பறக்கும்...

 

இது எந்தளவுக்கு நம்பப்படும்னு தெரியல. ஒரு UFOவப் பாத்தேன் நண்பர்களே. UFOனதும் பறக்கும் தட்டுன்னு எடுத்துக்க வேணாம். ஆனா அது கண்டிப்பா ப்லேனோ ஹெலிகாப்டரோ இல்ல. ஏன்னா சின்ன வயசுலேந்து (இப்ப வரைக்கிம்) ப்லேனு போனா அண்ணாந்து பாக்கற பழக்கம் உண்டு. ப்லேனுகள் மட்டுமில்ல, ISS போற ரூட்ட ட்ராக் பண்ணி அதையும் பாக்கற ஹாபி உண்டு. இதுவரைக்கும் ஏழெட்டுதடவ அப்பிடி ISS போறத பாத்ததுண்டு. ப்லேனு போற உயரம், திசை, அப்ப சூரியன் இருக்கும் ஏங்கில், அந்த செட்டப்ல சூரிய ஒளி ப்லேனு மேல எப்பிடி பட்டுத்தெரிக்கும், அல்லது ப்லேனு எப்பிடி தெரியும் இப்பிடி நுணுக்கமான நாலேஜ்கள் உண்டு. அன்னைக்கி பறந்தது கண்டிப்பா ப்லேன் இல்ல. ஏன்னா அது கருப்பா இருந்துச்சு. கருங்குறு ஹெலிகாப்டரா இருந்துருக்கலாம்னா எவ்ளோதான் சின்ன ஹெலிகாப்டரா இருந்தாலும் அதுக்கு வாலும் தலைல சுத்துற முஜ்ஜடையும் இருக்கும். இதுல அதுவும் இல்ல. போலவே போறப்ப வால் வழியா பொகையும் எதுவும் இல்ல. எதோ ஸ்கேல்ல கோடு போட்டாப்ல நேர்க்கோட்டுல போச்சு. சரி ப்லேனுமில்ல, ஹெலிகாப்டருமில்ல, ட்ரோனா இருக்கலாம்லனு கேக்கலாம். எனக்கும் அதுதான் தோணுச்சு. 
கார்களுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டிருப்பானுங்க பாத்துருக்கீங்களா? பளபளப்பா இல்ல, ஒரு மாதிரி light reflect பண்ணாத மாதிரி vinylல. 



அந்த பறக்கும் பாவைலயும் இதுதான் இருந்துச்சு. ஏன்னா அப்ப சூரியன் 1:30 மணி வெயில் ஏங்கில்ல இருந்துச்சு. நா ஒரு ஒசரமான பில்டிங்லருந்து ஜன்னல் வழியா பராக்கு பாத்துட்டு இருந்தேன். இந்த UFO பறக்குது, ஆனா அதுலருந்து ஒளி எதிரொளிப்பே வரல. ஒரு குண்டு கரும்புள்ளி நவுர்றாப்ல இருக்குது. சரியா சொல்லணும்னா ஒரு பெரிய குப்பத்தொட்டி கூழாங்கள் ஷேப்புல நவுர்றாப்ல இருந்துது. அது ட்ரோனா இருக்கவும் வாய்ப்பில்லனு எப்பிடி தோணுச்சுன்னா, அன்னைக்கி வானம் ரொம்ப க்லியரா இருந்துச்சு. ஒரே ஒரு எடத்துல மட்டும் ஒரு சட்டுவம் சோறள்ளி வச்சாப்ல கொத்தா கொஞ்சோண்டு மேகம். இந்த பறக்கும் மிசின் போன வேகத்துக்கு 3-4 செகண்ட்ல அந்த மேகத்துக்குள்ள போயி கடந்து வெளிய வந்துட முடியும். ஆனா மேகத்துக்குள்ள போனது வெளியவே வரல. 





இதுல ரெட் குறிதான் அது மேகத்துக்கு உள்ள போன எடம் மற்றும் டைரக்சன். போன ப்லேன்/ட்ரோன் அதே வேகத்துல மற்றும் திசை மாறாம போயிருந்தா ரெட்டுக்கு நேரா இருக்குற அம்புக்குறி வழியா 3 செகண்டுல வெளிய வந்துருக்கனும். இல்ல, எரிசக்தி இல்லாம கீழ விழுதுன்னா அதுக்கு அடுத்த அம்புக்குறி வழியா சொய்ங்குனு சரிஞ்சிருக்கலாம். இல்ல எதுவுமே இல்லாம அப்ரப்டா விழுதுன்னா கீழ காட்டிருக்க அம்புக்குறி பக்கமா தொப்புனு விழுந்துருக்கலாம். அப்பிடியும் இல்ல, திடீர்னு turbo charge ஆகி மேல போயிருச்சுன்னா மேகத்துலருந்து ஸ்டெய்ட்டா இன்னும் வானம் நோக்கிப் போயிருக்கலாம். ஆனா எதோ பஞ்சுமிட்டாய் தண்ணில கரையறாப்ல மேகத்துக்குள்ள போனது அப்புடியே பஸ்பமாகிருச்சு. அதுதான் சந்தேகத்த கெளப்புச்சு. வீட்டுக்கு வந்து flight radar எடுத்து அந்த லொகேசன்லயும் அதச் சுத்தியும் நான் பாத்த அந்த டைம்லருந்து ஒன்னவர் முன்னயும் பின்னயும் தேடிப்பாதேன். வேற ரூட்ல சில ப்லேன்கள் பறந்ததுவே தவிர நா பாத்த அந்த எடத்துல எதுவுமே பறக்கல. In fact, ப்லேன்கள் மட்டுமில்லாம flight radar hot air balloonsசக்கூட காட்டுது. அப்பிடி ஏர் பலூன் கூட எதுவும் அந்த லொகேசன்ல காட்டல. பறக்கும் தட்டு, ஏலியன் மேலல்லாம் நம்பிக்க இல்ல. ஆனா இந்த phenomena என்னனு தெரிஞ்சுக்கனும்னு மண்ட ஒடையுது. அது சும்மா எதோ காத்துல பறந்த பலூன் தான்னு நிறுவுனாக்கூட போதும். நமக்கு ஏற்கனவே இருக்குற மண்டையிடியில இது வேற இப்ப.  


முத்தத்திகில் 





செக்யூரிட்!




முலையிலேயே கிள்ளப்படவேண்டிய எண்ணங்கள்...



--\-\--\-\-\-\\\\----\-\-\-\-\

இசை ஓர் காலக்கடத்தி.




Comments