மணிசார் ரத்னமுக்கு ஏகப்பட்ட வகையினடிப்படையில் நாம் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளோம் என்றாலும் அவருக்குப் பெப்பெரிய நன்றி சொல்லப்பட வேண்டியது நேட்டிவிட்டியை மெய்ண்டன் செய்ய மெனக்கெடுவது. குறிப்பாக பாடல் வாய்சுகளில். அதுகாறும் குழந்தைப்பாட்டு என்றால் வளந்தமாடு ஜானகியை கிய்க்காமிய்க்கா என ஆபாசக் குரல்மாற்றம் செய்து அதை குழைந்தை பாடும் பாட்டு என ஏற்றுக்கொண்டு வந்திருந்தது தமிழ்ச்சமூகம். அதைக் கேட்க ஒரு நாதியுமில்லை.
இதோ சாம்பிலுக்கு:
இதை அபாண்டமெனச் சுட்டிக்காட்டத் தவறியதோடல்லாமல், ஜானும்மா மிமிக்ரி எவ்ளோ லோலாயா இருக்குதுபாரு என்று கொண்டாடி வேறு வந்திருக்கிறார்கள். ஒரு பேட்டியில் மணி சொல்லியிருப்பார், மற்றவர்கள் எடுத்த மோசமான படங்களே ஒரு கோவத்தை உண்டு பண்ணி நாம் நல்ல படம் எடுப்போம் எனக் கிளம்பி வரச் செய்ததாக. அப்பேர்ப்பட்ட மணிசார் பூனைக்குக் கட்டிய மணி தான் அஞ்சலி படம்.
நல்வாய்ப்பாக ப்லாஸ்டிக் ஃபேக் குரல்களை ஓரமா வச்சிடுங்க ராஜா என சொன்னதாலோ அல்லது இவன் வேற மாதிரி என தன் செயல்களால் உணர்த்தியதாலோ நமக்கு அஞ்ச்லி படத்தில் குழந்தை பாடியது உண்மையிலேயே ஒரு குழந்தையால் பாடப்பட்டது. ஜஸ்ட் இமேஜின், மணிரத்னமும் அந்தக்கால பொட்டிதட்டி டைரக்டராக இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும். இதோ இந்தப் பாடலை மேற்கண்ட பாடல் போல ஜானகி மிமிக்ரியிருந்தால் எவ்வளவு நாராசமாக இருந்திருக்கும்?
ஆச்சா? பகுத் அச்சா.
இத்தனை உசார்புசாராக இருந்த மணிசார் பின்னாடி ஒரு பாடலில் ஸ்கேம் செய்யப்பட்டிருப்பார். அதை ஏன் கவனிக்காமல் விட்டார் எனத் தெரியவில்லை.
இந்த "அஞ்சலி அஞ்சலி அஞ்ச்லி" எனும் ஒற்றைக் குரல் எப்படி குழந்தையினுடையது எனக் கண்டுபிடிக்க முடிகிறதோ, அதுவேதான் கோரசுக்கும். என்னதான் கோரசாகப் பாடினாலும் அந்த கோரசின் ஆவரேஜ் ஏஜை எளிய காதுகளால் கண்டுபிடித்துவிட முடியும். கூட்டத்தில் கோயிந்தா போட்டால் அது கண்டுபிடிக்க முடியாதவாறு ஆகாது. எடுத்துக்காட்டுக்கு இந்தப் பாட்டைக் கேளுங்கள்.
ஒரு தேவாப்பாட்டு:
இதில் ஆரம்பத்தில் வரும் (அது என்ன தொகையறாவா?) குரல் கோரஸாகக் கேட்டாலும் அது ஒரு சிறுநண்டு பாடியது எனப் புரிகிறதல்லவா? (அது கோரஸல்ல, ஒரே வாய்சை மல்ட்டிட்யூட் செய்திருக்கிறார்கள் என்பவர்கள் கீழ்க்கண்ட பாடலைக் கேட்கலாம்)
அஞ்சலி படத்திலேயே இருக்கும் மற்றொரு பாடலையும் கோரஸே பாடியிருக்கும். (அல்மோஸ்ட் எல்லாப்பாட்டுமே இதே குரூப்தான்). இதைக் கேட்கும்போது, குரூப்பாக இருந்தாலும் இது வாண்டு குரூப் என அறிய முடிகிறதல்லவா?
இதுதான் தளபதி படத்தில் மிஸ்ஸாகியிருக்கும். அந்தக்கால சிவஸ்ரீ ஸ்கந்தப்ரசாத் கோல்டன் சன்லைட்டில் ஆத்தோரத்தில் குழந்தைகளுக்கு வாய்ப்பாட்டு சொல்லிக்கொடுக்கும் சீக்வன்ஸ். இதில் மணிசார் விளக்க மறந்தாரா அல்லது ராஜாசார் மிஸ் பண்ணிவிட்டாரா இல்லை வேறெதுவும் கால்ஷீட் ப்ராப்லமா தெரியவில்லை. விசுவலில் இருக்கும் குழந்தைகளின் வயது பேதை முதல் பெதும்பைதான் இருக்கும். ஆனால் கோரஸ் குரலில் தென்படும் குரல்களின் வயது பேரிளம்பெண்ணிலாரம்பித்து முதுவை வரைக்குமான முதுமகளிர்க்குரலாக இருக்கும். ஒருவேளை இதனால்தான் அடுத்த ப்ராஜக்டுக்கு ப்ரசாத்திலிருந்து பஞ்சதன் நகர்ந்துவிட்டாரா தெரியவில்லை.
இதில் ஐரானிக்கலாக லீடு சிங்கரின் குரலில் அத்தனை குழந்தைமை இருக்கும். குழந்தைகளுக்கோ 38 வயசுமை இருக்கும். ஒய் மணிசார் ஒய்?
இசையோடு கொஞ்சம் இலக்கியம்: check kindle books: https://muthaliblogs.blogspot.com/p/kindle-books.html
Comments
Post a Comment
Pass a comment here...