உயிர் நாடி (சிறுகதை)

முர்கேஸ் தாத்தாவின் நம்பிக்கைகளும் நிலைப்பாடுகளும் சொல்லும் செய்திகளும் அதிர்ச்சியூட்டக்கூடியதாய் இருக்கும்.

ஆனால் அவரின் நிலைப்பாட்டிற்கு அவர் கொடுக்கும் காரணங்கள் லாஜிக்கலாக இல்லாவிட்டாலும் சுவாரசியமாக இருக்கும் என்பதால் அவை கேட்டுக்கொள்ளத் தக்கதாகவே இருக்கும். அதிரடி ஆந்திர மசாலா படங்களில், லாஜிக் பார்க்காதே மேஜிக்கை மட்டும் பார் என்பார்களே, அதுபோல.

அவரின் கதைகளுக்காகவே அவரைச் சுற்றி எப்போதும் விடலைப் பசங்கள் கூட்டமிருக்கும்.

தாத்தா ஒருநாள், ஏண்டா பசங்களா, ஒலகம் தட்டைனு தெரியுமா? எனக்கேட்டார், ஒரு தட்டையை வாயில் போட்டபடி. நல்லவேள தாத்தா நீங்க இப்ப பலாக்கொட்ட சாப்டுட்டில்ல என்றான் வினோத்து.

அடிங்கொப்பனே என அடிக்க ஓங்கினார்.

ஏன் தாத்தா, நூறு வர்ஷத்துக்கு முன்ன தட்டைனு சொல்லிருந்தாக்கோட சரி, இன்னிக்கி இத்தினி ராக்கெட் வானத்துல போயி படம் அனுப்பியுமா பூமி தட்டைனு சொல்ற? என்றான் மனோகர்.

அங்கத்தான் பய்யா நீ புரிஞ்சுக்கணும். தாத்தா சொல்றன் கேளு. போட்டோ எடுக்கறதுக்கு முக்கியமான மெட்டீரில் ன்னா தெரீமா?

இன்னாது தாத்தா? கேம்ராவா?

கேம்ரா இல்ல பய்யா. லென்சி. கேம்ரால முன்னுக்க நீட்டினுருக்கும் பாத்துருக்கியா?

ஆமா தாத்தா ரமேஸ் கூட அதுதான் கேம்ராவோட பெல்லான்னுவான் என்றான் சருவ்ணா.

அஃஆங் அத்தான். கேம்ரால போட்டோ எடுக்கறது லென்சி வழியாத்தான் நடக்கும். கேம்ரா முன்னுக்க இருக்க பொர்ல்மேல வெள்ச்சம் பட்டு அது லென்சிக்குள்ள போயி அது போட்டோவாகும். தம்த்தூண்டு பொர்லு எப்டி பூதக்கண்ணாடில பாத்தா பெர்சா தெர்து. பைனாகுலர்ல பாத்தா எங்கியோ தூரத்துல இருக்கது எப்டி கிட்டொ தெர்து? அல்லாத்துக்கும் காரணம் லென்சிதான். லென்சில நெரீய் டைப் இருக்கு. அதுல ஒரு டைப்தான் மீன்கண்ணு லென்ஸ். ஃபிஸ் ஐ லென்சுன்னுவாங்கொ. அதுல போட்டோ எட்த்தா எல்லாமே உருண்டையாதான் தெரியும். ராக்கேட்ல அந்த லென்ஸ்தான் இருக்கணும். அத்தான் பூமிகூட ரௌண்டா தெர்து.

இதெப்டி தாத்தா நம்பர்து? பூமி உருண்டைனுதான் ப்ரூ பண்ட்டாங்களே.
பூமி சுகுர்ரா உருண்டைனா சொன்னானுங்க, கொஞ்சம் கோணைனுதான சொன்னானுங்க. இத்தினி போட்டோ இருக்கே, எதுலியாச்சும் கோளமா தெர்ஞ்சிர்க்கா? எல்லாத்துலியும் புட்ச்சு வெச்சாமேரி உருண்டையாதான் இருக்கு. இதுலேந்தே புரீதா அவனுங்கோ பிஸ்லென்ஸ் தான் போட்டு தான் ஏமாத்தறானுகொ, பூமி தட்டதான்னு? இத்தெல்லாம் வெளிய யாருக்கும் தெரியாது என்றவாறு காஜா பீடியைப் பத்த வைத்தார் முர்கேஸ் தாத்தா.

~~~

முர்கேஸ் தாத்தாவோடு வாக் செல்வர் பசங்கள். போகும் வழியில் இருந்த ட்ரான்ஸ்பாமை, மூக்கைப் பொத்தியபடி விரைவாகக் கடந்தனர் பசங்கள்.

ன்னா தாத்தா… இத ஒரு பப்லிக் கக்கூசாவே ஆக்கிட்டாங்க. ஒரே மூத்ரொ நாத்தம்.

பசங்கள் சொன்னது காதில் விழாததுபோல ஏதோ நினைவில் இருந்தார் தாத்தா.

அவர் யோசனையாக இருந்தாலே ஏதோ கதை சொல்லத் தயாராகிவிட்டார் என்பது பொருள். இன்றைக்கு என்னவோ என அவரை வாய்பார்த்திருந்தனர்.

பசங்களா, நம்பூருக்கு எப்பொ கரெண்ட் வந்துது தெரீமா?

இன்ன தேதியில் வந்தது என்று சொன்னாலும், காலையா மாலையா, எத்தனை மணித்துளியில் மெய்ன் சுவிட்ச் போடப்பட்டது எனத் தாம் தோற்கும்வரை அடுத்தடுத்து கேள்வியாகக் கேட்பாரென்பதால் தெர்லியே தாத்தா என சிம்பலாக முடித்தனர் பசங்கள்.

பஸ்ட்டு பஸ்ட்டு கர்ண்ட்டு இங்க வந்தது ஆயர்த்தி எட்னூத்தி எய்ழ்பதுலெ.
இத்தனைக் கான்ஃபிடண்ட்டாக அவர் சொல்வதிலிருந்தே சரியான விடை ஒரு பத்திருபது வருடம் முன்னப்பின்ன இருக்கக்கூடும் என்பது பசங்களுக்குத் தெரியும்.

சரி தாத்தா. அப்பறம் என்னாச்சி?

வீட்டுக்குலாம் கனிக்சன் குட்த்தாப்ல நெரீய எட்த்துல செவுத்த தொட்டாலே சாக் அட்ச்சிது. அத்தப்பாத்து ஜனொம் பய்ந்துட்ச்சி. செல பேரு அத பேயிபூதம்னு வேறொ கெள்ப்பி உட்டானுங்கொ. அப்பறமா சர்க்கார்ல யர்த்து இல்லாததொட்டு இப்டி சாக்காவுது. அத்த சரி பண்ணிட்லாம்னானுங்க.

அப்பறமா எல்லார் வீட்லியும் யர்த்து குட்த்தாங்க.

யர்த்துன்னா என்னா தாத்தா?

ஆங்… நீலக்கலர்ல உருண்டையா பாத்துருக்கல்ல. அத்த வீட்டு வீட்டுக்கு குட்த்தாங்க. புஹாஹாஹா.

ன்னா தாத்தா டௌட்டி கேட்டா கலாய்க்கிறியே.

சொம்மா வெள்ளாட்டுக்குடா பய்யா.

வூட்ல கயி வுட்ட அய்க்கு தண்ணியல்லாம் வழியிர்துக்கு தொண்டி போட்டு வெப்பாங்கல்ல? அத்து வழியா தண்ணி பழுப்புல போயி உழ்யும்ல? அத்தே மார்ரி கர்ண்ட்டுலயும் மிச்சம் எத்தனா இருந்தா போர்த்துக்கான செட்டப்தான் யர்த்து.

அத்த ஏன் யர்த்துன்னு சொல்றாங்க தாத்தா?

மிஞ்சிப்போற கர்ன்ட்ட யர்த்துல விடுறதால யர்த்துனு சொல்றாங்க.

அப்பொ அத்த ரமேசு சூத்துல உட்டா ன்னா தாத்தா சொல்லுவாங்கோ என ராமு இடைமறிக்க, ஹ்ஹ்ஹோஓஓஓஓ என அல்றியது பசங்கள் கூட்டம்.

வோத்தாபாடேய் சூத்த கீக்கப்போறேன் பாரு ஒன்ன என ரமேஸ் காண்டாக,

எப்பிடிடா கிய்ப்ப? கர்ண்ட்டு உன் சூத்த கிய்ச்சமேரியா என மீண்டும் அவனை இழுத்தான் ராமு.

பதிலுக்கு ரமேஸ், ராமுவின் தாய் தந்தையரிலிருந்து துவங்கி, இளவயது விடோ-வான ராமுவின் அத்தை, விடோவான பின் தன் ஸ்பரிசப்பசியைத் தணிக்க ஒரு நொண்டி நாயுடன் சரீர ஒத்துழைப்புப் பரிமாற்றம் செய்கின்றார் என்பதுவரை ஆல்ஃபபெடிகல் ஆர்டரில் வரிசைக்கிரமமாக இட்டு நிரப்பி தன் கோபத்தை ஆற்றிக்கொண்டான்.

டேய் பசங்களா ன்னாப்பேச்சுடா பேசரீங்க? படிப்பு சொல்ற வாய்ல வர்ற வார்த்தையாடா இதலாம்? வாய்ல கய்தப்பூல விட்டாமேரி. கருமம். கம்னுருங்கடா எனக்கண்டித்துப் புத்தி புகட்டினார் தாத்தா.

தாத்தா அவனுங்க கெடக்கறானுங்க. நீ கதய சொல்லு.

ஆங்… எதுல உட்டோம்?

ரமேசு சூத்துல உட்டோம். மீண்டும் ராமு.

ராமுவின் வீட்டுப்பெண்டிர்களின் பிறப்புறுப்பின் ஒரு பகுதியைக் குறிப்பிட்டு மீண்டும் ரமேஸ்.

ட்டாஆய். இப்பதான சொன்னேன்.

தாத்தா நீ சொல்லு தாத்தா. டேய் பாடுங்களா சும்மாருக்க மாட்டீங்களா?

ராமுவும் ரமேசும் அமைதியாக்கப்பட, தாத்தா தொடர்ந்தார்.

கர்ண்ட் கனெக்சன் இர்ந்த வீட்லலாம் சாக் அட்ச்சிதா, அப்பொ யர்த்து குட்த்தாங்க அல்லார் வீட்லயும். எர்த்து ஒயர ஒரு இர்ம்பு ராடுல கட்டி, வீட்டுக்கு வெளிய நட்டு வெச்சாங்க. யர்த்து கனிக்சன் ஈரொம் இர்ந்தா நல்லா வேல செய்யும். அதுனால பள்ளம் நோண்டி, அதுல கரித்துண்டு, கல்லுப்பு எல்லாம் சேத்துப்போட்டு அதுல கம்பிய நட்டு வெப்பாங்க. கரித்துண்டும் கல்லுப்பும் எப்பவும் யர்த்து கம்பிய ஈரமா வெச்சினே இருக்கும். அதனால வீட்டுக்குள்ள எர்த்தடிக்காது.

சரி தாத்தா, அத்த ஏன் இப்ப சொல்றீங்க?

தவ்ளூண்டு வீட்டுக்கே யர்த்துக்கு அவ்ளோ தேவப்படுதே, இத்தினி வீட்டுக்கு கரண்ட் சப்லை பண்ற ட்ரான்ஸ்பாமுக்கு எவ்ளோ பெரிஸ்சா தேவப்படும். அதுக்கு கரி, உப்புலாம் போட்டு ஆவுமா அப்பலாம் சாப்பாட்டுக்கே உப்பு கெடைக்காது. இதுல ட்ரான்ஸ்பாமுக்கு எங்க உப்புக்கரி போட? அவ்ளோ பஞ்சம்.

அப்டியே கரி உப்பு போட்டாலும் அத்த யார்னா எட்த்துனு போயிடுவாங்கன்னும் வெள்ளக்கார சர்க்கார் யோசிச்சிது. எத்தினி ஊர்ல யர்த்துக்கு காவல் போட முடியும். இதுக்கெல்லாம் மேல, யார்னா வந்து யர்த்து கம்பியத் தொட்டு சாக்கடிச்சு செத்துடுவாங்கனும் பயம்.

ஓ.. அப்போ என்னாதான் பண்ணாங்க தாத்தா?

ட்ரான்ஸ்பாமுக்கு எப்பவும் ஈரமும் இருக்கணும் உப்பாவும் இருக்கணும், அதேமேரி ட்ரான்ஸ்பாமாண்ட யாரும் கிட்டயும் போகக்கூடாது. அதுக்கு எங்க தாத்தாவோட தாத்தா ஒரு ஐடியா பண்ணாரு. ட்ரான்ஸ்பாமாண்ட நைட்டுக்கா போயி ஒன்னுக்கு உட்டாரு. ரெண்டு மூனு நாள்ல அந்த எட்த்துல ஒன்னுக்கு வாசன இருக்கறதப் பாத்து மத்தவங்களும் ஒன்னுக்குபோக ஆரமிச்சிட்டாங்க. கரி உப்பு இல்லாமயே அதுவே நல்ல யர்த்தா ஆச்சு. இதனால ஆயரக்கணக்குல சர்காருக்கு உப்புக்கரிக் காசு மிச்சமாச்சு. ஒலகத்துல எங்கயுமே பாக்க முடியாது இப்பிடி ஒரு ஏற்பாடு. அவ்ளோ ஏன் கரெண்ட்டு கண்டுபுட்ச்ச வெள்ளக்காரன் நாட்டுலெ கூட இப்பிடி ஒரு ஏற்பாடு இல்ல தெரீமா?

இத்தனாலதான் வழ்யி வழ்யியா நம்பூர்ல ட்ரான்ஸ்பாம் கிட்ட ஒன்னுக்கு அடிக்கறாங்க. இதுல வர நாத்தம் நம்மளோட நாத்தம் இல்ல. நம்பொ முப்பாட்டனோட நாத்தம். இத்த நீ புரிஞ்சிக்கிடணும், மூக்க மூடினு க்ராஸ் பண்ணக்கூடாது, புர்தா? என்று கூறி முடித்தார் தாத்தா.

தாத்தோ நீலாம் மனுசனே இல்ல தெரியுமா என்று முடித்தான் ரமேசு.

~ ~ ~

“நீ என்ன கதைகள் கேட்கிறாயோ அதுவாகவே உருவாகிறாய்” இதுவும் தாத்தா ஒருமுறை சொன்னதுதான்.

ஊரை, மாநிலத்தை, பின் நாட்டைவிட்டு வந்து ஆகிவிட்டது ஒரு டசன் வருடங்கள்.

தாத்தாவிடமிருந்து எதைக் கற்றோம் என அவ்வப்போது யோசிப்பதுண்டு. பொருந்துகிறதோ இல்லையோ, எல்லாவற்றிற்கும் ஒரு wild perspective இருக்க முடியும் என்பதுதான் அவரளித்த mind wiring கொடை.

அவரின் இரண்டு சம்பவங்களைக் குறிப்பிட்டு, பின் அவர் குறித்த நாஸ்டால்ஜிக் வரிகள் எழுதப்படுவதால் அவர் டெத்தாகியிருப்பாரோ எனக்கருத வேண்டாம். எத்தனை வருடங்கள் கழிந்தாலும் ஊரில் கல்த்தூணாய் சிலர் எப்போதும் இருப்பார்களல்லவா? அவர் செத்தேவிட்டார் என்றே ஐயந்திரிபற நினைத்திருப்போம். ஆனாலும் தகதகவென உயிரோடு ஜ்வலிப்பர். அத்தகைய ஜானரினர் தாத்தா. இறக்கவில்லை என்பது மட்டுமில்லை, இன்னும் நடமாடிக் கதைபேசிக்கொண்டும் இருக்கிறார்.

தற்போது நான் ப்ராஜக்ட் டைரக்டர். ASTRAAlien Search & Terrestrial Reconnaissance Agency. வேற்று கிரகங்களில் உயிர்கள் இருக்கின்றனவா என பில்லியன் டாலர்கள் கொட்டித் தேடும் ப்ராஜக்ட்.

மிஷனில் ஏற்படும் சவால்களில் பல தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கும். அப்போதெல்லாம் அங்கு தாத்தா இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார் என யோசிப்பதுண்டு. அதனால் விடை கிடைக்குமோ இல்லையோ, சற்று நேரத்திற்கு சூழ்நிலையை லகுவாக்கும்.

தற்போது உயிர்களைத்தேடும் எங்கள் பயணம் துவங்கி ஏழாண்டுகள் ஆகின்றன. இதுவரை வெற்றிகரமான எந்த கண்டுபிடிப்பும் நிகழவில்லை. தாத்தாவிடம் இதைப் பற்றிக்கேட்டால் என்ன சொல்வார் என யோசித்தபோது, ஆயரக்கணக்குல கண்ணு முன்னால இத்தினி மன்ஷ உயிர் சோறில்லாம செத்துப்போது. அதுங்களுக்கு எதும் பண்ண வக்கில்ல. இதுல அட்த்த க்ரகெத்துல உயிர கண்டுபுட்ச்சு சப்பப்போய்ட்டீங்களா என்றிருப்பார்.

ஒருமுறை இதை நினைத்துச் சிரிப்பதைப் பார்த்துக் கேட்ட வெள்ளைக்காரனிடம் தாத்தாவின் பர்ஸ்பக்டிவ் விளக்கியபோது, அது சரிதான், பட் வி கெட் பெய்ட் டு டூ தட் ஷிட். லெட்ஸ் கெட் ஷிட் டன் என்றான்.

ஒரு நாளில் ப்ரீத்தின் ப்ரீத்தௌட்டைவிட ஃபக்‌ஷிட்டை அதிகம் சுவாசிப்பவனவன்.

அத்தனை பில்லியன்கள் கொட்டியும் எதுவுமே ஆப்புடவில்லை என்பதால் ப்ராஜக்டில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டது. சொல்லப்போனால் இந்த மாட்யூலுக்கு பட்ஜட்டைக் கட் செய்துவிட்டு, வேறு உருப்படிகளைச் செய்யலாம் எனும் யோசனையும் போர்டு மீட்டிங்கில் விவாதிக்கப்பட்டது. அதற்கு முன் கடைசியாக பெண்டிங் ஒரு மிஷனை மட்டும் முடித்துவிடலாம் என முடிவெடுக்கப்பட்டது. வெளியே புறப்படுமுன் பூட்டிய வீட்டில் கடைசியாக ஒருமுறை பூட்டை இழுத்துப் பார்ப்பது போல.

இம்முறை நானும், உடன் இரண்டு அஸ்ட்ரோநட்டுகளும் கெப்லர் கிரகத்துக்குச் சென்று அங்கு உயிர் இருக்குறதா எனத் தேடுகிறோம்.


இதுவரை ஏழு மிஷன்கள். அத்தனையிலும் புதிய ஸ்ட்ராட்டஜி. அதன் தோல்விகள். அதன் ரிப்போர்ட்டுகள், பெயிலியரிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் என அனைத்தையும் மனத்துக்குள் உருவேற்றி வைத்திருந்தேன்.

மிஷனின் தொடர் தோல்வி, இன்வஸ்டர்களின் ப்ரஷர், இப்படி ஏகப்பட்டது சுழற்றியடிக்கையில், விரக்தியில் ஒரு முறை தாத்தாவிடம் போய் பேசிவிட்டு வந்தாலென்ன எனத் தோன்றியது.

இன்னும் இரண்டு மாதங்களில் லாஞ்ச். அதற்கு முன்னொருமுறை ஊருக்குச் சென்றுவரலாமென முடிவெடுத்து இதோ டேக்காஃப் ஆகிவிட்டது ப்லேன்.

முர்கேஸ் தாத்தா தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. இப்போதும் அவரைச் சுற்றி பசங்கள் இருக்கிறார்கள். என்ன தாத்தா ஆள் அப்பிடியே இருக்கீங்க என ஆச்சரியத்தோடு கேட்டதற்கு ஒரு பையன், தாத்தா எம்பாமிங் செஞ்ச பொணம் மாதிரி. எப்பயும் மாற மாட்டார். அப்டே இருப்பார் எனச்சொல்லிச் சிரித்தான். தாத்தா அதைப் பெருமையாகவே எடுத்துக்கொண்டார். அவர் இளமையின் ரகசியம்.

ன்னா பய்யா..? வெள்ளக்கார்ச்சிய புட்ச்சுக்னியா ஊர்ப்பக்கொம் வர்ரதேயில்ல?

அப்டிலாம் இல்ல தாத்தா வேல கொஞ்சம் பிசி.

பரஸ்பர பேச்சுகள். விடைபெறல். மாலை. அவர் வீடு. சந்திப்பு. பேச்சு.

உன்வ்வேல ன்னா?

வேற க்ரகத்துல உயிர் இருக்கானு தேடி கண்டுபுடிக்கறது தாத்தா.

இதுவர்லியும் எத்தினி கண்டுபுட்சுகிறீங்கொ?

ஒன்னியும் இல்லதாத்தா. (ஊருக்கு வந்ததும் ஊர் ஸ்லாங் தன்னாலேயே ஒட்டியது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.) தாத்தா பாரேன், நம்ம ஊருக்கு வந்ததும் நம்ம ஊரு பேச்சு வாய்ல ஒட்டிகிச்சு. எல்லாம் நம்ம ஆர்ணி ஆத்துத் தண்ணி. என்றேன் புளங்காகிதமாக.

ஆமாமா ஊர்த்தண்ணி. சுர்ட்டப்பள்ளில சூத்தக்கழுவி அனுப்பறானுகொ அந்தத்தண்ணிதான். எனச்சொல்லிச் சிரித்தார். ஒன்ன எம்பாமிங்னு சொன்னது தப்பே இல்லய்யா என நினைத்துக்கொண்டேன்.

தாத்தோவ் அது விஷிமாதான் உங்கிட்ட ஐடியா கேக்கலாம்னு வந்தேன்

எங்கிட்ட ன்னா ஐடியா?

கோடிகோடியா கொட்டி வேற க்ரகத்துல உயிர்ங்க இருக்குதானு தேடிப்போறோம். ஒன்னுகூட கெடிக்கல. இந்தவாட்டி லாஸ்ட்டா ஒருதடவ போறோம். அப்பயும் கெடிக்கலனா எல்லாரும் வேற வேலிக்கி போக வேண்டிதான்.

காசு கொட்னா போதுமா? உயிர் அதெப்டி கடிக்கும்?  என்றார்.

தாத்தோ நாங்க பெரிய மிஷின்லாம் வச்சு தேடுறோம். ஒன்யும் கெடிக்கல.

தப்பாத்தேடுறீங்கடா.

தாத்தா ஒரு ஐடியாவோடு வந்துவிட்டார் எனச் சட்டெனப் புரிந்தது.

இப்பொ நம்பொ ஊட்டாண்ட கோயி மேயுதுல்ல? நீ போயி நின்னா அதுங்கொ ன்னாப்பண்ணும்?

வெலகி ஓடும்.

ஆங். அத்தேபோல திடீல்னு வண்டி வண்டியா போலிஸ்காரொங்க நம்ப தெருவுக்குள்ள வந்தா வீட்ல ன்னா பண்ணுவோம்? ன்னாவோ ஏதோன்னுட்டு கதூ ஜன்னல்லாம் மூடிப்போம்ல? அத்தான் எல்லா உயிரும் பண்ணும். நீ திடுதிப்புனு போனா அது தன்ன பாதுகாக்கர்துக்குத்தான பாக்கும். அவ்ளோ ஏன், ஊட்டுக்குள்ள பாம்பு பூந்துச்சுனா அத்த சுளுவா கண்டுபுடிக்க முடீதா நம்புளால? பயகுன ஊட்டுக்குள்ளயே அவ்ளோ கஷ்டப்பட்டுத்தான தேட வேண்டிலிருக்குது. இவுரு உய்ர கண்டுபுடிக்கிறேன்னு மிஷின ஆட்டிகினே போவாராம், அதுங்கொ தோ இங்கருக்கேனு சூத்த காட்டிகினே வருமாம்.

அங்கு சுற்றியிருந்த பசங்களுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. Typical முர்கேஸ் தாத்தா.

செர் தாத்தா, அப்ப ன்னாதான் பண்ணனுன்ற?

உயிர தேடிப்போக்குடாது, நம்புளத்தேடி வரொவெக்கனும்.

எப்டி?

நீ தேடிப்போற உயிர் இன்னா ஒரு ஆறடி இருக்குமா?

அய்யோ தாத்தா ஆறடிலாம் இல்ல, கால் இஞ்ச் இருந்தாக்கூட போதும்.

காலிஞ்ச்சி போதுமா? பசங்க இருக்காங்களேனு பாக்கறேன். இல்லன்னா சொல்லிடுவேன் என்றார்.

பசங்களில் சிலர் புரிந்துகொண்டு தாத்தோவ்வ்வ் என ஓலமிட்டனர்.

டேய் பயா, வீட்ல சக்கர கொட்னா ன்னாவும்?

ன்னாவும்? எறும்பு வரும் தாத்தா.

அத்த செய்யி. என்றார்.

அவர் சொன்னது weirdடாக இருந்தாலும் அவரின் வழமையான logic படி அது சரியெனப்பட்டது.

நம்ப செட்டியார் நாட்டு மர்ந்து கடீல ஒரு சக்கர இருக்கு. நான் சொல்லி வெக்கிறேன். அத்த வாங்க்கின்னு போ.

விண்வெளிக்குச் செல்வோர் அவரவர் நம்பிக்கைப் படி சில வஸ்துக்களை எடுத்துச் செல்ல அனுமதியுண்டு. நான் தையலிலையில் பொட்டணம் மடிக்கப்பட்ட அந்தச் சக்கரையைக் கொண்டு வந்திருந்தேன். கெப்லர் கிரகத்தில் இறங்கி, இன்ன பிற ஆராய்ச்சிகளோடு சேர்ந்து உயிர் தேடும் படலமும் துவங்கியது. மிஷன் ஐந்து நாட்கள். இரண்டாவது நாளில் மனத்தில் ஓர் உந்துதல், தாத்தா கொடுத்துவிட்ட அந்தத் பொன் நிறச்சக்கரையை ஓரிடத்தில் தூவினேன். மண்ணிலிட்டதும் அது உடனே உருகி அதன் தடம் பதிந்தது. மணிக்கொரு முறை அவ்விடத்தில் வந்து வந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அச்சக்கரையைத் தேடி அந்தக்கிரக எறும்புகளோ அல்லது கண்ணுக்குத் தெரியாத மிருகியோ வந்துவிடாதா என்று. எந்த மாற்றமும் முன்னேற்றமும் இல்லை.

ஐந்தாம் நாள் மிஷன் முடிந்து, Ascent vehicle புறப்பட இன்னும் சில மணித்துளிகளே இருந்தது. எல்லோரும் podடுக்குள் ஏறி, புறப்படுவதற்கான ஆயத்தங்கள் மற்றும் கவுண்ட்டௌன் துவங்கியது. ஜன்னல் வழியே சக்கரை தூவிய இடத்தில் ஏதும் மாற்றம் தெரிகிறதாவென உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். கவுண்ட்டௌன் ஒலித்தது.

10..

9..

8..

7..

6..

5..

4..

3..

2..

1..

AV புகை கிளப்பி மேலே எழும்பியது. அப்போது…

Comments