அவ்ளோதான் லைஃப்.
******
ஐரோப்பியர்களும் மேற்கு ஆசியர்களும் நம்மிடம் பலமுறை கேட்டது இந்தியாவில் என்னதான் பிரச்சினை, ஜாதி என்றால் என்ன? என்பது குறித்து. அவர்களுக்கு நாமும் பலவாறு பதிலளித்தும் துல்லியமாக இப்பிரச்சினையை அவர்களுக்குப் புரிய வைக்கவியலவில்லை. பிறப்பின் பொருட்டால் ஒருவன் இழிவு படுத்தப்படுவான், அவனைப் பார்ப்பதே தீட்டு என்பதை அவர்களின் அறிவால் perceive செய்யவே முடியவில்லை. மேலும் ஒவ்வொரு லெவல்களிலும் இந்தியர்கள் செய்யும் இழிசெயல்களையும் சில்லறைத்தனங்களையும் இரட்டைவேடங்களையும் விளக்கி மாளவில்லை. இறுதியாக நாம் சொன்னது ஒன்றுதான். நடக்கும் இடப்பெயர்வுகளை வைத்துக் கணக்கிட்டால் இன்னும் பத்திருபது வருடத்தில் இந்தியப் பிரச்சினை உலக பிரச்சினையாக மாறும். அப்போது நான் எதுவும் விளக்காமலேயே உங்களுக்கெல்லாம் புரியும் என்பதுதான்.
சமீபத்திய செய்திகளைப் பார்க்கையில் பத்தாண்டெல்லாம் காத்திருக்க வேண்டாம், இன்னும் சிற்சில மாதங்களிலேயேகூட அந்நிலை வந்துவிடும் எனத் தோன்றுகிறது. வாழ்க இந்தியா. வளர்க இந்தியர் புகழ்.
Comments
Post a Comment
Pass a comment here...