ப்பாவிகள்
------
கண்டிசனாகச் சொல்வாள்கள்
புல்ஸ் ஸை.
=======
ஓவராப்போறானுக:
வாழ்க்கைத் தத்துவம்:
-----
பரோட்டா தின்றவர் உயிரிழப்புன்னு அப்பப்ப செய்தி பாத்திருப்போம். அப்பிடி ஒரு மரணவாயிலை வாய் வழியே எட்டிப்பார்த்த சம்பவம் ஒன்னு நடந்துது. உண்மையிலயே சொல்லப்போனா உயிர் பொழச்சது ஒரு பெரிய ஆச்சரியம் தான்.
ஒவ்வொரு ஆசிய உணவு வகைகளையும் சாப்புட்டுப் பாக்க வியட்நாம், கொரியன், தாய்லாந்து, இந்தோனேசியா, ஜப்பான், சீனம்னு ஒரு வாரத்துக்கொரு ரெஸ்டாரண்ட் போறப்ப ஜப்பான் ரெஸ்டாரண்டுக்கு தயங்கித்தான் போனது.
அவனுக சுஷி இன்னபிறவெல்லாம் சமைக்காம பச்சையா சாப்புடுவானுக. நமக்கு எதுவுமே வெல்-குக்டா இருக்கணும். போலவே காரமாவும். காரம் இல்லாதது கூட சமயங்கள்ல ஓகேதான். ஆனா நல்லா ஆக்கிருக்கணும். கறிவாசமே இருக்கக்கூடாது.
கூட்டிட்டுப்போன நண்பர்கள் சுஷி இல்லாம வேற வகை சாப்பாடும் இருக்கு, அது சாப்டலாம்னு சொன்னானுக.
ரெஸ்டாரண்ட் உள்ள நொழஞ்சதும் அந்தப் பணியாளர் எதோ சொல்ல, ஒடனே ரெஸ்டோ பணியாளர்கள் எல்லாரும் கொலவச் சத்தம் மாதிரி எதோ பாட்டு பாடுனாங்க. இதே மாதிரி கொரிய ரெஸ்டாரண்டுலயும் பண்றாங்க. அது அவங்க ரெஸ்டாரண்டுக்கு வரவங்களுக்கான வரவேற்பாம். அவங்க மொழியில பண்றாங்க. புதுசா போறவங்க கொஞ்சம் திடுக்கிடவும் வாய்ப்புண்டு. திடீர்னு அத்தன பேரு கோஷம் போடுறது எதோ திட்றாப்ல இருக்கும். உள்ள நொழஞ்சதும் அவங்க எல்லாரும் கோரஸ் பாடுறது நமக்கென்னவோ யோக்கியன் வரான் சொம்பெடுத்து உள்ள வை மோடுல கேட்டுது.
நம்ம உணவு ப்ரிஃபரன்ஸ் புரிஞ்ச நண்பர்கள் ஹாட் சூப், நூடுல்ஸ் இன்னபிற (அந்த ச்சாப்ஸ்டிக்க வச்சு சாப்புடுறதுக்குள்ள தாவு தீருது. இத வச்சு சாப்புட முடியும்னு மொதமொத ஒருத்தன் கண்டுபுடிச்சது எப்படினு தெரிஞ்சுக்க உள்ளபடியே ஆர்வமா இருக்கேன்.) மேலும் மெய்ன் டிஷ்ஷா பீஃப் ஆடர் பண்ணாங்க.
ரிப்பன் மாதிரி பச்ச பீஃப கொணாந்து குடுக்கறாங்க. அத கத்தரிக்கோல்ல நறுக்கி நமக்கு முன்ன இருக்க ஸ்டவ்வுல போட்டு நாமளே வாட்டித் திங்கனும். நமக்கு எந்தளவு தேவையோ அவ்ளோ வேக வச்சிக்கலாம். பார்பிக்யூ டைப்ல.
சும்மா சொல்லக்கூடாது, பீஃப் நல்லாவே இருந்துச்சு. சமச்ச பீஃப ஒரு சாஸ் தண்ணில முக்கி அப்புடியே வாய்க்குள்ள லபக்கு. நமக்கு கைல சாப்புட்டாலே நட்டுக்கிட்டு போவும், இதுல ச்சாப்ஸ்டிக் வேற. ஒவ்வொரு பீஃப் துண்டையும் கீழ சிந்தாம மெதுவா குச்சில எடுத்து வாய்க்குள்ள தள்றதுக்குள்ள தாவு தீந்துருச்சு. யானைக்கி கவளத்த வீசுறாப்ல வீச வேண்டி இருந்துது. பீஃப் வெட்டுறது ஒவ்வொரு சைசுல வெட்டிருப்பாங்க போல நண்பர்கள்.
நல்லாத்தான் தின்னுட்டிருந்தேன், அந்த ஒரு பெரிய பீச முழுங்கற வரை. அந்த பீச எடுத்து வாயில வெக்கமுன்ன, வந்த குரூப்ல ஒருத்தர எதோ கேக்க கூப்டேன். அவங்க டேபிலோட கடைசில இருந்தாங்க. நான் கூப்டதும் என்னனு கேக்கவும் நான் அந்த பீச வாய்க்குள்ள தள்ளவும் சரியாருந்துது. இப்ப இத டைப் பண்றப்ப கூட தொண்டக்குழி அடைக்கிறாப்ல இருக்கு.
அவங்க என்னனு கேட்டதும் பேசறதுக்காக நா முயலவும் அந்த பீஃப் அடிநாக்கத் தாண்டி தொடைல மாட்டவும் சரியா இருந்துது. மொதல்ல நடந்தது மூச்சு சுவாசம் ப்லாக் ஆனது. பீஃப் கொஞ்சமே கொஞ்சம் வழுவழுனு இருக்கு. ஆனா வெளியவும் வரல உள்ளவும் போகல. நான் முழுங்க முயற்சி பண்ணாலும் முன்னயும் பின்னயும் கொஞ்சமா அதே எடத்துல இருந்துட்டே நகருதே ஒழிய முழுசா உள்ள போகவோ வெளிய வரவோ செய்யல.
அந்த நேரத்துல எங்கருந்துதான் அந்த மரண இன்ஸ்டிங்க்ட் வந்துச்சோ தெரியல. ஒடம்பு மொத்தமும் அலர்ட் ஆகிருச்சு. மூச்சு வழியாவும் சுவாசிக்க முடியல. வாய் வழியாவும் இல்ல. இந்த நேரத்துல மத்தவங்கள கூப்புடவும் அவங்கட்ட விளக்கவும் சமயமில்ல.
வந்தவனுக எல்லாரும் கலகலகலனு பேசிட்டு சாப்டுட்டு இருந்தானுக. அவங்கட்ட எதும் சொல்லாம கறிய உள்ள முழுங்கப் பாத்தேன். மலப்பாம்பு முழுங்க முடியாம இருக்குமே, அந்த நெலமை இருந்துச்சு.
நியூஸ்கள்ல உணவு தொண்டைல சிக்கி வாலிபர் மரணங்குற செய்திகள் மைண்டுக்குள்ள ஃப்லாஷ் ஆச்சு. அது ஒரு ஒன்னர விரல் நீள பீஃப் ரிப்பன் போல. ரெண்டா மடிஞ்சு வசமா தொண்டைல சிக்கிட்டுது. அத உள்ள தள்ள ஃபோர்சும் வேணும், அது வழுவிட்டு போறாப்ல கொஞ்சம் லூப்ரிகண்ட்டும் தேவை. வாங்கி வச்சிருந்த டீய குடிச்சுப்பாத்தேன், அது கக்கூஸ் தண்ணி வடியாம அடச்சுக்கறாப்ல வாய்லயே அடச்சுகிச்சு. உள்ள போக வழியில்ல.
இது அத்தனையும் நடக்கறப்ப மூச்சு முட்டிட்டிருக்குன்றத நெனவுல வச்சுக்கங்க. நீச்சல் தெரியாம தண்ணிக்குள்ள முங்கறவங்க தத்தளிக்கிறாப்லதான். அப்ப என்ன தோணுச்சோ தெரியல, கறிய உள் முழுங்கதான் ஒடம்பு முயற்சி செஞ்சுச்சு. ஏன் வெளித்தள்ளி துப்பலனு தெரியல. ஒரு வேள அதுக்கு ஒடம்புக்குள்ளருந்து காத்து தேவப்பட்டிருக்கலாம், ஏற்கனவே மூச்சுக்காத்து இல்லாம இருக்கறதால உள் முழுங்கறத தேர்ந்தெடுத்துருக்கும் மூளைனு இப்ப தோணுது.
பெரிய traumaங்குறதாலயும் ரீசண்ட்டா ஆனதாலயும் மைண்டுல ரொம்ப பதிஞ்சு போச்சு போல, இந்த நொடிகூட தொண்டையெல்லாம் கவ்வுது அத நெனச்சாலே.
இருமலோ இல்ல வேற எந்த எக்ஸ்டா ஃபோர்சோ வரவே இல்ல. கறிய மெதுவாவேனும் உள்ள தள்றத விட வேற வழியே இல்லனு புரிஞ்சது. இப்பவும் அந்த முடிவு சரியானு கூட தெரியல. இப்ப யோசிச்சுப்பாத்தா அந்த ரெஸ்டோல வேல.பாத்தவங்கட்டயோ அக்கம் பக்கத்துலயோ சொல்லிருந்தா யாரும் முதலுதவி பண்ணிருக்க வாய்ப்புண்டு. அல்லது எந்த உதவியும் பலனளிக்காம பரலோகம் போயிருக்கவும்...
இப்பவும் ஆச்சரியப்படுத்துறது என்னன்னா, பொதுவாவே, போட்ட ப்லான்ல சின்ன மாற்றம் வந்தாலே பேனிக்காவுற ஆளு நாம. ரெஸ்ட்லஸ்நெஸ் என்பது நமது வாழ்வியல். அப்பிடி இருந்தும் அந்த நேரத்தில எப்பிடி கொஞ்சமும் பதட்டப்படாம மத்தவங்களையும் பதற வைக்காம அப்பிடி சமயோசிதமா இயங்கினேன்றதுதான். ஒரு வேள உயிர் பொழச்சதால அத இப்ப சமயோசிதம்னு சொல்றேன். போய்ச்சேந்துருந்தா லூக்கூத்தனமாகிருக்கும்.
ஒரே ஆறுதல் அந்தக் கறி ஒரே இடத்துல நிக்காம கொஞ்சமே கொஞ்சம் அசஞ்சு குடுத்ததுதான். அது பெருசா இருந்ததால தொண்டை சைசுக்கு உள்ள முங்க மாட்டேன்னுருச்சு. கையவச்சு குத்தவும் தோணல. அப்பிடி பண்ணிருந்தாலாச்சும் ஓங்கரிச்சிட்டு வந்து அது வெளிய விழுந்துருக்கலாம். இப்ப ஏகப்பட்ட கலாம்கள் தோணினாலும் அப்ப எதுமே தோணாம ப்லாங்க் ஆகிருச்சு.
ஒரு வழியா மில்லி மீட்டர் கணக்குல தொடர்ந்து முயன்று ஒரு நிமிசத்துல அது உள்ள நழுவத் துவங்குச்சு. தொண்டையத் தாண்டி உள்ள போன முழு பாதைலயும் அதோட நகர்தல உணர முடிஞ்சது.
நெஞ்சத்தாண்டி உள்ள நொழஞ்சதும் டீய மடக்கு மடக்குனு குடிச்சேன். மூச்சும் ரொம்ப வாங்குச்சு. அங்கருந்து கெளம்பற வரைக்கும் யார்ட்டயும் எதும் சொல்லல. அந்த அதிர்ச்சியில.இருந்து வெளிய வரவே நமக்கு நேரமாச்சு. கொஞ்ச நாளைக்கி ரிப்பன் பகோடா கூட சாப்புடுவேணானு தெரியல.
இதுக்கு பேசாம பச்சையாருந்தாலும் சுஷியே சாப்புட்டுருக்கலாம்னு தோணுச்சு. ரெண்டு நாள் முன்ன ரீல்ஸ் ஸ்க்ரோல் பண்றப்ப அந்த ரெஸ்டாரண்டுல தீப்புடிச்சு எல்லாவனும் ஓடுறாப்ல ஒரு நியூஸ் வந்துது. நல்வாய்ப்பா எந்த உயிர்ச்சேதமும் இல்ல. எனக்கென்னமோ அந்த ரெஸ்டாரண்டுல...
Comments
Post a Comment
Pass a comment here...