காலைல அடிச்சூத்து ஊத்தி மழ பேஞ்சிருந்துச்சு. ஆகவே ஆங்காங்கே நிலைகள்ல தண்ணீர்கள் சேந்துருக்கது ஜகஜம். அப்பிடித்தான் நாம போன ரைல்வேடேசன்ல எங்கயோ கூடு கட்டி சேந்துரும்க்கும் போல. அண்டர்க்ரௌண்ட்லருந்து, நின்ற இடத்திலேயே நகரும் மின்படிக்கட்ட நோக்கி நடக்குறப்ப கழுகுக்கு பேதி ஆனா எத்தேத்தண்டி எச்சம் போடும், அத்தேத்தண்டி எச்ச சைசுக்கு ஒரு மழைத்துளி வந்து த்த்ச்சொத்துன்னு நம்ம தோள்பட்டைல விழுந்துச்சு. நல்லா இருவது எம்மெல் இருக்கும் போல.
விழுந்த ரெண்டு மூனு நொடியில தன்னிச்சையா மனசு என் மேல் விழுந்த மழைத்துளியேனு பாட ஆரமிச்சுச்சு.
என் மேல் விழுந்த மழைத்துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை எழுப்பிய பூங்காற்றே
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நானிருந்தேன்
என் மேல் விழு...
அதுவரைக்கும் சும்மா முனுமுமுத்த வரிய அப்பதான் கவனிச்சேன்.
அதுக்குள்ள கவித்துவம் மட்டுமா இருக்கு? சைன்சு, தத்துவம், காதல்னு எப்பிடி இவ்ளோ விசயத்த பொட்டனம் கட்டி, அதுவும் இவ்ளோ எளிய வரியில எழுதிருக்காப்லனு ஆச்சரியப்பட்டுப்போனேன்.
யோசிச்சுப்பாருங்களேன், மில்லியன் கணக்கான வருசமா பேயுற மழ. எத்தன தடவ பேஞ்சாலும் அது இங்கருந்து போற/போன மழ தான?
இதே மாதிரி, கதைல ஒரு வரி எழுதறோம், கவிதைல ஒரு புது சொல், ஒரு யுனீக் ஐடியா, ப்ரெத் டேக்கிங் தியரி இன் சைன்ஸ், இப்பிடி இது எல்லாமே வெளி வரதுக்கு அந்த நொடிக்கு முன்னால வரைக்கும் எங்க இருந்தது? அதுவும் நமக்குள்ளதான?
அதே பழைய மூளைலருந்து எப்பிடி புத்தம்புது விசயம் கெளம்புது? அப்பிடி கெளம்பனும்னா அந்த விசயம் நமக்குள்ள ஆல்ரெடி விதைக்கப்பட்டுருக்கனும்ல? அதுதான ஒரு கட்டத்துல மொளைச்சு வெளிவரமுடியும்? இல்லாத விசயம் எப்பிடி உண்டாக முடியும்?
அதுவும் அப்பிடி ஒரு விசயம் வெளி வர அந்த கணம் வரைக்கும் அப்பிடி ஒன்னு வரப்போகுதுன்னே நமக்குத் தெரியாதுல்ல. இப்பவும் இந்த ரைட்டப்ல அடுத்த வார்த்த எங்கருந்து வருது? எதோ சைக்கில் ஓட்றப்ப தன்னப்போல காலியங்கி சைக்கில பேலன்ஸ் பண்றாப்ல அடுத்தடுத்த சொல் எங்கருந்து தோன்றி எப்பிடி வந்து விழுது? இத எக்ஸ்பரிமண்ட் பண்ணிப்பாக்கனும்னே இந்த பாராவ பெருசா ரேண்டமா இழுத்துட்டே போறேன். எழுத எழுத மே பி அடுத்த நெக்ஸ்ட் வார்த்த வேணும்னா மனசுக்குள்ள ஒலியா ஒலிக்குதே தவிர அதுக்கு அடுத்த, N+2nd வார்த்த என்னன்னு இப்ப, இந்த இந்த-ன்ற வார்த்த அடிக்கற வரைகூட தெரியல. இதுவே ஒருமாதிரி கிளுகிளுப்பாருக்கு.
நம்ம பாய்ண்ட் அதில்ல. இத்தனை விசயமும் நமக்குள்ளயே எந்த சலனமும் எடையும் இல்லாம நம்மோடவே உறைஞ்சிருக்கு, உயிர் மாதிரியே. எவனாச்சும் என்னைக்காச்சும் பொறக்கறதுக்கு முன்னைலருந்தே சொமக்குற உயிர் ரொம்ப வெய்ட்டாருக்குனு சொல்லிருக்கமா? அதுதான் எல்லாமா இருந்தும் அத தனிப்பட்டு உணர்ந்துருக்கமா? அப்பிடியே அப்பிப்போயிருக்க அப்பேர்ப்பட்ட உயிர இவ்ளோ லவ் மேட்டருக்கு உவமையாச்சொன்னது யார் வேணாலும் சொல்லிர்லாம். ஆனா அதுக்கு மழை, கவிதைனு ஒரு லாஜிகல், பிலாசபிகல், இன்ஃபரன்ஸ் தியரி காட்டி கோத்தது உண்மைலியே ப்ரில்லியன்ஸ்.
இதெல்லாம் தற்செயலாலாம் எழுதிட முடியாது. உள்ள மேட்டரில்லாம இப்டிலாம் யோசிக்கவே முடியாது.
இப்பிடியாப்பட்ட வரலாறு இருக்க தமிழ்ப்பாடல் சமூகத்துல... சரி வேணாம் நல்லத பேசுன எடத்துல கெட்டவார்த்தைகள் பேசி முடிக்க வேணாம்.
------------------------------------------------
Comments
Post a Comment
Pass a comment here...