முதல் கலவி

ஒரு கைகுலுக்கல் போல,
மூக்கு சொறிதல் போல,
ஒரு இலை இயல்பாக உதிர்வது போல,
இருப்பதில்லை - 
முதல் கலவி.
நிறைந்து வழியும் குடிநீர் குடத்தை
விரைந்து மாற்றும்
மெட்ரோவாசி போல,
சூப்பர் ஃபாஸ்ட் ரயிலின்
தடக் தடக் போல,
தன் புற்றென்றெண்ணி
இடம் மாறி
நுழையும் பாம்பு போல,
தயங்கித்தயங்கி
கூட்டைவிட்டு வெளிவரும்
குளவி போல
அது ஒரு வித இது.

Comments

  1. //நிறைந்து வழியும் குடிநீர் குடத்தை
    விரைந்து மாற்றும்
    மெட்ரோவாசி போல,//
    நல்ல உவமை.. அது ஒரு வித இது !

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. ஹா ஹா ஹா , உங்கள் நடை, உவமைகள், "அது ஒரு வித இது" போன்ற சிரிப்பு வர வைக்கும் சொல்லாடல் .. ம்ம்ம்ம்ம்

    ReplyDelete

Post a Comment

Pass a comment here...