புஃபே எனும் Buffet!






சன் டிவியோட டாப் டென் மூவீஸ் சுரேஷவிட அதிகமா, தேவையான அளவு பொன்வண்டு டிச் வாஷ் பார் போட்டு அலசு அலசுன்னு எல்லாரும் அலசிட்டாலும், ஜனநாயகக் கடமைன்னு ஒன்னு இருக்கில்லியா? இதோ, எனது சென்னைப் புத்தகக்காட்சி கதை. (புத்தகக் கண்காட்சின்னு சொல்லாம வெறுமனே காட்சின்னு ஏன் சொல்றாங்க? any specific reasons?)

காய்தேமில்லத் காலத்துலருந்தே புக் ஃபேர் போறது ரொம்பப் புடிக்கும். பிறகு செயிண்ட் ஜார்ஜ் ஸ்கூல், பின், இப்போது நந்தனத்தில் போடப்படுவது வரை இன்னும் வண்டி ஓடிட்டிருக்கு. புக் ஃபேர்னா எனக்கு முதல்ல நினைவுக்கு வர்றது ** ** (ஒரு டிவி நடிகை, நித்யானந்தர் சிஷ்யை). பல வருஷங்களுக்கு முன் போன ஒரு புக்ஃபேர்ல, அவங்கதான் நாம்பாத்த முதல் செலிப்ரிட்டி. எதார்த்தமா எதோ ஒரு புக்கெடுத்துட்டே நான் திரும்ப, அப்ப பதார்த்தமா அவங்க எதுக்கோ குனிய, சரி விடுங்க... அன்று முதல் ஆரம்பித்தது, என் இலக்கிய வேட்கை.

கிராமத்துல வளராத காரணத்துனால, திருவிழாக்கள கண்டு களிக்கும் கொடுப்பினை இல்லாமப் போச்சு. அதை இந்த புக் ஃபேர் மூலம் ஒரு வகையில் தீர்த்துக்க முடியுது. வாங்குறமோ (அ) படிக்கிறோமோ இல்லையோ, அத்தனை புக்குகள ஒரே எடத்துல மொத்தமா பாக்குறது எதோ ஒரு கிளர்ச்சி தருது. Seriously. மேலும் பலவகையான மக்கள், அதில் பெரும்பாலானோர் புத்தகம் வாசிப்பவர்கள். அவர்களை ஒரே இடத்தில் காண்கையில்பேசும்போது அவெங்காது ஆடுதுலே, நம்ம சாதிக்காரம்லேஎன்ற உணர்வும் வருது.

லிச்சி ஜூஸ், டெல்லி அப்பளம் போன்றவற்றைக் குறிப்பிடுவது க்ளீஷே ஆகுமளவு புக்ஃபேரோடு அவை ஒன்றி விட்டது. ஃபிகர்வெட்டுதலைத் தனியாகக் குறிப்பிடுவது நகம் வெட்டுவேன் என்று சொல்வதற்கு ஒப்பானது. So we’ll move on.

போன வருடம் கண்ட சில முகங்களை இவ்வருடமும் காண முடிந்தது. அதிலும் இந்தப் புள்ளைங்க ஒரு வருசத்துல என்னமா வளந்துடுதுங்க? அபார வளார்ச்சி!

புக்ஃபேரைச் சார்ந்து ஏகப்பட்ட தொழில்கள் லாபம் பார்ப்பதை புக் ஃபேரின் வாசலிலிருந்தே அறிய முடிந்தது. தூசி தும்புகளுக்கு மத்தியில், சமோசா, சுண்டலிலிருந்து, தண்ணீர் ஸ்ப்ரே, ஸ்பைடர்மேன் பொம்மை, உப்பு நீரை நன்னீராக்கும் நெல்லி மரக்கட்டை (உண்மைலயே பயன் தருமா?), அரிசியில் பெயர் பொறித்தல் வரை எச்சக்கச்சம். புக்ஃபேர் எதிரில் போடப்படும் used & old book fair கடைகள் இவ்வருடம் கம்மி. ரெண்டொரு கடைதான் இருந்தது. Why?

வாடி(ய)வாசல்போல் அமைக்கப்பட்டிருந்த குட்டியூண்டு எண்ட்ரிக்குள் நுழைந்தால் சாப்பிட வாங்கவிலிருந்து ஏதேதோ பக்ஷணக்கடைகள். மற்றொரு பக்கம்செவ்விலக்கியத்தின் அடிநாதமாய் விளங்கக்கூடிய தென் தமிழகத்தில் முன்பனிக்காட்டிலே” என்பது போல் க்ரீக் & லாட்டினிலே மேடையில் ஒருவர் பேசிக்கொண்டிருக்க. நவகிரகங்கள் போல் ஒவ்வொரு டைரக்சனில் அமர்ந்து, “ம்ம்.. அப்புறம்என்பதாய் அதைச் சிலர் கேட்டுக்கொண்டிருந்தனர்.

எண்ட்ரன்சில் டிக்கெட் வாங்கித்திரும்பியதும், ”லேண்டு பாக்குறீங்களா?” என்றொரு குரல். வாடக கட்ட காசு சேக்கவே வயித்துச் சோத்த கம்மி பண்ணிட்டிருக்க எண்ட்ட போய் ஏண்டா இந்தக்கேள்வியக்கேட்ட என்ற ஆக்ரோஷத்தோடு, ”No thanks Boss”. என்றேன் பம்மிக்கொண்டு.

வழக்கம்போலவே இவ்வருடமும் காதுகுளிர ஒட்டுக்கேட்டதில் பலப்பல சுவாரசியங்கள் கிடைத்தன.

முதல் நாள் பர்ச்சேஸ் எல்லாம் முடிந்து ஓரிடத்தில் குத்த வைத்து நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது “எக்ஸ்க்யூஸ் மீ?” என்றொரு குரல் கேட்டது. உங்கள் ஸ்க்ரீனில், முன் சொன்ன எக்ஸ்க்யூஸ்மீயின் மேல் எறும்பெதுவும் மொய்ப்பதற்குள் ஸ்க்ரோலி விடுங்கள். அத்துணை இனிப்பான குரல் அது. “யார்ராது?” என சட்டெனத்திரும்ப, ஒரு அழகுப்பெண், ”நீங்கள்ளாம் ட்விட்டர்ஸா?” என்றார். ”எப்புடித்தான் கண்டுபுடிக்கிறாங்யளோ?” என்ற எங்கள் மைண்ட் வாய்சையும் புரிந்துகொண்டு, ”நீங்க பேசுற ஸ்டைல் அப்புடித்தான் இருக்கு” என்று கூறி, தானும் ”ஒரு பழைய (ஆனால் மிஹ மிஹ மிஹ இளமையான) ட்வீட்டர்” என தம்மை அறிமுகப்”படுத்தினார்”. தாம் தற்போது ஐஏஎஸ் முயற்சி செய்து வருவதாகக்கூறினார். அவருக்கு போஸ்டிங் வந்ததும் முதல் வேலையா அவர் மாவட்டத்துக்கு ஜாகைய மாத்திக்கணும் என்று கங்கணம் கட்டிக்கொண்டேன். தேவயானிக்கப்புறம் இம்புட்டு அழகா ஒரு கலெக்டர் கேண்டிடேட்டைக்காண சிவில் சர்வீஸ் கொடுத்து வைத்திருக்கணும். ”உனைக்கண்டால் சிவில் சர்வீஸ் ஆகும் விசில் சர்வீஸ்” என்ற இன்ஸ்டண்ட் கவிதையும் அவரைப்பார்த்ததும் மனத்துள் உதித்தது.



நடைபாதை ஆங்காங்கே பிளந்து கொண்டும், ஆடிக்கொண்டும், தரை விரிப்பு காலை வாரிவிடுவதாகவும் இருந்தது. எத்தனை பேர் சில்றை வாரினார்கள் எனத்தெரியவில்லை. கர்பஸ்த்ரீகளும், முதியோரும், மாற்றுத்திறனாளிகளும், பெருமளவில் குழந்தைகளும் வந்து போவதைக்காண முடிந்தது. அவர்களுக்காகவாவது அடுத்த முறை இன்னும் பாதுகாப்பாகக் கட்டமையுங்கள். ப்ளீஸ்.



புக்ஃபேரில் என்னை பிரம்மிக்க வைத்த ஸ்டால் இதுதான். பார்வைத்திறன் சவாலுடையவர்கள், தாங்கள் படிக்கும், அலுவலகங்களில் வேலை செய்யும் முறை (software developers கூட உண்டாம்) குறித்து விளக்கம் அளித்தனர். ப்ரெய்லி குறித்தும், கணினியை இயக்கும் விதம் குறித்தும் கூறியது மிக அருமை. ஒரு மாணவர் கணினியை இயக்கிக் காட்டும்போது, “உங்களுக்காகத்தான் மானிட்டர் வெச்சிருக்கோம். நாங்க மானிட்டர் இல்லாமயே ஆப்பரேட் பண்ணுவோம்” என்று அவர் கூறியபோதுதான் எனக்கு உறைத்தது, எந்த ஒரு உபகரணத்தையும் minimum resourceகளைக்கொண்டு முடிப்பதே efficiency. ஒரு கீபோர்ட் & ஸ்பீக்கர் மட்டும் போதும், கணினியை இயக்குவேன் எனும் அவர்களா? அல்லது மானிட்டர் இல்லாது வேலை நகராது எனும் நாமா? யார் ஊனமுற்றோர்?

 கவனத்தை ஈர்த்தவை சில:-


முடிவே தெரிஞ்சதுக்கப்புறம் எதுக்கந்த நாவல்?






இதன் கடைசி பக்கத்தில் “இது எதுவும் ஒத்து வரலன்னா செத்துருங்க ப்ரோ” என்றிருக்குமோ என அஞ்சினேன். நல்ல வேளையாக அப்படியெல்லாம் ஏதுமில்லை. 1330 என ஒரு குறியீடு வேறு.










சில வழிகள் எதுக்கு? ஈசியான ஒரே ஒரு வழி இருக்கு. நாம சொன்னா எவங்கேக்குறான்???




 


சதுரங்கவேட்டை அடுத்த பார்ட் வந்தால் நிச்சயம் இந்தக்கடையில் கண்ட கதைகளை ஒரு அங்கமாக வைக்கலாம். உள்ளே இருந்த பெற்றோர்களெல்லாம் மகுடிக்குக் கட்டுப்பட்ட புஸ்ஸு போல் அவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருந்தனர்






 புக் ஃபேரில் மட்டுமே காணக்கூடிய காட்சிகளுள் ஒன்று. கலைஞரையும் மக்கள் முதல்வரையும் அடுத்தடுத்து காணலாம். அதே போல இஸ்க்கான் பப்ளிகேசனும் சாஜிதா பப்ளிகேசனும் எதிரெதிரே அமைந்து, அமைதியாக தங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.




        
சாப்பாட்டுக் கடைகளுக்கு அடுத்து, எந்நேரமும் கூட்டமிருந்தது இந்தக் கடையில் தான். சொப்புச்சாமான்கள் மேல் நம் மக்களுக்கு இன்னும் ஈர்ப்பு இருப்பது கண்கூடாகத் தெரிந்தது. இந்தக்கடைக்கு அடுத்து இருந்த ஸ்டாலில் கூட்டம் சுமாராய் இருந்தது கடவுளை விட விஞ்ஞானத்தின் மீது மக்களுக்கு அதிக ஆர்வமிருப்பதாய் எடுத்துக்கொள்வதா? குழந்தைகளுக்குச் சமானமாய், பெரியவர்களும் scientific kits மீது ஆர்வங்காட்டினர். புள்ளைக்கு ’பௌ’ காட்டிவிட்டு, டெலஸ்கோப்பும் இத்தந்தை அதற்கு சாட்சி.

 



ஆன்றாய்டுங்குறது OS இல்ல? அப்போ கருப்புபெர்ரி, ஆப்பில்லாம் ஸ்மார்ட்போனில்லியா? நாங்க படிக்கும்போதெல்லாம் C for Cat தானேடா?



 



மொத்த புக்ஃபேரில் பணத்தை விட அதிகமாகப் பரிமாற்றப்பட்டவை சமையல் புத்தகங்களாகத்தான் இருக்கும். கல்லையும் மண்ணையும் சமைக்கலாம் என்பதைத்தவிற மீதி எல்லா வகை சமையலுக்கும் புக் இருந்தன. மீனாட்சி பதிப்பகத்தில் இரு ஆண்ட்டீஸ் திஜாவின் நளபாகம் தேடிக்கொண்டிருந்தனர். எடுத்துக்கொடுத்தேன். அப்போது ஒரு ஆண்ட்டி, “நல்லா செக் பண்ணிக்கோடி, தாமுவோட நளபாகமா இருந்துரப்போகுது” என்று சொன்னது செம டைமிங்.


 
இதைக்கண்டதும் வெகுண்டெழுந்த ஜிரா அண்ணன், சைவ’ச்’சமையல்னு வரணும்ப்பா, என்ன புக்கெழுதுறாங்களோ என அங்’கலாய்த்தார்’. எழுதியவர் பெயரைப்பார்த்ததும், தில்லுமுல்லுவின் ”ழானாவும் வராது ஷானாவும் வராது, பேர் மட்டும் சுப்பிரமணிய பாரதி” எனும் காட்சி நினைவு வந்து, அவரிடம் கூறியதும். சமையல் வந்த அளவு தமிழ் வராததாலயோ என்னவோ, பேர்லயே கூட தமிழ அழைச்சிருக்காங்க என கவுண்ட்டர் அடித்தார்.



 

”சக்கரவள்ளி கெழங்கு… மாமா…” என்பதைத் தவிர, மீதி எல்லா வஸ்துக்களுக்கும் ஒரு எப்படி புக் இருந்தது மணிமேகலையில்.




 
And the தில்லுதொர அவார்ட் for Chennai book fair 2015 goes to என ஒரு கேட்டகிரியில் அவார்ட் இருந்தால் அது நித்தியானந்தா ஸ்டாலுக்குத்தான். கடந்து செல்லும் பலர் ஏளனச்சிரிப்போடு இவர்களைப்பார்த்தாலும் மிகுந்த தைரியம் & நம்பிக்கையோடு கர்மமே கண்ணாக உள்ளே சிலரை அமரச்செய்து குண்டலினியை எழுப்பிக்கொண்டிருந்தனர். சரி நாமும் எழுப்புவோமே என உள்ளே சென்றதில், “இந்த புக்கு ரொம்ப நல்லா இருக்குங்க” என்ற சொன்ன அதே வாக்கியங்களை எடுக்கும் ஒவ்வொரு புக்குக்கும் சொல்லி விற்கப்பார்த்தார், கழுத்து முழுக்க கஜகஜாவென மாலைகள் அணிந்திருந்த ஓர் ஆண்ட்டி. என்னையும் அமர வைத்து ஸ்வாமி பூஜித்துக்கொடுத்த ஒரு லிங்கத்தை நெற்றியில் வைத்து ரெண்டு முறை சிலுப்பி பவர் ஏத்தி அனுப்பினார்கள்.

கண்ணதாசன் பதிப்பகத்தைக்கடக்கையில் அப்படியே உறைந்து போனேன். கடந்த decadeல் நான் கண்ட மிகச்சிறந்த அழகியரில் ஒருத்தியை அங்கு கண்டேன். அழகில், திரும்பிப் பார்க்க வைக்கும் அழகு உண்டு, திரும்பத் திரும்பப் பார்க்க வைக்கும் அழகுண்டு. இவள்… அதுக்கும் மேல. அவளையே பார்த்துக்கொண்டிருந்ததை கடைக்காரர் பார்த்துவிட்டதால், சமாளிக்க, எட்ட இருந்த கண்ணதாசனின் ”பாடல் பிறந்த கதை” வாங்கிக்கொண்டேன். இதுதான் நான் அந்த புக்கு வாங்கிய கதை.

சிற்றரங்கத்தில் ராஜ் சிவா & லக்ஷ்மியின் புத்த வெளியீட்டில், சொல்லி வைத்தார்போல் பேசிய எல்லோரும் “ராஜ் சிவா எனக்கு எஃப் பி நண்பர்” என்றனர். அதென்ன ஸ்ரீராமஜெயமா? சில பேச்சாளர்கள் சுத்தத்தமிழில் ஆங்கிலம் பேசுபவராய் இருந்தனர். ஏனிந்தக்கொலைவெறிபாஸ்?

எதேச்சையா அல்லது வேறெதுவுமா தெரியவில்லை. வாங்கிய பல புத்தகங்கள், அனுபவக்கட்டுரை & பேட்டி சார்ந்ததாகவே அமைந்துள்ளன. வயசாகிடுச்சோ?
பலர் பதிவுகளைப்பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியளித்தது. பாரா பாராட்டியது எதிர்பாரா சர்ப்ரைஸ். எழுத்தாளர்கள் வா. ம, நிலாரசிகன், சாரு ஆகியோரையும் சந்திக்க முடிந்தது ஹேப்பி.

படிக்கும் ஒவ்வொரு புத்தகத்துக்கும் எஃப் பியில் புக்குபூச்சி எனும் பேஜில் ரிவ்யூ எழுதிவருகிறேன். விருப்பமுள்ளோர் விசிட்டுக.


புக்ஃபேரின் இறுதி நாளில், வெளியே வந்ததும் இந்த போட்டோ எடுத்தேன். ”புத்தகம் நம் நண்பன் & காவல்துறையும் நம் நண்பன். ஆகவே புத்தகம் காவல் காக்கும் நண்பன் என்பதைக் குறியீடாக உணர்த்தும் வண்ணம் எண்ட்ரன்ஸ் காவல் நிலையம் மாதிரி செட்டப்போ?” என ஜிரா அண்ணனிடம் கேட்டேன். "ஒனக்கு முத்திருச்சு" என்றார்.

Comments

  1. Book Fairஐ பிரிச்சு மேஞ்சுட்டீங்க :-)

    நான் புத்தகக் கண்காட்சி போகாதக் குறையை உங்கள் பதிவைப் பார்த்துத் தீர்த்துக் கொண்டேன்.

    // (புத்தகக் கண்காட்சின்னு சொல்லாம வெறுமனே காட்சின்னு ஏன் சொல்றாங்க? any specific reasons?)//
    கண் இல்லாமலேயும் புத்தகத்தைப் படிக்க முடியும் என்பதின் குறியீடாக இருக்கும்!

    ப்ரெயிலீ ஸ்டாலில் நீங்கள் கவனித்துக் குறிப்பிட்டு இருப்பது மிகவும் உண்மை. நெஞ்சை தொட்டது.

    முதல் புக் பேரிலேயே உங்களை ஈர்த்த நித்தியானந்தா சிஷ்யை இந்த புக் பேரில் குண்டலினியை எழுப்ப என்று எதோ காரணத்துக்காகவாவது உங்களை ஸ்டால் உள் வரவழைத்து விட்டார்.

    நெல்லி மரக்கட்டை உண்மையிலேயே பயன் தரும். கிணற்றில் (இப்போ நகரங்களில் காணப்படுவதில்லை) போட்டு வைத்தால் உப்புத் தண்ணீரும் நாளடைவில் இனிக்க ஆரம்பிக்கும்.

    கணக்கு வராது கணக்கு வராதுன்னு சொல்லிட்டு கணக்குப் பண்ணத் தான் புக் பேர் போயிருக்கீங்கன்னு தெரியுது, வாழ்க வளமுடன்!

    amas32

    ReplyDelete
    Replies
    1. முத்தலிப்11 February 2015 at 19:23

      அடுத்த வருசம் போய்ருவோம். நெல்லிக் கட்டை பயன் தரும் என்றால் மக்கள் ஏன் பரவலா பயன் படுத்த மாட்றாங்க?

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. பொதுவாப் புத்தகத்தைக் கண்ணால் பாத்துப் படிக்கனுங்குறதுனாலதான் புத்தகக் கண்-காட்சின்னு பேரு. எந்த உயிருக்கும் கண்ணுன்னு ஒன்னு இல்லைன்னா புத்தகக் கைக்காட்சின்னு பேர் வெச்சிருப்பாங்க.

    வளையற்சுவை தோட்டுச்சுவை கொலுசுச்சுவை சங்கிலிச்சுவையெல்லாம் ஒனக்கு நல்லா வருது. அட.. நகைச்சுவையைச் சொன்னேன். தொடர்ந்து கலக்கு.

    ReplyDelete
    Replies
    1. முத்தலிப்11 February 2015 at 19:24

      நன்றிண்ணே! எல்லாப் புகலும் இறைவனிடத்தே

      Delete
  4. புத்தகங்களுக்காக இல்லைனாலும் நீங்க குறிப்பிட்ட அனுபவத்துக்காகவாவது ஒரு தரம் புத்தகக் கண்காட்சிக்கு போகணும்னு தோணுது
    இறைவன் நாடினால்
    அந்த அழகிகளையும் கண்ணில் காட்டடும்

    ReplyDelete
    Replies
    1. முத்தலிப்11 February 2015 at 19:25

      கண்டிப்பா போங்க. நல்லதொரு அனுபவம்

      Delete
  5. "கலைஞரையும் மக்கள் முதல்வரையும் அடுத்தடுத்து காணலாம்."

    நம்மாழ்வாரும் சுவாமிநாதனும் அடுத்தடுதுதான் இருந்தாங்க.

    ReplyDelete
    Replies
    1. முத்தலிப்11 February 2015 at 19:27

      அதான் புக்ஃபேர் :-)

      Delete

Post a Comment

Pass a comment here...