நல்ல பேரை வாங்கவேண்டும்


        என்னோடு ஒட்டியிருக்கும் ஒரே காரணத்தினால், முத்தலிப் - முத்தாலிப் - அமுத்தலிப் - அமுதலிப் - முத்தலிப் என அத்தனை கபீம்குபாம் காம்பினேசனிலும் தொடர்ந்து சிதைக்கப்படும் ஒரு ஜந்து என் பெயர். கலாஷ்நிக்கோவ், ஷ்வாஷ்நேகர், சிங்கிஸ் ஐத்மாத்தவ், முருகேசி என ரேர் பீசான பெயர் வைத்திருப்பவரெல்லாம் நிம்மதியாக, சொல்வதெல்லாம் உண்மையிலோ, லிங்கா டீசரிலோ (டீசரில் ரஜினி ஏன் வாயை ஆர்ச் மாதிரி வெச்சிட்டிருக்கார் என டுட்டர் நண்பர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்) மூழ்கி இருக்க, ஒவ்வொரு முறையும் என் பெயர் தவறாக, டிஜாங்கோ எனப்படும்போதெல்லாம் டி சைலண்ட் டி சைலண்ட் என உரக்கக்கத்திக்கத்தி என் தொண்டைத்தண்ணி வற்றிப்போனது. சரி, கடனுக்கு வீராணம் குழாயிலிருந்து தண்ணி எடுப்போம் என்றால் அதற்குள் அமர்ந்து கதிரேசன் எனும் காம்ரேட் ஒருவர் கம்னிஸ்ட் வகுப்பு எடுப்பதாய்த்தகவல் வந்ததால் திட்டம் கைவிடப்பட்டது.

        எனக்கு நிகழ்ந்த பெயர் சூட்டு விழா குறித்து சேகரித்த செய்திகளாவன: செலவை மிச்சப்படுத்துவதற்காக, எனக்கும் என் பெரியப்பா மகனுக்கும் பெயர் சூட்டுவிழாவும், இன்னொரு அண்ணனுக்கு சுன்னத் எனும் ”wire" வெட்டு விழாவும் ஒன்றாய் நடந்ததாம். Cost Cuttingகாக  கட்டிங்கையும், ஒட்டிங்கையும் ஒரே நாளில் நடத்தியிருக்கிறார்  எங்கள் தாத்தர். அது என்ன சுன்னத்? என்போர் இங்கு க்ளிக்கி தெரிந்து கொள்ளுங்கள்.

        முதலில், பொன்வண்டாய் மின்னிய என் அண்ணனுக்கு தன் பெயரான அப்துல் ரஹீம் என வைத்துவிட்டார் (வாழையடி வாழையாய் வம்ச வலராறு பரவணுமாம்) தாத்தர். அடுத்து, கருவண்டு என்னைத்தூக்கியதும், என்ன பெயர் வைப்பதென்ற குழப்பம். அப்போதுதான் என் தாத்தருக்கு அன்றட் வாட்ஸ் பல்ப் எரிந்திருக்கிறது. தாத்தா கைமாத்தாக பணம் வாங்கி, பல நாட்களாகத் திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்த ஒரு வட்டி ராஜாவும் நிகழ்வுக்கு வந்திருக்கிறார். அவரைப் பெருமைப்படுத்துகிறேன் என்ற பசுத்தோலில், இன்னும் கொஞ்ச நாள் பேமெண்ட்டை தள்ளிப்போடும் புலியை மறைக்கும் ராஜ தந்திரம் ஒன்றைச்செய்து, அவர் பெயரான அப்துல் முத்தலிப் என்பதை எனக்கு வைத்துவிட்டார். யாருக்கேனும் டைம் மிஷின் இரவல் கிடைத்தால் ஏறிச்சென்று பாருங்கள். இந்த சூழ்ச்சிக்கெதிராய், பெயர் சூட்டப்பட்டபோதேக்க்க்ர்ரீஈஈஈஈஎன அலறி என் எதிர்ப்பைப் பொதுவில் பதிவு செய்திருப்பேன். அநீதிக்கு எதிராய்ப்பொங்குவதில், சேயாய் இருந்தப்பவே நானெல்லாம் சே-யாய் இருந்தேனாக்கும். பிறகென்ன, எங்கள் நிகழ்வு முடிந்ததும் எங்கள் மூத்த அண்ணனுக்கு வெட்டிங் நடக்க (weddingனும் சொல்லலாம், wettingனும் சொல்லலாம், வெட்-tingனும்...), அந்த நாள் இனிதே நிறைவுற்றது.

        குடும்பப்பெருசுகள் மரகதவல்லி எனப்பெயர் வைத்தால் அதை எதிர்க்காமல், சிர்ச்சமாதிரியே முகத்தை வைத்தவாறு ஏற்றுக்கொண்டு, அதே சமயம் தாங்கள் அழைக்க Maggie எனஃப்ஃபேன்சி செல்லப்பெயர் சூட்டிக்கொள்ளும் பல்லாயிரக்கணக்கான தாய்-தந்தைக்கு எம் பெற்றோரும் விதிவிலக்கல்ல. என்னை அன்போடு அழைக்க, எனக்குஆஷிக்" (Lover boy) என நாமம் சூட்டி மகிழ்ந்தனர். என் அம்மம்மாவின் குடும்பத்தினர், என்னை ஆஷிக் என அழைப்பதின்மூலம்  தம் சம்மந்தி வைத்த பெயரைப்புறக்கணித்து, அவர்களை அவமானப்படுத்தலாம் என எண்ணிக்கொண்டு என்னை அவ்வாறே அழைத்து வந்தனர். கண்ணாடிய திருப்பினா ஆட்டோ எப்புடிடா ஓடும்னு அப்பவே யாராச்சும் படத்துல டைலாக் வெச்சிருக்கலாம்.

        மணி பர்ஸ் வாய், கர்வாயன், அப்துமோன், ஆஷ், அப்துல் எனப்பல்வேறு காலக்கட்டத்தில் பல்வேறு நபர்களால் நான் அழைக்கப்பட்டதன்பின்னே உள்ள ஒவ்வொரு கதையும்சாமிடாவகை. "பேரே இவ்ளோ ரொமான்சிங்கா இருக்கே, ஒனக்குகெடச்சிருக்காத அனுபவமான்னு சிகப்பு ரோஜாக்கள் மொமண்ட்டாக சிலர்... இல்லை, பலர் கேட்பதுண்டு. அவர்களுக்கெல்லாம் பராசக்தித்தனமாய் ஒரே ஒரு பதில்தான் உண்டு. ”பெயர்தான் கல்யாணி. மங்கலகரமான பெயர். ஆனால் ஆளோ, மங்களம் பாடப்பட்டுவிட்ட நபர்.”

        தமிழகத்தில் 24 அமைப்புகள் இருப்பது அனைவரும் அறிந்ததே (உபயம்: ஆண்ட்ரியா, பூஜா மற்றும் கமலும் நடித்த விஸ்வரூபம்). இது அல்லாமல் இன்னும் எழுநூற்றுச்சொச்ச அமைப்புகள் ஆங்காங்கு உண்டு. அவையெல்லாம் வெளிய தெரியலியே எனக்கேட்டால், கமலும் அடுத்த படம் ரிலீஸ் செய்யலியே என்பது பதில். சரி. அதில் சில அமைப்பைச்சார்ந்த சிலரை ஒருமுறை சந்தித்தபோது, என் பெயரைக் கேட்டு,ஆஹா... நபியின் தாத்தா பெயர். சூப்பர். உங்களுக்கு சுபிட்சம் வரட்டும்என வாழ்த்துவர். யாருக்கும் தெரியாமல் இருட்டிலும் தனிமையிலும் செய்த பாவங்களை எல்லாம் அகர வரிசைப்படி அப்போது நான் நினைவு கூர்ந்து, ”இந்த பாவம்லாம் உங்களுக்கு தெரிஞ்சா பாரகானுக்கு என்னால உங்கமூலம் ஒரு வியாபாரம் கெடைக்கும். அது தெரியாம வாழ்த்துறீங்கஎன்று கூச்சத்தோடு வாழ்த்தை வாங்கி ஜோபில் போட்டுக்கொள்வேன். இன்னும் சிலர், நம் கொள்கைப்படி இந்தப்பெயர் தவறு. அதனால் பெயரை மாற்றிக்கொள்ளுங்கள் என அன்போடும் அக்கறையோடும் சொல்வர். இருவர் மீதும் எந்தத்தவறும் இல்லை. அவர்களின் ஒரே நோக்கம், என் மகிழ்ச்சி மட்டுமே.

        பற்றறுத்தல் என்பது ஆன்மீகத்தில் உயர்நிலையை அடைய செய்யவேண்டிய மிகக்கடினமான சோதனை. தண்ணீருக்குள்ளேயே இருக்க வேண்டும், ஆனால் தாமரை இலையாய் இருக்க வேண்டும். எளிதாகச்சொல்ல வேண்டுமானால், அனுஷ்காவோடு கைகுலுக்க வேண்டும், ஆனால்ஹலோ சிஸ்டர்என்று உள்ளத்திலிருந்து கூறவேண்டும். Simple isnt it? ஜே.கே, ரமணர், புத்தர், ஆஸ்கர் ஒயில்ட், அநாநிமஸ் போன்ற பல ஆன்மீக, தத்துவ ஞானிகளைப்பயின்றுவரும் மாணவனாதலால் இந்தப்பற்றறுத்தலைப் பயில முற்படும்போது வைக்கப்பட்ட முதல் Checkஆக இந்த பெயர் மாற்ற சவாலைப் பார்க்கிறேன். வெறும் ஒன்பது எழுத்து entity. ஆனால் இருபது+ வருடங்கள் உறக்கத்தில்கூட என்னோடு ஒட்டியிருந்தது. பெயரை இழப்பது ஏதோ என்னையே இழப்பதாகத்தோன்றுகிறது. இதை மாற்றுவது ஒரு herculian taskஆகப்படுகிறது. என் தவறுகள், தோல்விகள், அவமானங்கள், அழுகைகள் அனைத்தையும் அறிந்தது இந்தப்பெயர்தான். யோசித்துப்பார்த்தால் இந்தச்சமூகத்தால் நமக்குக்கொடுக்கப்படும் முதல் recognition & identity நம் பெயர்தான். சரியோ தவறோ, அதை இழக்கும் தைரியம் / பக்குவம் இன்னும் எனக்கு வாய்க்கவில்லை. ஒருவேளை நியூமராலஜி, ஜோசியம் போன்ற கருமங்களில் நம்பிக்கை இருந்திருந்தால் வருமோ என்னவோ.

        உறவினர் ஒருவர் இறந்தபோது, அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அத்தைப்பெண்ணையும், அன்னார்தம் தோழியரையும் டெட்பாடிக்கு அருகில் அமர்ந்தவண்ணம் சைட்டடித்த பாவத்தின் தண்டனையை விட இந்தப்பெயரின் மூலம் கடவுள் தரும் தண்டனை பெரிதாக இருக்காது என்பது my humble opinion. அதையும் மீறி மிருகினஜம்போ கிடைக்கும்னு பட்டுச்சுன்னா, மாத்திப்புடுவம். பேரா சோறா என்றால் சோறே என உரக்கச்சொல்வோம் உலகுக்கு.


Comments

  1. உங்களுக்கு எப்படி இப்படி அறிவு கொட்டுதுன்னு இத்தனை நாளா வியந்திருக்கேன். உங்க பேர் ராசி தான்னு இப்ப தெரியுது. வாழ்க வளமுடன்!

    நிற்க. உங்கள் பதிவில் என் அம்மாவின் பெயரையும் சிறப்பித்ததற்கு தனி நன்றியும் பாராட்டும் உரித்தாகுக.

    amas32

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்... பேர் ராசியுமில்ல ஊர் ராசியுமில்ல.. கூட இருப்பவர்கள் மேதைகள். பூவோடு சேர்ந்து லாஜிக்தான்.

      மரகதம் அம்மாவோட ரசிகன் நான். அதனால எதோ என்னாலான ஒரு சின்ன மரியாதை.

      Delete
  2. நபிகள் நாயகம் தாத்தா பேர வச்சிக்கிட்டு பண்ணாத அக்கிரமங்கள் கிடையாது. உங்கள அடக்க அந்த தாத்தாவின் மனைவி பெயரைக்கொண்ட சீமாட்டிதான் வரனும்.
    பெயரை கேட்டாலே சிரிப்பு எங்களுக்கு சிறப்பு உங்களுக்கு.

    வாழ்கையின் ஏற்படும் பல கஷ்டநஷ்டங்களை ரொம்ப லைட்டா எடுத்துக்கொள்ளும் உங்களுக்கு இறைவன் "இல்லை" என்று ஒருபோதும் சொல்லபோவதில்லை. வாழ்க முத்தலிப் :)

    ReplyDelete
    Replies
    1. எப்படித்தான் உங்களால இவ்ளோ தாராளமா பாராட்ட முடியுதோ. You are indeed an inspiration sir. ரொம்ப பெரிய மனசு உங்களுக்கு. மீண்டும் மீண்டும் நன்றி சார்.

      Delete
  3. கலக்கல் ஃப்ளோ..காமெடியும் ஈவனா ஸ்ப்ரெட் ஆயிருக்கு :D

    ReplyDelete
    Replies
    1. Thanks a lot sir. But im not able to make it consistent with other posts. Need ur inputs. It wud help me big time.

      Delete
  4. அனாநிமஸ் போன்ற தத்துவ ஞானிகள் : டிப்பிக்கல் முத்தலிப் ஷாட்

    செல்லும் வழி, தோழர்

    ReplyDelete
    Replies
    1. "செல்லும் வழி" - நி.நி.சி-ச்சேன். தமிழ்தான் எத்தன இளமைய ஒளிச்சு வச்சிருக்கு பாருங்க. மிக்க நன்றி தோழர்.

      Delete
    2. Ji ROFL...Sellum vazhi orey vazhiya mattum irundha ooru olagathuku nallathu..

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. எப்பவும் போல அருமை

    ReplyDelete
    Replies
    1. எப்பவும் போல நன்றி :)

      Delete
  7. வழக்கம் போல அருமை...:)))

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க பறவை சார்

      Delete
  8. //என் அம்மம்மாவின் குடும்பத்தினர், என்னை ஆஷிக்// சரியா சொல்லுங்க, ஆஷிக்ன்னு கூப்டங்களா, இல்லை ஆசிக்ன்னு கூட்ப்டான்களா ? :))

    ReplyDelete
    Replies
    1. aww sick, ass yeek, ash sick இப்டிலாம் கூப்டிருந்தா அப்பவே கோச்சுகிட்டு டீ குடிச்சிருப்பேன்

      Delete
  9. Awesome...You are always keeping us entertained...Keep it up dude!!

    ReplyDelete
    Replies
    1. I feel great to be ur siripoli channel. Feels divine ;-))

      Delete
  10. அருமையான நடை, அப்துல் முத்தலிப்! இப்படியே தொடர வாழ்த்துக்கள்!! ”wire" வெட்டு - அருமையான உவமை !!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க அனானிமஸ். உங்க quotes எல்லாம் படிச்சிருக்கேன். செம. im ur fan sir. Pls bless me.

      Delete
  11. செம,சூப்பர்-வாழ்த்துக்கள்,தலைவரை கிண்டல் பண்ணதால ஆர்டி கிடையாது:-))) ரஜினி ராம்ஸ்

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்... அண்ணே.. நாளைக்கே தலைவர் படம் வந்தா வெற்றிவேல் வீரவேல்னு fdfs போறது நம்ம பயதேன.. மன்னிச்சுருங்க.

      Delete
  12. வழக்கம் போல் நகைச்சுவை ததும்பிய பதிவு.
    I was also completely confused with your twitter name>
    ஒரு வேளை நகைச்சுவைக்காக முத்த - லிப் என்று யோசித்ததுமுண்டு.

    Reminding the short story " Namesake" written by Jhumpa Lahiri which also made as a film.
    I thoroughly enjoy your style of writing. Keep writing.
    Saba-Thambi

    ReplyDelete
    Replies
    1. Thank you so much saba sir. பெயர் மொழிபெயர்ப்புகளில் இப்படி முழிபெயர்ப்புகள் நடக்கும். ஒரு பேஸ்புக் தோழர் ப்ளாகு பேர பாத்துட்டு கில்மா ப்ளாகுன்னு நெனச்சேன்னார். எங்க போய் முட்டிக்க?

      Delete
  13. பெரியவர்கள் வைத்த பெயருக்கு மதிப்புக் கூட்டுதல் செய்வது நாம் வாழும் வாழ்க்கையில் இருக்கிறது. கல்,மரம் (Mr.Stone,Wood) என்ற பெயர்களைவிடவா ஆஷிக்கும் முதலிப்பும் உயிரற்று இருக்கிறது? பேர் மாற்றம்;பெயர் இழப்பு : பேரிழப்பு!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார். சரியான உதாரணம். மாத்தற அளவுக்கு இது ரிப்பேர் இல்ல. அதனால எப்பயும் RIP பேர் பண்றதா இல்ல

      Delete
  14. வலராறு என்று வரலாறுக்கு ஏன் இவ்வளவு தகராறு? சுஜாதாவின் பாதிப்பு அங்கங்கே splashes like a raindrops. Nice நடை.

    ReplyDelete
    Replies
    1. வலராறு just உங்க கவனத்த ஈர்க்க செய்த குரங்கு சேட்டை. what yar, வாத்யார் டச் இல்லாம ஒருத்தரால எழுதவும் முடியுமா என்ன?

      Delete
  15. கலகலக்கல். PG Wodehouse and crazy Mohan are my favorites. You will better them soon.

    ReplyDelete
    Replies
    1. பெப்பெரிய வார்த்தைகள் சார். குருவி தலைல சுறாவ வைக்கிறீங்க. அந்த மேதைகளின் சாதனைல பாதிகூட தொடமுடிஞ்சா அது அசுர வெற்றி.

      Delete
  16. எப்படி ரெண்டு நாள் மிஸ் ஆச்சு இந்த பெயர் பெற்ற ப்ளாக் வழக்கம் போல் அருமை :-)

    ReplyDelete
    Replies
    1. நல்லவங்க மெசேஜ் லேட்டானாலும், ரீச் ஆகும் ;-)

      Delete
  17. Muthalib (எதுக்கு வம்பு ) இந்த கதை படிக்கும்போது என் தோழி நியாபகம் தான் வருது. அவ பேரு உம்மு ஹபீபா .... பாவம் நிறைய சிரமபட்டிருக்கா.

    ReplyDelete
    Replies
    1. Rofl... it happens. Cant help. One of my friends' name is shakila. மீதிய உங்க அனுமானத்துக்கு விட்டுடறேன்

      Delete
  18. அருமை.. சென்னையில் என்னுடன் ஒரு modern girl வேலை செய்தார். பெயர் காந்திமதி.. அதை பலரும் "Gandhimadhi" என்று ஒரு கிராமத்து slangல் சொல்ல கோபம் வரும். Khanthimathi என்று புதுமையாக சொல்ல வைப்பார். அமெரிக்காவில் ஒருவரின் last name 'Gay'. என்ன செய்வது?

    ReplyDelete
  19. உங்க பேருக்கு இப்படி அருமையான உங்க வழக்கமான நகைச்சுவையோட ஒரு பதிவே வரலாற்றில் பதிவு பண்ணியாச்சு...
    வழக்கம் போல இந்த பதிவும் அருமை.

    ReplyDelete

Post a Comment

Pass a comment here...