அசஞ்சிகை13

மன அமைதி பெற, அல்லது ஜென் நிலை கிடைக்க ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விஷயம் சொல்லுவாங்க. நமக்கு ஆந்திரா மீல்ஸோ, (நல்ல) பிரியாணியோ, (நல்ல) டீயோ அது தரும்னாலும் இதெல்லாம் பொதுவானது. நமக்கு இதெல்லாம் இல்லாத வினோதப் பழக்கம் ஒன்னு உண்டு. (Btw, ஆந்திரா மீல்சுக்கு ஏன் (நல்ல) பிராக்கெட் போடலன்னா ஆந்திரா மீல்ஸ் எப்புடி இருந்தாலும் நல்லாத்தான் இருக்கும். அதுக்காகத்தான்.) 

பொதுவா அமைதியா இருக்கணும்னா எல்லாரும் ஒலியெழுப்புற எல்லாத்தையும் அணைச்சுத்தான வெப்பாங்க? எனக்கு ஃபேன் ஓடுற சத்தம் அமைதிய குடுக்கும். அதுலயும் குறிப்பா சொல்லனும்னா Cinni ஃபேன்னு ஒரு வஸ்து இருக்கு. இப்பல்லாம் அது வருதானு தெரியல. அது ஓடுற சத்தம் விவரிக்க முடியாத ஒரு ஜென் அமைதிய மனசுக்குக் குடுக்கும். 

இத எப்ப முதல் முதலா உணர்ந்தேன்னா ஒரு ரயில் பயணத்துல. அப்போலாம் ரயில் சாந்து கலர்ல இருக்கும். சாந்து கலர்னா என்னனு தெரியாதவங்க கெணத்துல போயி குதிக்கவும். அப்போலாம் ரயில் பயணங்குறதே அலாதியானது. Especially for its food. விழுப்புரம், காரைக்குடி, திருச்சினு ஒவ்வொரு எடத்துல நிக்கறப்பவும் அங்க லோக்கல் கைப்பக்குவத்துல செஞ்ச உணவு வகைகள் விப்பாங்க. அந்த வடையிலருந்து வர வாசம், தொட்டுக்க குடுக்குற கெட்டிச்சட்னில இருக்குற ருசி இப்ப இத டைப் பண்ற இந்த நொடி வரைக்கும் மூளைக்கு உறைக்கிது. எப்ப ரயில்கள் கலர் மாறுச்சோ அப்பவே எல்லாம் மொத்தமா செத்துப்போச்சு. 

நாம நம்ம டாப்பிக்குக்கு வருவோம். ரயில்கள்ல இருக்குற சீலிங் ஃபேன் மாதிரி தான் இருக்கும் சின்னி ஃபேனும். அதுதான் சின்னி ஃபேன். அது அதி வேகத்துல ஓடும். அது ஓடுறப்ப ஒரு சத்தம் கேக்கும். ரயில் ஓடுற சத்தத்துல இதுவும் சேந்து ஒரு மாதிரி கேக்கும். அப்பிடி இருக்கப்ப ரயில் எதாச்சும் ஒரு ஸ்டேசன்ல நடுராத்திரி நிக்கிறப்ப அதுவரைக்கும் ரயில் தடதடத்து ஓடின சத்தம் நின்னதும் ஒரு அதீத அமைதி இருக்கும் (ரிலேட்டிவிட்டி). ஏற்கனவே நிசப்தமா இருக்குற நடு ராத்திரி ரைல்வே ஸ்டேசன்ல இதுவரைக்கும் இரைச்சலா ஓடியாந்த ரயில் கம்முனு நிக்கறப்ப ஒரு அமைதி எழும். அந்த அமைதில இங்த ஃபேன் சத்தம் மட்டும் கேக்கும் பாருங்க...

ஃபேன் ஓடுறது சத்தம் தான்னாலும் ரயில் தடதடப்பு இல்லாம இது மட்டும் ஓடுறத கேக்கறதுக்கு உண்மைலியே ஆர்கஸ்மிக்கா இருக்கும். மிகச் சின்ன வயசுல முதல் தடவ ஏற்பட்ட அந்த சிலிர்ப்பு அப்பிடியே மனசுக்குள்ள பதிஞ்சு போனதாலயும் அது ரொம்ப ருசியா இருந்ததாலயும் அதுக்கப்பறம் ரயில்ல போறப்பலாம் இந்த சொற்ப நேர ரைல்வேஸ்டேச அமைதி பேக்ரௌண்டுல ஃபேன் சத்தத்த கேக்கறதுக்குன்னே முழிச்சிட்டிருப்பேன். (குறிப்பு: இந்த அனுபவம் ஸ்லீப்பர்லதான் கெடைக்கும். குறிப்பா அப்பர் பெர்த். ஏசி கோச்சுல பொச்சு மாதிரி இருக்கும்.)

அந்த சுகானுபவத்துக்கு காரணம் cinni ஃபேனுங்கறதால அதுக்கப்பறம் எங்க சின்னி ஃபேன் பாத்தாலும் அது பக்கத்துல உக்காந்து ஓடவிட்டுக் கேக்கறதுண்டு. சின்னி கெடைக்காத பொழுதுகள்ல இன்ன பிற டேபில் ஃபேன்லயும் கவர் பண்ணுவதுண்டு. ஆனா சின்னில இருக்குற அந்த சிம்ஃபனி துல்லியம் வேறு எதுலயும் கெடைக்கறதில்ல. 

இத்தன கழுத வயசாகியும் இப்பவும் ஃபேன் சத்தத்துல அந்த ஜென் நிலை கிடைக்கிறது எதோ ஒரு நல்வாய்ப்புன்னே தோணுது. இது வேற யாருக்கும் இருக்கான்னு தெரியல. இப்பிடி வேற வினோதமான அனுபவ உணர்வுகளும் வேற யாருக்கும் இருக்குமானும் தெரியல. 







----------


தமிழ்ப்படம்-த்தின் ரசிகராய் இல்லாதவர் யாருமே இருக்க முடியாது. இது நம்மூரின் ஸ்பூஃப் படம். இப்படி ஹாலிவுட்டில் ஏகப்பட்டவை உள்ளன. டக்கெனக் கேட்டால் ஸ்கேரி மூவியைச் சொல்லுவார்கள். ஆனால் அதுக்கெல்லாம் அப்பனாதி அப்பன் Airplane. Classic படமிது. In fact தமிழ் படத்தில் வரும் ஆஸ்பத்திரி காட்சியின் கான்செப்ட் இதிலிருந்து உருவப்பட்டதுதான். நடு ராத்திரியில், துல்லியமாகச் சொன்னால் நைட்டு ரெண்டு மணிக்கு வெடித்துச் சிரித்த படம். இதை அறிமுகப்படுத்திய நண்பர் அவர்கள் தற்போது தொடர்பில் இல்லை. ஆனாலும் அவருக்கு நன்றி. இத்திரைப்படத்தின் one of the writer-directors Jim Abraham சமீபத்தில் மறைந்தார். அவருக்கு அஞ்சலி. இந்தப் படத்தைப் பார்க்காமல் சாவவர்கள் பார்க்காமல் சாவதே மேல்.




-------

சமூகவலைதளங்களில் திட்டியது போல கிஷ்கிந்தா காண்டம் அப்படி ஒன்றும் மோசமில்லை. சுமாருக்கு சற்று மேலேயே நன்றாகவே இருந்தது. 

அந்த அப்பாவோ மகனோ செய்யும் காரியமெல்லாம் பைத்தியக்காரத்தனமானதல்ல, அந்த மருமகளும் கடைசியில் சேர்ந்து கொள்வதுதான் வினோதமாக இருந்தது. She needs treatment. 


-----

க்ளுக்:






Comments