நமது பின்ஜ் வாச்சிங்கில் அவ்வப்போது இடம்பெறுவது ஆனுவல்டேக்கள் எனப்படும் ஆண்டுவிழாக்கள். ஒரு பள்ளியின் குறுக்குவெட்டை ரெண்டொரு மணி நேரங்களில் அளிக்கவல்லது இவை. நமக்கு விருப்பமானவை அரசுப்பள்ளி ஆண்டுவிழாக்களே. இதை லைக்குக்காக சொல்லவில்லை. தனியார் பள்ளிகளில் ஒரு பகட்டு, வீண் விரயங்கள் அதிகளவில் தெரியும். On the other hand, அரசுப்பள்ளி விழாக்களில் resourcefulness இருக்கும். இருப்பதைக் கொண்டு சிறப்பாய்ச் செய்யும் கலைகள் காணப்படும். அப்பள்ளி தேர்ந்தெடுக்கும் பாடல்களை வைத்து அங்குள்ள டீச்சர்களின் ஆவரேஜ் வயதைக் கண்டுபிடித்து விடலாம். போலவே பெரும்பாலான ஆண்டுவிழாக்கள் ஒரே டெம்ப்லேட்டில் இருக்கும். நெத்திச்சுட்டி சற்று விலகிய பரதநாட்டியத்தில் ஆரம்பித்து கிராமக்குத்து கனகாம்பர குரூப் டேன்ஸ் என ஒரே மாதிரி இருந்தாலும் ஒவ்வொன்னும் ஒவ்வொரு மாதிரி.
நம் பேவரிட் மெய்ன் ஷோ அல்ல. ஷோக்கள் நடக்கையில் ஷோவிலும் அதன் அருகிலும் நடக்கும் ப்லூப்பர்ஸில்தான் அதிக எண்டர்டெய்ன்மண்ட் நடக்கும். மேலும் ஆண்டுவிழாக்களில் சிறப்பு விருந்தினர் (பூமர்) பேச்சுக்கள், மாணவர்களின் 'குளத்தில் தாமரை போல் வீற்றிருக்கும் தலைமையாசிரியர் அவர்களே' ரகப் போட்டிப்பேச்சுகள், ஊமை நாடகங்கள், மைக்கில் தப்புந்தவறுமாய்ப் பேசிவிடும் நாடகங்கள் இப்படி ஜுகல்பந்தியாக இருக்கும்.
ஒவ்வொரு நிகழ்ச்சிக்குப் பின்னும் அவர்களின் ப்ராக்டிஸ், அதன்போது நடந்திருக்கக்கூடிய சுவாரசியங்கள் எனக் கற்பனை செய்ய ஏராளமான ஸ்கோப் கொடுப்பவை ஆனுவல் டேக்கள்.
நமது வாழ்வில் நாம் பங்கேற்ற ஒரே மற்றும் கடைசி ஆண்டுவிழா ஒன்று உண்டு. பள்ளி துவங்கி பல்லாண்டுக்குப் பின் முதன்முறையாய் அங்கு ஆனுவல்டே நடத்தினார்கள். அதனூடே நடந்துவிட்ட விடலைக்காதல் களேபரங்களினால் அத்தோடு அதை நிறுத்தியும் விட்டார்கள். பலநூறு ஆண்டுகளுக்குப் பின், பல ஜெனரேசன்கள் மாறிய பின் மீண்டும் அங்கே ஆனுவல் டே நடந்த வீடியோக்களைப் பார்க்க நேர்ந்தது.
நமது ஆனுவல் டேயின்போது ஒரு டேன்சுக்கும் ஒரு நாடகத்துக்கும் பெயர் கொடுத்திருந்தேன். இரண்டுக்கும் ஒரே காஸ்ட்யூம் என்பதால் அந்த மனத்தாராளம். பாட்டுக்கு வேட்டியை மடித்துக் கட்டி, நாடகத்துக்கு வேட்டியை அவிழ்த்து விட்டு (ஐ மீன், மடிக்காமல் அவிழ்த்து விட்டு, அண்டர்வேல்டில் அம்மணக்கட்டையாய் அல்ல), அது ஒரு தமிழாசிரியர் ரோல்.
பஸ்டாப்பில் நிற்கும் நம்மிடம் வந்து 5E போய்விட்டதா என ஒருவன் கேட்பான் (இப்போது அவன் இங்கிலாந்தில் இருக்கிறான்). அய்யா...! (அரட்டை அரங்க டோன் அய்யா...) சாலையில் நூற்றுக்கணக்கான ஈக்களும் கொசுக்களும் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருக்கின்றன, இதில் 5ஈயை மட்டும் எப்படி கவனிக்க? எனப்போகும். Heavily influenced by SV ஷேக்கர் நாடகங்கள்.
அதெல்லாம் ஒரு மலரும் பருவம். நினைக்க நினைக்க எத்தனை ஈர நினைவுகள்.
இங்கே இணைக்கப்பட்டுள்ள ஆனுவல்டே பங்சன்களில் ஒரு பள்ளியில் காம்பியர் செய்யும் மிஸ்சுக்கு செம்ம இங்லிஷ் வருகிறது. அத்தனைப் பட்டிக்காட்டுப்பள்ளியில் இத்தனை ஃப்லுவன்சியும் கணீரும் எதிர்பார்க்கவில்லை. முகந்தெரியா அந்த குரலழகிக்கு க்ரஷ் ஆகிவிட்டது மனது. எங்கிருந்தாலும் வாழ்க.
அந்த வேதனை இருக்கிறதே வேதனை....
Comments
Post a Comment
Pass a comment here...