ஒண்ணுமில்லை




எதையோ நினைத்து ஓரிடத்தை
என்கண்கள் வெறிப்பதைக்கண்டு
என்னிடம் என்னவென்று கேட்காதீர்கள்,
என் "ஒண்ணுமில்லை" எனும் பதில்
உங்களைத்திருப்தி செய்யாதென்றால்.

உயிருள்ளவரை உடனிருப்பேன் என்றொரு நாள்
சத்தியம் செய்த,
பின்னொரு நாள், போய்வருகிறேன் என்று கூட சொல்லாமல்
பிரிந்துசென்ற காதலியையோ

வாழவக்கற்ற நிலையில்
உதவி தேடிச்சென்றபோது
போடா வேசிமகனே என வைத
சொந்தக்காரரையோ

கண்முன்னேயே உழைப்பைக்களவாடி
அதற்கான சிறப்புக்கூலியை கவர்ந்துகொண்ட
சக ஊழியனையோ

வாழ்நாளின் இறுதிவரை
உழைத்துக்கொட்டிய அப்பாவுக்கு
புற்றுநோய் சிகிச்சைசெய்யமுடியா
கையாலாகாதனத்தையோ

சட்டென எல்லாம் மறந்து
வெளிறிப்போய் சூன்யமாகி
உண்மையிலேயே ஒண்ணுமில்லாததைக்கூட
நினைத்துக்கொண்டிருக்கலாம்

என் ஒண்ணுமில்லை எனும் பதில்
உங்களைத்திருப்தி செய்யாதென்றால்
என்னிடம் என்னவென்று கேட்காதீர்கள்
 

Comments

  1. வலிகளையும் காயங்களையும் உள்ளடக்கிய ஆழ்ந்த மௌனத்தின்
    அழகிய மொழிபெயர்ப்பாக இருந்தது "ஒண்ணும்மில்லை" .
    தலை சாய்க்கும் தோள் நின் வர வழ்த்துகள்.
    பகிர்ந்தமைக்கு நன்றி -மித்ரசுகி

    ReplyDelete
  2. தலை சாய்க்கும் தோள் நின் வசம் வர வழ்த்துகள் -மித்ரசுகி

    ReplyDelete
  3. என்னங்க இது பயங்கரமான ஆளா இருக்கீங்க... ரெண்டு எக்ஸ்ட்ரீம்லயும் அழவச்சிடுவீங்க போல... உங்க fb id kodunga ... udane friend akkikkanum...

    ReplyDelete
  4. FB ID pls..... "SUNNATH KALYAANAM" NEENGA DHAN YELUDHARINGA, "ONNUMILLAI" UM NEENGA DHAN YELUDHARINGA.... I CANT BELEIVE HATS OFF YA

    ReplyDelete
  5. Hi bro , thx in advance for you help

    ReplyDelete
  6. வார்த்தைகளில்லை

    ReplyDelete
  7. ஒண்ணும்மில்லை, இப்ப தா உங்கள படிக்க வாய்ப்பு கெடச்சது.

    ReplyDelete
  8. ஒண்ணுமில்லைனு சொல்லியே எதார்த்தமான பல விஷயங்களை ஒண்ணுமில்லாம சொல்லிடீங்க.

    ஏதோ சொல்ல வந்தேன் ஆனால்

    "என்னிடம் என்னவென்று கேட்காதீர்கள்
    என் ஒண்ணுமில்லை எனும் பதில்
    உங்களைத்திருப்தி செய்யாதென்றால்" :-)

    ReplyDelete
  9. Kayam adaithavarukku mattum illa Kayam erpaduthiyavarukkum. "onnumillai" tharunam irukkum... God gives same pain both sides... No one nallavar no one kettavar... Situations makes everything..
    Anyway you are simply superb... Keep going...

    ReplyDelete

Post a Comment

Pass a comment here...