ᵒᴼᵒ▫ₒₒ▫꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ

🌘

என் பேர என்னனு சேவ் பண்ணிருக்க?

:) அதெதுக்கு.

சொல்றாங் டேய். 

ஷி.

ஷி? You mean she?

No. ஷி. just ஷி.

அப்டின்னா?

அதுலாம் சொல்ல முடியாது.

சரி english spelling என்ன? S-h-e ஷியா இல்ல S-h-i ஷியா?

அதும் சொல்ல முடியாது. 

ஆல்ஃபபெட்டுக்கு ஒருத்தின்னு வச்சிருக்க ஏண்டா?

ஆமா கிழிச்சாங்க. 

உன் girlfriendsச அகர வரிசப்படுத்தனும்னா பக்கத்து மொழிலருந்துலாம்
லெட்டர்ஸ் கடன் வாங்கணுமாமே. 

ஒரு கன்னி கழியாத பரிசுத்த ஆவிகிட்ட பேசிட்டிருக்க நீ. 

கன்னிப்பருவத்திலே ராஜேஷாடா நீ?

அடிங்க மவளே. 

நீ சொல்றதப்பாத்தா அப்டிதான் தோணுது. 

ஒரு நாள் மாட்டுவல்ல.
தீயணைப்பு ஓஸ் பைப்பாட்டம் அடிக்கும். அப்பத் தெரியும்.
ஓஸ் பைப்பா ஓட்ட விழுந்த பைப்பான்னு பாக்கத்தான போறன். 
இப்படிக்கு, 
ஷி
(ஒப்பம்)

ஆங் Oppam Oppam.

என்ன சொல்றியே, நீ உன்னோட லவ் ஸ்டோரிய சொல்லேன்

காதல் கதைகள சொல்லவா
காதல்கள் கதைய சொல்லவா?
இதுல இத்தன ஜான்ரா வேற வச்சிருக்கியா?
எனக்கு எதுனாலும் ஓகே.

எல்லா கதைலயும் க்லைமாக்ஸ்ல ஹீரோ செத்துருவான் :))))

அப்ப நானும் செத்துருவனா?

:) அது நீ ஹீரோவாங்குறதப் பொறுத்து. 

நேத்து தான ஜெமினிகணேசன்னு சொன்ன.

அப்ப அவரு ஹீரோ இல்லியா?

அவர் ஹீரோதான். நீ ஹீரோவான்றதுதான இங்க பேச்சு. 

நா ஹீரோவானு தெரிஞ்சுக்க என்ன செய்றது. 

Heroes will not ask questions like this.

ரைட்டு. ஆனா ஒரு சந்தோஷம்.

என்னது?

நான் ஹீரோவா இல்லியாங்குறத பொறுத்துனு தான சொன்ன.

நமக்குள்ள 'அது' இருக்கா இல்லியான்றதப்பொருத்துன்னு சொல்லல.

அப்டின்னா நமக்குள்ள அது இருக்குதுன்னுதான...

இப்பிடி நம்பி செத்தவன் நெறய பேர் இருக்கான்.

கடைசியாதான் வந்தார் சிவராம் மஹாதேவ்

பர்ஸ்ட் டைம்

??

எம்பேர நீ சொல்றது.

சொல்றதா?

I mean, typeபறது.

நீ சொல்றப்பதான் தெரியுது

என் பேர் எவ்ளோ...

அடுத்த வரி அனுப்புனன்னா ப்லாக் பண்ணிருவேன் க்ரிஞ்சிக்குஞ்சான்

okay okay

அமைதி அமைதி என் காதல் கொஞ்சம் fiecerfulலானது.

அப்பள நெஞ்சங்கள் தாங்கறது கஸ்டம்தான்.

அப்பளமா?

பின்ன உப்பளமா?

ஒனக்கு பயம். என்ன லௌ பண்ணிருவன்னு.

லௌஆ?
டே சிறு பயலே.
சிறு பயர பிதுக்கிருவேன்.
டக்குனு ஏம்மா வயலன்ச கையில எடுக்கற?
கீழ போடு.
ட்ராப் த வெப்பன் ஐ சே.

காதலாம் காட்டாறாம். 

டே... believe me when I say this. ஒனக்கு நம்ப or புரிய கஷ்டமா இருக்கலாம். 

ஒரு பெண்ணோட முழுமையான வெளிப்படுத்துதல
ஆணால தாங்கிக்கவே முடியாது தெரியுமா?

தாங்கவே முடியாதுன்னா?

பஸ்பமாகிடுவான்.

You guys cannot stand it. Quite literally

ஹ்ஹ… நல்ல கதையாருக்கே.

நெஜமாதாண்டா.
செக்சே எடுத்துக்கோவேன்.
Once you're done, you are done and dusted.
திரும்ப ஒருக்கான்னு கேட்டாலே நீங்க சுருங்கிக் கெடப்பீங்க.
ஆனா திரும்பத் திரும்பக் கேக்க முடியும் பெண்ணால.
அப்டிலாம் கேட்டா வதங்கிப் போயிடுவீங்க.
That’s why I say, இத செக்சுக்கு மட்டும்னு சொல்லல,
ஒரு பெண்ணோட முழுமையான ஜ்வாலைய உங்களால தாங்கிப் பிடிக்கவே முடியாது.

அவள் இதைச் சொன்னதும் ஏனோ சிவராமனுக்கு நடு முதுகு திடீரெனத் தன்னால் சிலிர்த்தது.


வழக்கமா நீ எதாச்சும் பேசினா அத காஜில முடிப்பேன்.
ஆனா இப்ப நீ காஜப்பத்திதான் சொல்லிருக்க. ஏன்னு தெர்ல திக்குனு இருக்கு.
அந்த ஜ்வாலைங்கற வார்த்த எதோ தீப்பந்தம் மாதிரி மூஞ்சில அடிக்கிது.

இனிமேதான் திக் திக் ஆரம்பம். Get ready.

திக்கா? அது என்னது?


சொல்லிட்டா எப்பிடி திக்காகும்? Wait and watch.

என்னது சீரியல் கில்லர் மாதிரி பேசுற.

கில்லர் இல்ல, கிள்ளி.
கிள்ளி கொண்டு போயிருவேன் ஒன்ன.

கிள்றதுன்னு ஆகிருச்சுன்னா தொடைல கிள்ளு.

கிளர்ச்சியா இருக்கும்.

😏


ஷி


ம்ம்


உன் ஹைட் என்ன?


நீ ரொம்ப பெண்ட் பண்ணாம ஈசியா நெத்தில கிஸ் பண்ண முடியற ஹைட்.


அப்போ பெண்ட் பண்ணா?


கொஞ்சம் எறங்கி லிப்ஸ்ல. 


தடால்னு ரொம்ப பெண்ட் ஆனா?

டே. அடி வாங்குவ.


அடி? You mean bottom?

கொன்றுவேன். 


கொல்லுங்க. ஆனா ஒரே கண்டிசன்.

என்னது?


வெப்பன்ஸ் எதும் யூஸ் பண்ணாம

உங்க கையாலயே கழுத்த நெறிக்கணும்.

சாகறப்பயாச்சும் ஒரு மகளிரின் கை பட்டு செத்தான்னு

என் tombstoneல எழுதப்படணும். 


டேய் டேய் கொஞ்சம் கேப் கெடச்சா செய்ய ஆரமிச்சிருவியே.


செய்யலாம்னுதான் பாக்கறேன். கேப் தான் கெடைக்கமாட்டிங்குது.


கையால நெறிச்சு கொல்லாம, உன்னோட உயிர உறிஞ்சி எடுத்துட்டா?


உயிர? உறிஞ்சுதல்?

You mean…

before I get into any assumptions நீயே வெளக்கிரு.

பிசுபிசுனு ஆகிடும் இல்லன்னா.


I’m never "giving anything" to you.


இல்ல..

உறிஞ்சறாப்ல என்ட்ட எந்த landscape இருக்குன்னு யோசிக்கறேன்.


யோசிச்சிட்டே இரு. உன் டெத் என் வாயாலதான். 



⋆。゚☁︎。⋆。 ゚☾ ゚。⋆˚₊‧꒰ა ☆ ໒꒱ ‧₊˚✧˚ ༘ ⋆。˚

டே...

எஸ்.

ஒன்னப்பாத்தா பாவமாவும் இருக்கு.

பாவமாவும்னா?

ப்ச் விடு. ஒனக்கு சொன்னாப் புரியாது.

are you okay?

yes and no. slightly depressed.














🤣🤣🤣

🤣🤣🤣

do you know why am I laughing?

எதுக்கு? Timingகுக்கா?

இல்ல, அது புரிஞ்சா சிரிக்க மாட்ட. 

சொல்லு புரிஞ்சுக்க முயல்ச்சி பண்றேன்.

உண்மைலயே அந்த கோழி நீயா இருந்து, 
நான் டிப்ரஸ்டானா என்னாகும்.

என்னாகும், வெறும் கோழி, கோழி அறுபத்தஞ்சாகிடும். 

😅😢 (ஒரு கண்ணில் சிரிக்கிறேன் மறு கண்ணில் அழுகிறேன்)

Know what?
I'd rather be nowhere with you than somewhere without you.

இதென்னது vulnerable timesல சொல்ற ஐலௌயூஆ?

No அதுக்கு வேற ஐட்டம் வச்சிருக்கேன்.

I love the view.
without the "the".

I love view too. But as a friend.
This is like Sambar but it's from Bangalore.

😂😂😂
டே நானே விட்டாலும் நீ சாம்பார விடமாட்ட போல?

oh fuck! 🤦🏻🤦🏻🤦🏻 


⋆。゚☁︎。⋆。 ゚☾ ゚。⋆˚₊‧꒰ა ☆ ໒꒱ ‧₊˚✧˚ ༘ ⋆。˚

டே...

ம்ம்ம்..

எதாச்சும் சொல்லு.

ஒனக்குன்னு சில கலக்சன்ஸ் தேடி வச்சிருக்கேன். எடுத்து உடவா?

ம்ம்.












🚩 1.

why do women have flowers on the front of their underwear?

why?

In loving memory of all the faces buried there.

🚩 2.

what is this கொடி & நம்பரிங் bae🐝?

Red flags.
இதுல 3 கலக்ட் பண்ணிட்டனா அதுக்கப்பறம் என் DP ஒனக்கு தெரியாது.
செக் பண்ணி பாக்கறியா? Magic magic.
ச்ச ச்ச ச்ச. பரவால்ல இருக்கட்டும்.
டூ இன் த ஹேண்ட் ஒன் இன் த மைண்டுனு கேல்குலஸ்லாம் போடணும்.
எதுக்கு ஒனக்கு அனாவசிய தொந்தரவு.
இல்ல வாங்கிப்பாருங்க சார் நல்லாருக்கும்.
 Nonononononono. It's okay ma.


⋆。゚☁︎。⋆。 ゚☾ ゚。⋆˚₊‧꒰ა ☆ ໒꒱ ‧₊˚✧˚ ༘ ⋆。˚

A Ciguapa is a mythological creature described as having human female form with brown or dark blue skin, backward facing feet, and very long manes of smooth, glossy hair that covers their bodies. They supposedly inhabit the high mountains of the Dominican Republic. These creatures have nocturnal habits. Also, due to the position of their feet, one can never quite tell which direction the beings are moving by looking at their footprints. Some people believe that they bring death, and it is said that one should not look them in the eye, otherwise the person is at risk of being bewitched permanently. The only vocalization made by ciguapas is said to be a kind of whine or chirping. Ciguapas are considered to be magical beings, beautiful in appearance to some, yet horrendous to others. All sources agree that they are wild creatures. They are compared in many cases to mermaids: beautiful yet cruel, and far from innocent. Deceitful and ready to capture the wayward traveler, it is said that they are so beautiful that they can lure men into the forest to make love with them, only to kill them afterward. Even today, one can still find inhabitants who confirm having sighted a ciguapa. Some also state that she is hard to find and locate due to her backwards feet, so she is almost impossible to track unless you know to follow the feet backwards. Lore states that the only way to capture a ciguapa is by tracking them at night, during a full moon, with a black and white polydactylic dog (called a cinqueño dog)

Comments