தக்கு

எப்போதும், இப்போதும் ஒரு மானசீக மெண்டாராகப் பார்ப்பது மணிசாரைத் தான். ஒரு அப்பா ஸ்தானத்தில் வைத்து அவரை ரகசியமாக ஃபாலோ செய்துகொண்டிருக்கும் அளவுக்கு அவரைப் பிடிக்கும். என்ன காரணங்கள் என்பதை பாதிப்பாதியாக எழுதி ட்ராஃப்டில் கிடக்கிறது. அது கிடக்கிறது, தக்கு பார்க்கப்பட்டாகிவிட்டது. நாராசம். 


வேலையில்லாமல் கிடந்த டார்க் வாரங்களில் ஆற்றுப்படுத்தவோ அழுது தீர்க்கவோ வெவ்வேறு கலவையான படங்கள் பார்க்கப்பட்டன. ரீவிசிட்டின்போது நாயகனைப் பார்த்தபோது இம்முறை இன்னும் பல திறப்புகள் கிடைத்தன. வேலுவின் வாழ்க்கை எத்தகைய பாவப்பட்டது, எந்தளவு சபிக்கப்பட்டது என்பதெல்லாம் (அப்போதிருந்த டிப்ரஷன், பேனிக் அட்டாக்குகளின் காரணமாகவோ என்னவோ) இன்னுமதிகம் விளங்கியது. படம் பார்த்து இரண்டு நாட்களாக வேலுவுக்குப் பரிதாபப்பட்டுக்கிடந்தது மனம். (மீன்வைல் ரியாலிட்டி பி லைக், ப்ரோ நீங்களே பெக்கர் ஸ்டேஜுலதான் தவந்துட்டிருக்கீங்க).


அப்பிடியாப்பட்ட நாயக டீம் இத்தனை ஆண்டு கழித்து சேர்கிறதென்றால் எத்தனை இன்னும் பண்பட்டு, பல லேயர்கொண்டு, அடுத்த ஐம்பது வருடத்திற்கான கதையோடு வர வேண்டும்? இப்போது வரை என்னை நானே செய்துகொள்ளும் சமாதானம், மணி சார் பேரில் ஆசினி மேடந்தான் எல்லாத்தையும் எழுதியிருக்கும் என்பதே. மணிசார் மேக்புக்கிலிருந்து இப்படி ஒரு ஔட்புட் வராது. 


அது கிடக்கட்டும். படத்தைப்பத்தி ஏகப்பட்ட ரிவ்யூ ட்ரோலெல்லாம் வந்துவிட்டது. இதில் நாம் எஸ்ட்டாவாக என்னத்த எழுத? சிம்ளி வேஸ்ட். 


ரிலீசுக்கு முன்னதான ஸ்கேம் இண்டர்வ்யூக்களில் மணிசார் சொன்னது, இந்தப்படக்கதையைச் சொன்னதும் அவர் கொடுத்த பாட்டுதான் திரிசா பாடுவது போலிருக்கும் பாடல். அதைக் கேட்டதும் தான் ஏஆர் படத்தின் ஆதார சுருதியைப் பிடித்துவிட்டார் எனப் புரிந்தது எனக்கூறினார். இதைக் கேட்டதும் தான் ப்ரென்ச் காதைக் கொடுத்துவிட்டேன் மணிசாரிடம். எவ்ளோ வேணா உட்டுக்கங்க மணிசார் என்று. 


நாங்கூட நினைத்தேன், எதோ பற்பல லேயர்ஸ் இருக்கிறது போல, அது ஏழுதடவை வாட்ச் செய்தால்தான் விளங்கும் போல, ரஹ்ஹு எவ்வளவு நுண்மையான பார்வையோடிருந்தால் இதை கப்புனு பிடித்திருப்பார், அதுவும் மணிசாரே பாராட்டும்வகையில் என வியந்திருந்தேன். இஃப் அயம் கரக்ட், ஏ ஆர் தான் முதன் முதலில் அந்த ஆதார ருசுதியைப் பிடித்தார் எனச் சொன்னதாக யாவகம். 


அப்பிடி என்ன இருக்கிறது அந்தப் பாட்டில் எனப் பார்த்தால் சுகர் பேபி எனப் பாடல் ஒலிக்கிறது. விசுவல்சில் பார்க்கையில் சுகர் டாடி என திரிசாகெளவி பாடுகிறது. அப்போதுதான் எல்லாமே வெளக்குப்போட்டாற்போல் விளங்கியது. 


மணிசாரும் ரஹுவும் ஒரு தந்தை மகன் போன்ற அமைப்பில் இருக்கிறார்கள். மகனிடம் போய் இதை எப்படி சொல்வது என நினைத்து கமலுக்கு திரிசாகெளவிக்குமான ரிலேசன்சிப்பைச் சொல்லியிருக்கிறார் மணிசார். யோயோவில் காகாவான நம் ஏ ஆர், அட இது மில்ஃப், விர்கோ வகையில் சுகர்டேடி கேடகிரியாச்சே எனப் பிடித்து சுகர் டாடி சுகர் டாடி கொழுகொழு கன்னத்தில் பிடிபிடியென பிடித்தேன் என பாட்டின் முதல் வரியாகவே அதைப் பாடியிருக்கிறார். 


மணிசார்ம் டெக்னாலஜி... பையன் புடிச்சிட்டான் என வியந்திருக்கிறார். அதை வியந்து நம்மிடத்திலும் ஓதியிருக்கிறார். 


பட ஆல்பம் ரிலீசானப்பவே சுடச்சுட பாட்டு ரிவ்யூ கேட்டிருந்தார் நண்பநண்பி ஒருவர். வெளியான ஃபார்ட்டி மினிட்சிலேயே சொன்னேன், எல்லாப்பாட்டும் அதிரிபுதிரி ஆனால் முத்தமழை லெஜண்ட் ஆகிவிடும் என்று. 


இதான் சாக்கென்று அந்தப்பாட்டை வைத்து பையை நிரப்பிக்கொண்ட ஒரு கூட்டமுண்டு. தீ-யிடம் இருந்த ரா-னெஸ், ஓலம், யானை ஏறி மிதித்தாற்போலிருந்த சுமை, வலி, அந்த பிழைப்புவாதப்பாடகி பாடியதில் இல்லை. ஆனால் இருக்க இடம் கொடுத்தால் எப்படி அந்த இடத்தில் கோட்டையே கட்டிவிடுவது என்பதை நம்மாட்கள் கற்க மிகச்சிறந்த கேஸ்டடி இது. ஒரு கட்டத்தில் அது மணிசாரின் தக்லைஃப் என்பதை விட, இன்னார் பாடிய பாடல் கொண்ட தக்லைஃப் என்பது வரை நெக்சஸ் வேலை பார்த்துவிட்டது. கிடக்கட்டும்.


அந்தப்பாட்டில் ஒரு வரி வருமே, வைரலான வரி, காலை கனவினில் காதல் கொண்டேன் கண் விழித்தேன் அவன் காணவில்லை என்று. அது அலெக்ஸ்பீரியன்சில் அவர் எடுத்துக்கொண்ட பாட்டின் தீம் போலவே இருந்தது. அந்தப்பாட்டு ஹைராமா, அத்தினி சித்தினி, காதல் என்பது துங்கும் மிருகம், இது மாதிரி அதே ராகத்துல இருந்ததால அப்பிடி இருக்கு இப்பிடி இருக்குனு ரிபீட்டா சொன்னாங்களேயொழிய இந்த தீம் சிமிலாரிட்டிய யாரும் சொல்லக்காணும். இன்னம் ஒரு நாப்பது வருசங்கழிச்சு யார்னா இந்தப்பாட்ட வச்சு ஸ்டேண்டப் பண்ணலாம். 


அடுத்து EMA. இன்று போய் நாளை வானு ஒரு படம் எல்லாவரும் பாத்துருப்போம். பாக்காதவங்க பாத்துருங்க. மஸ்ட் வாட்ச் படமது. அதுல ஃபேக்டரில வேல செய்றவன் (வெங்கிட்டுனு நெனைக்கிறேன்) அவன் லவ்வ ராதிகாட்ட சொல்ல வருவான். அப்ப சொல்ல தைரியமிருக்காது. தயக்கமிருக்கும். அதனால ஒரு ஜெயகாந்தன் கதைய சொல்லுவான். அந்த சீன் கூட தனியா யூடுபுல இருக்கு. லவ் லெட்டர் குடுத்த பையன ப்ரின்சிபால்கிட்ட மாட்டிவிட்ட ஒரு பொண்ணப்பத்தின ஜேகேயோட கதைய சொல்லுவான். தனக்கும் ஒரு பையன் லௌ லெட்டர் குடுத்ததாவும் அவன அவ செருப்பாலடிச்சதாவும் சிரிச்சிட்டே சொன்னதும் பேஸ்தடிச்சுப்போயிருவான். அப்பறம் ஜேகேவ தொணைக்குக் கூப்ட்டு அப்டி பண்றது சரி இல்லனு நிறுவி, இனிமே எந்தப்பையன் லட்டர் குடுத்தாலும் செருப்பால அடிக்கமாட்டேன்னு அவள உறுதி குடுக்க வச்சதும் நைசா லட்டர் எடுத்து நீட்டுவான். அதே மாதிரி மணிசார் எங்கியோ எதோ எஸ்ட்டா பிட்டு ஓட்டுறாப்டியோனு ஒரு சம்சயம். அத ஆசினி மேடத்துட்ட சொல்லத் தயங்கி இப்பிடி வரீசையா எல்லாப்படத்துலயும் சப்டிலா சொல்லிக்காட்றாப்லயோனு தோணுது. 



அப்பிடி எவளதாண்டா வச்சிருக்க, போட்டுச் ஒடச்சிர்ரா பெரியவனேனு ஆசினி மேடமே சொல்லனும்னு வெய்ட் பண்றாப்ல போல. அப்பிடி ஒரு முமண்ட் வர வரைக்கிம் இந்த ema சீன்கள விடப்போறதில்ல அவரு. ஜஸ்ட் மணிசார் திங்ஸ். 


படத்துல யாரு கேரக்டருமே சரியா எழுதல ஆர்க்கே இல்ல யார் கேரட்டருக்கும்னு ஒரு நண்பி வருத்தப்பட்டாங்க. நாமும் உடன்மொழிந்து, ஆனா திரிசா கேரக்டர் மட்டும் முழுசா எழுதிருக்காப்ல தோணுச்சு என்றேன். ஆனால் அவர்களோ அந்த கேரக்டர் தான் சுத்தமா சரியாவே எழுதல என்றார். வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கலாம். என்னவோ தெரியவில்லை திரிசா கேரக்டர் உங்களை நினைவு படுத்தியது எனக்கூறினேன். நா எந்த ஆங்கில்ல அவ கேரக்டர் மாதிரி எனக்கேட்டார். திரிசாவின் ஃப்ரீவில், போல்டாக அவர் எடுக்கும் கட்டுடைப்பு முடிவுகள், தைரியம் இப்படி எத்தனையோ என்றேன். எவ்ளோ அதுப்பிருந்தா அவளோட என்ன கம்பேர் பண்ணுவ, நேர்ல வா வச்சுக்கறேன் என்றார். இதோ இதோ இதுவும்தான் என்றேன். அதற்குப்பின் அந்த டிபி க்ரே கலரில்தான் தெரிகிறது பகிரியில். எதோ பக்கு போல.


------------------------------------------------------------------------------------


இவனுக கிரியேட்டிவிட்டி பொச்சுல தீய வச்சு கருக்க. 





இப்பிடித்தான் ஒரு ரெஸ்டாரண்டுல Dames | Herenனு கதவுல போட்டுருந்துச்சு. படங்கிடம் ஒன்னு இல்ல. Herenனதும் நம்ம மைண்டு Herருக்குத்தான் எஸ்ட்டா நம்பர் போட்டு வச்சுருக்கானுக போல. டேம்ஸுங்கறது ஜேம்சுலந்து திரிஞ்சிது போலனு நெனச்சு உள்ள பாயத் திரிஞ்சேன். நல்ல வேளையா டேம்சுலருந்து ஒரு அம்மணி வெளிய வந்துச்சு. அப்பறந்தான் செக் பண்ணிப்பாத்தா Damesசுன்னா லேடிஸ், Herenனா ஜெண்டில்மேனாம். இவனுகளோட அக்கப்போர்றதுக்கு பெசாம அண்டர்வேர்லயே போயிர்லாம்போல ஒரு டயாப்பர் கட்டிகிட்டு. 





----------

கப்புல்ஸ் கோல்சு



Comments