வெளிநாடு

ஓர் உறவினரிடம் பேசுகையில் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் உஅவெசி மோடிலேயே பதிலுரைத்தார். ஏன் ஒரு மாதிரி பேசுகிறீர் என மேல்வினவியதற்கு தன் மகன் வெளிநாட்டில் படும் அவலதுன்பங்களே காரணம் என்றார். 

அச்சச்சோ அச்சோ அச்சச்சோ என்னாச்சு எனக்கேட்டதற்கு, அலுவலகத்தில் அதிக வேலை தருவதாகவும், (சேல்ஸ்) டார்கட்கள்  அச்சீவ் செய்யாத பட்சத்தில் மீட்டிங்கில் கூப்பிட்டுக் கிழிக்கிறார்கள் என்பதாகவும், மகன் அங்கே மிகவும் அல்லலுறுகிறான் எனவும், முடியாவிடில் திரும்ப வந்துவிடச் சொல்லியிருப்பதாகவும் மிகுந்த கவலையோடு தெரிவித்தார்.

அதாவது இவனுக இப்பத்தான் ஆபிஸ்னா எப்பிடி இருக்கும், அதுல வேலைன்னா என்னென்ன செய்யனும்னே தெரிஞ்சிக்க ஆரமிச்சிருக்கானுக. இதுவரைக்கிம் போனது பூராம் லேபர் வேலைகளுக்கு. பெற்றோல் பல்க்குல டீசலடிக்கிறது, சூப்பர் மார்க்கட்ல தரைய தொடைக்கிறது, ப்லம்பர் பெய்ண்ட்டர் ட்ரைவர்னு போனது பூராம் புலூ காலர் வேலைக. மொத தடவையா ஒய்ட் காலர் ஆம்பியன்ச பாக்கறப்ப ஓ இந்த கஸ்டம்லாம் இருக்குமானு பாக்கறானுக. 

நாம பேசின நபரோட பையன் தான் அந்த குடும்பத்துல மொதல் தலைமுறை பட்டதாரி. யார் யாரயோ புடிச்சு எப்புடியோ வெளிநாட்டுல ஒரு ஆபிஸ் வேல கெடச்சுருச்சு. இப்ப அதுல கஸ்டம்னுட்டு அழுதுட்டிருக்கானாம். இவனுக ஒலகத்த பொறுத்தவரை ஆபிஸ்னா டெய்லி குளிச்சு டக்கின் பண்ணிட்டு போனாலே போதும் சம்பளம் குடுத்துருவானுகன்றதுதான் நெனப்பு. அதான் ஒருத்தன் சூத்துக்கிழிய படிச்சு நாய் மாதிரி அலஞ்சு வேலைக்குச் சேந்தாலும் அதெல்லாம் கண்ணுல பாக்காம, ஒனக்கென்னப்பா படிச்சு ஏசி வேலைல இருக்குற, எங்கள மாதிரி ஆளுகளுக்கு பண்ண வேண்டியது ஓங்கடம. இப்பிடி இமோசனல் கில்ட்டுக்குள்ள தள்ளி ஏஸ்ஃபக் பண்ணிட்டு போவானுக. இவங்களுக்கு ஆபிஸ்ல சம்பளம் தரது அங்கருக்க ஏசில உக்கார்றதுக்குதான்னு கவித்துவமான தீர்க்க நம்பிக்கை. 

இப்ப மொதமொதல்ல அவனுக வீட்லருந்தே ஒருத்தன் ரியாலிட்டி என்னானு காட்றப்ப அப்பனும் மவனுமாச் சேந்து மூக்கு சிந்திட்டிருக்கானுக. இதெல்லாம் உள்ளூரப் பாத்து கொஞ்சம் ரைச்சாலும் கடமைன்னு ஒன்னு இருக்கில்லியா, அதனால கொஞ்சம் உரைநடைலாம் பேசி மோட்டிவேட் பண்ணி உட்டேன். 

இப்ப இது கஸ்டம்னு சொல்லி வந்துட்டான்னா அடுத்து வெளிநாட்டுக்கே போவ மாட்டான், முடியவும் முடியாது. கல்யாணம் பண்ணி வெக்கிறப்ப இதுலாம் ஒரு பேச்சா வரும். ஆபிஸ்ல மிஞ்சிப்போனா திட்ட தான் செய்வானுக, எவனும் கழுத்தறுத்து போட மாட்டான். செவுட்டுக்காதுல விழுந்தாப்ல திட்டுகள வாங்கிட்டு அத குண்டியத்தொடச்சு போடச்சொல்லு, அப்பிடியும் முடியலன்னா வேற வேல தேடச்சொல்லு, அங்கயே இருக்கதால லோக்கல்ல வேற வேலையும் கெடைக்கும்னு பேசி உட்டதும் கொஞ்சம் சமாதானம் ஆனாப்ல. 

ஆனா பரவால்ல, சோத்துக்கு இல்ல, வட்டிக்கி காசு குடுக்கனும், இந்த மாதிரியான பிரச்சனைகள பேசிட்டிருந்த குடும்பத்துல இப்ப ஆபிஸ்ல ப்ரெஷரா இருக்குன்ற பிரச்சனைய பேசற அமைப்பே ஒரு அப்கிரடேசனாத்தான் பாக்கறேன். ஒரு வகைல சந்தோசமாவும் இருக்கு. நாம என்ன பிரச்சனைகள டிஸ்கஸ் பண்றோங்கறதே ஒரு வகையில நம்ம வாழ்க்கையோட லெவல காட்ற க்ராஸ் செக்சன் தானே? என்ன நாஞ்சொல்றது?

ரெண்டாவது கொஞ்சம் முன் செல்லடா, முன்னே செல்லடா, தைரியமே துணை கதை. மற்றுமொரு தொலைத்தொடர்பு உறவினர் வீட்டிலிருந்து ஒருவர் வெளிநாட்டுக்குப் படிக்கப் போயிருக்காப்டி. இந்த பேமிலில பெற்றோரில் ஒருவர் ஆல்ரெடி க்ரேஜுவேட்டுங்கறதால புள்ளைய படிக்க வெளிநாட்டுக்கு அனுப்பிருக்காப்ல. நமக்கெதுக்கு படிப்பு, அதுவும் வெளிநாட்டுக்கு அனுப்பற அளவுன்னு ஒருத்தர் மாறாம ஏகப்பட்ட விமர்சனம் எதிர்ப்பு. அந்தக்காசுல கல்யாணம் பண்ணி வச்சிரலாம்னு மொத்தமாக்கூடி ப்ரெய்ன்வாஷ் பண்ணிருக்கானுக. கேஸ் நம்ம காதுக்கும் வந்துச்சு. உறவினருக்கு போனப்போட்டு வேணான்னு சொல்றவன் பூராம் கொஞ்ச நாள்ல செத்துப்போயிருவானுக எதையும் கண்டுக்காத, கண்ண மூடிட்டு அனுப்பு, கெட்டுப்போனும்னு இருந்தா புள்ள உள்ளூர்லியேகூட கெட்டுப்போவும், தைரியமா அனுப்பி வை, படிச்சுட்டு வந்து பேசுனவன் எல்லாருக்கும் வைத்தியம் பாக்கும்னு சொன்னது அவருக்கு பாசிடிவிட்டிய குடுத்துருக்கு போல. ஃபார் சம் அன்க்னோன் ரீசன்ஸ் அவரோட ஒய்ஃபுக்கு நம்மளக்கண்டா ஆவாது. நாம இப்பிடி சொன்னது பெரிய ஆச்சரியமா இருந்துச்சாம். நாம இப்பிடி சொல்லுவோம்னு எதிர்பாக்கல, ரொம்ப சந்தோசப்பட்டாங்க வீட்லனு சொன்னாப்டி. இது நமக்கு புதிசில்லனு அத தள்ளிவிட்டுட்டு அந்தப் புள்ளைட்ட வயோதிக அனுபவஸ்தர்ங்கறதால கொஞ்சம் அட்வைசுகள அள்ளித்தெளிச்சேன். படிக்கறதோட சேந்து கொஞ்சம் சுத்திப்பாத்து ஜாலியா அனுபவிச்சுக்கச் சொன்னேன். ஒரே ஒரு ரிக்வஸ்ட்தான், don't do drugs. ஒனக்கு ரொம்ப ரொம்ப ஈசியா கெடைக்கும், யாரு எவ்ளோ ஃபோர்ஸ் பண்ணாலும் சரி, அத மட்டும் தொடாத. அத தவிர வேற என்ன வேணா பண்ணிக்க. குறிப்பா வெவ்வேற நாட்டுக்காரங்களோட பழகு. அவங்க கல்ச்சர், சாப்பாடு, வழக்கங்கள் என்னனு தெரிஞ்சுக்கோ, எவ்ளோக்கு எவ்ளோ அதிகமா வெளிநாட்டு ஆட்களோட பழகுறியோ அவ்ளோ ஒனக்கு வாழ்க்க மேல போகும். கல்யாணம் காதுகுத்துலாம் எதும் கண்டுக்காத. ஒனக்கே யார எங்க புடிச்சிருக்கோ அது அந்தந்த டைம் வரப்ப அமையும். அடுத்து முக்கியமா சாப்பாடு, இது வரைக்கும் வீட்லயும் மிகக் குறைந்த அளவும்தான் வெளிய சாப்ட்டுருக்க குடும்பம், ஃபார் ஆப்வியஸ் ரீசன்ஸ். 

சப்போஸ் நீ போற எடத்துல ஹலால் கறி கெடைக்கலன்னா என்ன பண்ணுவ எனக்கேட்டதற்கு,

வேற என்ன ஆப்ஷன் இருக்கோ அத சாப்டுவேன் என்றது. 

சப்போஸ் ஹலால் கறிலாம் கெடைக்கலன்னா கெடைக்குற கறிய சாப்புட்டுக்க, அதுலலாம் ஒன்னும் தப்பில்ல. இந்தக்கறிய சாப்ட்ட ஒரே காரணத்துக்காகல்லாம் நரகத்துக்கு போகமாட்ட. அதான் நெறய பேரு உயிர காப்பாத்த போறல்ல அதுல டேலி ஆகிக்கிரும். அதனால சாப்பாட்டுல எந்த ஹெசிடேஷனும் வச்சுக்காத என்றேன். 

மிச்ச குடும்பத்தினருக்கு கொஞ்சம் அதிர்ச்சியாதான் இருந்தது. இளைய மக்களுக்கு ஒரு இனிஷியேட்டர் தேவைப்படுகிறார்கள். சாப்பிட ஆசையிருப்பினும், அதுவரைக்கும் இருந்த அப்-ப்ரிங்கிங் அவங்களுக்கு ஒரு கில்ட்டைத் தந்து கொண்டு உண்ணவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கும். அப்டிலாம் எதுமில்ல, சர்வைவலுக்காக தின்னாப் பாவம், மறுநாள் போச்சுனு யாராச்சும் அந்த பபுல ஒடச்சு விட்டுட்டா அதுக்கப்பறம் அவங்க ரூட் கிலியர் ஆகிடும். இது ஒரு ஹிண்ட்ரன்ஸாக இருக்காது.

அந்தப்புள்ள போற எடம் குளிர்பிரதேசம். அங்க மாட்டுக்கறி சாப்டாம காலத்த ஓட்ட முடியாது. அங்க கெடைக்குறத வச்சு வாழறதுதான் சமயோசிதம். அங்க ஃபைட் பண்ண வேண்டியது குளிர், படிப்பு, ஹோம் சிக்னு ஏகப்பட்டது இருக்கு. இதுல சாப்பாடு ஹலாலா கோஷரானுலாம் தேடிட்டிருக்கது எஸ்ட்டா தலவலி. அம்ம வழக்கப்படி இப்பிடி சொல்லறது தப்புதான். ஆனா, 'நாஞ்செஞ்சதுக்குலாம், ந்தா... இவஞ்சொன்னதுதான் காரணம்'னு கைகாட்ட யார்னா ஒரு பஞ்ச் பேக் வேணும்ல? அதனால வழக்கப்படி நாமளே கில்லட்டின்ல தலைய குடுத்துருவோம்னு குடுத்தாச்சு.

Hope both the first gen., grad NRIs from the family survive and shine. 🤞



கொஞ்சம் இசையாய்வு! 



ஆனா ஒங்க அலும்புக்கு அளவில்லாம போகுதுடா...






Comments