நண்பரொருவர் அவர் மகர் வெளிநாடு செல்லவிருப்பதாகவும், நல்வாழ்க்கைக்கு அட்வைசுகள் நான்கை அள்ளித்தெளிக்கும்படியும் கேட்டுக்கொண்டார். அவருக்கும், முதல் தலைமுறைப்பட்டம் பெற்ற நம் வீட்டு மக்கள் இப்போதுதான் அயலகங்களுக்கு படித்த படிப்புக்கான வேலை நோக்கிச் செல்லத்துவங்கியுள்ளனர். அவர்களுக்கும் இது உதவக்கூடும்.
1. இந்த கோட்டுகள் எக்ஸ்பாட்டுகள் மத்தியில் பிரபலம்.
"It's crazy how a one-way ticket can change your whole life"
"life hits you differently once you purchase that one way plane ticket"
வாழ்க்கையைப் புரட்டிப்போடக்கூடியது அந்த ஒன்-வே டிக்கட். It's a paradigm shift. (The people, places in your) Life will not be the same. Be prepared for it.
2. இனிமேல் வாழ்க்கையில் எல்லாவற்றையுமே தனியாகத்தான் கையாள வேண்டும். தலைவலி முதல் மரணம் வரை. சுற்றி எல்லாமே இருக்கும், ஆனாலும் ஏனென்று கேட்க நாதியிருக்காது. இது ஒரு weird "I have everything but still nothing" phenomena.
3. சமையல், ஓரளவு கைமருத்துவம், சிற்சில ப்லம்பிங் வேலை, கார் டிரைவிங் போன்றவற்றை கற்று வைத்துக்கொள்வது அவசியம்.
4. உடல் மற்றும் மன நலத்தை மிக மிக மிக அவசியமாகப் பேண வேண்டும். மிக மிக மிக.
5. ஏராளமான தனிமைக்குத் தயாராகிக்கொள்ளவும்.
6. குடி, கூத்தி, புகை வஸ்துக்கள் இன்னுமதிக போதை இத்யாதிகள் சல்லிசாகக் கிடைக்கும். அவற்றை விட்டு தள்ளி நிற்பதுவரை கிண்ணிக்கு ஆபத்தில்லை. விழுந்துவிட்டால் ரிப் போட்டுவிட வேண்டியது தான்.
7. காசைச் சேமிக்கவும். முதலீடு செய்யவும். தேவையில்லாத அத்தனைச் செலவுகளையும் கட் செய்யவும். எதெல்லாம் தேவையில்லாத ஆணி என்றால்...
8. அகால நேரங்களில் அடிக்கும் கைப்பேசி கூட panicக்கை உண்டு பண்ணும். ஆகவே எதையும் மெச்சூராக, ஒரு எமோஷனல் டிஸ்கனக்ட்டோடு அணுகத்துவங்கவும்.
9. முதல் ஆறு மாதம் எந்நேரமும் வீட்டுக்குப் போன் பேசவும், சுத்திப்பார்க்கும் எல்லாவற்றையும் போட்டோ எடுத்து செயார் செய்யும் நோய் இருக்கும். இது இயல்பானதுதான். போகப்போக சரியாகிவிடும்.
10. அனைவரையும் மதி. யாரையும் நம்பாதே. இது பாலபாடம்.
11. வந்திருப்பது பிழைப்புக்காக. நட்பழைப்புகள், புதிய தொடர்புகளெல்லாம் ஜிவ்வென்று இருக்கும். ஆனால் எந்தப்புத்தில் விசம் பீச்சும் எனத் தெரியாது. ஆகவே நான்கைந்து வருடம் போகட்டும். அதுவரை பி(லே) சேஃப்.
12. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக லோகல் மொழியைப் பயில்வது நல்லது. அது தரும் பாதுகாப்புணர்வை எழுதிப்புரியவைக்க முடியாது.
13. இடங்கள் மனிதர்கள் சூழல்கள் நன்கு பழகும் வரை அட்வென்ச்சர்களைத் தவிர்க்கவும்.
14. உள்ளூர் கலாச்சாரம், விழுமியங்களைக் கற்று, எவ்வளவு முடியுமோ அவ்வளவு இண்டக்ரேட் ஆகிக்கொள்வது நன்று.
15. நமக்கென சில (மத) நம்பிக்கைகள், கலாச்சார வழக்கங்கள் இருக்கலாம். அது புதிய இடத்தில் யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
16. யாரின் கண்ணையும் உறுத்தும்படி இருக்க வேண்டாம். Be low-key.
17. அதிகமதிகம் Please, sorry, thank you சொல்லப் பழகவும். The more please and thank you you say, the better situations would be.
18. அனைவரிடத்திலும் இன்முகம் காட்டவும். ஒரு ஸ்மைல், ஒரு குட்மார்னிங், ஹவ்வார்யூ என இந்த சோசியல் எடிகட்களை கடைபிடிப்பது நன்று.
19. மீண்டும் ஊருக்குப் போனால் அதே வீடு, அதே ஊர், அதே மக்கள் தான் இருப்பர், ஆனால் அவை முற்றிலும் வேறாகத் தெரியும். இனி இது ஒரு திரிசங்கு வாழ்க்கை. Where do I belong to? எனும் கேள்விக்கும் இறுதிவரை விடையே கிடைக்காது.
20. ஒரு கட்டத்தில் தமிழ்நாட்டை அதன் உணவுக்காக மட்டுமே மிஸ் செய்யும் நிலை வரும். (மற்றும் மெடிகல் ஹெல்த் கேருக்காக). அது வரை பொறு மனமே.
21. செத்துப்போனதாய் நினைத்த சொந்தக்காரனெல்லாம் திடீரென குசலம் விசாரிக்க வருவான். உடனடியாக ப்லாக் செய்யவும். குசல மெசேஜ் புலூ டிக் ஆகுமுன்னர் கடன் கேப்பான்கள்.
22. முடிந்தவரை பிழைக்க வந்த நாட்டிலேயே செட்டிலாகப் பார்க்கவும். தாயகத்திற்கு 20 வருடம் கழித்து சென்றுகொள்ளலாம். எல்லாம் ஓய்ந்து ரிடயர்மண்ட்டுக்குச் சென்று கொள்ளலாம்.
23. திடீரென ஆயிரம் றெக்கை முளைத்ததுபோலத் தோன்றும். With more power comes more responsibility என்பதை நினைவில் வைத்தால் நலம்.
24. வாழ்நாள் முழுவதும் போதும் போதுமென இந்தியர்களையும், அதே உணவு வகைகளையும் பார்த்தாயிற்று. ஆகவே அவர்களை முற்றாய் ஒதுக்கி, புதிய நாட்டினர், பண்டம், உறவுகள் எனத் தேடிச் செல்வது புதிய திறப்புகளைத் தரும். சொல்லப்போனால் அயல் நாட்டினரோடு பழகிய பின் இந்தியர்களின் சகவாசம் தன்னப்போல குறைந்துவிடும்.
25. பாரீன் போனதும் ஆளே மாறிட்ட, எங்களலாம் மதிக்கறதே இல்ல என்பதாக நிறைய பேர் வாயைக் குதப்பிக்கொண்டு வருவர். அவர்களிடத்தில் அன்பு பாராட்டி, அப்படியெல்லாம் இல்லை என மறுதலித்து தன்பக்க நியாயங்களையெல்லாம் எடுத்துச்சொல்லாமல், ஆமாண்டா ஓத்தா என்றபடியாக சொல்வது பல விடயங்களில் குவிக் நன்மை பயக்கும். எல்லோரிடத்திலும் நல்லவராக இருப்பது பெரும் சுமை. அதை விட அது சரியான ஏஸ்ஹோல் எனும் பட்டம் மாபெரும் விடுதலை.
26. Keep your mental peace over anything and anyone. I repeat.
27. யார் எவர் காசு கேட்டாலும் தர வேண்டாம். வெளிநாட்டு வாழ்க்கை ப்லிங் ப்லிங் கலர்ஃபுலல்ல என்பது ஆறு மாசத்தில் தெரிந்து விடும்.
28. எந்தப் பொருளின் விலையையும் லோகல் கரன்சிக்கு மனமாற்றிக்கொண்டிருக்க வேண்டாம். நிம்மதி போய் விடும். Be a roman when you are in romania.
29. Social, public, private, local etiquetteடுகள் என்னவென்பதைக் கற்றுக்கொள்ளவும். Do's & Dont'sசை விரைவாகக் கற்கவும். பல இடங்களில் embarrassmentடைத் தவிர்க்கும்.
30. Smell Good. Dress really really well. Stay fresh.
31. நல்லவைகளை உண்டு, நாலு இடங்களுக்குச் சென்று, பல புதியவைகளைக் கற்று, learning, re-learning, unlearningகுகள் செய்து புதிய மனிதராக ஆகவில்லையென்றால் வெளிநாடு வந்ததே வேஸ்ட். இதற்கு அந்தப் பருத்தி மூட்டை உள்ளூர் குடோன்லியே இருந்திருக்கலாம்.
Comments
Post a Comment
Pass a comment here...