ஒரு காலத்தில் காலை மாலை இரவு என முவ்வேளையும் சுஜாதாவில் துவங்கி சுஜாதாவிலேயே முடிந்து கொண்டிருந்தது. சுப்ஹானல்லா சொன்னதை விட சுஜாதாதான் அதிகம் ஓதப்பட்டது. அப்படி இருக்கையில் அவர் எழுதிய திரைக்கதை எழுதுவது எப்படி எனும் புத்தகத்தையும் வாங்கி அதைப்படித்து, திரைக்கதை எழுதுகிறேன் பேர்வழி என அந்தக் கருமத்தையும் செய்து பார்த்தாயிற்று.
அப்போது நாமிருந்த டெட்லி காம்போ என்னவென்றால் சுஜாதா + சங்கர் சார் வெறியன். இவர்களிடம் மூழ்கி முத்தெடுத்தால் பின்னென்ன டூரிஸ்ட் பேமிலியா வரும்? பேசிக் ஸ்கெலிடன் எழுதிவிட்டுப் பார்த்தால் நமையறியமலேயே (அல்லது அறிந்தே) அந்நியனை கலர்ஜெராக்ஸ் எடுத்து வைத்திருந்தது புரிந்தது.
ஓப்பனிங்கில் கருப்பு ஸ்க்ரீனில் பேர் எழுத்து ஒடிக்கொண்டிருக்கும். ஆனால் ஏதோ மரப்பலகையில் ஆணி அடிக்கும் ஒலி மட்டும் கேட்கும். அந்த ஒலியில் மட்டும் ஒவ்வொரு ஆணிக்கும் வேறுபடும்.
பிறகு ஆடை மாற்றும் கப்போர்டைத் திறக்க, அந்தத் திறப்போடு ஸ்க்ரீனில் வெளிச்சம் வரும்.
ஒரு டிப்டாப்பான ஆசாமி கபோர்டிலிருந்து ஃபார்மல் உடைகளை எடுத்து அணிய, கீழிருந்து யாரோ பைக் ஹார்ன் அடிக்கும் சத்தம் கேட்கும், ஹீரோ தன் அப்பார்ட்மண்ட் ரூம் ஜன்னலிலிருந்து எட்டிப்பார்த்து வரேன் எனச் சைகை காட்டி வீட்டை விட்டுப் புறப்படுமுன் நெத்தியில் நீளமாக சிகப்புக் கோடிட்டுக் கிளம்புவார். (ஆமாம், நம்ம நாயகனும் ஸ்டாஞ்ச் ஐயங்கார்). (சொன்னேனல்லவா, சங்கர்சார்சுஜாதா கன்னியென)
உடை மாற்றியபின், லேப்டாப் பையை எடுத்துக்கொண்டு படிக்கட்டுகள் வழியே ஹீரோ இறங்கிச் செல்ல, அவரை கேமரா ஃபாலோ பண்ணும். அபார்ட்மண்ட்டின் செக்யூரிட்டி ஹீரோவுக்கு சல்யூட் வைக்க, ஹீரோவுக்காகக் காத்திருந்த அலுவலகத் தோழியின் பைக்கிலேறி அலுவலகம் செல்வார் ஹீரோ.
அவர் புறப்பட்டதும் கேமரா அப்படியே ரிவர்சில் வந்து ஹீரோவின் அதி சுத்தமான அபார்ட்மண்டைக் காட்டி பின் ஒரு அறைக்குள் நுழைய அங்கே க்ரூசிஃபை செய்யப்பட்ட நிலையில் ரத்தக்களறியோடு ஒருவன் துடித்துக்கொண்டிருப்பான்.
டைட்டில் ஓடும்போது கேட்ட ஆணி அடிக்கும் சப்தம் அவனை ஹீரோ அடித்ததே. பலகையில் அவனை அடித்து, குளித்து முடித்து சமத்தாக ஆபிஸ் கிளம்பி இருப்பார் ஹீரோ.
அது ஏன் ஐயங்கார் என்றால், பின்னாடி ஒரு சீனில் நான் வெஜ் உண்ணாமல் தவிர்ப்பார். உயிர்களைக் கொன்று உண்பது பாவம் என்றெல்லாம் டயலாக் வரும். மற்ற உயிர்களைக் கொல்லாத ஒரு ஐயங்கார் ஏன் மனிதர்களைக் கொல்ல வேண்டும் அதன் காரணம் என்ன என்பதாக டிப்பிகல் சங்கர் சார் டெம்ப்லேட் படம். (அதாவது சாப்பாட்டுக்காகக் கூட உயிர்களைக்கொல்லாத ஒருவன் ஏன் கொல்ல வேண்டும் எனும் சாக் வேல்யூவாம். பாவாடைல போட்டு கோக்க)
அலுவலகம் அழைத்துச் செல்ல வந்த அந்தத் தோழி யார், ஏன் செக்யூரிட்டி சல்யூட் வைக்க வேண்டும், இப்படி பலவாறு துணைக்கதைகளோடு எழுதப்பட்ட திரைக்கதை.
நேற்று யூடூபை மேஞ்சுகொண்டிருக்கையில் சுஜாதாவின் அதே அந்தப் புத்தகத்தையொட்டி ஒரு சேனல் வீடியோ போட்டிருந்தது. சரி என்ன இருக்கிறதெனப் பார்ப்போமே என ஸ்லைடுமேய்ந்ததில், intravel என ஒரு விடயம் போட்டிருந்தது. அடடே இது என்ன, புதிய விடயமாக இருக்கிறது, ஒரு வேளை திரைக்கதையிலேயே ஒரு புதிய ஸ்ட்ரக்ச்சராக இருக்குமோ என ஆர்வமாகப் பார்த்தால் வீடியோவில் ஒலித்த குரல் இண்டர்வல் என்றே கூறியது. நாம்தான் தவறாக கவனிக்கிறோமோ எனக் கூர்ந்து கவனித்தால் Intervalலைத்தான் அவன் intravel என எழுதி வைத்திருக்கிறான் எனப் புரிந்தது. பத்தாயிரம் படம் வந்திருக்குமா? அதிலும் அதைக் குறித்தும் லச்சம் முறை interval எழுதப்பட்டிருக்குமா? அப்படிப் பார்த்தே அதை intravel என எழுதி வைத்திருக்கிறானென்றால், இந்த வீடியோவிலிருந்து எதாச்சும் கத்துக்கலாம் என அஞ்சு நிமிசத்தை வேஸ்ட்டடித்த நமக்கு பேஸ்ட்டு கிடைக்காமல் போவதுதானே சரியான தன்டணை?
Comments
Post a Comment
Pass a comment here...