ச பா சா



       வெகுநாளைய கனவுகளில் ஒன்று மார்கழி சீசன் கச்சேரி பார்க்க வேண்டுமென்பது. இந்த வருடம் டபுள் தமாகாவாய் L.சுப்ரமணியன் & உஸ்தாத் அம்ஜத் அலிகான் மற்றும் பாம்பே ஜெயஸ்ரீயின் (மும்பை இல்லியா?) கச்சேரிகளை நேரில் காண வாய்த்தது. அப்துல்காதருக்கும் ஆலாபனைக்கும் என்னாங்கடா லிங்குசாமின்னு நானும் யோசிச்சேன். சல்மான் கான் ராஜபக்ஷேக்கு பிரச்சாரம் பண்ணது, திடுதிப்புன்னு தோணி (தோனியா தோணியா? im weak in cricket) ரிட்டயர் ஆனது, கமல் ஏன் கேபி சாவுக்கு வரலங்குறது போன்ற இன்னபிற ஹாட் டாபிக்கில் மக்கள் பிஸியாய் இருப்பதாகத் தெரிவதால் அப்துல் காதர் ஆண்ட்ரியா தொடர்புகளை யாரும் கண்டுக்கிட மாட்டாங்கன்னு ஒரு கெஸ்.

      நாரத கான சபா(ரிஜிஸ்டர்டு)விலே நேற்று மாலை 4 மணி கச்சேரிக்கு, பிரபல டுட்டர் குடும்பத்தினரான அமாஸ் அம்மா, ஷேகர் சார் மற்றும் அவரின் ஷே’ஹட்டான நியந்தாவோடு மிகஷ்ஷார்ப்பாக 3.15க்கெல்லாம் சென்று விட்டோம். அதற்கே பார்க்கிங் கிடைக்கவில்லை. எண்ட்ரியில், ”பாம்பே ஜெயஸ்ரீ கச்சேரிக்கு இவ்ளோ லேட்டாவா வருவீங்க?என்றார்  வாட்ச்மேன் (டேய், நான் எக்சாமுக்கே, ஆரமிச்சு பத்து நிமிசம் லேட்டாத்தாண்டா போவேன், முக்கா மணிநேரம் முந்தி வந்தது லேட்டா?).

      கழுத்துவரை போர்த்திய ஸ்லீவ்லெஸ் வகை ஜாக்கெட் போட்டிருந்த ஆண்ட்டிகள் ஒரு புறம், தள்ளாத வயதானவர்கள் ஒருபுறம், உட்கச்சையில்லாததால்குதிக்குது குதிக்குது முயலுக்குட்டிகளைச் சுமந்த Gen2014 ஒரு புறமென கூட்டமே ஒரு மினி ஜுகல் பந்தியாய் இருந்தது. Almost கிமு வயதான கிழவிகூட ரேஸர் ஷார்ப் இங்லிஷ் பேசியது கிலியேற்படுத்தியது. எதுக்கு வம்பென்று அமாஸ் அம்மாவோடு நியூமராலஜியும் டெர்மடாலஜியும் பின்னே பெர்முடா ஜியாலஜியும் என்று வசதியாக மடை திருப்பிக் கொண்டேன்.

      சரியாக 4 மணிக்கு திரை உயர்த்தப்பட்டு பாம்பே ஜெயஸ்ரீ குரல் அரங்கை ஆக்குப்பை செய்தது. [குறிப்பு: 3.45க்கே அரங்கு நிறைந்தும் (balcony too), ஆங்காங்கே கதவோரத்திலும் மக்கள் நின்று கொண்டும், போதாக்குறைக்கு மேடையின் இரு புறமும் சப்ளாங்கால் போட்டும் மக்கள்கூட்டம் அமர்ந்திருந்தது. இத்தனைக்கும் entry fee உண்டு. சிலபல இலக்கிய புத்தக வெளியீட்டு விழாவுக்கு இலவச அனுமதி, டீ டிபன் கோட்டர், கவர்ச்சிக்கு நடிகர் நடிகையரை மேடையிலேற்றியும் கூட்டமின்றி செல்ஃப் எடுக்காததால், தமிழ்நாடு வாழவே வக்கற்றது என  agressiveஆக  சாபம் கொடுக்கும் transgressive ரைட்டர்களை நினைத்துக்கொண்டேன். எதைக்கொண்டாடனும், எதைத்தூக்கிப்போட்டு மிதிக்கனும் என்பதில் மக்கள் மிகத்தெளிவாய் இருக்கின்றனர்.]

      ஜெயஸ்ரீ பாடப்பாட ஆடியன்ஸ் பலர் நோட்ஸ் எடுத்தனர், தொடையில் தட்டி தாளம் போட்டனர். (இசையின் இன்ப ) வெள்ளத்திலே மூழ்கினால் தன்னாலே காலை அசைப்போமே, அதுபோல உணர்ச்சி மிகுதியில் நானும் (என்) தொடையில் தட்டிக் கொண்டிருக்க, சற்று நேரத்தில்தான் ஒன்று புலப்பட்டது. ஹாலின் மொத்தக் கூட்டமும் synchronousஆகத் தாளம் தட்டிக்கொண்டிருக்க, நான் மட்டும் asynchronousஆக குருட்டடி குஞ்சிதபாதம் ரேஞ்சில் தட்டிக்கொண்டிருந்தேன். யாருவே இவன் கோமாளி என யாரும் கவனிக்குமுன் உசாராய்டுறா சூனா பானா என்று ஒருமையுள் ஆமை போல் கைகளை அடக்கி காலை மட்டும் ஆட்ட, நரம்பு தளர்ச்சியோவென ஷேகர் சார் பரிதாபமாகப்பார்த்தார்.

      நித்யஸ்ரீ பாடிய பாடல்களில் மிகவும் பிடித்தது டுமக்கு ஜலத்து ராம (அப்டிதான் காதில் விழுந்தது) பாடல்தான். கர்நாடிக் போல தெரியவில்லை. கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. சங்கராச்சாரியாரைப் பாடிய பாடல் second most favorite. இதில் முக்கியமாய்ச் சொல்ல வேண்டியது வயலின் & மிருதங்கம் வாசித்தவர்கள். கலா மாஸ்டரின் அண்டத்திலே அத்திறமையை ”கிழிகிழி”யென விளிப்பர். அற்புத வாசிப்பு. அதை விட முக்கியமானது தம்புரா வாசித்த இரு பெண்மணிகளில் ஒருவர். நான் V rowவில் இருந்து பார்த்தபோதிலும், திருடன் கண்ணுக்கு பளிச்செனத்தெரியும் நகை பீரோபோல் தோன்றினார். She was glittering, literally. அவ்வப்போது இயல்பாய் அவர் சிரித்த சிரிப்பு வினோபா பாவேயின் நேரடிச்சீடனான என்னையே சற்று சிதிலப் படுத்திவிட்டதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதையெல்லாம் விட மிக மிக முக்கியமானது இந்த பாராவின் ஆரம்பத்திலே ஜெயஸ்ரீயை நித்யஸ்ரீ எனக் குறிப்பிட்டது. இதைக் கவனிக்கலன்னா பதிவு உங்களுக்கு போரடிக்குதுன்னு அர்த்தம், போய் நியூ இயர் கொண்டாடுங்க.

      அரங்கிலே கண்ட மற்றொரு விஷயம் பாடல்களின் இடையே ரஸிகர்கள் சிலர்ப்ச்ச் ப்ச்ச்ச்என உச்சுக்கொட்டினர். அருகிலிருந்த நியந்தாவிடம்இவங்க சரியா பாடலன்னு உச்சு கொட்றாங்களோ?” எனக்கேட்டதற்கு, இவ்ளோ பெரிய ஞானசூன்யங்கூடவா இத்தன நேரம் ராகம் தாளம் பல்லவி பேசிட்டிருந்தோம் என மனதிற்குள் குமுறியவாறு, “இல்ல, அவங்க நல்லா பாடற எடத்த ரசிச்சு அப்டி பண்றாங்கஎன softஆக சொன்னார். Be ye roman italics when you are in rome italy quotes article எனும் விதிப்படி நாமும் கொட்டலாம் என உதடு குவித்து உச்சுக்கொட்ட, அந்நேரமென்று ஒரு ஆண்டி எதேச்சையாய் என்னைப்பார்க்க, வந்த இடத்தில் harassment கேஸில் கைதாக வேண்டாமென்று என் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.

         அவ்வப்போது ஆங்காங்கே அலையலையாய் மக்கள் ஒத்திசைந்துஆஆஎன்று கூறினர். விஜாரித்ததற்கு, அந்த நோட்சில் அவர்கள் அது இன்ன ராகமென்று கண்டுபிடித்ததால் அப்படி ரியாக்சன் என்று விடை வந்தது (அப்போ எல்லாருமே இவ்ளோ நேரம் நம்மள மாதிரி புரியாமத்தான் தலையாட்றாங்களா என, பாடறியே படிப்பறியேன் தந்த KBக்கு மனதளவில் ஒரு ரிப் போட்டுக்கொண்டேன்). 2.30 மணி நேரம் அடாது மழை விடாது பெய்தாற்போல் இசைச்சாரல் சின்ன கேப் கூட விடாமல் மிகச்சிறப்பாகப் பெய்தது.

      அடுத்த வருடம் எப்படியாவது சங்கீத உலகின்தமிழச்சி தங்கபாண்டியனானசுதா ரகுநாதன் கச்சேரிக்குப்போய்விடவேண்டுமன  1366 X 768 எடுத்தாயிற்று. மார்கழி கச்சேரிகளை அறிமுகப்படுத்தியது வாத்தியார் சுஜாதா. அவரின் கற்றதும் பெற்றதும்மில். அவரைப்போலவே நிறைய வயதான மாமாக்கள், சட்டையும் அதற்கு மேலே ஸ்வெட்டரும் அணிந்து வந்திருந்தனர். ஒரு வேளை சுஜாதாவும் வந்திருப்பாரோ என்று தேடினேன். வரவில்லை :'( . வந்திருக்கலாம்.



Comments

  1. Back to form Muthalib! அதனால் தான் தம்பூரா பெண்ணைப் பற்றி அவ்வளவு விசாரித்தீரா? நான் ஒரு முறைக் கூட அந்தப் பெண்ணைப் பார்க்கவில்லை. அதுவும் நாம் இருந்த ரோவில் இருந்து பைனாகுலர் வைத்து தான் மேடையில் இருப்பவர்களை சரியாகப் பார்க்க முடியும் நிலையிலும் அன்னார் அணிந்த நகைகள் முதற்கொண்டு நோட் பண்ணியது பிரமிக்க வைக்கிறது. சரத்குமார் ஒரு படத்தில் நமிதாவை சரியா கவனிக்கவில்லை என்று வடிவேலுவிடம் சொல்லிவிட்டு நமீதாவிடம் அவரை பார்த்தபோது எப்படி இருந்தார் என்று வர்ணித்த சீன் நினைவில் வந்து போகிறது.
    நிற்க.
    "அவரைப்போலவே நிறைய வயதான மாமாக்கள், சட்டையும் அதற்கு மேலே ஸ்வெட்டரும் அணிந்து வந்திருந்தனர். ஒரு வேளை சுஜாதாவும் வந்திருப்பாரோ என்று தேடினேன். வரவில்லை :-( . வந்திருக்கலாம்."
    Salute to your writing style.

    amas32

    ReplyDelete
    Replies
    1. Thanks ma. வில்லுக்கு அர்ச்சுனன் எனும் டிஎன்னேவிலே வந்த எமக்கு, எவ்ளோ தூரமாருந்தாலும் பறவையின் கழுத்து மட்டுமே focusல் இருக்கும். after seeing the தம்புரா, ஜயஸ்ரீயே அவுட்டாப் போகஸ்தான் ;-)

      Delete
  2. I was there at the sabha at that time with thachimammu. Didn't attend the concert though. Thaanaithalaivi sudha concertkku you can join me next year. Every year DEC 25 morning 9.30 I will attend sudha's concert.

    ReplyDelete
    Replies
    1. Cant wait for another year and all. Lemme know any sandwich sangeetha concert is happening. Will go.

      Delete
  3. Lovely winding off to 2014, to roll in 2015.
    Best wishes to Muthalib and all his loved ones.

    ReplyDelete
  4. சுஜாதா வந்து இருந்தாரோ இல்லையோ உம் எழுத்த்தில் தேவன் வந்திருவார் போல

    ReplyDelete
    Replies
    1. நன்றி. வெள்நாட்ல, எழுதியே பங்களாலாம் வாங்குனவங்க இருக்காங்கலாமே, அந்த மாதிரியும் விஷ் பண்ணுங்க ப்லிஸ்.

      Delete
  5. "நரம்பு தளர்ச்சியோவென ஷேகர் சார் பரிதாபமாகப் பார்த்தார்" - ரோபிள்ஸ்

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்.. கொஞ்சம் ஓவரா போய்ட்டனோ? அடுத்த கச்சேரிக்கு கட் பண்ணி உட்ருவீங்களா?

      Delete
  6. குதிக்குது குதிக்குது முயலுக்குட்டி’களைச் சுமந்த Gen2014 யுவதிகளையும் நகைபீரோக்களையும் தனித்து ரசித்ததோடல்லாமல்.. வினோபா பாவேயின் நேரடிச் சீடனாய்யிருந்தும் "தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" எனத் திருமூலமுறைத்த திருமூலரின் வாக்குக்கு இணங்க மார்கழி சீசன் கச்சேரி பார்க்க இயலாத என்னைபோன்ற வாலிப வயதினர்களுக்காகவும் சிரமப்பட்டு கண்டவற்றை கண்டதை கண்டவண்ணம் எடுத்துச் ஜொல்லிய பாங்கு கடைவாயில் ரெண்றரை லிட்டர் எச்சிலை வீணாக்கியது.
    இடையறாது தொடரட்டும் தங்களின் பாணி

    ReplyDelete
    Replies
    1. முத்தலிப்7 January 2015 at 13:39

      நல்ல வேளை, 'எல்லாத்துக்கும்' புகைப்பட ஆதாரம் இருந்தாத்தான் நம்புவேன்னு சொல்லாம உட்டீங்களே மிலிட்டிரிக்கார்

      Delete
  7. நான் என் சொல்வேன் ஏது சொல்வேன்
    உன் எழுத்துகளால் வசீகரிக்கபட்டுள்ளேன்
    நன்றி வாழ்த்துகள் நண்பனே

    ReplyDelete
    Replies
    1. முத்தலிப்7 January 2015 at 13:40

      மருமானேலருந்து நண்பனே.. சரியில்லியே... தங்கள் DOB காட்டும் Id Cardஐ இணைக்கவும்

      Delete
  8. //டுமக்கு ஜலத்து ராம (அப்டிதான் காதில் விழுந்தது)//

    One line says it all:)))))))

    ராகம்: பூவராகம், தாளம்: வேதாளம்
    நைனா நாச்சியப்ப சாஸ்திரிகள் கிருதி
    -ன்னு சொல்லாம வுட்டியே:) சந்தோசம்:)

    //1366 X 768 எடுத்தாயிற்று//

    இப்படிக் கணக்கில் புலியாய் இருக்கியே, ஸங்கீத கனம் ஒனக்கு நன்னாயிட்டு வரும்:)

    பதிவில் உள்ள உவமைகள், தயிர் வடைக்கு ஆங்காங்கே தூவி விட்ட காராபூந்தி போல் நாவூறியது; சிலாகித்து வாசிச்சேன்:) அவற்றில் மிகப் பிடித்த ரெண்டு உவமை..

    1.திருடன் கண்ணுக்கு பளிச்செனத் தெரியும் நகை பீரோ போல் தோன்றினார்
    2. //உட்கச்சையில்லாததால் ’குதிக்குது குதிக்குது//
    "கச்சேரி" என்பதைக் "கச்சையேறி" ஆக்கிய பெருமான் நீவிர்:)

    ReplyDelete
  9. //எதைக் கொண்டாடனும், எதைத் தூக்கிப்போட்டு மிதிக்கனும் என்பதில் மக்கள் மிகத் தெளிவாய் இருக்கின்றனர்//

    பதிவில், இதை மட்டும் மறுக்கிறேன்:)

    இது போன்ற கச்சேரிகள், அரங்கம் நிரம்பி வழிவது என்பதே "உள்ளார்ந்த மானுடக் கொண்டாட்டம்" ஆகி விடாது;
    புரிகிறதோ இல்லையோ, கூட்டம் அலை மோதும் சாஸ்திரீய ஒன்றுபடுதல்கள் பல உண்டு!
    இது "பிறவின் பால் திரட்டியால்" விளை கொண்டாட்டம்!

    கேபி சுந்தராம்பாள் KBS அம்மாவின் கர்நாடக இசைக் கச்சேரிகளை, அண்ட ஆளில்லாமல், "தூக்கிப் போட்டு மிதித்துள்ள" சபா வரலாறுகள் உண்டு:(
    ஆனால், சபா எல்லையைத் தாண்டியதுமே, KBS அம்மா இசையை ஏந்திக் கொண்ட தமிழகமே உண்டு!

    திருப்பாவை= P சுசீலாம்மா பாடிய தொகுப்பு ஒன்னு இருக்கு; பல பேருக்குத் தெரியாது; கொண்டாட்டமே இல்லை:(
    ஆனால், இன்றைய கர்நாடக இசைத் திருப்பாவையைக் காட்டிலும், ஆழ்வார் தமிழ்ப் பண்ணிசையை ஒட்டி அமைந்த சுசீலாம்மா திருப்பாவை.. செவி நுகர் செங்கனிகள்
    ---

    dank u for making me smile after a long long time, via this post:)

    வினோபா பாவேயின் நேரடிச் சீடரான,
    நைனா நாச்சியப்ப சாஸ்திரிகளின் இசை வாரிசு,
    மைனா முத்தலிப்ப சாஸ்திரிகளுக்கு அபி வந்தனம்:)

    ReplyDelete
    Replies
    1. முத்தலிப்7 January 2015 at 13:43

      இந்த கம்பேரிசன் கூட்டம் வரலன்னு சொன்ன அந்த ஒரு பாய்ண்ட்டுக்கு மட்டுந்தான். நுண்வரலாற்றுச்சமூகப்பொருளாதார அடுக்குகளாலாலான பின் நவீனத்துவ கட்டமைப்ப பத்தியெல்லாம் இல்ல முருகா! அயம் பாவம். ப்லீவ் மீ.

      Delete
  10. சகட்டுமேனிக்கு சரளமான உவமை. சரவெடி எழுத்து நடை. கச்சேரியை கண்முன் கொண்டுவந்ததோடு நமக்கு வரும் அதே உணர்வுகளையும் இதில் அனுபவிக்க முடிந்தது. ஃபேன்கிளப்பில் சேர எந்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடுக்கணும்?

    ReplyDelete
    Replies
    1. முத்தலிப்7 January 2015 at 13:44

      மிஸ்டு காலெல்லாம் வேண்டாம். அக்கவுண்ட் நம்பர் அனுப்புகிறேன். ஆயுட்சந்தா மட்டும் மாசா மாசம் கட்டி உறுப்பினர் ஆகிவிடவும்

      Delete
  11. //1366 X 768 எடுத்தாயிற்று

    ????

    ReplyDelete
    Replies
    1. முத்தலிப்7 January 2015 at 13:45

      Its the "RESOLUTION" available in Monitor.

      Delete
  12. Replies
    1. என்னது சாராஆஆஆஆஆ?

      Delete
    2. என்னது சாராஆஆஆஆஆ?

      Delete
  13. ஜெயஸ்ரீயை நித்யஸ்ரீ எனக் குறிப்பிட்டது. இதைக் கவனிக்கலன்னா பதிவு உங்களுக்கு போரடிக்குதுன்னு அர்த்தம், போய் நியூ இயர் கொண்டாடுங்க.


    :)

    1366 X 768 எடுத்தாயிற்று
    ??

    ReplyDelete
    Replies
    1. 1366 x 768 is the resolution we get to see in computer monitors..

      Delete
  14. சுஜாதா, ஜெயச்சந்திரன் நக்கல்ஸ் எல்லாத்தையும் தூக்கி சாப்டுடிங்க போங்கோ !!!

    ReplyDelete

Post a Comment

Pass a comment here...