¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦

 டபுல் ஸ்லிட் எக்ஸ்பரிமண்ட் மீது நமக்கிருக்கும் அலாதியாவல் பெரும்பான்மையோருக்குத் தெரிந்ததே. 

ஒரு மிட்நைட் தாண்டிய மிட் நைட்டில் டபுல் ஸ்லிட் குறித்து குளிரில் யோசித்தபடியே தூக்கத்தைத் தள்ளிப்போட்டுக்கொண்டிருக்கும்போது, அது ஏன் டபுல் ஸ்லிட்? அதை ட்ரிபுல் ஸ்லிட்டாக்கினால் என்ன? அப்படிச்செய்தால் வரும் அவுட்புட்டுகளை வைத்து இன்னுமதிக ஞானம் கிடைக்குமே என ஸ்லிப் ஆஃப் த மைண்டில் வந்தபின் அந்த இரவு தூக்கம் முற்றாகத்  தொலைந்தது. 

புழங்கிய பல டபுல்ஸ்லிட் குறித்த வீடியோக்களிலும் ஆர்ட்டிகல்களிலும் எந்த இடத்திலும் இந்த ட்ரிபில் ஸ்லிட் குறித்து கோடு கூட இட்டுக்காட்டப்பட்டதே இல்லை. அதெப்படி இந்த ஏங்கிலைச் சிந்திக்காமல் போனது பிசிக்ஸ் சமூகம் என வந்த ஆர்வத்திலும் நமக்கே ஆர்கானிக்காக தோன்றிய புதிய ஐடியாவுமே அவ்விரவுத் தூக்கத்தை உண்டது. 

பின் அதைத் தொடர்ந்து முவ்வோட்டை எக்ஸ்பரிமண்ட் குறித்து தேடியதில் அத்தனைப் பெரிய பாத் பிரேக்கிங் அளவுக்கான விசயங்கள் எல்லாம் கிடைக்கவில்லை. பின் சமீபத்தில் இந்த குவாண்டம் இயற்பியல் வீடியோவைக் காண்கையில் நமக்குத் தோணின அதே கேள்வி ஒரு சயண்டிஸ்டுக்கும் தோன்றியிருப்பதைக் கண்டதும் உள்ளபடியே கூஸ்பம்ப்ஸ் ஆனது. 

ஆனால் எந்த இடத்தில் அவர் விஞ்சானியாகவும் நாம் தற்க்ஞானியாகவும் ஆகிறோமென்றால், நமது லிமிட்டட் மைண்டானது டபுல் ஸ்லிட்டில் மற்றொரு ஸ்லிட் சேர்ந்தால் என்னவாகும் எனும் குறுகலான சிந்தையிலேயே திருப்திபட்டுக்கொண்டது. 

ஆனால் அவர், மூன்று, நான்கு, முப்பத்து முக்கோடி என இன்ஃபைனட் ஸ்லிட்டுகளிருந்தால் என்னாகும், மேலும் இந்த முடிவிலா ஸ்லிட்டுகள் கொண்ட ஸ்க்ரீனை இரண்டாக்கி, மூன்றாக்கி, நான்காக்கினால் என்னாகும் என்றெல்லாம் யோசித்து அவரின் ப்ரொபசரின் மண்டையைக் காய வைத்திருக்கிறார். இது போன்ற கேள்விகளை நாம் கேட்டிருந்தால் ஓமொர்க் முடித்தாயா எனும் ஒரே கேள்வியில் நம்மை ஸ்மாக்டௌன் செய்திருப்பர். 

பைதவே, அந்த சயண்டிஸ்டின் பெயர் Richard Feynman.

குவாண்டம் மெகானிக்சில் ஆர்வமுள்ளோர் கண்டு உய்க:



------------------------------------------------------------
F1 & 1F






------------------------------------------------------------

திஸ் கை முக்தார் 😂 😂 😂 





------------------------------------------------------------
மூLaiக்கு வேlai:

ஒரு பெருநிறுவனத்தில் ஐயேயெஸ் தேர்வில் கேட்கப்படாத கேள்வி. ஆகவே கேர்புல்லாக பதிலளித்து மூளையை சார்ப் செய்யுங்கள்! 














































------------------------------------------------------------

ஆககா!

Comments