்பாத்து நாம எதோ பித்தலாட்டம் பண்ணி வெளிநாட்டுக்குத் தப்பிச்சு ஓடுறோம்னு நெனச்சு நம்மள ஒரு மாதிரி பாக்க ஆரமிச்சிட்டானுக.

ஒரு வழியா எல்லா பேப்பரையும் காட்டினப்புறம் பதினேழு நிமிசம் கழிச்சு முடிஞ்சது. இதெல்லாம் பத்தலனு ப்லேன்ல ஏறமுன்ன கேட்டுலயும் அவனே தான் இருந்தான். என்னடா போதுமா இல்ல இன்னம் கொஞ்சம் வெரிஃபை பண்ணனுமான்னதுக்கு பக்கத்துல டை கட்டிட்டு நின்ன ஒருத்தண்ட்ட பாஸ்போட்ட கொண்டு போயி காட்டினான். அவர்தான் எங்க சூப்பர்வைசருன்னுட்டு. அவன் பாஸ்போட்ட வச்சு சிஸ்டத்துல என்னத்தையோ மறுக்காவும் அடிச்சு பாத்துட்டு திரும்ப குடுத்தான்.

ஆச்சா, நடூல டிரான்சிட் வேற. அங்கயும் கேட்டுல பாஸ்போட்டோட சேத்து பர்மிட் மொதக்கொண்டு மறுக்கா வாங்கி இன்னம் பல கேள்விகள கேக்கறானுக.

இந்திய பாஸ்போட்டுனாலே சந்தேகமா பாக்கற இண்டர்நேசனல் ஃபேம் கெடச்சாச்சு. எல்லாம் வடக்குத்தாயளிகளால நடந்த வினை இது.

நாட்ட விட்டு ஒழிஞ்சாலும் அந்தப் பீட நம்மள விட்டுப் போக மாட்டுது.

ஆனா ஒன்னு, இதெல்லாம் ஜஸ்ட் ஆரம்பம் தான். கோமியக்குடிக்கிகள் செஞ்சு வச்சிருக்க, செஞ்சிட்டிருக்க வேலைகளுக்கு இன்னம் பல இண்டர்நேசனல் அசிங்கங்கள் நிகழப்போவது உள்ளங்கை ஆம்லாக்கனி. பொறுத்திருந்து பாருங்க.

போரடிச்சா விஸா ஸ்கேம், இல்லீகல் இமிக்ரண்டுன்னு தேடிப்பாருங்க, கொட்டுற சேதியெல்லாத்துலயும் நீக்கமற நிறைஞ்சிருக்கது நார்த் இந்தியாதான். தேத்தாயளிகள்.


இந்த எச்சைகளின் மணிமகுடத்தின் சான்றுகள் சில:









--------

இசை:

சோமீல இவனுகளுக்கு கடிக்க எதுவும் கெடைக்கலன்னா போதும் எதயாச்சும் எடுத்து கடிக்க ஆரமிச்சிருவானுக. ஏதோ ஒன்ன கும்பலா ஒன்னு கூடி மீடியாக்கர்னு ஓட்டினா இவனுக பெசலைட்டமா தெரிவோம்னு ஒரு இல்லூசன்ல வேற சிக்கிட்டிருக்கானுக. அப்பிடி ரீசண்ட்டா இவனுக கடிச்சு வெச்ச பாட்டு இது...


விசுவல்ஸ் (அந்தம்மணி டேன்ஸ் சிங்க்) கொஞ்சம் அப்பிடி இப்பிடி இருந்தாலும் பாட்டு கேக்க அற்புதமான பாட்டு. அதுலயும் அந்த லேடி வாய்ஸ் மெல்லிஃப்லூவஸ். இதுவரைக்கிம் நாமளே ஒரு ஏழெட்டுதாட்டி பாட்ட கேட்டாச்சு. அந்தப்பொண்ணு வாய்ஸ் யுனீக்குன்னு சொல்ல முடியாது. ஏற்கனவே கேட்ட நாலஞ்சு வாய்சோட ஒரு கொலாஜா இருக்கு. அதுவே கொஞ்சம் புதுசா இருக்கு. எல்லாரும் ஒருமாதிரி உருட்டுறதால வித்தியாசம பூம்புவோம்னுலாம் சொல்லல. நெசத்துக்கே அந்தப்பாட்டு லேடிஸ் தனிக்குரலும் சரி, கோரசும் சரி நல்லாருக்கு. 

பாட்டுல குறிப்பா புடிச்ச எடம்னா "தேடித்தேடி நான் கண்டேன் உன்னை, ஆடிப்பாடு, கொண்டாடிக்கூடு......ன்னு" அந்த "சொய்ங்"ல இருக்க கிறக்கம் ஃபெண்டாஸ்டிக். 


இதே மாதிரி "சொய்ங்"கோட வித்யாசாகர் பாட்டொன்னு இருக்கு. இதுல "கூட, ஒன்னு கூட புது ராகம் உருவாச்சு...." இதுலயும் அந்த டச் இருக்கும்.  


 

சரி அந்தப்பாட்டுல டொங்கலான விசயமே இல்லியான்னா இருக்கு, "ஆட்டம் பாட்டம் உல்லாசம், அதுதான் காலத்தின் கட்டாயம்" - இந்த லிரிக் குபீர்னு இருந்துது. ஆனா இந்த ஒரு வரிய வச்சுலாம் இந்த பாட்ட காப்பாத்திட முடியாதில்லயா? 

மொக்க படத்துலயும் லூப்ல கேக்கறாப்ல 80+ வயசுல வேலைய காட்ற ராஜாசார் இருக்கும் தென்கிழக்கு திசை நோக்கி ஒரு சலாம்! 



==============

க்ளுக்



Comments