🌒
“Ahem.”
சிவராமனுக்கு மூச்சிரைத்தது. சற்று நேரம் அவள் அனுப்பிய மெசேஜின் நோட்டிபிகேசனையே வெறித்தபடி இருந்தான்.
Notificationன்லயே மெசேஜ பாத்துக்கிட்டா மட்டும் போதாது.
ரிப்லையும் செய்யணும்
அடுத்த மெசேஜ். கட்டளை.
செல்லத்தங்கம்ல…
அடுத்த மெசேஜ். கொஞ்சல்.
பெருமூச்சாக வந்தது சிவராமனுக்கு. உடல் சூடானது. லேசான கைநடுக்கம். கர்ச்சீப்பால் மணிக்கட்டை இறுக்கிக் கட்டினான். மொபைலை பெட்டில் வீசிவிட்டு பாத் ரூமுக்குச் சென்று டாய்லட் கமோடிலமர்ந்தான். உடனே எழுந்து வந்து கையோடு மொபைலை எடுத்துச்சென்றமர்ந்தான்.
It’s stinky. Bad boy. என்ன அங்கல்லாம் ஏன் எடுத்துட்டுப்போற?
அடுத்த மெசேஜ். சமாதானம். திடீரெனக் கோபம் வரத்துவங்கியது அவனுக்கு. மொபைலை முறைக்கத்துவங்கினான்.
“ஆ! இங்க என்ன அனலா இருக்கு. யாரோ மொறைக்கறாங்க. அதென்ன சைடுல ஒரு நீர்ச்சரடுச் சத்தம்? ஓ.. யூரியன்… வரட்டும் வரட்டும்.”
மிக லேசாகப் புன்முறுவினான்.
ஓகே சிரிச்சிட்டான்.
என்ன ராமலிங்கம் ஆளையே பாக்க முடியல எப்பிட்ரிக்க… வர்ட்டா...
எதாச்சும் ரிப்லை பண்றது...ஃபுல் பேக்டீரியா. dishygenic fellow.
Unhygienic 😏
ரிப்லை செய்தே விட்டான்.
சார வழிக்கு கொண்டு வர grammar naziய தூண்டி விட வேண்டி இருக்கு.
அடுத்து இன்னொருதரவ இப்டி பண்ணிங்கன்னா
எத தூண்டினாலும் ரிப்லை வராதுங்க.
ஓஹோங்க. அப்ப இன்னும் கோவமாத்தான் இருக்கீங்க.
You won’t go through this again, I swear.
செயல்ல காட்டுங்க.
வேற எதுலல்லாம் காட்டணும்ங்க.
இதெல்லாம் கூல் பண்ணதான் சொல்றீங்கனு தெரியும்.
சாத்தலாம்ங்க.
கோச்சுக்காதீங்க infant.
இனிமே நடக்காதுன்னு சொல்றேன்ல.
எங்கங்க போய்த்தொலஞ்சீங்க
நிச்சயம் ஒனக்கு தெரிய வரும்.
ஆனா இப்ப இல்ல. இப்ப எதும் கேக்காதயேன் ப்லீஸ்.
என்னமோ பண்ணுங்க. நீங்க சொன்னா வரணும்.
போன்னா போகணும். ஐட்டம் மாதிரி.
ப்ச். You’ll know it very soon.
மூனு நாள்,
4320 மினிட்ஸ்,
259200 செகண்ட்ஸ் பிரிஞ்சுருக்கோம்.
Did you miss me?
மூனு நாள் லீவ் போட்டு சுஜாதா புக் படிச்சீங்களா
இல்ல மணிரத்னம் படம் பாத்திங்களோ
கோச்சுக்காதீங்க தேன்குட்டி.
அதென்னதுங்க பிரிஞ்சுருக்கோம்னு.
என்னவோ அதுக்கு முன்ன சேந்தே இருந்தாப்ல.
ம்ம்.. வார்த்தைகள கண்டுபுடிச்சு சண்ட போட ஆரமிச்சிட்ட.
அப்ப நார்மலாகிட்டன்னு அர்த்தம்.
போடிங்கொவ்வா.
கொவ்வா என்று கூறினால் உதடுகள் ஒட்டாது.
ஹவ்வா என்று கூறினால்தான்…
அப்பவும் ஒட்டாது.
இருங்க ஃப்லஷ் பண்ணிக்கறேன்.
அடப்பாவி இன்னும் பாத்ரூம்லதான் இருக்கியா?
இல்லங்க. ஜோக்குன்னு ஒன்னு மேல சொன்னிங்களே, அதங்க.
சரி நீ ஹ்யூமர் பாதாம்தான் ஒத்துக்கறேன்.
எங்க, எனக்காக மீம்ஸ், காணாம போனத குத்திக்காட்ற மாதிரி
கோட்ஸ் எல்லாம் அகழ்வாய்ஞ்சு வச்சிருப்பியே.
ஒவ்வொன்னா அனுப்புங்க பாப்போம்.
😏
😘
ஒன்ன வச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னே தெர்ல.
எதையாச்சும் பண்ணு.
ஆனா பண்ணு.
கடந்த சில நாட்களாக தவித்துக்கொண்டிருந்த சிவராமன் ஒரே கான்வோவில் சரியானான். அவனை முழுமையாக ஆக்ரமித்து ட்யூன் செய்திருந்தாள் ஹவ்வா. 'ச்ச என்ன நாம இவ்ளோ சீப்பாருக்கோம்' என தன்னைத்தானே soliloq-க்கி, நிந்தித்துக் கொண்டான்.
என்னங்க நைட்டுதான் வருவேன்னீங்க,
இப்ப பகல்ல பசு மேய்க்க வந்துருக்கீங்களா
என்னடா ஓடோடி பேச வந்தா வெரட்டுற.
அப்ப போயிரவா?
போங்கங்க. என்னமோ எங்ககிட்ட சொல்லிட்டுதான்
எல்லாம் பண்ற மாதிரி.
சரி இனிமே 12*2/14/2 பேசிக்கிட்டே இருப்போம்.
இதுவரைக்கும் பேசி அறுத்ததுலாம் போதும்.
இனிமே அடுத்து நேர்ல பாத்துட்டு தான் அடுத்த வேல
என்ன கண்ணம்மா அவ்ளோ சாதாரணமா
நிகழ்ந்துடுமா நம்ம மீட்டிங்.
பொத்துங்க பொன்னம்மா. No more crappy excuses.
நாம மீட் பண்றப்ப பறவ ஃப்ரீஸ் ஆவும்,
கடல் அலை ஃப்ரீஸ் ஆவும்,
எண்பது கோள்களும் ஒரே நேர்கோட்டுல வரும்.
நிலா பிரம்மாண்டமா வரும், நிஷாகந்தி பூக்கும்.
மரணம்மாஸா இருக்கப்போவுது.
Do I look like a guy with a brain in
my buttocksooth to beliebe all these?
தெர்லியே. திரும்பு பாத்து சொல்றேன்.
நீ திரும்பு பூவ வெக்கிறேன்.
டே எனக்கு மட்டும் ஆச illiya?
யுகயுகமா வெய்ட் பண்றேன் ஒன்ன மீட் பண்ண.
அதுக்கான டைம் வந்துட்டா nothing can stop our meeting.
நா எப்டி இருக்கேன்னு கூட இன்னம் நீ கேக்கல
நாந்தான் உன்ன பத்தரமா பாத்துக்கிட்டனே.
நீதான் என்ன பாத்துக்கல.
ஆமா ஓத்துக்கல.
அதுவுந்தான்.
ஒன்ன நெனைக்க நெனைக்க ஆத்தரமா வருது.
punish me.
எதாச்சும் அசிங்கமா கேக்கப்போறேன்.
Powerless impotent தான் கெட்டவார்த்த பேசுவான்.
உண்மையான பவர் வச்சுருக்கவனோட சாதாரண
வார்த்தைக்கே உலகம் கட்டுப்படும்.
கெட்ட வார்த்த பேசுற எத்தன பேர பாத்துருக்க,
அவங்களல்லாம் யார்னா பொருட்டா எடுக்கறாங்களா?
Foul words are as dirty as excreta.
ஒருத்தன திட்றது அவன் மேல பீவீசுற மாதிரி.
அவம்மேல வீசினாலும் அந்த அழுக்கு உங்கிட்டயும் மிச்சமிருக்கும்.
நீ திட்டினாதான் ஒரு வேல நடக்கும்னா
அதுல அசிங்கம் திட்டு வாங்கறவனுக்கில்ல.
Don't raise your voice. Raise your reputation.
Sorry.
சமத்து சாம்பார்குட்டி
பண்றதெல்லாம் நீ பண்ணிட்டு
என்னய சாரி கேக்க வச்சிட்டல்ல.
நீ சமத்துப்புள்ளையாகணும்னுதான சொன்னேன்
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால்
என் மேனி சிலிர்க்குமடா
ஒனக்கு மேனிதான் சிலிர்க்கணும்னா
அதுக்கு வேற வழி இருக்கு
முடியாது. சாவு.
This comment has been removed by the author.
ReplyDelete