உணவும் Numbrrrrr Game அப்டேட்டும்...

Numbrrrrr Game Update!

- Now you can compete with Global Top score - Auto submission of valid sequence (more mobile friendly now) - Bonus time for all valid submissions - time ticks fast, make it count - Can select the sequence in any direction

Play it here

---------------------

வாழ்க்கை முழுவதும் ஒரே ஒரு டிஃப்ஃபன் ஐட்டந்தான் சாப்பிட முடியும் என்றால் இதைத் தேர்ந்தெடுப்பேன்.

வடை மட்டும் தொப்புள் வடை அல்லாமல் மசாலா வடை. மேலும் அந்த ஓரத்திலிருப்பது உப்மாவாயிருந்தால் உவ்வே. கேசரியாயிருந்தால் ஓகே. (கொஞ்சம் தளதளவென நெய் சேர்த்து சுடச் சுட இருந்தால் நனி நன்றாக இருக்கும்) அல்லது அதற்குப்பதில் தேங்காய் or கலக்கா சட்னி tradeoff செய்துகொள்ளவும் தயார். 



போலவே வாழ்க்கை முழுமைக்கும் ஒரு லஞ்சி சாப்பிடலாமென்றால் அது ஆந்ரா மீல்ஸ். அந்த பாயாசம் தவிர்த்து மீதி போட்டோவில் தெரியும் அத்தனையையும் ஒன்றாய்க்குழைத்து ஒருவன் சாப்பிடுவான் பாருங்கள், அக்கம் பக்கத்திலிருப்பவர்களில்லை, சருவ் பண்றவர்கள் கூடப் பயந்து எட்ட நின்னு விடுவர். அப்படி ஒரு வரலாறு உண்டு. சொல்லப்போனால் தேசிய சாப்பாடாக அறிவிக்க அத்தனைத் தகுதியும் தராதரமும் உண்டு ஆந்ரா மீல்சுக்கு.




போலவே ஒரு லைஃப் லாங் டின்னர் தேர்ந்தெடுக்கச்சொன்னால் ஏழைக்கேத்த மட்டன் பிரியாணி தான். ஏதோ, நம்மால் இயன்றது.




---------------------


வயதாகிவிட்டால் கண்ட வாட்சப் ஃபார்வேர்டைப் படித்து, தம் பிற வாழ்க்கையைக் கெடுப்போர் பூமர்கள். மில்லினியல்கள் சற்று வித்தியாசம். இன்ஸ்டாவைப் பார்த்து கெடுத்துக்கொள்வர். என்பதைப்போல. கக்கிசுவில் அஞ்சு நிமிடத்திற்கு மேல் உக்காரக்கூடாது என ஒரு ரீல்சில் மருத்துவர் உடையணிந்த ஒரு இன்புலுவன்சர் சொல்ல, சரி நல்லது சொல்றார்கள் தானே என எண்ணி அய்ந்து நிமிடத்தங்களில் வெளியேறி ஹெல்த்தி ஹேபிட் கொண்டு வரலாம் எனப் பழகினால் ஒரு நாளைக்கு நாலைந்து முறை கக்காவுக்குச் செல்லவேண்டியதாகிறது. இந்தக் கருமத்திற்கு ஆனது ஆனது என்று முச்சூடும் முப்பது நிமிடங்கள் உக்கார்ந்து முழுக்க வெளியேத்திவிட்டு வருவதே சிறப்பு போல. உங்க ரீல்சுகள பொச்சுக்குள்ள சொருவ டேய். 



Comments