அலங்கரித்த முருகன் படம்
ஆறிக்காய்ந்த இரண்டிட்லி
பீரியட்ஸ் துணி
பாதி கடித்த கொய்யா
தலப்பாகட்டு பிரியாணி பீஸ்
PAN கார்டு ஜெராக்ஸ்
கிழிக்கப்பட்ட கவிதைத்தாள்கள்
கண்குடையப்பட்ட நடிகை போஸ்டர்
பேனா மூடி
மேலும் ஒரு முருகன் படம்,
அருகில் இரு பெண்டிரோடு
கின்லே பாட்டில்-மூடியின்றி,
கிங்ஃபிஷர் பீர் கேன்
ஓல்டு மாங்க்
ஒரிஜினல் ரம்-சில காலி போத்தல்கள்,
என்னவென்றே சொல்ல முடியா
அரூப நிலையில் சில வஸ்துக்கள்
குழந்தையின் வயிற்றுப்போக்கை
சொல்லும் நீராலான மலத்துணி
முளைவிட்ட மாங்கொட்டை
போதும் போதுமெனுமளவு பிளாஸ்டிக்.
இத்துணை கொண்டும்
ஒரு சின்ன சலனமுமின்றி
தன் வேலையைச்செய்துவரும்
குப்பைத்தொட்டியும்
ஜென்னே!
ஆறிக்காய்ந்த இரண்டிட்லி
பீரியட்ஸ் துணி
பாதி கடித்த கொய்யா
தலப்பாகட்டு பிரியாணி பீஸ்
PAN கார்டு ஜெராக்ஸ்
கிழிக்கப்பட்ட கவிதைத்தாள்கள்
கண்குடையப்பட்ட நடிகை போஸ்டர்
பேனா மூடி
மேலும் ஒரு முருகன் படம்,
அருகில் இரு பெண்டிரோடு
கின்லே பாட்டில்-மூடியின்றி,
கிங்ஃபிஷர் பீர் கேன்
ஓல்டு மாங்க்
ஒரிஜினல் ரம்-சில காலி போத்தல்கள்,
என்னவென்றே சொல்ல முடியா
அரூப நிலையில் சில வஸ்துக்கள்
குழந்தையின் வயிற்றுப்போக்கை
சொல்லும் நீராலான மலத்துணி
முளைவிட்ட மாங்கொட்டை
போதும் போதுமெனுமளவு பிளாஸ்டிக்.
இத்துணை கொண்டும்
ஒரு சின்ன சலனமுமின்றி
தன் வேலையைச்செய்துவரும்
குப்பைத்தொட்டியும்
ஜென்னே!
NACHHHHHHHHHHHHHHHHHHH...........
ReplyDeleteOhhhhhhhhhhhh
ReplyDeleteஇதெல்லாம் நேரில் பார்த்து அப்படியே வடித்ததா ? கற்பனையா ? இல்லை ரெண்டும் கலந்த கலவையா ?
ReplyDeleteஎல்லாம் சொல்லி கடைசியில் சொன்ன
"குப்பைத்தொட்டியும்
ஜென்னே!"
நச்.. :)