அசஞ்சிகை12

?

கூடு துறந்து சகல சௌகரியங்களையும் துறந்து நாடோடியாப் பறந்து போறது எல்லாமே மறுக்கா நாஸ்டால்ஜியா எனும் கூட்டுக்குள்ள புகுந்துக்கத் தான?

--------

!

பணி நிமித்தப் பணியாக அயலகம் சென்றபோது இரண்டாயிரத்துக்குப் பின் அவதரித்த நண்டுகளோடு புழங்கச் சந்தர்ப்பம் வாய்த்தது.


பேரலல் வேல்டு பேரலல் வேல்டு என்கிறார்களே, இத்தானய்யா அந்த வேர்ல்டு என அறிந்துகொள்ள நல்வாய்ப்பாக அது அமைந்தது.


முதலில் எல்லோரையும் please செய்துகொண்டு, யார் மனதும் நோகக்கூடாது, கில்லட்டினில் தலையை நானே வைக்கிறேன் என முந்திக்கொண்டு செல்லும் எய்ட்டீஸ் நைண்டீஸ் கிட்சுகளெல்லாம் ரெண்டு டம்ளர் வாங்கிக் குடிக்கலாம். 

மேனேஜர்கள் இதுநாள் வரை எய்ட்டீசையும் நைண்டீஸையும் செய்து வந்த செய்கையையெல்லாம் போடா (ஃ)பூல் என இடது கையால் டீல் செய்கின்றன டூகேகள். 

என்னை மரியாதைக் குறைவாக நடத்துகிறாயா? காண்டு கொண்டு முறை தவறிப் பேசுகிறாயா? அவமானப் படுத்துகிறாயா? ஓவர் வேலை கொடுக்கிறாயா? போடாங்கோத்தா எனக்கு ஆயரம் வேலை கிடைக்கும், எதுவும் இல்லாவிட்டால் இன்ப்லுயன்சராக ஆகிக்கூட பிழைத்துக்கொள்வேன் எனும் (குருட்டு?) தைரியம் உள்ளது டூகேக்களிடம். 


மேலும் இன்றைய டூகேக்களின் பெற்றோர் செவண்டீஸ்களின் கிட்சுகளாதலாலும், அவர்கள் நன்றாகவே சம்பாதித்து வைத்திருப்பதாலும் அது தருகின்ற பொருளாதார விடுதலை மற்றும் தைரியம் இந்த மேனேஜர், கம்பெனிகளின்மேலான அச்சமின்மையைத் தந்திருக்கிறது. 


ரவ்வும் பகலும் உறவு தூக்கம் உணவு தவிர்த்து அடிமையாய் உழைத்தும் நல்லதுபொல்லது நடக்காத நான்கைந்து பெயர்களை நேரடியாகவே பார்த்த நமக்கு, இந்த டூகேக்களின் எதிர்சாவல் ஒரு மாதிரி ரிவெஞ்ச் நிம்மதி தருகிறது. 


எது குறித்தேனும் தகவல் பெற கூகுல், சாட்ஜிபிடி, என்றுதானே பெரும்பாலும் கேள்விப்பட்டிருப்போம்? டூகேக்கள் டிக்டாக்கைத் தேடுபொறியாகப் பயன்படுத்துகின்றனர். உள்ளபடியே இது பெரும் ஆச்சரியத்தை அளித்தது. ரெஸ்டாரண்ட் தேட வேண்டுமா, டிக்டாக்கிலுண்டு. தெருவோரக் கடையா, மேக்கப் சர்வீசா, டூரிஸ்ட் பேக்கேஜா, எதற்கெடுத்தாலும் டிக்டாக்கிலேயே தேடி விடையும் பெறுகொறார்கள். டிக்டாக் ஃபௌண்டர்களே இந்த யூஸ்கேஸை வியூகித்திருப்பனரா என்பது ஆச்சரியமே. 


ஒரு நண்டு எப்போதும் மொபைலில், அதுவும் இன்ஸ்டாவிலேயே குடியிருந்தது. என்ன பார்க்கிறாய் எனக்கேட்டதற்கு கமண்டுகள் படிக்கிறேன், எனக்கு நாலெட்ஜ் அங்கிருந்துதான் கிடைக்கிறது என்றது. ஒரு மர்டர் மிஸ்டரி நாவலை எவ்வளவு தீவிரத்தன்மையோடு படிப்போம், அத்தனை தீவிரமாக ஒரு கமண்ட் விடாமல் ஒவ்வொரு போஸ்ட்டிலும் சென்று படிக்கிறது. 

சமூகப் பார்வைகளும், அறிவுகளும் இன்ஸ்டா கமண்டு செக்சனிலிருந்துதான் இனி உண்டாகப்போகிறதென்றால் we are doomed.


-----

வாழ்க்கையின் சின்னச் சின்ன சௌகரியங்கள், ஆனால் அது தரும் பெரும் பெரும் ஆனந்தங்கள் என லிஸ்ட் போட்டால் அதில் இவை நிச்சயம் இடம் பெறும். வேண்டுவதெல்லாம், நினைத்தபோது நினைத்த அளவுக்கு எட்டும் தூரத்தில் இவை கிடைக்க வழிவகை செய்வாயாக இறையோனே!















ஒன்லி லைப் கோல்:






காசில்லாத பிச்சக்காரங்களத்தான பாத்துருப்பீங்க? காசிருக்க பிச்சக்காரங்கள பாத்ததுண்டா? 






Comments