கல்






தெருவோரம் பறந்து வந்த பைங்கிளி நான், 
வெச்ச கண்ண எடுக்கலையே மயக்கிட்டேன் நான்

நான் பார்த்த ஊதாப்பூவே நலம் தானா ஊதாப்பூவே


தும்ப்பச்சுக்கும் தும்ப்பச்சுக்கும் தும்ப்பச்சுக்கும்வரியா

தும்ப்பச்சுக்கும் தும்ப்பச்சுக்கும் தும்ப்பச்சுக்கும்


ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க தேடல்தேடல்... 
உருக்கியாம் நட்சத்திர தூறல் தூறல்..ட்ர்ர்ர்ர்ன்ன்ன் ட்ர்ர்ர்ன்ன்ன்

நின்றாலும், சென்றாலும், பின்னோடு என்னாளும் 

வந்த நிழலே வண்ண மயிலே

உன்மேனி, பொன்மேனி, இன்னாளும், என்னாளும்

என்னை மயக்க.. தன்னை மறக்க..

ஓடை மீது ஓடம் போல ஆட வா
ஒனக்கு என்னம்மா தெக்கணும்எனக்கு குஷ்பூ மாதிரியே தெக்கணும்
குஸ்புகிட்டயே போயி எதாச்சும் பழசு பட்ட இருக்கும் வாங்கி போட்டுக்க போ

சுட்டப் பால்போல தேகம்தாண்டி ஒனக்கு... 

சுட்டப் பால்போல தேகம்தாண்டி ஒனக்கு... அதில் பாலாட மட்டும் கொஞ்சம் வெலக்கு… 

அதில் பாலாட மட்டும் கொஞ்சம் வெலக்கு


ஹாய் ப்ரென்ஸ் இந்த வீடியோ நா பேசறது சாதனா அக்காக்கு

தொப்புளத்தான் காட்டுறியே எதுக்கு

ப்ரம்மனுக்கு மூடு வந்து ஒன்னப்படச்சிட்டான்அடி காமனுக்கு



அடியே மெட்டிச்சத்தம் கேக்காமத்தான்… தலையே வெடிச்

முத்தா பந்த்தி பூவு இலா பைட்ட வேசனா..

ஆசை நூறாச்சு போங்கநிலவு

என்னது
 ஜிபிமுத்து சாமான் வாடகைக்கு கெடைக்குமா... செத்த பயலுவளா



நெழலாட்டம் பின்னால நா ஓடி வந்தேனே

நெழலாட்டம் பின்னால நா ஓடி வந்தேனே

நெழலாட்டம் பின்னால நா ஓடி வந்தேனே ஒரு வாட்டி

நெழலாட்டம் பின்னால நா ஓடி வந்தேனே ஒரு வாட்டி என்ன பாரேம்மா

நெழலாட்டம்

நெழலாட்டம் பின்னால
நெழலா
நெழலா

ஃபிஃப்டீனிலே, என்மேலே, கேமராக்கள்
மைடியர் டார்லிங் ஒன்ன
சைக்கல சைக்கல
அழகா.. அழகா.. ஆணழகா 
அன்பே ஓடிவா அன்பால் கூடவா பைங்கிளி

பேட் கமெண்ட்ஸ் போட்றவங்களுக்குலாம் சொல்லிக்கிறேன்

நாடன் கன்னிப்பெண்ணே நாணிக்காதென் பொன்னே

விரல்கள் தொடவாவிருந்தைப் பெறவா,
மார்போடு கண்ண்ண்கள் மூடவா

இந்த கதவு குறுக்க இருக்கறதுனாலயே நா அவகிட்ட சொல்லவேண்டியத ஒங்ககிட்ட சொல்றேன், ப்லீஸ்.. அந்த முட்டாள்கிட்ட சொல்லுங்க, நா அவளரொம்பநீங்காத ரீங்காரம் நான்தானே

மான் கூட்டம் மீன் கூட்டம் வேடிக்கை பார்க்கின்ற கண்ணிரண்டிலே

எல, கேளுங்கலே ஜீப்பி முத்துக்கு டிக்டாக் பண்றதுதான் வேல, போதுமா, போதுமா, எப்டி? போதுமா? நீனா தார, ச்சோறு போடுற எனக்கு? ச்செத்த பயலே நீ எதுக்குலே இதான் ச்சோலி, இதான் ச்சோலிலே..

கம்மாக்குள்ளஒத்த மரம்அங்கே போவோம்ம்ம் ம்மாமா
கம்மாத்தண்ணி வத்தும்போதுதிரும்பிருவோமாமா


Low Battery 
10% battery remaining.





என்று மொபைல் நோட்டிபிகேசன் காட்டியதும்தான் மொபைல் கொதிப்பதையே உணர்ந்தான் ரவி

"த்தா... டிக்டாக் போனாலே இப்பிடித்தான்" என மனதில் நினைத்தபடி, சற்று எக்கி சார்ஜிங் கேபிளை எடுத்து மொபைலுக்குள் சொருகினான். சொருகியதும் 'க்லூங்' எனச்சத்தமிடும் மொபைல், அப்போது இடவில்லை. "த்தா இதுவேற…" என்று கேபிளை உருவி, மீண்டும் சொருகி, ஒயரை வெவ்வேறு கோணங்களில் ஆட்டினான். ஒரு குறிப்பிட்ட கோணத்திற்கு மட்டுமே அந்தக் கேபிள் சார்ஜ் ஏற்ற இசைந்து கொடுக்கும். அக்குறிப்பிட்ட கோணத்தில் வைத்ததும் 'ம்ம்' என்று மொபைல் முனகியது. வெடிகுண்டை டெடனேட் செய்யும் துல்லியத்தில், அலுங்காமல் குலுங்காமல் போனைச் சாய்த்து வைத்தான். டிஸ்ப்லேயில், குறு மின்னலொன்று சார்ஜ் ஏறுகிறது எனக்காட்டியது.

சற்று நேரம் வெறித்தபடி உட்கார்ந்திருந்தான். அந்த சற்று என்பது ஒரு வருடமாகவும் தோன்றியது, அரை நொடியாகவும் ஒரே நேரத்தில் தோன்றியது.

டேபில் மேலிருந்த பைபில் வசனம் பொறிக்கப்பட்ட கல்லைப் பார்த்தபடி இருந்தான்.

அப்போது ஒரு அசரீரி கேட்டது. 

நான் தான் கல் பேசுகிறேன்

வேறெதோ கவனத்தில் இருந்தவன், இப்படிக்கேட்டதும் ஆன்லைன் விகடனில் ஆட்டோ ஆடியோ ஆப்ஷன் எதுவும் புதிதாய் வந்துவிட்டதா என லேப்டாப்பைப் பார்த்தான். எந்த ப்ரௌசரிலும் விகடன் திறந்திருக்கவில்லை என உறுதிப்படுத்தியதும் மீண்டும் அதே அசரீரி கேட்டது.

நான் தான் கல் பேசுகிறேன்

"கல்லா? மொதல்ல எங்கேர்ந்து பேசறன்னு சொல்லு" என்றான்.

"தோ இங்கேர்ந்து" என்றது அசரீரி.

"இங்கேர்ந்துன்னா?"

"இப்பத்தான என்ன வெறிச்சு பாத்துட்டிருந்த, ஒன் கண்ணு முன்னாடிதான குத்துக்கல்லாட்டம் உக்காந்துருக்கேன். அதே கல் தான்."

அந்த பைபிள் வசனக் கல்லை எடுத்துப் பார்த்தான்.

"நீயா பேசுனது?"

"ஆமா."

"அட, கல்லு பேசுமா?"

"பேசும், ஏசும், பாடும், எல்லாம் பண்ணும். நாந்தான எல்லாமே."

"புரியலயே."

"ரொம்ப நேரம் பேசிட்டிருக்கப்போறோம். என்ன டேபில்லயே வச்சிடு."

ஆச்சரியமும் சிரிப்பும் வந்தவனாக அதைப் பத்திரமாக டேபிலில் வைத்தான்.

"எப்பிடி பேசுற நீ?"

"இப்ப டேபில்ல என்ன வச்சப்ப என்ன ஆச்சு?"

"என்ன ஆச்சு? டக்க்-குன்னு சத்தம் கேட்டுச்சு."

"அந்த சத்தம் வந்தப்ப நீ ஏன் என்னால சத்தம் போட முடியுமான்னு எதுவும் கேக்கல?"

"…."

"ஆக, நா ஒனக்கு புரியுறாப்ல பேசினதும் கொழப்பம் வருது. மத்தபடி புரியாத மாதிரி பேசிட்டிருந்தா ப்ரச்சன இல்ல. அப்டியா?"

"இப்பத்தான் ரொம்ப கொழப்ப ஆரமிக்குது. சரி, நீ பேசுவன்னு நம்பறேன்."

"வேற எதுவும் கேள்வி இருக்கா?"

"நெறயா இருக்கு. ஆனா நீ இப்டி கொழப்புறாப்ல எதும் சொல்லுவியோனு கொழப்பமா இருக்கு."

"அட சும்மா கேளுப்பா பரவால்ல. போகப் போக ஒரு வேவ்லெந்த்துக்கு வந்துருவோம்."

"நீ யாரு? எதும் ஜீனி-யா? கேக்குற வரம்லாம் குடுக்குமே. அலாவுதீன் வெளக்கு. அப்டி எதும் ஐட்டமா?"

"ம்ம்.. குட் க்வஸ்டின். வெளக்கு, ஜீனி மட்டுமில்ல, நான் தான் எல்லாமே. எவ்ரிதிங். That’s an all caps, bold, double quotes “EVERYTHING”.

"எவ்ரிதிங்னா?"

"டேய்எவ்ரிதிங்குங்குறேன், என்னான்னு கேக்கற. எல்லாமே நாந்தான்."

"எல்லாம்னா?"

"ப்ச். அதையே தமிழ்ல கேக்கற பாரு. தோழர் வள்ளுவர் எழுதிருக்காரே, அதுல முதல் குறள் என்னது?"

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு."

"கரெக்ட். அந்த ஆதி முதல் நான் தான்."

"ஓ.. இந்த ஜீனி, முனிலாம் இல்ல, ஸ்டெய்ட்டா கடவுள்தான். அமெரிக்க மாப்பிள்ளை ரோல்-லாம் எடுக்கறதில்ல என்ன?"

"நா கடவுள்னு சொல்லிக்கலையே. முதல்ல இருந்து இருக்கேன்னு தான் சொல்றேன்."

"எதோ பேசுற கல்லாச்சேன்னு க்யூரியசாகி பேச்சுக்குடுத்தா ஒடனே காதுல செய்ய ஆரமிச்சிட்டியே…"

"கொஞ்சம் ஒனக்கு புரியறாப்ல வெளக்குறேன். முதல் முதல்ல உண்டானது என்னது?"

"முதல்லன்னா?"

"இந்த அண்டத்துல."

"சூரியன்லேந்து நெருப்புப் பந்தா பூமி வந்துது."

"சூரியன் கத இப்ப நடந்தது. அதுக்கும் முன்னால சொல்லு."

"என்னது இப்ப நடந்ததா? யோவ் அது நடந்தே மில்லியன் கணக்கான வருசமாச்சுய்யா."

"அதுக்கும் முன்னால. முதல் முதல்ல."

"ஃபர்ஸ்ட்டு ஃபர்ஸ்ட்டுன்னா, பிக் பேங்கா?"

"எக்சாக்ட்லி."

"ம்ம்.. அதான். பிக் பேங் நடந்தது."

"பிக் பேங்குல தான் ஸ்பேஸ், டைம் எல்லாமே உண்டாச்சு. அதுக்கு முந்தி ஒரு ஒற்றைப் பருப்பொருள் தான் இருந்துச்சு. அதான் நானு. கல்."

"ம்ம்ம்ம்…"

"அந்த ஒற்றைக் கல்லுல இருந்து பொறந்ததுதான் எல்லாமே. எல்லாமேன்னா, எல்லாமே."

"……"

"எப்பவாச்சும் யோசிச்சிருக்கியா? எத்தனையோ இருக்கப்ப ஏன் ஆதி மனுசன் நடுகல்னு ஒரு கல்ல குறியீடா வச்சு வழிபட்டான்னு?"

"யோசிச்சதில்லஏன்? ஏன் நடுகல்?"

"அவனுக்குத் தெரியும் ஆதில இருந்து மாறாம இருக்கறது கல் மட்டும்தான்னு. எந்தப்பொருளும் நாளாக ஆக, சிதைஞ்சு, உருமாறி, ஒரு வகைல அழிஞ்சு போயிடும்னு சொல்லலாமா?"

"ம்ம்.. சொல்லலாம்."

"அது உங்க வசதிக்கு சொல்லிக்கறது. எதுவும் அழியறதில்ல. வேற மாதிரி மாறிடும். நான் எதையும் அழிய விடுறதில்ல."

"சரி புரியுது, what’s your point?"

"So, ஆதியில இருந்தது கல்லு மட்டும்தான். இத்தன காலத்துல அது வேற மாதிரி உரு மாறாம கல்லாவே இருந்துதுன்னா என்ன பொருள்? அது அந்த ஆதிக்கல்லின் தொடர்ச்சின்னு சொல்லலாமா?"

“….”

"இதப் புரிஞ்சதாலதான் நீரையோ, நெருப்பையோ வணங்காம கல்ல வெச்சான் ஆதி மனுசன்."

"ஏன், நெருப்பலாம் கும்முடுறவங்க இருக்காங்களே..?"

"அது இப்ப வந்தவனுக. ஒரு வெரைட்டி வேணும்னு வெச்சது. ஆதி குடி என்ன பண்ணிருக்குனு பாரு, இப்டி ஒரு கல் இருக்கும்."

"சரி, அப்டியே வெச்சுக்கிட்டாலும் எல்லாரும் கல்ல கும்முடுறதில்லையே. ஹிந்தூஸ், புத்திஸ்ட்ஸ், ஜெய்ன்ஸ் இப்பிடி சிலர் தான கும்முடுறாங்க? என் ப்ரெண்ட் தமீம் வீட்லலாம் கல்ல கும்முடுறதில்லையே?"

"Point. ஹிந்தூஸும், புத்திஸ்ட்டும் கூட கல்ல கும்முடுறதில்ல. அதுல அவங்க ஒரு இமேஜ செதுக்கி அததான் கும்முடுறாங்க. எல்லாம் கல்லுதான, எங்க, புத்தர கும்முடுறவங்கள ஏசுவ கும்முடச் சொல்லு? விஷ்ணு வடிவத்த கும்முடுறவங்கள லிங்க வடிவத்துல இருக்கற கல்ல கும்முடச் சொல்லு? கும்முடமாட்டாங்க, கும்மிடுவாங்க."

"hehe… கல்லு ஜோக்குலாம் அடிக்கிது."

"தமீம். அவங்க கல்ல கும்முட மாட்டாங்க. ஆனா முத்தம் குடுப்பாங்க. காபாவுக்குள்ள இருக்க அஸ்வத் கல்லுன்னா என்னனு கேளு அவங்கிட்ட. அது எப்டி வந்ததுன்னு அவங்க நம்பறாங்கன்னு கேளு. அவங்க அத வணங்காட்டாலும், அதுக்கு ஏன் முத்தம் குடுக்கறாங்கன்னு கேளு. ஆதித் தொடர்ச்சி கல் தான்னு ஒனக்கு புரியும். ஹஜ்ஜுக்குப் போறப்ப சாத்தான்னு ஒரு அடையாளத்த வெச்சு அத நோக்கி எத எறிவாங்கன்னு கேளு. அங்க எறியிறதும் கல்லுதான்."

"So, நீதான் கடவுள்னு சொல்றியா?"

"ஒனக்கு அப்டி என்ன அவசரம்? யாரையாச்சும் கடவுளாக்கிடனும்னு? என்ன நான் கடவுள்னு சொல்லவே இல்லையே."

"சரி, sorry. மேல சொல்லு."

"Schindler’s list படம் பாத்துருக்கியா?"

"ஓ.. உலக சினிமா வேறயா? ம்ம் பாத்துருக்கேன்."

"அதுல க்லைமாக்ஸ்ல கல்லறைக்கு மேல ஏன் எல்லாரும் சின்னச் சின்னக் கல்ல வெச்சாங்கன்னு யோசிச்சிருக்கியா?"

"அட! அப்டியா? ரொம்ப நாளாச்சு பாத்து", என யூடூபைத் தட்டினான்.


"அட ஆமாஏன் இப்டி வெக்கறாங்க?"


"ஏன்னு தேடிப்படி. இல்லன்னா தேடி வீடியோவாப்பாரு. அப்டியே இன்னொரு tabல Japanese Rock Gardenனா என்னன்னு தேடு. அது குறிக்கிறது என்னனும் படி."

"உன்னச்சுத்தி இருக்குறது, உனக்குள்ள இருக்கறது, ஏன், நீயுமே கூட என்னோட மற்றொரு form தான். சொன்னேன்ல, இந்த ஸ்பேஸ், டைம் எல்லாத்தையும் எனக்குள்ளருந்துதான் தந்தேன். நீர், நிலம், நெருப்பு, வாயு, எல்லாத்துக்கும் மூலம்னு பாத்தா அது நான் தான்.  ஒற்றைக் கல்லிலிருந்து தோன்றின எல்லாமே மீண்டும் ஒற்றைக் கல்லா மாறும். Big Crunch."

"Rocks denote eternity. உனக்கு முன்னால தோன்றினது. உனக்கு அப்புறமும் மறையாதது. ஆதி மனுசன் ஆயுதமாவும் கருவியாவும் பயன்படுத்துனது என்னத்தான். சூரியன்ல கொழுந்து விட்டு எரியுற நெருப்பு இந்த பூமில, மனுசனுக்கு வசப்பட்டது ரெண்டு சிக்கி முக்கி கல்ல ஒரசினதாலதான?" 

"Unpossible", எனச்சற்று ஷாக்கானான் ரவி.

"மனிதனின் மகத்தான கண்டுபுடிப்புன்னு சொல்ற சக்கரமும் என்ன வச்சுத்தான வந்துது?  என்னோட பௌதீக, வேதி வடிவங்கள மாத்த மாத்தத்தான உங்களுக்குப் புதுப் புது விசயம் கெடச்சது?
அவ்ளோ ஏன், இந்த பூமியே ஒரு மிகப்பெரிய கல்லு தான? என்னோட இண்டு இடுக்குல தண்ணி இருக்கு, வாயு இருக்கு, மரம் செடி வளருது. மண்ணுல இருக்குறதும், மலைல இருக்குறதும் என்ன? ரெண்டும் கல்லுதான? அளவு தான் வேற. ஆனா பொருள் ஒன்னுதான? பூமிக்குள்ள இருக்கற நெருப்புக் குழம்பும் கல்லுதான். வானத்துல நீ பாக்குற நட்சத்திரமும் எரிஞ்சு ஒளி வீசுற கல்லுதான். விண்வெளியில மிதந்துட்டு இருக்குற விண்கல்லும், கல்லுதான்."

"அதெப்டி அது எல்லாமே கல்லுன்னு சொல்ல முடியும்சிலதுல வெவ்வேற மெட்டல் இருக்குதாமே. வைரம் தங்கம்லாம் கூட இருக்குதாமே விண்கல்லுல..?"

"ஒன்னோட ஒடம்புதான். தோல் வேற, நகம் வேற, முடி வேற, மலம் வேற, சிறுநீர் வேற. ஆனா இது எல்லாமே உன்கிட்டருந்து வரதுதான் இல்லையா?"

"ஆமா."

"அதே மாஜிக் தான் இங்கயும்."

"மேஜிக்கா?"

"ஆமா… என்னோட லாஜிக்லாம் உன்னால ஏத்துக்க முடியாது. இங்க எல்லாம் மாஜிக்தான்யோசிச்சுப் பாத்தியா? ஒரு ஆளப்பொதச்சா, ஏன், இரும்பையே பொதச்சாலும் கொஞ்ச வருஷத்துல மண்ணு அரிச்சு சுத்தமா இல்லாம பண்ணிடும். ஆனா சின்ன வெதை. அரும்பு வேர். மண்ணுக்குள்ள தாக்குப்புடிச்சு மரம் செடியாகி வருஷக்கணக்கா உயிரோட நிக்கும்மண்ணுக்குள்ளருந்து வளந்த மரக்கட்டை,  மறுபடியும் மண்ணுக்குள்ள வெச்சா கொஞ்ச நாள்ல காணாமப் போயிடும். ஆனா அதுவே வெளிய நூற்றாண்டுக்கணக்கா இருக்குற மரம் கல்லாகிரும்."

"மறுபடியும் கொழப்ப ஆரமிச்சிட்ட."
“We have forgotten what rocks and plants still know – we have forgotten how to be – to be still – to be ourselves – to be where life is here and now.” ~Eckhart Tolle
"இப்பவும் புரியல. "

"அப்ப மறுபடியும் கடவுள் கதைக்கு வருவோம். நீ சொன்னல்ல, நெருப்ப கும்புடுறவங்க, ஹிந்தூஸ்னு, அவங்க புராணக் கதைல கூட கடல கடக்க மேல போட்டது என்னது? மெதக்குற கல்லு தான? ஒரு வேருக்காக அனுமான் தூக்கிட்டு வந்தது என்ன? கல்லுதானபைபில் குரான்ல என்னப்பத்தி என்ன சொல்லிருக்கு?"

Acts 4:11 - This Jesus is the stone rejected by you builders, which has become the cornerstone.

Psalm 18:2 - The Lord is my rock and my fortress and my deliverer, My God, my rock, in whom I take refuge; My shield and the horn of my salvation, my stronghold.

Qur'an - 23:12 - And certainly did We create man from an extract of clay.

"அட இவ்ளோ ஏன், க்ராமத்துல 800sகிட்சுக அந்தக்காலத்துல பொண்ணு கட்ட தூக்கச்சொல்றது என்னது, இளவட்டக் கல் தான? இப்டி என்னோட presence and significance எல்லா எடத்துலயும் இருக்கு."
"..."
"..."
"..டிக்.."
"..டிக்.."
"..டிக்.."

"தோசத்தம் கேக்குதேவால்க்லாக். வாட்ச்ல Quartz கேள்விப் பட்டுருக்கியா?"

"சுமாரா
…"

"அது Quartz Crystal. அதுவும் ஒரு கல்லு. அதோட அதிர்வுல தான் நேரத்த கணக்கிடுறீங்க."

"இப்பத்தான் யாருமே வாட்ச் யூஸ் பண்றதில்லையே, லேப்டாப், மொபைல்லதான டைம் பாக்கறோம். இப்ப என்ன பண்ணுவ?"

"ஆனாலும் நீ இவ்ளோ மொக்கையா இருந்து பாய்ண்ட் எடுத்துக்குடுப்பன்னு நெனைக்கல."

"என்னத்த மொக்கயக்கண்ட?"

"மொபைல், கம்ப்யூட்டர், இதலாம் இயக்குறது என்னது?"

"என்னது?"

"சிலிக்கான் சிப். சிலிக்கான் எங்கருந்து வருது? மணல்ல இருந்து. மணல், கூழாங்கற்களின் குழந்தை, கூழாங்கற்கள் பாறாங்கற்களின் பாலகன். பாறாங்கற்கள் மலைகள் ஈனும் மகவு. மலைகள் ஆதிக்கல்லின் முலையடா முட்டாக்கூழாங்கல்லே."

"யாரப்பாத்து முட்டாக்கூவுன்னு சொன்ன..?" என அந்தக்கல்லை எடுத்துத் தரையில் ஒரே போடாகப் போட்டான் ரவி.

வந்த கோபத்தில், கல்லை வீசிய வேகத்தில், அது பெரும் சத்தத்தோடு தரையில் பட்டுத் தெறித்து சுக்கு நூறாகிப்போனது என்று கூறியிருக்கலாம்தான். ஆனால் அவ்வாறு எதுவும் ஆகவில்லை. மார்பில் கல்லால் போடப்பட்ட தரையில், சிறிய புள்ளியை மட்டும் உண்டு பண்ணிவிட்டு, ஒரு ஓரத்தில், கல்லாக நின்றது, எறியப்பட்ட அக்கல்.
~~~
எங்கோ மிகத் தொலைவில், வெகு நேரமாக யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டு, எழுந்து சென்று கதவைத் திறந்தான் ரவி.

நைட் ஷிஃப்ட் முடித்து அறைக்குத் திரும்பியிருந்தான் ரூம் மேட் சத்யா.

"எவ்ள நேரன்டா கதுவ் தட்றது? இன்னேரம் ஒடஞ்சுருக்கும்" 

"தூக்கம் அசத்திருச்சுடா" என்றான் ரவி.

"காலைலயே எழுந்துப்பியே, ன்னாச்சு?"

"புதுசா வந்துது, தேனி ஐட்டம், நல்ல quality, try பண்ணுனு சுரேஷு கொணாந்து குடுத்தான். அடிச்சேன், I got stoned".


Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. 4. மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும்,

    5. ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.

    6. அந்தப்படியே: இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது.

    This is in Bible about OUR SAVIOUR JESUS CHRIST

    ReplyDelete
  3. its mentioned as LIVINGSTONE

    ReplyDelete

Post a Comment

Pass a comment here...