போட்டு வைத்த காதல் திட்டம் - சிறுகதை


”எத்தன தடவ கேக்குறேன், டூர் கூட்டிட்டுப்போடான்னு, இதே விஜி கேட்டிருந்தா மட்டும் ஈன்னு இளிச்சுட்டு போயிருப்ப, நான்னா ஒனக்கு அவ்ளோ எளக்காரமா? ஓவராப்பண்ணாதடா”
”ச்சீ மூடு, இந்த வாரம் கூட்டிப்போறேன்னு சொன்னேன்ல,I’ll keep up my word.”
“நீ keep up பண்றதத்தான் போன மாசமே பாத்தனே. ஏற்காடு போலான்னு சொல்லிட்டு கடசீ நேரத்துல கழுத்தறுத்த”
“ஓய்.. கொன்னுடுவேன். நீதான் அப்ப வயித்துவலின்னு சொன்ன. அதான் கேன்சல் பண்ணேன்”
“அது வந்தா ஒனக்கென்னடா?”
“எனக்கென்னவா? அப்புறம் ஏற்காட் போய் என்ன யூஸ்?”
”டேய் பொறம்போக்கு, நான் ஒன்ன கூட்டிட்டு போகச்சொன்னது ஊர் சுத்திப்பாக்க”
“நீ ஊர் சுத்திப்பாரு, நான் ஒன்ன சுத்திப்பாக்குறேன்.”
“இந்தக்கேவலவாதி ஜோக்கெல்லாம் விஜிகிட்ட சொல்லு. இதுக்குன்னே காத்துட்டிருந்த மாதிரி கெக்கேபெக்கேன்னு சிரிக்கும் அது. EMI போட்டாச்சும் என்ன next week tour கூட்டிட்டு போகல.., that’s it.”
ப்ரதீப் ஹரிதாஸ். 8000 ரூபாய்க்கு branded ஷு பளபளக்க தரமணி புழுதிக்குள் லட்சரூபாய் பைக்கில் பறக்கும் ஐடிக்காரன். ரகசியமாகவும், சில சமயம் நேரடியாகவுமே பெண்களின் சைட்டடித்தலுக்குள்ளாகும் Smarty. ”பூகம்பத்துல ஒரு ஊரே உள்ள போய்டுச்சாமே” எனும் செய்தியைச் சொல்லும்போதுகூட அவன் முகத்திலிருக்கும் புன்னகை கழறாது. இதை மூலதனமாய் வைத்தே ஆந்திரா, கர்நாடகா, மணிப்பூர் என வகைதொகையில்லாமல் பல பெண்டிரைக் கண்டிருக்கிறான். குறும்பு நிறைந்த அவன் கூர்மையான கண்களும், right angle triangle மூக்கும்,
(டே டே டே.. நிறுத்து. நீ என்ன Gayயா? ஒரு ஆம்பளைய இவ்ளோ வர்ணிக்கிற? வண்ட்டாரு, எலுத்த தூக்கிட்டு. என்னையும்பாரு என் வர்ணனையும்பாருன்னு. த்தூ… நிறுத்திட்டு கதைய சொல்றா)

அபி (எ) அபிராமி. ப்ரதீப்பின் Class Mate -> Colleague -> Friend -> Close Friend -> Best Friend -> இப்போது Girl Friend. கத்ரீனாவையும் தீபிகா படுகோனையும் கலந்தடித்த உருவம். அதற்கென்று இலியானா என நினைத்துவிடாதீர்கள். ‘அவ்’விஷயத்தில் இவளொரு ஓவியா.
(டே வக்ரவாதி. ஒரு பொண்ணு எவ்ளோ சுத்தபத்தமான அழகின்னு அவ கழுத்து, கால் பாதத்த பாத்தாவே தெரிஞ்சுடும். அடுத்தவன் லவ்வர்ன உடனே ஏண்டா இப்டி பயாஸ்கோப் பாக்குறீங்க? Abi is my babe. அது போதும். Now move on.)

உருகி உருகிக் காதலித்தோரின் கதைகளை சங்க இலக்கியத்தில் பதிவு செய்த கபிலரிருந்து ஓரம்போகியார் வரை இவர்களின் அமர காதல் காவியத்தைப்பார்த்தால் அத்தனை நூல்களையும் பேரீச்சம்பழத்திற்கு போட்டுவிடுவார். அதைப்பற்றி விரிவாய்ச்சொல்லலாம்தான். ஆனால் “சிலர்” துருத்திக்கொண்டு வந்துவிடுவர்.
(அந்த பயம் இருக்கட்டும்)
இதோ இது போல.
(ப்ப்ப்ர்ர்ர்)
<< ர்ர்ர்ரிங்ங்ங்ங்ங்ர்ர்ர்ரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்>>
“டே..”
“ய்யேஸ்ஸ்”
“நாந்தான் அபி”
“தெரியுது, ப்ரொசீட்”
“நாளைக்கு கன்ஃபார்மா கெளம்புறோம்ல”
“ஆமா. டிக்கட் போட்டாச்சு. ஒனக்கு உடல் உபாதை ஏதுமில்லல”
“ம்ம்ம்.. பேதி ஆவுது. கவர் எடுத்துட்டு வந்து வாங்கிட்டு போறியா?”
”ச்சீ சனியனே… சாப்ட்டுட்டிருக்கேண்டி”
“தெரியுதுல்ல, அப்ப வெத்து சீன் போடாம கேளு”
“சொல்லித்தொல”
“எப்ப கெளம்புறம்?”
“சாந்திரம் 7 மணிக்கு ட்ரெய்ன். எனக்கு லோயர் பெர்த். ஒனக்கு அப்பர் பெர்த். வசதிப்படலன்னா நீ கீழ படுத்துக்கோ, நான் மேல படுத்துக்குறேன்.”
”உங்க சிலேடை சில்மிசங்கள் உங்களப்போலவே பத்துபிசாக்கு ப்ரோஜனப்படாதது சார்”
“அப்ப நீங்களே ப்ரோஜனமா சொல்லுங்க மேடம்”
“ட்ரிப்ல எதும் பண்ண மாட்டோம்னு ஸ்வேதாகிட்ட ப்ராமிஸ் பண்ணிருக்கேன்”
“அய்யய்யோ”
“டே.. சொல்றதக்கேளு. எங்க வீட்ல நாளைக்கு காலீலயே வெளிய போறாங்க. பாட்டி மட்டுந்தான் இருக்கும். அது மதியம் தூங்கிடும். அதுக்கப்புறம் எமனே வந்து எழுப்பினாலும் ஏன்ச்சுக்காது. நீ மதியம் வா”
“வந்து?”
“ஆங்… வந்து அடப்பெடு.”
“ஏண்டி எப்பவும் கலீஜாவே பேசுற?”
”ஒங்கூட சேந்தா சஷ்டி கவசமா வரும்? மதியமே வந்துடு”
“ஐ ஜாலி… ஹெல்மட்டோட வரேன்”
“ஹெல்மட்டா அதெதுக்கு?”
“வண்டி ஓட்டும்போது பாதுகாப்பா இருக்கணும்னு கவர்மெண்ட் சொல்லுதுல்ல, அதுக்குத்தான்”
“ச்சீய் கொரங்கே, வந்து சேரு”
<<ட்லிங்-ட்லிங்,open the door, ட்லிங்-ட்லிங்>>
அபி கதவு திறக்க,
“ஹாய்”
“ஷ்ஷ்ஷ்.. பாட்டி இன்னும் தூங்கல, கம்முனு போய் என் ரூம்ல ஒக்காரு”
அபி ரூம்.
வெளிர் பிங்க் நிற சுவரில் ஆங்காங்கே சூர்யா தன் சிக்ஸ் பேக்கைக் காட்டிக்கொண்டிருந்தார். டேபிலில் Ascending Order Sizeல்  Teddy Bearகள் வரிசையாகப் படிக்கட்டுகள் போல் அமர்ந்திருந்தன. ஒலியே எழுப்பாது எனப்பொய் சொல்லி விற்கப்பட்ட ஸ்ப்லிட் ஏஸி சப்தமும் போட்டு மூக்கும் ஒழுகிக்கொண்டிருந்தது.
(ஆரமிச்சுட்டார்யா வரவனையரு வர்ணனைகள. விசயத்துக்கு வாங்கடா. நீட்டி மொழக்கிப்பேசித்தான நாட்டையே குட்டிச்சுவர் ஆக்கிருக்கீங்க)

அபி அறைக்குள் நுழைந்து மெதுவாகக் கதவைச் சாத்தித் தாழிட்டு “டேய்… எதுவும் சௌண்ட் உட்றாத. சத்தமில்லாம இருக்கணும். ஓக்கே” என்றாள்.
இரண்டு நிமிட நிசப்தத்திற்குப்பின், இல்லையில்லை, ப்ரதீப் ஒரு காஞ்ச மாடு. 10 நொடி நிசப்தத்திற்குப்பின் அவன் எதையோ நினைத்து புன்முறுவ,
“என்னடா” என்றாள்
“உங்க காலிங் பெல் மாதிரி ஒனக்கும் ஒன்னு இருந்தா எவ்ளோ வசதியாருக்கும்னு நெனச்சேன். சிப்பு வந்துடுச்சு சிப்பு. ப்ரதீப், ப்ளீஸ் ஓப்பன் தி டோர்…. ஹாஹ்ஹாஹ்ஹா”
அங்கு இருந்ததிலேயே பல்க்கான ஒரு டெடி பியரை அவன் மேல் எறிந்து ஒரு மோகனப்பார்வையோடு தலை சாய்த்து, “டிங் டிங், ப்ளீஸ் ஓப்பன் தி டோர்” எனக்கூறி இரு கரம் நீட்டிக்கண்ணடித்தாள்.
… …
“என்ன பாக்குற? வாடா…”
... …
”டேய் லூசு… அங்கயே ஏன் நிக்குற? வா..”

(டே எலுத்து… அவ கூப்ட்டு வெயிட் பண்றாடா… என்ன போகவிடு..ம்ம்ம்..)

[Mr. ப்ரதீப். இது நான் எழுதற கதை. என்ன பண்ணனும்னு நீங்க சட்டம் போடாதீங்க. ஆரம்பத்துலருந்து சும்மா தொணத்தொணன்னு என் வேலையப்பண்ண விட்டியா? இப்ப நான் உன்னப்பண்ண விட மாட்டேன். இதுக்குப்பேருதான் Tit for Tat.]
(Tit for Tat??? You f***n brat… நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்டடா… என் பாவம் ஒன்ன சும்மா விடாது…)

(டேய்…டேய்… என்ன அவகிட்ட போக விடுடா…)

(டேய்… விடு…)

(ப்ளீஸ்…)

(கெஞ்சிக்கேக்குறேன்..)

(ஹேய்ய்)

Comments

  1. I had a great respect on you before read this article.But made me very much disappointed. Also third-rate words and sentence which all are using in this article are not accepted. if my comments hurts you am so sorry

    ReplyDelete
    Replies
    1. There s nothing to get hurt raja. Dont feel sorry. I value your feedback.Thanks for your input.

      Delete
  2. Am eagerly waiting for your next article,if possible it should be like sunnath kalyanam or lakzi..

    ReplyDelete
  3. Good one. The story is not displayed properly on Mobile. Few portions were missing. Please check

    ReplyDelete
  4. Site paera kaettu Gaja gaja site nu nenachitu varavanga ethirpaarpai poorthi panniduveenga polayae....

    ReplyDelete
  5. :)))))))) செம்ம... சிரிப்புக்கு நடுவே ஒரு வாழ்க்கைமுறையும் தெரிகிறது

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete

Post a Comment

Pass a comment here...