விடுதலை

மற்றொரு தற்கொலை செய்தியோட இன்னைய நாள் விடிஞ்சிருக்கு. சில்க் ஸ்மிதாவும் இன்னக்கிதான் தூக்குப்போட்டு செத்துப்போச்சு. 


தற்கொலை செஞ்சுக்கறவங்க கிட்ட மன்னிப்பும் அவங்க குடும்பத்துக்கு ஆறுதலையும் தரதத் தவிர நம்மகிட்ட எதுவுமே இல்ல. We as a society failed to save them from it. 


தண்ணி குடிக்கிறப்ப சில நேரம் பொரையேறி இருமுவோம். அது ஒடம்போட reflex / defense mechanism. சுவாச குழாய்ல தண்ணியோ உணவோ போயிட்டா அத வெளியேத்தறதுக்காக இயற்கை உண்டாக்கினது. இது உடலுக்கு. மனசுக்கு அதேமாதிரி அதனால தாங்கவே முடியாத ஒரு அழுத்தம் வரப்ப உயிர இப்பிடி வெளியேத்திக்கலாம்னு mind சொல்ற ஒரு false alarm mechanism தற்கொலை. தன்னுயிர போக்கிக்கறவங்ககிட்ட எனக்கு மரியாத இருக்கு. அவ்ளோ உச்ச breakdownனுக்குப் போனப்பறம் தன்னையே கொல்ல துணிஞ்சப்பறமும் மத்தவங்கள கொல்லாம அத தன்னோட நிறுத்திக்கறாங்களே, அதுக்காக அவங்க மேல மரியாதை உண்டு. 


தற்கொலை பண்ணிக்கறவங்ககிட்ட இந்த so called உயிரோட இருக்க நபர்கள் கொண்டு வர அபத்தமான அட்வைஸ்கள பாத்தா செத்தவங்க இவனுகளையும் கூட கூட்டிட்டு போயிருக்கலாம்னு தோணும். அதாவது இவனுக இன்னமும் சாகலையாம், அதனால அக்குள்ல அட்வைசோட வந்துருவானுகளாம். 


யார்கிட்டயாச்சும் மனசு விட்டு பேசு, கூட்டத்தோட இரு, உன்ன பிசியா வச்சுக்க - இதுதான் மக்கள் தர்ற frequent advice. அவங்களுக்குலாம் எப்பிடி புரிய வெக்கறதுன்னு தெரியல. இது தலவலி பல்வலி மாதிரி இல்ல, வலி பொறுக்காம கத்தியோ, இல்ல வலிக்குதுன்னு சொல்லியோ மத்தவங்ககிட்ட பேச. ஒரு படத்துல அமலா உடல்முழுக்க புதைகுழியில மூழ்கி கண்ணு மட்டும் வெளிய தெரியும்ல, அந்த மாதிரி ஒருத்தரால அப்ப பேசவோ அட்லீஸ்ட் கைகால் அசச்சோ கூட எதும் வெளிப்படுத்த முடியாதுல்ல. அதுதான் இங்கயும். 


இதப்பத்தி சொல்ல உனக்கென்ன பெரிய அருகத இருக்குன்னு கேக்கலாம், I go through it almost twice or thrice a week. 

ஒவ்வொரு நாளும் நைட் தூங்கப்போறப்பவும் காலைல குளிச்சு தலை துவட்டுறப்பவும்  நாம இன்னும் எப்டி சாகாம தப்பிச்சோங்குறதுதான் மைண்ட்ல ஓடும். I often feel suicidalனு சொல்லிக்கறதுல அசிங்கம்லாம் எதும் இல்ல, Like how I feel hungry and horny most of the times, suicidalலாவும் தோணுது. அத நம்மனால எதுவும் பண்ண முடியாதுன்றதும் புரியுது. So started living with it. 


யார்கிட்டயாச்சும் பேசுனு சொல்லுவாங்க. அப்பிடி பேசத்தோணாது. பேசினாலும் மனசுல இருக்கற அந்த பிரச்சனைய விட மீதி எல்லாத்தையும் தான் பேச வரும். In fact, no one can fake their happiness like those who are really in depression. நல்லா சிரிக்க வெப்பாங்க, சிந்திக்க வெப்பாங்க, யாரும் எதிர் பாக்காத நேரத்துல பட்டுனு தொங்கிருவாங்க. பஸ்ல ரயில்ல சீட்ட அடச்சிகிட்டு நம்மகூட உக்காந்துருப்பானுகல்ல, அப்ப அந்த பயணம் முழுக்க ஒரு inconvenience, எரிச்சல் தோணிட்டே இருக்கும்ல. அப்பிடிதான் இதுவும். Mind எதோ ஒன்னு occupy பண்ணிட்டிருக்கும். ஆனா அந்த கருமம் என்னதுன்னு புரியாது. எங்கயோ எதோ ஒண்ணு அடிவாங்குறதுக்கு வேற எங்கயோ எதோ ஒரு bulb வெடிக்கும். Like a butterfly effect. So ஒருத்தர்ட்ட பேசுன்னு சொல்றது effectiveவா தெரியல. Personally இப்ப விட்டா செத்துருவேன்னு உச்சபட்ச mental trauma உள்ளுக்குள்ல சத்தமில்லாம scream பண்ணிட்டிருக்கப்பதான் சுத்தி இருக்கவங்கள அதிகம் சிரிக்க வெச்சிருக்கேன். So ஏன் திடீர்னு தொங்கறாங்கனு அந்த aspect புரிஞ்சுக்க முடியுது. 

Also பேசுறவங்க தப்பான nodes trigger பண்ணி விட்டா அது இன்னும் aggravate ஆகிரும். So it is better to not to talk to anyone than talking to a wrong person. உன் மைண்ட்ல என்ன இருக்குன்னு சொல்லு நான் ஹெல்ப் பண்றேன்னு யார்னா கேக்கலாம். என்ன நடக்குதுன்னு எனக்கே தெரியலடா இதுல நான் எப்பிடிடா ஒங்கிட்ட சொல்ல முடியும்னு மண்டைக்குள்ள வெடிக்கும். ஆனா அத சொன்னாக்கூட புரிஞ்சுக்கற கூறு இவனுகளுக்கு இல்லனு they just give up. என் மண்டைல என்ன ஓடுதுன்னு என்னாலயே புரிஞ்சுக்க முடியாதப்ப நான் சொல்றத வச்சு நீ என்ன புரிஞ்சு கொடிய நட்டிடுவன்ற கேள்விதான் ஓடும். 


கூட்டத்தோட இரு - A BIG NO. எவ்ளோ பெரிய கூட்டமோ எவ்ளோ அதிக கொண்டாட்டமோ, அது அப்புடியே opposite effect எறங்கும். சுத்தி நடக்குற party சுத்தமா mute ஆகி உணர்ந்துருக்கீங்களா? You can ‘literally’ experience it when you feel suicidal. அத்தன கூட்டமும் ஒங்கள ரொம்ப ரொம்பப் பெரிய தனியனா feel பண்ண வெக்கும். The bigger the crowd, the bigger the loneliness. அப்பறம் அந்த கூட்டத்துல இருந்து வெளிய வந்ததும் ஒரு void வரும். In fact அந்த void ஓரளவு ஆற்றுப்படுத்தும். 


உன்ன பிசியா வச்சுக்க - இதுல கொஞ்சம் மாற்றம் பண்ணனும். Mind பிசியா வச்சுக்கறாப்ல எதுவும் பண்ண முடியாது. அது ரொம்ப கஷ்டம். Noise cancelling headphone- ஆன் பண்ணி பாட்டு எதுவும் கேக்காம train போனதுண்டு. அந்த சமயத்துல எந்த சத்தமும், பாட்டும்கூட காதுக்கு கனமா இருக்கும். அதனால பிசிக்கலா பிசியா இருக்காப்ல செய்றது அந்த கணத்த கடக்க உதவும். ஒடம்பும் டயர்டாகும். நீச்சலோ, உடற்பயிற்சியோ சஜஸ்ட் பண்ண மாட்டேன். அதுக்கு அதீத உழைப்பு தேவ. Walking is by far the best diverter I’ve found myself. ஓட கூட கூடாது. Just keep walking. மெதுவா. பாட்டு எதுவும் கேக்காம, ஏதாவது ஒரு டெஸ்டினேசன மனசுல வச்சு அத நோக்கி நடக்கணும். கால் போன போக்குல நடக்கறதும் சரியா வரல. அடுத்து எங்க திரும்பறது, எங்க போறதுன்னு தொடர்ந்து ஒரு confusion இருந்துட்டே இருக்கும். 


டிப்ரஷன்னா திடீர்னு குனிஞ்சா குறுக்கு புடிக்குமே அந்த மாதிரியும் சிலர் நெனைக்கறாங்க. It is not. Depression ஒங்கள கவ்விச் சூழும். அது உங்கள கவ்வி முழுங்கறத உங்களால அணு அணுவா feel பண்ண முடியும். அதே மாதிரி பாம்பு அது முழுங்கினத வெளிய கக்குறமாதிரி டிப்ரஷன் விலகுறதும் நல்லா தெரியும். இதெல்லாம் நாலஞ்சு வருஷமா ஒடம்புல, மனசுல என்ன மாற்றம் நடந்தாலும் அத observe பண்ணி பண்ணி கெடச்ச அனுபவம். இப்பிடி திடீர் சூழ்ந்து மறையுறதப் பாத்தா அது உள்ளார ஏதோ கெமிக்கல் ரியாக்சனாதான் எனக்குத் தோணுது. என் தியரி இதுதான். சைன்ஸ் என்ன சொல்லுதுனு தெரியல. So இப்டி கெமிகல் ரியாக்சன எதிர்கொள்ளனும்னா அதுக்கு கெமிக்கல்ஸ்தான் தேவ. மாத்திரைதான் வழி. டிப்ரசனுக்கு போதை - சிகரெட், கஞ்சா, மது, இன்னபிற பவுடர்கள் உள்ளிட்ட அனைத்தும் - சரியான மாற்று கிடையாது. அது transformer தீ புடிச்சிருக்கப்ப தண்ணிய ஊத்துறதுக்கு சமம். போதை வஸ்துகள் சரியும் பண்ணாது. இன்னும் கெடுத்து, வேற பல நோய்கள இழுத்து விட்டுடும். 


ஆக, இதுவரைக்கும் நானா கண்டுணர்ந்த தற்காலிக remedyக்கள்னா நடையும், மருத்துவர்களால் பரிந்துரைப்படும் மாத்திரைகளும் தான். 


But I can say this for sure. Suicidal is momentary. அடிக்கடி கூட வரலாம். ஆனா அது போயி சந்தோஷமா இருக்கற தருணம்னும் நிச்சயமா வரும். Suicidal thoughts எப்பிடி naturalலோ அதே மாதிரிதான் சந்தோஷமா இருக்குற thoughtsசும். Sine wave மாதிரி மாறி மாறி வரலாம். தற்கொலை எண்ணம் வர்ற அந்த தற்காலிக நேரத்த எப்பிடியாச்சும் கடந்துட்டாப்போதும், கரையேறிடலாம். கரையேறி வாழ்க்கை செழிக்கும்னுலாம் சொல்லல, அட்லீஸ்ட் அடுத்த தடவ அந்த thoughts வர வரைக்குமாச்சும் பொழச்சுக் கெடக்கலாம். 


இப்பக்கூட இந்த இவ்ளோ பெரிய கட்டுரை எழுதினது எதோ mind சரியான நிலையில இருக்கறதாலதான். எப்ப அணையுமோ அகல் விளக்குன்றாப்ல மூடு மாறிச்சுனா எல்லாத்தையும் தூக்கிப்போட்டுட்டுகூட போகச் சொல்லும். 


சூசைடல் thoughts இருக்கவங்கள செய்தில பாக்கற ஒவ்வொரு தற்கொலையுமே trigger பண்ணி விடும். முந்தி நம்மளையும் அப்டி trigger பண்ணுச்சு. இப்பல்லாம் கொஞ்சங்கொஞ்சமா அது மரத்துப்போறது தெரியுது. அது மாதிரிதான் விஜய் ஆண்டனி பொண்ணு எறந்தப்பவும். அய்யயோனு மனசுக்குத் தோணுச்சு. நைட்டு 3 மணிக்கு தொங்கிருக்குன்னா அது மனசுக்குள்ள எவ்ளோ போர் போயிருக்கும்னு புரிஞ்சுக்க முடிஞ்சது. ஆனா விஜய் ஆண்டனியோடஅவளோட நானும் இறந்துவிட்டேன்” trigger பண்ணி விட்டிருச்சு. அந்த வரிய படிச்சதும் நானும் கொஞ்சம் செத்த மாதிரி ஆச்சு. In fact எல்லா தற்கொலையும் நாம எல்லாரும் செத்துதான் போறோம். நாம எல்லாரும் இருக்கோம்னு தோணிருந்தா ஒருத்தங்க சாவ மாட்டாங்கல்ல . அத்தன பேரும் செத்துட்டாங்க,  நமக்குன்னு யாருமே இல்ல, நாம கூட - இந்த நெனப்புதான் அவங்கள அந்த அதீத முடிவுக்குத் தூண்டுது. 



பேசினா இது தீந்துராது. பேசியாவது வப்போம். 



Comments

Post a Comment

Pass a comment here...