விப்ரோ பெங்ளூரில் இருந்தபோது ஊருக்கு ப்ரைவேட் ட்ராவல்சில்தான் போவேன் (பர்வீன் Travels விளம்பரக் கட்டணம் அளிக்கும் பட்சத்தில் அது எந்த ட்ராவல்ஸ் எனச்சொல்வேன்). மடிவாளா வீட்டுப் பக்கம், ஊருக்குக் கிளம்பும் பல கேரள ஜிகிடிகளின் தரிசனம் போன்ற பல Loveகீக சௌகரியங்களுக்காக அப்பிரைவேட் ட்ராவல்சைத் தேர்ந்தெடுத்தேன்.
ஒரு நல்ல விசயம் தொடர்ந்து நடந்தா விதிக்கு பொறுக்காதே. இங்கும் வந்தது, என் நண்பன் ஒருவன் ரூபத்தில். ”மச்சி எதுக்குடா இவ்ளோ செலவு பண்ணிப்போற? என் ப்ரெண்டு வாரா வாரம் மதுரைக்கு SETCல தான் போவா. செம சீப்” என்றான். (அதற்கு அவனிடம் நான் கேட்ட டவுட்டை எழுதினால் அவன் என் வம்சத்தையே அகழ்வாய்வு செய்து திட்டியதையும் எழுதவேண்டுமென்றபடியால் அது சாய்சில் விடப்படுகிறது).
“அவகிட்ட சொல்லி உனக்கும் புக் பண்ண சொல்றேன், ஒன்னாவே போய்டுங்க, அவள்ட்ட நீ பே பண்ணிடு” என்றான். இந்த 'ஒன்னாவே' எனும் வார்த்தைக்காகவெல்லாம் சபலப்பட்டு பல்லிளித்துக்கொண்டு நான் சென்றிருப்பேன் என நீங்கள் கருதினால் I pity
you. சரி, நண்பனின் நண்பி ஆச்சே, கொஞ்சம் பாதுகாப்பான முறையில் ஊருக்கு கொண்டுபோய் விட்டு ஆதரவு காட்டுவோமே எனும் சமூக நலன் கருதி “சரிடா” என்றேன்.
இந்த நேரத்தில் அத்தோழி குறித்த சிறு குறிப்பு. ஏனைய தோழியர்போல் இதுவும் ஒரு 35007. இவள்
பெங்ளூரிலிருந்து மதுரைக்குச்செல்ல, அவளின் அப்பா மதுரை SETCயில் புக் செய்து டிக்கட்டை கொரியர் செய்வார். And this happens every week. இதெல்லாம் பாத்தப்புறம்தான் கடவுள்ளாம் இருப்பார்தாம்போலன்னு லைட்டா நம்பிக்க வந்துது. ரெண்டாவது காமடி அவ பேரு. ஷோபா(ன்னு வெச்சுக்கங்களேன்). அத இங்லிஸ்ல Shobbhhaன்னு எழுதுவா. நியூமராலஜியாம்.
அவளும் விப்ரோதான் என்பதால் Office Communicatorல் சேர்த்து, ரெண்டு வாரம் கழித்து ஊருக்குப்போக எனக்கும் ஒரு டிக்கட் போடச்சொன்னேன். பயணங்கள் எனக்கு perfectly
plannedஆக இருக்கவேண்டும். கொஞ்சம் ப்லான் மாறினாலும் மண்டை காய்ந்து விடுமென்பதால் ஜஸ்ட் ஒரு நாளைக்கு மும்முறை மட்டும் என்ற வீதம் ரெண்டு வாரத்துக்கு ரிமைண்டர் கொடுத்தேன். இதுக்குப்போய் பெரிய dash மாதிரி குதியோ குதின்னு குதித்து, “வாராவாரம் போற எனக்கு தெரியாதா? ஒன் டிக்கட் ஒனக்கு கைல வரும். அத்தோட ஆள விடு. சரியான அடாஸ்டா நீ” என்றாள். வந்த ஆத்திரத்தில் ஐ டூ விஷ் யு தி சேம் என்று ப்ரிட்டிஸ் இங்லிசில் திட்டிவிட்டேன்.
முக்கிய வேலை விஷயமாய் (Constipation
அல்ல) ஊருக்குப்போக வேண்டிய கட்டாயத்தில், முன்பின் தெரியாத ஒருவளை நம்பி வழக்கத்திற்கு மாறாய் பயணப்படுதலில் மர்ஃபி விதி எதுவும் வேலையைக் காட்டிவிடுமோ என மனதில் ஏதோ ஒன்று உறுத்திக்கொண்டே இருந்தது. ஒரு வழியாய் டிக்கட் கொரியரில் வந்துவிட்டதாய் அவள் சொன்னபின்தான் கொஞ்சம் ஆசுவாசமானேன்.
இரவு எட்டரைக்குப் பேருந்து ஷாந்தி நகரிலிருந்து. பெங்ளூரின் terrific traffic, அதுவும் வெள்ளி ரா ட்ராஃபிக் உலகப் பிரசித்தி என்பதால் ஆபிசிலிருந்து ஐந்துக்கே கிளம்பி கூர்மையாக ஏழு ஐந்துக்கு அங்கு சேர்ந்துவிட்டேன். பெயரில்தான் சாந்தி நகர் இருந்ததே ஒழிய அன்று அந்த ஏரியாவில் எங்குமே சாந்தியும் இல்லை, ஒரு பேருந்தும் நகரவும் இல்லை. ஏகப்பட்ட கூட்டம். ஒரு வழியாய் இவள் ஏழரைக்கு வந்து சேர்ந்தாள். அவள் வந்த டைமிங்கில் ஒரு குறியீடு இருப்பதை கவனித்திருப்பீர்கள். நான்தான் கொஞ்சம் சூதானமாக இருக்கத்தவறிவிட்டேன். வந்ததும், “டிக்கெட் எங்க?” என்றேன். “எப்புடி இருக்கன்னுகூட கேக்கமாட்டியா உன் காரியத்துலயே குறியா இருக்க, செல்ஃபிஷ்” என்றாள். “அதான் பாத்தாலே தெரியிதே, சுமாராதான் இருக்க. ரெண்டு வாரம் நீ குடுத்த டென்சன்ல எனக்குத்தான் ஒடம்பு பாதிப்பாகிருச்சு” என்றேன்.
டிக்கெட் தந்தாள். உண்மையிலேயே SETC Ticket வெகு சீப். “சரி, பஸ் எங்க ஏறனும்?” என்றதற்கு, அங்குதான் பஸ் வரும் என ஓரிடத்தைக்காட்டி, ”வாராவாராம் அங்கிருந்துதான் ஏறுவேன்” என்றாள். பஸ்டாண்டிலிருந்து ஒரு பஸ்ஸும் நகரவில்லை. நகர்வதெல்லாம் மாலையே கிளம்பியிருக்க வேண்டியவை, லேட்டாகக்கிளம்பின.
”சீட்டெல்லாம் தனித்தனியாதான போட்டிருக்க?” என்றேன், ரெஸ்பெட்டட் டிகினிஃபட் ஜெண்டில்மேனாக. "ஆமா.. எனக்கு லேடிஸ் சீட்.. ஒனக்கு, பின்னாடி சீட்" என்றாள். ”த்தூ நம்பிக்கையில்லா நாதாரி” என மனதுக்குள் நினைத்தவாறு, ”நல்லவேள ஒன்னா போட்டுட்டியோன்னு நெனச்சேன். போட்ருந்தா யார்ட்டயாச்சும் லேடிஸ்ட்ட சொல்லி மாத்தி ஒக்காந்துக்க சொல்லலாம்னு நெனச்சேன்”
என்றேன். (உங்கள் கணினி/ போனின் வால்யூமைக் கூட்டினால் நான் இரண்டு வாரமாய் பார்த்துப் பார்த்துக் கட்டிய கனாக்கோட்டை ஒன்று ஏமாற்றத்தில் நொறுங்கி விழும் சப்தத்தைக்கேட்கலாம்).
தனக்கு பசிப்பதாய்க்கூறி அங்கே இருந்த ஓட்டலில் இட்லி பார்சல் வாங்கிக் கொண்டாள். சுச்சா கக்கா ப்ராப்லங்களுக்குப் பயந்து பஸ்ஸில் போகும்போது ஒருபொழுது இருந்து விடுவது என் வழக்கமாகையால் உணவைத்
தவிர்த்துவிட்டேன். மணி மட்டும்தான் ஓடியதே தவிர பஸ் எதுவும் வந்து போனதாகத்தெரியவில்லை. மணி எட்டைக்கடந்து எட்டேகாலானது. ”அங்கே இருந்த கௌண்ட்டரில் போய் விஜாரிக்கிறேன்” என்றதற்கு, ”வாராவாராம் போற எனக்குத்தெரியாதா பஸ் எங்க வரும்னு? பேசாம நில்லு” என்றாள் (ஆக்ச்சுவலி ”மூடிட்டு நில்லு” என்றாள், சபை நாகரிகம் கருதி...).
மணி எட்டரை... எட்டே முக்காலும் ஆனது... ஒன்றும் உருப்படுவதாய்த் தெரியவில்லை. ”இரு, பஸ் எப்ப வரும்னாச்சும் விசாரிச்சுட்டு வரேன்” எனக்கூறி தேனீக்களாய் மக்கள் மொய்த்த கௌண்ட்டருக்குச் சென்று, தாட்டியாக இருந்த ஒரு SETC சாரைக் கேட்டேன். “சார், 8.30 மதுரை பஸ் எப்ப வரும்?” அதற்கு அவரின் பதில் “அந்த ரெண்டு டிக்கெட் நீங்கதானா?” இந்த வினா எதிர் வினாதல் விடையிலேயே எனக்கு முன்னுரை முடிவுரை விளங்கிவிட்டது. “ஆமா சார்” - பாதி பீதியில் முகம். “ஏன் சார் டைமுக்கு வரமாட்டீங்களா? இவ்ளோ நேரம் வெய்ட் பண்ணி இப்பதான் கெளம்புச்சு”.
நான் ஏழு மணிக்கே வந்துவிட்டேன் என்பதையும், அன்று ட்ராபிக் அதிகமென்பதால் வேறொரு வழியில் SETC பேருந்துகள் சென்றன என்பதையும், வந்தவுடன் கௌண்ட்டருக்கு போயிருந்தால் இந்நேரம் பஸ்ஸில் சென்றுகொண்டிருக்கலாம் என்பதையும் இப்படி
இன்னும் பலப்பல என்பதையும் என்பதையும் சொல்லிக் கொண்டிருக்க இப்போது அவகாசம் இருந்தாலும் அப்போது வந்த ஆத்திரத்தில், ”மூடிட்டு நில்லு” என கௌண்ட்டர் பக்கம் போகவிடாமல் தடுத்தவளை ஒரே அப்பு அப்பலாமென்று அவளை நோக்கித் திரும்பினால் அவள் ஆல்ரெடி இரு கண்களிலும் ஒன்னுக்கு விட ஆரம்பித்திருந்தாள்.
என்னடா இது வம்பென்று, சண்டையிட வேண்டிய நான் சமாதானம் செய்து கொண்டிருந்தேன். மன்னிப்புக் கேட்க வேண்டிய அந்த முள்ளம்பன்றி முறைத்துக் கொண்டிருந்தது. ஆங்கிலத்தில் literally like street dogs என்பார்களே, அப்படி சண்டை போட்டோம். மாறி மாறி பழி போட்டு, ஆளுக்கு ஆயிரம் அம்புகள் விட்டு, மினிபாரதப்போர் புரிந்து, அது ஓய்ந்தபின், அடுத்து என்ன செய்வது என யோசித்தேன். யோசித்தாள். யோசித்தோம் எனச்சொல்வது logically
incorrect.
மீண்டும் கௌண்ட்டர் சாரிடம் சென்று ”ஏசின்னாலும் பரவால்ல, ரெண்டு டிக்கெட் கிடைக்குமா?” எனக்கேட்டதற்கு, ”இங்க இத்தன பேர் ட்ரைவர் சீட் பின்னாடின்னாலும் பரவால்லன்னுதான் நிக்கிறாங்க. லேட்டா வந்துட்டு... போங்க அந்தப்பக்கம்” என்றார். ர் என்ன ர்? என்றான். அதற்குள் ஷோப்ப்ஹ்ஹா வீட்டுக்கு கால் செய்து, அடுத்த அழுகை No. 1 Season 2 ஆரம்பித்துவிட்டாள். சரியான
விஜய் டிவி கேசு. உலகின் அத்தனை கெட்ட வார்த்தைகளையும் அகரமுதலி வரிசைப்படுத்தி அவளை மனதார திட்டித்தீர்த்தேன் (மனதுக்குள்).
நண்பர்களிடத்தில் கால் செய்து என்ன செய்வது என்றதற்கு, சாட்டிலைட் பஸ் ஸ்டாண்டில் ஊருக்கு போற பஸ் (சாதா பஸ்) கிடைக்கும். அதைப்பிடித்து சேலம் - மதுரை என மாறிப்போகச்சொன்னனர். கூட்டம் அதிகமென்பதால் அதுவும் ரிஸ்க்கே என்றனர். என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கும்போது, “என்ன சும்மாவே நிக்கிற? ஒன்னு ஆன்சர் பண்ணு, இல்ல பதில் சொல்லு.. இப்ப என்ன பண்றது?” என்றாள்.(நாஞ்சொல்லல, அது ஒரு 35007ன்னு).
இத்தனை ஆகிவிட்டது, இனி ஜான் போனாலென்ன பால் போனாலென்ன எனத்துணிந்து, “LK மாதிரி பேசிட்டிருந்தன்னா பொளந்துருவேன். நான் சேட்டிலைட் பஸ்டாண்டு போய் ஊருக்குப்போறேன். நீ ஆஸ்டல் கெளம்பு” என்றேன். “நானும் உன் கூட வரேன். என்னையும் மதுர பஸ் ஏத்திவிடு” என்றாள். ஒரு மைக்ரோ நொடி என்னுள் சபலம் தட்டினாலும், இது போன்ற முக்கால் சைக்கோவோடு இனி சங்காத்தமே வேண்டாமென நினைத்து, “தெய்வமே, நீ ஆள உடு. உன்ன நம்பி பட்டது போதுமெனக் கும்பிடு போட்டேன்”.
அவளின் பெற்றோர், என்னிடம், அவளை பத்திரமாகக் கொண்டு மதுரையில் தள்ளிவிடச்சொன்னார்கள். ஒரு பக்கம் ’வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா’ மொமண்ட்டும், மறுபக்கம் ’வாராய்... நீ... வாராய்.. போகுமிடம் வெகு தூரமில்லை’ எனும் கிலியும் பற்றிக்கொண்டது. ஆட்டோ பிடித்து ஒரு வழியாய் சேட்டிலைட் பஸ்டாண்ட் வந்தால், அங்கே பஸ்கள் ஈயாடின. அடங்கொன்னியா என்று ஓடோடிப்போய் ஏறினோம்.
ஒன்னாவே ஒக்காந்துக்கலாம் என்று சொன்னாள் (1000வாட்ஸ் பல்ப் எரிந்தது). சொல்லி, 3 seat சைடில் போய் உட்கார்ந்தாள் (எரிந்த 1000 வாட்ஸ் உடனே ஃப்யூஸ் போனது). சற்று நேரத்துக்கெல்லாம் இன்னொரு கொரில்லா வந்து எனக்கு இடப்புறம் அமர்ந்தான். சுமார் இரண்டு மணி நேரம் கழித்து St. Johns ஸ்டாப்பைக்
கடந்தது பஸ். (நான் வழக்கமாய் 6 மணிக்கே மதுரைக்கு பஸ் ஏறுவேனே. அந்த இடம். இந்நேரம் பர்வீன், தூத்துக்குடி கிளிநொச்சி எனத்தாண்டிப்
போயிருக்கும்).
பெங்களூர் குளிர், நிசப்த இரவு, முன்பின் பழக்கமில்லா ஒரு பெண்ணுடன் பேருந்துப் பயணம். ஜிவ்வென
இருந்தது. ஆர்மோன்கள் ஓவர்டைம் பார்க்கத்துவங்கி, “சரி றொமான்ஸ்டிக்கா எதுனா பேசுவோம்” என வாயெடுத்தால், “எனக்குப்பசிக்குது” என்றனள். டக்கெனப் பார்சலைப்பிரித்து இட்டிலிகளைத்தின்றனள். அட தாந்திண்ணி நாயே என்றுகூறி, எனக்கும் இட்லி வேண்டுமென்றேன்.அகோரப்பசி. மூன்று இலியானா இட்லிகளை சரி சமமாக 75%-25% எனப்பிரித்துக்கொடுத்தாள். உண்டு, சற்று நேரம், மிகச்சற்றுநேரம்தான் பேசிக்கொண்டு வந்தோம், அதற்குள் சேலம் வந்துவிட்டது :( :( Theory of Relativity.
பஸ்டான்டில், குளிர்நிறைந்த பின்னிரவில் ஒலித்த ராஜா பாடல்கள், மனதுக்குள் ஏ..தே..தோ எண்ணம் வளர்த்தது. எங்களுக்குள் ஈ இறக்கை மெல்லிய நட்பு துளிர் விட்டிருந்தது. அடுத்து சேலம் - மதுரை பஸ்ஸில் ஏறினோம். 2 சீட்டில் போய் அமர்ந்தாள். நான் 3 சீட் பக்கம் அமர, “பரவால்ல இதுலயே போலாம் வா” என்றாள். “தேவயே இல்ல மேடம். தனித்தனியாவே போய்ப்போம். நம்பிக்க இல்லாமதான பெங்ளூர்ல 3 சீட்ல ஒக்காந்திங்க, அப்டியே இருங்க” என்றேன். “”ஓவரா பண்ணாத, வா வந்து உக்கார்” என்றாள். எதுவும் மனம் மாறிவிடப் போகிறாளெனப் பயந்து நான் அவசரமாக இடம் மாறினேன்.
சற்று நேரத்திற்கெல்லாம் பேருந்து துவங்க, பேச்சு பேச்சு சிரிப்பு பேச்சு. சத்தமாகச் சிரித்ததில் யாரோ பின்னாலிருந்து உச்சுக்கொட்ட, “யாராச்சும் நம்ம பேர போர்டுல எழுதப்போறாங்க. இனிமே பேச வேணாம்” என்றாள். சரியாக எட்டாவது நொடி அடுத்த டாபிக் ஆரம்பித்துவிட்டாள். மீண்டும் பின்னாலிருந்து உச். “டேய், எனக்கென்னவோ நம்மல வெச்சு உச்சு கொட்ற சாக்குல பக்கத்து சீட் ஆண்ட்டிக்கு இச்சு குடுக்குதுன்னு நெனைக்குறேன் அந்த டாகீஸ்” என்றாள் சத்தமாக. “நடுநைட்ல பஸ்ல ஒத வாங்கி குடுத்துடாத தாயே” எனக்கெஞ்சினேன்.
இதற்கப்புறம் உச் வரவில்லை.
அவளின் ரசனைகள் மலைக்கும் மடுவுக்குமாக இருந்தன.. உதாரணத்துக்கு, பிடித்த நடிகர் சூர்யா, நடிகை அனுஷ்கா. இது போலவே மற்ற அனைத்து ரசனையும். தேவாரம் எல்லாம் பாடுவாளாம். என் பங்குக்கு திருவாசகம் பேசினேன். “சிந்து பைரவி படத்துல எல்லா பாட்டும் தேவாரம்தான் தெரியுமா?” என்றாள்... அப்போதிருந்த மயக்கத்தில் “அப்டியா?” என ஆச்சரியப்பட்டு கேட்டுக்கொண்டேன். தண்ணித் தொட்டி தேடிவந்த கன்னுக்குட்டி என்ற தேவாரப் பாடல் விச் சேப்டரில் வருகிறது என என் மைண்ட்வாய்ஸ் பொடணியில் அடித்த நேரத்திற்கெல்லாம் உறங்கியிருந்தோம்.
மறுநாள் காலை எழுந்தவுடன், “நேத்து என்னாச்சு தெரியுமா? நீ தூக்கத்துல தெரியாம என் தோள்ள சாஞ்சுட்ட” என்றாள். “ஓ! நெசமாவா?” என அப்ராணியாக
கேட்டு, “எழுப்பிருக்க வேண்டியதுதான..” என்றேன் (தூங்கறவன எழுப்பலாம்.. தூங்கற மாதிரி நடிக்கிறவன..ன்னு உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது. பட் கலாச்சாரம்னு ஒன்னு இருக்கில்லியா..) “ரொம்ப பாவமா தூங்கிட்டு இருந்த, அதான் தூங்கட்டும்னு விட்டுட்டேன்” என்றாள். “ஆமாமா, தூங்கிட்டுதான் இருந்தேன்” என்றேன்.
பஸ் மதுரையை நெருங்க நெருங்க மனது பக்கென்றிருந்தது. இப்பயணம் இன்னும் கொஞ்சம் நீளாதா என உள்ளம் ஏங்கியது. ஆரப்பாளையத்தை அடைந்ததும், அவளின் மாமா வந்து அவளை பைக்கில் அழைத்துச்சென்றார். தொலைவில் சென்றதும், மறையும்முன் ஒரு முறை என்னைத்திரும்பிப்பார்த்தாள். அதே நேரம் என் மொபைலில் ஒரு sms சிணுங்கியது - I miss
you.
அடேடே இது ஒரு காதல் கதை :-)
ReplyDeleteamas32
அவ்வ்வ்வ்.. don't get into any conclusions.. இது ஒரு சாதாரண பரிசுத்த நட்புக்கதை..
Deleteதேவார Ultimate!
ReplyDelete:-) Thanks
Deleteவழக்கம் போல செம்ம கலக்கல் ப்ரோ.
ReplyDeleteநன்றி ப்ரோ
Delete// ஒன்னு ஆன்சர் பண்ணு, இல்ல பதில் சொல்லு // வழக்கம் போல அருமை :)
ReplyDeleteநன்றி..Btw, பதேர் பாஞ்சாலி பார்த்த உங்க நண்பர் யாருக்காச்சும் கௌண்ட்டர் குடுத்திங்களா? I saw some comment shared in twitter this morning...
DeleteSuper
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteசெம நச் மாமே :)))))))))))))))))))))))))
ReplyDelete(தூங்கறவன எழுப்பலாம்.. தூங்கற மாதிரி நடிக்கிறவன..ன்னு உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது. பட் கலாச்சாரம்னு ஒன்னு இருக்கில்லியா..)
நன்றி மாம்ஸ்!!!
Deleteவர வர உங்க கதை களமெல்லாம் எப்படியோ போய்கிட்டுயிருக்கு - ஜாக்கிரதை :)) மைண்ட் வாய்ஸ் அடிக்கடி பேசுது போல - ம்ம்ம்ம்...
ReplyDeleteஅவ்.... நாம ஏன் இத ஆப்லைன்ல டிஸ்கஸக்கூடாது?
Deleteசெமரகளையான ரைட்டிங் :)
ReplyDeleteசிரிச்சி மாளல.
Thanks :-)) I was in Sarjapur location.
Deleteathu enna 35007 ?
ReplyDeleteஅத தலகீழா பாருங்க.. ஒரு இங்லிஸ் வார்த்த வரும்
Deletewhich branch in bangalore bro?
ReplyDeleteஒரு வழியாய் இவள் ஏழரைக்கு வந்து சேர்ந்தாள். அவள் வந்த டைமிங்கில் ஒரு குறியீடு இருப்பதை கவனித்திருப்பீர்கள். நான்தான் கொஞ்சம் சூதானமாக இருக்கத்தவறிவிட்டேன். Super..
ReplyDeleteThanks!!!!
Deleterasikka vaikkum ezuththu, thodarungkal, ithe poandra pathivukalai.
ReplyDeletepayanam thodarndhaal padhivum thodarum ;-))))
Deleteகலக்கல் முத்தலிப்
ReplyDeleteநன்றிண்ணே!
Deleteமுத்தலிப் பதிவென்றாலே ஒரு மகிழ்ச்சி சட்டென மனதில், மனம்விட்டு, வாய்விட்டு எப்படி எல்லாம் சிரிக்கமுடியுமோ சிரித்தேன், ரசித்து. அப்புறம் அதென்ன 35007 ப்ளீச்
ReplyDeleteஎன்னோட அவதி உங்கள வா, மனம் விட்டு சிரிக்க வெக்குதா? நோட் பண்ணிக்கறேன்.. அந்த எண்ணின் அர்த்தம் சந்துல சொல்லி ஆச்சு...
Deleteஎன் கேள்விக்கென்ன பதில்?? ¿?????
ReplyDeleteசிறுகதை மாதிரியான வடிவமாத்தான் எனக்குத் தெரியுது. அட்டகாசம்! இல்ல உண்மைலயே சிறுகதைதானா?
ReplyDeleteபூ புப்பம் ப்லவர்... எப்டி வேணா சொல்லிக்கலாம்
DeletePlease try to write atleast once in a week bro .
ReplyDelete-----By Annanin Vizhuthuhal
Vizhudhugal vaara vaaram blr mdu ticket thandhaa blogum ezhudhalaam...
Deleteஆஹாஹா. அருமையான எழுத்தாக்கம் :)
ReplyDeleteமிக்க நன்றி ஆதம்
Deleteமிகவும் ரசித்தேன் ஹாஹாஹா
ReplyDelete" மூன்று இலியானா இட்லிகளை "
"ஏழரைக்கு -ஒரு குறியீடு "
( Do not spend too much time in Twitter - Write Please ... )
அன்பின் மது,
Deleteமிக்க நன்றி. டுட்டர் சகவாசம் கொ.கொ. மாய் குறைந்துகொண்டே வருகிறது.
அன்புக்கு மீண்டும் நன்றி
உங்கள் எழுத்து ஹீரோ ஹீரோயினை கண் முன் நிறுத்துகிறது,முதலில் அந்த setc டிரைவருக்கு நன்றி சொல்லுங்கள்.இல்லை என்றால் தோள் சாய்ந்த பயணம் அரங்கேறியிருக்காது..தோள் கொடுப்பான் தோழன் , உங்களை போல நல் உள்ளங்களுக்கு தோள் கொடுத்தாள் தோழி...
ReplyDeleteயோவ்வ்வ்.. நான் என்னமோ எங்கடா தோள் கெடைக்கும்னு தலைய தொங்க போட்டமாதிரி சொல்ட்டீரு... அன்று நடந்தது ஒரு விதி வச துன்பியல் சம்பவம். நம்ம கைல எதுவுமில்லை ஐ சே ;-)))))
DeleteHi Muthilip,
ReplyDeleteநானும் விப்ரோ தானுங்க ...twitter ல இருக்கேன் s_for_sound..
:)))
ReplyDeletethirumba vaasichen.
ReplyDelete:)))
மிக்க நன்றி... நானே ப்ளாக தொறந்து பல நூற்றாண்டாவுது... பூத் பங்களா மாதிரி கெடக்கு... ஒரே நூலாம்பட, தூசி தும்மு...
DeleteOh man. Love it.. 😀😀😀
ReplyDeleteThanks :-)
Deleteகிளிநொச்சி எல்லாம் தெரிஞ்சு வைச்சிருக்கிறீங்க????????????
ReplyDeleteUngala maadhiriye enaku oru wipro friend irukanga.. Aparama yaavaga paduthunga nu sonnadhu indha friend ah dhaana? :)))))
ReplyDeleteNalla ezhuthu.. �� sirichute irundhen..
-திவி (Hope u remember) :)
அதே டெய்லர் அதே வாடக மொமெண்ட். பத்துப்பொருத்தமும் ஒங்க ரெண்டு பேருக்கும் கரெக்ட்டா மேச் ஆகுதா?
Delete-முத்தலிப் (yes I do remember) *smiley*
Character match mattum ila.. Idhe madhiri 4,5 bus maari kollam to madurai vandha oru iravu payanam kuda iruku.. Kadhaya padika padika dhan, kooda vandhavan evalavu paavam nu purinjukitten.. _/\_ :)))))
Deleteஅடேடே... அந்தப்பக்கமும் இதே கத உண்டா? அத அப்டியே சுருக்கமா 400 வார்த்தைல சொன்னீங்கன்னா... அப்புறம் கூட வந்த மஹான் இப்ப எந்த ஆஸ்பத்திரில கெடக்குறார்னும் சொன்னா சமூகம் உய்வுறும்.
DeleteAdhu nadandhu 12 months irukum. Short ah solren. Kelunga:))))) late ah kelambi train ah vitutu, phn la charge ilama,kollam- trivandrum- nagercoil- virudhunagar- madurai nu 7-8 hrs travel. Bus la raasukutty nu oru raamaraajan padam (-_-) #andhoo paridhaabam. Aana na panna ella koothayum poruthukitu kooda vandhuchu andha jeevan :))) engirundhaalum nalla irukanum.
Deleteஎல்லாத்தையும் கூட மன்னிச்சிருவேன். ஆனா ராசுக்குட்டி ராமராஜன் படம்னு போட்டீங்களே ஒரு போடு. _/\_
DeleteAyoo baagyaraj! :D
ReplyDeleteAvvvaloo interest ah padam paathuruken! :p
ஐசைட்லயே படப்டாது. ஓடிருங்க.
Delete"And this happens every week. இதெல்லாம் பாத்தப்புறம்தான் கடவுள்ளாம் இருப்பார்தாம்போலன்னு லைட்டா நம்பிக்க வந்துது." :))) இன்னும் நிறைய மேட்டர் இந்த மாதிரி இருக்கும் போல.பாதிபாயில்கள் பற்றி தெரியாமல் சிக்கி சின்னாபின்னமாகும் என்போன்றோருக்கு இந்த சிரிப்பும் சிந்தனைக்குரியதே... இன்னும் பகிரவும். வாழ்த்துக்கள்.
ReplyDelete