சக்சஸ்ஃபுல்லா இருக்கறதுக்கு அல்லது ஆவறதுக்கு ரெண்டு சூத்திரம் இருக்கு.
எந்தத் துறையிலயும் இருக்க பெரிய லெஜண்ட்ஸ் எடுத்துக்கங்க, மற்றும் பெரிய லீடர்ஸ் எடுத்துக்கங்க, அவங்க எல்லார்ட்டயும் இந்த குணங்கள் இருக்கும். கன்சிஸ்டன்சி, பெர்சவரன்ஸ் எல்லாம் அத்தியாவசியமானது. அதே மாதிரி 10000 மணி நேர ப்ராக்டிஸ் எல்லாம் அடிப்படைல சேந்துரும். நா அத சொல்ல வரல. இது எல்லாம் மீறி ஒரு குறிப்பிட்ட விசயம் லெஜண்ட்ஸ லெஜண்ட்ஸா காட்டறது ஒன்னு இருக்கு. அது ரெண்டுமே டைம் குறித்தானது.
எடுத்துக்காட்டுக்கு இசைய எடுத்துப்போம். மறைந்த எஸ்பிபியோ, மலேசியாவோ இல்ல புகழ் பெற்ற பாடக பாடகியர எடுத்துட்டீங்கன்னா அவங்கட்ட இருந்த பொது குணம் (பாடும் திறமைகள எல்லாம் தாண்டி) எதையும் குய்க்கா க்ராஸ்ப் பண்ணிக்கற திறன். புது விசயங்கள டக்குனு கத்துக்கறது. அந்த விசயத்துல எக்சல் ஆகறது ரெண்டாவது. ஆனா அந்த விசயத்தோட அடிப்படைய கப்புனு கேச் பண்ணிக்கறது மிக மிக மிக முக்கியமான விசயம்.
ஒரு பாட்டு பாட கூப்புடுறாங்கன்னா அது அதுவரையிலும் கேக்காத ஒரு ட்யூன்/ஸ்ட்ரக்சர்ல இருக்கும். அப்ப புதுசா கேக்கற அந்த ட்யூன புரிஞ்சு உருப்போட்டு எவ்ளோ சீக்கிரத்துல எவ்ளோ துல்லியமா பாடுறாங்கன்றதுலதான் வெற்றி இருக்கு. இதேதான் பாட்டு எழுதறதுக்கும். ட்யூன் கேட்டதும் கடகடனு பத்து பல்லவி குடுப்பாப்ல கண்ணதாசன், வாலினு பல பேட்டிகள பாத்துருக்கம்ல. இதேதான் எத்துறையா இருந்தாலும். கற்பூரமா கப்புனு கத்துக்கற திறன் இருந்தா எங்கயிம் ஷைன் பண்ணலாம். லிஜண்ட் ஆகிர்லாம்.
அடுத்து லீடர்சிப். இதுக்கு தேவையான முக்கிய திறன் விரைவா முடிவெடுக்கறது. அது சரி தவறுன்றது விளைவுகள பொருத்தது. ஆனா விரைவா எடுத்தமான்றது முக்கியம். தப்பான முடிவா இருந்தாலும் அத சரி பண்றதுக்கான அடுத்த முடிவ டக்குனு எடுத்து எக்ஸிக்யூட் பண்ணிர்னும். சரியான முடிவா இருந்தாலுமே அத லேட்டா எடுத்தா அதுல யூசில்ல.
நண்பர் ஒருவர் ஏழு கடல் மூனு மலை தாண்டி கடைக்கு போயிட்டிருக்காப்டி தினமும். ஒன்வே டிரிப்பே டூர் டு டூர் மூனு மணி நேரமாவுது. ஒரு நாள்ல 1/4த் ரயில் பஸ்லியே போயிருது. வீட்டுக்கு வரதே சட்ட பேண்டு மாத்திட்டு ஒடனே ஆபிஸ் கெளம்பறதுக்குத்தானோனு போயிட்டிருக்கு. இதுல ஆலந்தூர்ல புகழ்பெற்ற ரயில் கேன்சல் சம்பவங்கள் வேற அடிக்கடி நடக்கும். அப்பிடி நடக்கறப்பலாம் இன்னம் எரியிறதுல எண்ண ஊத்தும். ஒருக்கா இப்பிடி கேன்சலானதில 4.50க்கு கெளம்பி வீட்டுக்குப்போக 9.10 ஆகிருச்சு. மறுக்கா ஒருக்கா 3 ரயில் 1 பஸ் புடிச்சு போறாப்ல ஆகிருச்சு. இப்டியான டைம் சென்சிடிவான மேட்டர்ல டிசிசன்கள் இன்னும் ரொம்ப முக்கியமாகிருது.
ஒரு காலை 630 மணி. இன்னம் மிட்நைட் மாதிரி கருக்கலா இருக்குது. சூறாவளி + மழ. ரெண்டும் டண்டனக்கான ஆட, பாதி நனஞ்சபடியே ஸ்டேசன்ல போயி ஒரு ரயில்ல உக்காந்து அன்னக்கி பத்தரமா போய்ச்சேர முடியிமானு டைம்டேபில பாத்தா கனக்டிங் ரயில்கள்ல ஒன்னு கேன்சலாகிருக்கு. ஒன்னு அதே ரயில்ல கண்டினூ பண்ணி வேற ரூட்டெடுத்து எஸ்ட்டா 3 ரயில் மாறிப்போவனும். இல்லன்னா ஆரம்ப டேசன்லியே வேற ஒரு ரயிலேறி ரெண்டே ட்ரான்ஸர்ல போகலாம்.
நண்பர் உக்காந்துருந்த ரயில் இன்னம் ஒரு நிமிசத்துல பொறப்புட்டுரும். அவர் மாறலாங்குற சாய்சுல்ல ரயில் எதிர்த்த ப்லாட்பாம்ல நிக்கிது. அது இன்னம் 6 நிமிசத்துல கெளம்பும். இப்ப டிசிசன் எவ்ளோ முக்கியம்னு பாருங்க. எந்த ரூட்ல போனாலும் ஆபிஸ் போய் சேந்துரலாம்தான். ஆனா டயர்ட்னஸ், அலைச்சல் இதெல்லாம் கணக்கிலெடுத்துப்பாருங்க. இத்தன அல்லல்பட்டு ஆபிஸ் போனா அன்னக்கி எப்பிடி பொளந்துட்டு இருக்கும்னு பாருங்க.
டிக்டிக்1, டிக்டிக்2னு மணி டிக்கிட்டிருந்துச்சு. மழ வேற. கொறஞ்ச ட்ரான்சருக்கு ஆசப்பட்டு ரயில் மாறி நனையனுமானு யோசிச்சு லாங்கர் ரூட், அதிக ட்ரான்சரே தேர்ந்தெடுத்து நொந்து லூப்ரிகண்டாகி போய்ச்சேந்தார். ஒரு புஷ் ஒன்னு தேவப்படுது. கண்ண மூடிட்டு ஃபாலோ பண்றாப்ல, இப்ப இதச் செய்னு எப்பவும் காதுல வந்து ஓதுற ஒரு குரல் இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்.
பேசிட்டே இவ்ளோ தூரம் வம்ட்டோம், ஆதார செய்திய மறந்துடாதீங்க சின்னப்பய மக்களே. கப்புனு க்ராஸ்ப்பனும். டக்குனு முடிவெடுக்கனும். மனசில் ஆயோ?
Success High Octave Motivation:
-----------------------------------------------------------------------------------------------
ஒருகாலத்தில் ராமாவரம் பூவிருந்தவல்லி பெல்ட்டில்தான் அன்ன சௌகரியங்களுக்காக பணியிலிருந்ததால் சுற்றிக்கொண்டிருப்பது. அப்போது தினமும் பெருங்கூட்ட பேருந்தில் பற்பல அனுபவங்கள் நடக்கும்.
நேற்று ராமச்சந்திராவிலிருந்து டீஎல்லெஃப்புக்கு பேருந்தில் பயணிக்கையில் வித்யாசமான 3 அனுபவங்கள். காரணம் அந்த பேருந்தின் நடத்துனர்.
1) ஒரு பேரிளம் பெண்: கண்டக்டர், கிண்டி ஒன்னு குடுங்க.
கண்டக்டர்: ன்னாம்மா கிழிஞ்ச நோட்டு குடுத்துருக்க?
ஒ.பே.பெ: நீங்க கூடதான் டிக்கெட்டுகள் கிழிச்சு குடுக்குறீங்க. நாங்க கம்முனு வாங்க்கிறோம்ல
கர்: ஏம்மா டிக்கட் கிழிச்சு குடுக்கலன்னா செல்லாது. காசு கிழிச்சு குடுத்தா செல்லாது. இது தெரியாம கய்த்துல ஒரு கய்ற (ஆஃபீஸ் ஐடி டேக்) தொங்க உட்னு வண்ட்டீங்க
2) ப: சைதாபேட் ஒன்னு குடுங்க (என்று கூறி பத்து ரூபாய் நீட்ட)
க: ரெண்டு ரூபா குடுப்பா
ப: சில்ர இருந்தார் குடுத்துருக்க மாட்டனா. இல்ல சார்.
க: டிகிட்டு பன்னென்ரூபா. ரெண்டு ரூபா தரீங்களா பத்து ரூபா டிக்கட் தர்ட்டுமா?
பயணி பையைத்தேடி ரெண்டு ரூபாய் கொடுத்துவிட்டு நகர்கிறார்.
இதில் மூனாவதை மறந்து போட்டேன். இது மே ஐந்து இரண்டாயிரத்து பதினான்கில் எழுதி டிராஃப்டில் போட்டது, அந்த மூனாவது கண்டக்டர் என்னதான் சொல்லியிருந்தார் என்பதை நினைவு படுத்திப் படுத்திப் பார்க்கிறேன் வருவனா என்கிறது. இந்த இரண்டு கண்டக்டரை விட தக்காக ஏதோ சொல்லியிருப்பார். அதனால்தான் அதை மூனாவதாக எழுதலாம் என விட்டிருக்கிறேன். பிறகு லைஃப் ஏப்பண்டு அத்தோட போயாச்சு.
Comments
Post a Comment
Pass a comment here...