꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂

🌖

நாம பேசின அன்னைக்கே கேக்கணும்னு இருந்தேன். Hawwa தான் உம்பேரேவா?

ஏன் இதுக்கென்ன?

இல்ல, ரொம்ப rareரான பேரா இருக்கே. இப்டி ஒன்னு இதுவரைக்கும் கேள்விப்பட்டதே இல்ல. கடைசியா இந்த similarityல ஒரு வார்த்த கேள்விப்பட்டது பிக் பாஸ்ல. ஒரு கேண்டிடேட் அழறப்ப மனசு வலிக்குது அவ்வஅவ்வான்னுச்சு.

ஒன்னால நம்ப முடியாது. உண்மையிலேயே நான் அவ்வா தான்.

அவ்வான்னா? அவ்வையாரா?

ஆமா.


இது post midnight தான். மனுசங்க சைக்கலாஜிக்கலி ரொம்ப vulnerable ஆகற நேரந்தான். அதுக்குன்னு கெடச்சான் ஒருத்தன்னு செய்ய ஆரமிக்கிறியே.

நம்பலன்னா போ.

அட நம்பலன்னு எங்க சொன்னேன். கன்வின்சிங்கா சொல்லுன்றேன். இப்ப என் மைண்ட் இருக்குற நெலமைல நா ஆம்ப்ளயே இல்லன்னு சொன்னாலும் ஒத்துக்கதான் செய்வேன். 

அப்போ நீ நம்பல. 


கோச்சுக்காதீங்க ஜுசிலிப்சி. சரி let me ask you this. நீ அவ்வையார்னே வச்சுப்போம். எப்பிடி இத்தன நாள் உயிரோட இருக்க?

In fact இத்தன நாள் கூட இல்ல, இத்தன ஆயர வருஷம். Also you are which of the avvaiyars? நாம தமிழ்புக்ல படிச்ச அவ்வையார் ஒரே ஆள் இல்லையாம். ஒரு ஒரு காலகட்டத்துல ஒரு ஒரு அவ்வையார் இருந்துருக்காங்களாம். அது ஒரு அஞ்சாயிரம் ஆறாயிரம் வருஷ வரலாறாம். முதல் அவ்வைல இருந்து கடைசி கேபிசுந்தராம்பாள் வரைக்கும் அவங்க எல்லாரையும் ஒரு குறியீடா உணர்த்த அவ்வைனு சொல்றோமாம்.


பரவால்லியே ஒனக்கு இவ்ளோ தெரிஞ்சிருக்கே, எப்பிட்றா?

என்னப்பத்தி என்னனு நெனச்ச நீ? நாந்தான் எங்க ஸ்கூல்ல தமிழ் ஃபஸ்ட்டு. எய்ட்டி டூ மார்க்ஸ்.

That’s a significant achievement. T-Shirt la print panni potuko. 

போ கெளவி ஒனக்குப் போறாம. நீ பேச்ச மாத்தாத. ஆன்சர் மை கொஷின்ஸ்.

என்ன கொஸ்டின்?

Which of the avvaiyaars are you?

அவங்கல்லாம் ஏன் ஒரே ஆளா இருக்கக்கூடாது?


Lol. இதென்னது Schrodinger's cat மாதிரி. வெவ்வேற ஆள். வெவ்வேற காலக்கட்டத்துல எப்டி ஒரே ஆளா இருக்க முடியும்? Reincarnation மாதிரி எதுவுமா?


No, up for something preternatural?

சமயத்துல நீ தியாகராஜன் குமாரராஜா படத்துல வர லேடிஸ் கேரக்டரோன்னு நெனைக்க வெக்கிற. சரி சொல்லு கேப்போம். 


Reincarnation இல்லாம ஒவ்வொரு eraலயும் இருந்தது ஒரே ஆளா இருக்கணும்னா what could be the best possibility?

As far as I know அவங்க சாகாம இருந்துருக்கணும். But அது எப்டி முடியும்? That too for thousands of years?


🙂 You are getting closer. அவங்க சாகலன்னு வச்சுக்கோ.


அதான் எப்பிடி possible? சாகவே இல்லன்னா அரதப்பழசான கெழ பாடில ஸ்பைடர் வெப் கட்டிடும். சுமெல் வர ஆரமிச்சிரும்.

ஏண்டா எய்ட்டி டூ வாங்குன கோல்ட் மெடலிஸ்ட் அவ்வைக்லோபீடியா ஒரு obvious மேட்டர மிஸ் பண்றியே?

மேட்டர மிஸ் பண்றேன்றது ஒனக்குப் புரிஞ்சா சரி. 

சாப்டுற எடத்துக்கு வண்ட்டியா?

ஓ சாப்டல்லாம் விடுவியா? எனக்கு no objection. 

டேய் வாங்கப்போற.

Yes, அதான் நானும் சொல்றேன். நீ குடுக்கப்போற, நா வாங்கப்போறேன்.

டேய். எத்தன ஆயிரம் வருஷமா பூட்டியே இருக்குற ஞானத்த ஒனக்கு வழங்கிட்டிருக்கேன். நீ சிற்றின்பத்துல துய்க்கத் துடிச்சிட்டிருக்க. 


ஏண்டி, நைட்டு மூனு மணி ப்ரம்மமுஹூர்த்த நேரத்துல பேசற பேச்சா இது? கிட்ட வா கிட்சு தரேன்.


ஓ இவர் தூக்குன்னா தூக்கிடனும் அவுருன்னா அவுத்திடனும். ஒனக்கெல்லாம் கடைசி வரை…


NOOOOOOOOOOOO0000000oooooooooo… அந்த சாபத்த மட்டும் விட்டுடாத. ஆல்ரெடி பாதி வாழ்க்கை வீணாகிடுச்சு. 


தெரியுதுல்ல. அப்ப சொல்ற பேச்சக்கேளு. 

Jokes apart, எனக்கு நீ சீரியசா சொல்றியா இல்ல கலாய்க்குறியான்னு கூட தெரியல. 

நம்பறதும் நம்பாததும் ஒன் இஷ்டம். ஆனா ஒன்னு நிஜம். இந்த ஆயிர வருஷக் கதைய கேக்கற மொதல் ஆள் நீதான். 

இப்பதான் திகு பட ஈரோயினின்னு பாராட்டுனேன் அதுக்குள்ள கன்ஸ்பைரசிக்குள்ள போறியே. சரி உன் லாஜிக்குக்கே வரேன். ஒரு ஆயம்மா ஆறாயிரம் வருசமா இருந்தா இன்னேரம் எல்லாருக்கும் தெரிஞ்சுருக்காது? ரீசண்ட்டா ஒரு நியூஸ் பாத்தேன் உலகத்துலயே வயசான அம்மா, some 134 வயசு, இறந்துட்டாங்கன்னு. அடுத்த oldest கெழவிக்கு somewhere around 120 வயசாம். இப்பிடி எல்லாருக்கும் தெரிஞ்சுருக்கணும்ல. 


First ஒருத்தவங்க எப்பிடி இத்தன வருசம் இருக்க முடியும்னே என்னால நம்ப முடியல. 


ஏண்டா எய்ட்டி டூ மார்க்ஸ். அதியமான் அவ்வை கதை படிச்சதே இல்லியா நீ?


Oh!!! Fuck yeah, அவ்வையாரோட boy bestie. 


அவர் அவ்வையாருக்கு என்ன குடுத்தார். 


கனி. நெல்லிக்கனி. 

Ohhhhhhhh I got it now. 


என்னது?


அது ஒரு special breed நெல்லிக்கால்ல? Like, ரொம்ப நாள் உயிர் வாழற பவர் குடுக்கறது. 


Yes, ரொம்ப நாள்னா அது எத்தன நாளா வேணும்னாலும் இருக்கலாம்ல, 1000 days or years. 


Now it sounds reasonable, but still அவங்க அத்தன வருஷம் இருந்தா இன்னேரம் சாகலைன்னாலும் பாங்கெழவி ஆகிருக்கணுமே. உன் டிபியப்பாத்தா juicy & tenderரால்ல இருக்குற, assuming you are the avvaiyaar.


See, சாகா வரம்ங்குறத நீ அவங்க வயசானாலும் சாக மாட்டாங்கன்னு பாக்கற. How bout this? அந்த நெல்லிக்கனிக்கு de-ageing பவர் இருந்து, வயசே ஆகாம அதே இளமையோடு இருந்தா? 

ப்ரீயா இருக்கப்ப Watch this: https://www.youtube.com/watch?v=cietOjq_YaM


ம்ம்.

அப்ப அவ்வைன்றது ஒரு ஆயா கேசில்லியா? You mean அந்த நெல்லிக்கா சாப்ட்டு யூத்தாகிருச்சுன்னு சொல்றியா?

 டேய், அவ்வையார் ஆயான்னு யார்ரா சொன்னா?


யாரா? தமிழ் புக்குலேந்து தமிழ் சினிமா வரைக்கும் அதுதான சொல்லுது. இப்ப என்ன கேபி சுந்தராம்பாள ஆயாவே இல்லேம்பியா நீ?


டேய், அதியமான் அவர் girl bestieயப்பாத்து இப்பிடி comment பண்ணிருக்கான்.

இழை அணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல்

மடவரல் உண்கண் வாள் நுதல் விறலி!


கண்ல eyelining, இடுப்புல ஹிப் செய்ன் போட்டுருந்த கோளாறான பொம்பளையப்பாத்து ஆயான்ற நீ. 


WHAT!!!!!!!!!!!!!!!!!!!! என்னால நம்பவே முடியல. அவ்வையார் ஒரு milf ahhhhh!!


Now I’m able to connect the dots. இதனாலதான் அவங்களுக்கு நெல்லிக்கா குடுத்து கரக்ட் பண்ணப்பாத்தாரா?


அதுக்குன்னு சொல்லிட முடியாது. அவ்வை அழகுல மட்டுமில்ல. அறிவுலையும் பிஸ்த். அதியமானுக்காக தொண்டைமான் கிட்ட தூது போயி அவண்ட்ட பேசிப்பேசியே ப்ரெய்ன்வாஷ் பண்ணி போர நிறுத்திருக்கு.

என்னது பேசியே போர நிறுத்திருச்சா? பெரிய இன்ஃப்லுயன்சரா இருக்கும் போல. இன்ஸ்டால இருந்துருந்தா பிஞ்ச செருப்புலருந்து bmw வரைக்கும் ப்ரொமோசன் பண்ணி காசு பண்ணிருக்கலாம். 


Btw, ஒரு லேடிஸ் வந்து சொன்னதும் போர நிப்பாட்டறளவுக்கு அறிவுகெட்டதொண்டைமானா அந்த மன்னன்?

 

அப்பிடி பேசிருக்குன்னா பாரேன். நீ ஒரு ஃபேமஸ் கோட்ஸ் படிச்சிருக்கியா? “it takes 6 months to build a rolls royce and 13 hours to build a toyota”

ஆமா. 

இது போயி அப்பிடிதான் அவன் மண்டைய கழுவிருக்கு.

வைகல் எண்தேர் செய்யும் தச்சன்

திங்கள் வலித்த கால் அன்னோனே


ஒரு நாளைக்கு எட்டு தேர் செய்ற தச்சன் ஒரு மாசம் வேல செஞ்சு ஒரு தேரோட சக்கரத்த மட்டுமே செஞ்சிருந்தான்னா அந்த தேர் எவ்ளோ strong & ப்ரம்மாண்டமா இருக்கும். அப்பிடிப்பட்டவன் அதியமான். எப்பிடி வசதின்னுருக்கு. 


அடங்கொய்யா. நீ முன்னாடி சொன்னியே, பேசியே ப்ரெக்னண்ட் ஆக்கிருவேன்னு. அது நா இல்ல, இந்த பொம்பளதான் 


🤣🤣🤣

ஆமா... நீ கூட இருந்த குமார் மாதிரியே சொல்றியே ஒரு வேள நீ நெஜமாவே அவ்வையார்தானோ…

👸

ஆனா இத்தன நாளா அவ்வையாருக்கு கேபிசுந்தராம்பாள தான் mindmap பண்ணி வச்சிருந்தேன். நீ சொல்றதப்பாத்தா அவங்க ரதிநிர்வேதம் ஜெயபாரதி மாதிரியோ மோனிகாபெலுச்சி மாதிரியோ இருப்பாங்க போலயே. 

🤣🤣🤣

பெலுச்சினு சொல்ல முடியாது. ஆனா கண்டிப்பா ஆச்சி இல்ல. 


ஆனாலும் ஒரு விசயம் இடிக்குது. அது எப்பிடி இவ்ளோ அழகான Milfஃப விட்டு மத்தவனுக வச்சிருப்பானுக?


இப்பதான் நீ என் வழிக்கு வர ஆரமிச்சிருக்க. அங்கதான் it gets interesting. 


என்னது?


அது ஏன் பாக்கற மத்தவங்களுக்கு கெழவியாவும் அது மனசுக்கு புடிச்சவங்களுக்கு மட்டும் தன்னோட மெய்யழக காட்றதா இருந்தா?


ஆங். இது என்ன ஓலாருக்கே. கூடுவிட்டு கூடு பாயறது கேள்விப்பட்டுருக்கேன். தோற்றம் மாத்துறது எப்பிடி சாத்தியம்?


மாறுறதுன்னா ஃபிசிக்கலா மாறுறதேவா? அப்பிடி ஒரு தோற்ற மயக்கம். Hallucination மாதிரி.


இது எதோ டார்க் மேஜிக் மாதிரில்ல தெரியுது.


முன்ன சொன்னன்ல, பேசியே போர நிப்பாட்டுறவளுக்கு ஒவ்வொருத்தரையும் எப்பிடி handle பண்ணனும்னு தெரியாதா என்ன? ஆம்பளைக்கு ஒரு ஸ்விட்ச் இருக்கு அத தட்டினா அவன நெனச்ச மாதிரி ஆட்டி வெக்கலாம். 


இத எடுத்துக்கோயேன், ஒரே லேடிய அவ புருஷன் பாக்குறப்ப அவனுக்குள்ள எராடிக் சென்சஸ் உண்டாகும். அதுவே அவளோட பையனோ அப்பாவோ பாக்கறப்ப அவள அந்த கோணத்துல பாக்கவே வராது. Ever wondered why?


WHATTHE.


ஒவ்வொருத்தரும் தன்ன எப்பிடி பாக்கணும்னு அவ்வையால ஆண்கள் மைண்ட control பண்ண முடிஞ்சது.


I’m not able to process it. Too heavy for me for this time. 


There are more to come 🙂


இந்த ஜித்து வேலைலாம் காட்டினதாலதான் அவங்கள வச்சுக்கிட்டாரா அதியமான்?

ஐ மீன் கூடவே.


அவரு வச்சுக்கிட்டாலுமே அவங்க நட்புல தப்பேதும் இல்ல. 


அடியே, சீரியசாதான் சொல்லிட்டிருக்கியா நீ?


ஏன் இருக்கக்கூடாதுன்னு சொல்லு. அந்தாள் செத்தப்ப அவங்க பொலம்பி பாடின பாட்ட எடுத்துப்பார்.


Are you accusing adhiyaman?


No, I’m not. அவங்க அப்பிடி இருந்துருக்கவும் வாய்ப்பிருக்குன்னு ஒரு perspective சொல்றேன். அது நிஜமா இருந்தா அதுல எந்தத் தப்பும் இல்லைன்னும் சொல்றேன். See, நீ அதியமான மன்னனா பாக்கற. நா அவன ஆணா பாருன்றேன். சாகா வரம் குடுக்குற நெல்லிக்காவ ஜஸ்ட் லைக் தட் அவங்க அறிவுக்காக குடுக்கறளவுலாம் ஆம்பளைங்க பெரிய மனுசங்க இல்லன்னு சொல்றேன். ஆண்கள் லேடிஸ்ட்ட sapiosexualலா இருப்பாங்க, sexual கொஞ்சம் தூக்கலா கெடைக்கும்னா மட்டும்.



ROFL. உண்மை உண்மை. 


மொதல்ல அவ்வையார non-ஆயாவாவே கற்பன பண்ண முடியல. It needs a lot of unseeing for me.

அவங்க ஆயா இல்லாதது மட்டுமில்ல. சுண்டி இழுக்கும் அழகியாருந்தா எப்பிடி இருக்கும்..? 

Know what? Now my mind is fucked.

ஒனக்கு ஆக வேண்டியதத்தவிர மீதி எல்லா எடமும் fuckகிட்டுப்போவுது. Enough for today நான் போறேன். Ciao.

⋅.˳˳.⋅ॱ˙˙ॱ⋅.˳˳.⋅ॱ˙˙ॱᐧ.˳˳.⋅


Comments

  1. My mind is fucked too!!! Brilliantly written.

    ReplyDelete
  2. You made us waiting and wanting more ;)

    ReplyDelete

Post a Comment

Pass a comment here...