"செய்துகொண்டிருப்பதை அப்படியே போட்டுவிட்டு உடனே ஜாவா கற்றுக்கொள்ளுங்கள், அதுதான் எதிர்காலம்" என்பது போல சுஜாதா ஒரு கட்டுரையில் எழுதியிருப்பார்.
தோராயமாக கிபி 2000த்தில் துவங்கி இப்போது வரை java போடு போடென்று சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. அவருக்கிருந்த ஆக்செஸ், ப்ரிவிலெஜைக் கொண்டு எதிர்காலத்தைக் கணித்துத் தன் வாசகர்களுக்கு விஷனரியாக ஒரு ரோட்மேப்பைக் காட்ட முடிந்தது அவரால்.
அப்படிக் கோடிட்டுக் காட்டும், இந்தப் பக்கமா போ, பொழச்சுக்கலாம் எனக்கூறும், நம்பத்தகுந்த ஓர் உற்ற துணை எழுத்துத்துறையில் இன்று யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. (வி.மு ஓரளவுக்கு அவ்விடத்தைப் பூர்த்தி செய்கிறார்)
On the other hand, எழுத்துலகின் உச்சம் எனக்கூறப்படுபவர்களுள் ஒருவர், மாநிலத்திலேயே மிக உயரமான சிலையை, பொதுமறை தந்த வள்ளுவருக்கு நிறுவியதோடல்லாமல், அவ்வையார், பாரதி (யார்+ தாசன்), அறிஞர் அண்ணா, கணியன் பூங்குன்றனார், இராமலிங்கனார், கவிஞர் கண்ணதாசன், கவிஞர் சுரதா, கம்பர், இளங்கோவடிகள், தமிழ் ஒளி, கி.ரா. பெரியார், கலைஞர் என எழுத்துக்கும் சமூகத்தின் சிந்தனைக்கும் பங்களித்தோருக்கு மாநிலம் முழுக்க நன்றி நவிலற் சிலை வடித்திருக்க, எழுத்தாளர்களுக்குச் சிலை இல்லை என்று வன்மப் பொய் பரப்பி ஒப்பு வைப்பதில் பிசியாக இருக்கிறார். இன்னொருவர், புதிய மிஷனில் கள்ளடொக்குப் போட, கண்ட கருமாந்திரங்களை கவிதைகள் என டேகிட்டு ப்லிகுஷ் செய்துகொண்டிருக்கிறார். இவர்களிடம் உள்ளொளித் திறப்பு தர்சனங்கிட்டி விளங்கவா?
நல்வாய்ப்பாக, தேடலுள்ளோர்க்கு ஆங்காங்கே ஒளி கிடைக்கும் வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கிறது.
Getting to the point, சமீபத்தில் அடிக்கடி நியூசில் பார்த்திருப்பீர்கள், கம்பனிகள் கொத்துக் கொத்தாய் லே-ஆஃப் எனும் பணிப் பறிப்புகள் செய்து ஆயிரக்கணக்கானோரை வீட்டுக்கு அனுப்பும் செய்திகளை. அதற்குக் காரணமாய்ச் சொல்வது AIயை.
Layoffகள் ஒன்றும் ஐடி துறைக்குப் புதிதல்ல என்றாலும், இந்த முறை வந்துள்ள இது கொஞ்சம் விசித்திரமானது. 90களில் கணினி பயன்பாடு வந்தபோது வங்கித்துறையில் இருப்போர், அதனை எதிர்த்து வேலை நிறுத்தங்கள் செய்ததெல்லாம் வரலாறு. ஆனால் கணினியின் நுழைவு, வேலை குறைப்பு செய்ததை விட, இன்னும் பல்லாயிரக்கணக்கானோருக்கு புதிய வேலைகளை ஏற்படுத்தியது.
புதிய டெக்னாலஜி வரும்போதெல்லாம் இதுதானே வழக்கம்? அதுவரை இருந்த வேலைவாய்ப்புகள் பறிபோவதுபோல் போக்குக்காட்டிவிட்டு, பின் பல நூறு புதிய வாய்ப்புகளை வழங்கும். அது போலவே தான் ஏஐயிலும் பல புதிய வேலைகள் கிடைக்கும் என ஒரு சாராரும், இல்லையில்லை, புதிய வாய்ப்புகள் தோன்றலாம், ஆனால் அது பன்மடங்காகவெல்லாம் இருக்காது. எனவே ஏகப்பட்ட பலருக்கு வேலை போகும், என ஒரு சாராரும் சாராயைப் பிடித்து சண்டை கட்டிக்கொண்டுள்ளனர்.
தற்போது உள்ள டேட்டாவின்படி, எத்தனை வகையான, என்னென்ன புதிய வேலைகள் கிடைக்கும் என்பது இன்னும் தெளிவில்லை. அதற்கு இன்னும் சில fiscal quarters தேவைப்படும். ஆனால் நிச்சயம் பற்பலருக்குப் பணி பறிபோகும். பறிபோகுதல் ஏற்கனவே துவங்கியும் விட்டது.
மொபைல் போன் வந்த போது, எஸ்டீடி பூத்துகள் காணாமல் போனதுபோல் இருந்தாலும், அவர்களுக்கு மொபைல் ரீசார்ஜ் எனும் சிறு தொழில் வாய்ப்பை அது தந்தே இருந்தது.
போலவே, அதுவரை பேப்பர் ஃபைல்களில் இருந்தவற்றை டிஜிட்டல் கணினி மயமாக்கையில், அதன் நிரலை வடிக்கும், பயன்படுத்தும் நபர்களின் திறனும் வேலைக்குத் தேவைப்பட்டது.
At the same time, மொபைல் ஃபோன் வந்ததும் கால்குலேட்டர், கேமரா, டேப் ரிகார்டர் கருவிகள் obsolete (irrelevant) ஆகிவிட்டனவே கவனித்திருப்பீர்கள் அல்லவா? அதைப்போன்ற ஏற்கனவே உள்ளவற்றை irrelevant ஆக்கும் ஒன்று தான் AI கொண்டு வந்திருக்கும் சவால்.
இது காட்டாற்று வெள்ளம் போலான ஒரு tech-invasion. எது எதெல்லாம் அடித்துக்கொண்டு போகப் போகிறதென்றே இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. ஆனாலும் ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய ஃபீச்சரைக் கொண்டு வந்து புளி கரைத்துக் கொண்டிருக்கிறது.
Service based workforce அதிகமுள்ள இந்தியாவில் இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக்கேட்டால்,
90க்குப்பிறகான இந்திய வளர்ச்சியில் ஐடி துறையின் பங்கு எத்தகையது என அனைவருக்கும் தெரியும். அதற்குக் காரணம், அத்தனை லட்சக்கணக்கான ஐடி பொறியாளர்களுக்கான தேவை இருந்தது, அத்தேவையை, குறிப்பாகத் தென்மாநிலங்கள் பெருமளவு பூர்த்தி செய்தன.
இப்போது அதில் பேரிடி விழ வாய்ப்பிருக்கிறது. அதிலும் ஐடியின் பங்கு பெரும்பாலுமுள்ள மாநிலங்களுக்கு மிகமிகமிக அதிக பாதிப்புகள் உண்டு. இன்னும் நியண்டர்தால்வாசிகளாகவே இருக்கும் மாநிலங்களுக்கு இதனால் பெரிய தாக்கம் எதுவும் இருக்காது.
ஐடியில் லேஆஃப் என்ன புதுசா, அது அவ்வப்போது வந்து போய்க்கொண்டுதானே இருக்கும், இதற்கு முன்னரும் பெரிய ரிசஷன்கள் வந்திருக்கிறது தானே, அதிலிருந்து மீண்டு வரவில்லையா என நீங்கள் நினைக்கலாம்.
இப்போது துவங்கியுள்ள லேஆஃபுகள் இதற்கு முன் ஏற்பட்ட 2008 ரிசசனால் நடந்த லேஆஃபுகள் போன்றது அல்ல.
எடுத்துக்காட்டாக, ஒரு பாக்கெட் ரேடியோவையோ, கையடக்க கால்குலேட்டரையோ, பேஜரையோ, டிஜிட்டல் டைரியையோ இன்று உங்களால் விற்கவே முடியாதல்லவா? (அதை வாங்கும் சந்தை இல்லையல்லவா?) They became irrelevant or obsolete. அத்தகைய நிலைதான் ஐடியிலும் ஏற்படப்போகிறது. இதைக் கூறுவது எதோ "பூமாதேவி பொளக்கப்போறா" அல்லது "சிவகாமி ஜோசியம்" vibes தரலாம். ஆனால் நீங்கள் எத்தனை பகடி செய்தாலும் It is coming.
இந்த டெக்-இன்வேஷன், மற்றும் அதைச் சார்ந்த லேஆஃபுகள், பிசினஸ் ட்ரான்ஸ்ஃபர்மேஷன்கள் சரியா தவறா என்பதல்ல கேள்வி. கேபிடலிஸ்ட் மார்க்கட் எப்போதும் லாபத்தை நோக்கி மட்டுமே ஓடும். இந்தப் புதிய AI driven மார்க்கட்டில் கொள்ளை கொள்ளையாக லாபமிருக்கிறது. அதனால் அவர்கள் இதை நோக்கிச் செல்வதைத் தடுக்கவே முடியாது.
சரி அப்படி அந்தத் தாக்கம் எப்படிப்பட்டதாகத்தான் இருக்கும் எனக் கேட்டால், ஒரு விஷுவல் எடுத்துக்காட்டு...
ஒரு சின்ன கார் கராஜ் சைஸ் ஆபிஸில் ஆரம்பிக்கப்பட்ட மைக்ரோசாப்ட், கூகுல் போன்ற கம்பனிகள் இன்று பல நூறு ஏக்கர் பரப்பளவில் அலுவலகங்கள் அமைத்துள்ளன. அவ்வளவு பெரிய வேலை மற்றும் அதைச் செய்ய லட்சக்கணக்கான ஆட்களின் தேவையிருக்கவே அத்தனைப் பெரிய இடம்.
பல ஏக்கர் பரப்பில் இருக்கும் அலுவலகங்கள், இந்த AIயினால், இதுவரை செய்து வந்த அதே வேலையை, மீண்டும் ஒரு கராஜ் அளவிற்கான இடத்திலேயே செய்யக்கூடிய திறன் ஏற்பட வாய்ப்புள்ளது.
அத்தாப்பெரிய ஐடி அலுவலகங்கள் இத்துனூண்டு கராஜுக்கு மாறினால், அதுவரை அதில் பணியிலிருந்தோர் நிலை என்னவாகும் என்பதை உங்கள் analysisசுக்கே விட்டுவிடுகிறேன்.
Company | Approx. Employees (2025) | Estimated Total Campus Area |
---|---|---|
TCS | ~615,000+ | ~400 acres |
Infosys | ~330,000+ | ~989 acres |
Wipro | ~240,000+ | ~800 acres |
HCLTech | ~225,000+ | ~400 acres |
இந்தக் கம்பனிகள் வெறும் ஒரு ஏக்கருக்கு மாறினால் நிலமை என்னாகும்?
நடக்கவிருக்கும் பணி நீக்கங்கள் கம்பனிகளிடத்தில் காசு இல்லாததாலோ, பொருளாதார நிலையின்மை காரணமாகவோ அல்ல. முதலீட்டாளர்களிடம் பில்லியன் கணக்கில் டாலர்கள் உள்ளன, அந்தப் பல கோடி டாலர்களை அவர்கள் AI driven சாப்ட்வேர்களுக்காக வாரி வாரி இறைத்துக்கொண்டிருக்கின்றனர். அதன் மூலம் கொள்ளை லாபம் அடைய முடியும் எனக் கருதுகின்றனர். கேள்விப்படும் அத்தனை நிறுவனமும் AIயை நோக்கி மட்டுமே சென்று கொண்டிருக்கிறது. அந்த லேபில் ஒட்டாவிட்டால் மார்க்கட்டில் அவுட்டேட்டட் ஆகிவிட்ட தோற்றம் ஏற்பட்டுவிட்டது. எனவே conventional team & featureகளைக் கழட்டி விட்டு முழுக்க AI சலங்கை கட்டி ஆடத்துவங்கியுள்ளனர் இன்வஸ்டர்கள்.
ஒரு நிறுவனத்தின் இஞ்சினியரிங் துறை தலைமை அதிகாரி (ஹெட் ஆஃப் இஞ்சினியரிங்) தனிப்பேச்சில், என் ப்ராடக்ட் + இஞ்சினியரிங் டீமில் தற்போது 42 பேர் இருக்கின்றனர். இவர்கள் செய்யும் இந்த வேலையைச் செய்ய 8 பேரே போதும், 42 பேரெல்லாம் தேவையே இல்லை. இந்த டீமை மேற்கொண்டு எடுத்துச் செல்ல 8 இஸ் இனஃப் என்றார். சொன்னதுபோலவே அடுத்த மாதத்தில் ஆட்குறைப்பும் செய்தார். தற்போது அந்த டீமின் மொத்த மெம்பர்கள் 12.
பொருளாதார ஏற்பாடுகளோ அல்லது வரிச் சீர்திருத்தங்களோ இந்தப் பணி நீக்கங்களைத் தடுக்காது. அரசுகளின் கொள்கை சார்ந்த நடவடிக்கைகள் ஓரளவுக்குப் பயன் தரலாம். ஆனால் அதுகூட எத்தனை நாள் தாங்கும் என்பதைச் சொல்லவியலாது.
மென்பொருள் துறையின் core engineering teamமில் Product Owner, Designer, Front-end Developer, Back-end Developer, Tester ஆகியோர் இருப்பர். இந்த டீம்களுக்குத் துணை புரிய Data, Infra எஞ்சினியர்கள் இருப்பர். கம்பனியை கட்டி மேய்க்க Finance, HR, Customer Support, Sales & Marketing டீம்கள் இருக்கும். இதனூடே, ஒவ்வொரு துறைக்கும் Leadகளும், Managerகளும் கம்பனியின் அளவு, சத்தைப் பொருத்து இருக்கும்.
AIயின் வீச்சு, இதில் 70 சதவிதத்தினரை வீட்டுக்கு அனுப்பிவிடும். விடத்தொடங்கிவிட்டது.
சரி, இனி யார்தான் பிழைக்க முடியும் என்றால், ஒரு படத்தில் விவேக் சொல்வாரே,
"காஸ்மிக் எனர்ஜி கப்புல்டு வித் அட்டாமிக் எனர்ஜி இன் த எவல்யூசன் ஆஃப் மேன் கைண்ட் வித் த ப்ரோக்ராம் ஆஃப் ஜாவா", அது போல, SMEக்கள் எனப்படும் சப்ஜக்ட் மேட்டர் எக்ஸ்பர்டைசோடு சேர்த்து, துணைக்கு AI driven solutions தரும் நபர்களுக்குத் தான் இனி மவுசு AI powered SMEs.
FOMOவின் காரணமாகவோ peer pressureகளின் காரணமாகவோ, குளிக்கிறார்களோ இல்லையோ வெள்ளையும் சொள்ளையுமாய் பட்டை போட்டு AI driven, Native AI எனப் பற்பல லேபில்களோடு யாவாரம் செய்ய கடை விரித்து விட்டனர் பிசினஸ் டைகூன்கள்.
பேஜர் போல், எஸ்டீடி பூத் போல, தற்போது ஐடியில் இருக்கும் சில (actually பல) வேலைகள் obsoleteடும் ஆகும். அத்தகையோர், புதிய ஸ்கில்களைக் கற்றுக் கொண்டு, மாற்று வேலைகளுக்குச் செல்வதைத் தவிர வேறு வழியே இல்லை.
நம் மக்களுக்குச் சொல்லிக் கொள்வதெல்லாம்,
- உங்கள் சுற்றத்தையும், பிள்ளை பொடுசுகளையும் அயல்நாட்டு மொழி ஒன்றையேனும் கற்றுக் கொள்ளச் செய்யுங்கள்.
- ஆங்கிலம் என்பது default ஆக மாறிவிட்டது. அதனால் அதைக் கற்பதை ஒரு தனித் திறன் என்று கருதாதீர்கள். எப்படி எண்களை அறிவது essentialலோ அது போலத்தான் ஆங்கில அறிவும். இனி அது இன்றி அணுவும் இல்லை.
- ஆங்கிலத்தைத் தாண்டி, உலகரங்கில் வேலைவாய்ப்புகள் தரும் ஸ்பானிஷ், ஃப்ரென்ச், ஜெர்மன், டட்ச், ஜப்பானீஸ், அரபி, ரஷ்யன், சைனீஸ் இப்படி இதில் ஏதாவதொன்றைக் கற்றுக் கொள்ளுங்கள்.
- இவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழி தெரியும் என்றால் உங்களை வேலைவாய்ப்புகள் கொத்திக்கொண்டு செல்லும்.
- இன்றைய UG என்பது அந்தக்கால SSLC போல ஆகிவிட்டது. Entry லெவல் வேலையிலேயே போட்டிகள் அதிகமாகி விட்டன. அதனால் உங்களுக்கு மிகச் சிறிய அளவிலாவது எஸ்ட்டா ப்ரௌனி பாய்ண்ட் கிடைக்க PG அவசியமாகிறது.
- உங்கள் துறை சார்ந்த internationally accredited சர்ட்டிபிகேசன்களை முடியுங்கள். அதுவும் உங்கள் ப்ரொஃபைலுக்குப் பெரிதும் உதவும்.
நிஜக்கதை 1:
நண்பர் ஒருவர் தமிழ்நாட்டில் இஞ்சினியரிங் படித்து, ஜெர்மனியில் மெஷின் லெர்னிங்கில் மாஸ்டர்ஸ் முடித்து, தற்போது அங்கேயே AI-ML ரோபாடிக்ஸ் கம்பனியில் பொறியாளராகப் பணி புரிந்து வருகிறார். அவரிடம் சமீபத்தில் பேசிக்கொண்டிருக்கையில் தனது கம்பனியில் உள்ளோர் பற்றிக் குறிப்பிட்டார்.
இள வயதுள்ளோரும், சற்று முதிய வயதுள்ளோரும் கலந்திருக்கும் ஜெர்மன் startup அது.
"ப்ரோ! என் டீம்ல நான் மட்டும்தான் ப்ரோ மாஸ்டர்ஸ்" என்றார்.
சரி மீதி இருப்போர் UG, டிப்லமோ, டெக்னிகல் காலேஜ் போன்ற டிகிரி உடையவர்கள் என நினைத்தேன்.
ஒரு pause விட்டு, "மீதி எல்லோருமே PhDக்கள்" என்றார். Shell shocked.
தற்போது ஜாப் மார்க்கட்டின் கள நிலவரங்களைப் பார்த்து, இன்னும் ஒரு தசாப்தத்தில், வேலைக்கு அப்லை செய்யவே PhD தேவைப்படும் காலம் வருமென நினைத்தேன். ஆனால் அந்நிலை ஏற்கனவே வந்துவிட்டது என்பது நாம் எவ்வளவு பின் தங்கியுள்ளோம் எனச்சொல்லியது.
நிஜக்கதை 2:
ஆடிட்டிங்கில் Big4 எனப்படும் பெரும் ஃபினான்ஸ் கம்பனியில் பத்து வருடங்களுக்கு மேல் மேனேஜராகப் பணி அனுபவம் இருக்கும் நண்பர் ஒருவர், ஐரோப்பிய கம்பனிகளில் வேலை தேடுகையில், அவரிடம் மாஸ்டர்ஸ் இல்லாத காரணத்தால், ஜூனியர் லெவல் போஸ்டிங்கே தர முடியும் எனக் கூறியுள்ளது ஒரு கம்பனி.
ஆக, UGக்கள் இனி ஸ்கூல் லெவல் எனக்கொள்க. முடிந்தவரை கரஸிலாவது, தங்கள் பணித்துறை சார்ந்த மாஸ்டர்ஸ் சேர்ந்து விடுங்கள். PG is the new UG.
AI செய்யவிருக்கும் மாற்றங்களை (or கபளீகரங்களை) அறிய, கட்டாயம் இந்தக் காணொளியைக் காண்க.
AIயின் காட்ஃபாதர் என அழைக்கப்படும் Geoffrey Hinton-ன் பேட்டி இது.
இறுதியாக, இத்தனை மாங்கு மாங்கு என எழுதுகிறாயே...
உனக்கு ஏன் இந்த அக்கறை என்பீர்கள்... ஆம், நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாக பாதிக்கப்பட்டேன்.
AI எனும் மதிமயக்கிப் பூச்சியால் கடிக்கப்பட்டு லேஆஃப் செய்யப்பட்டேன். விடியல் ஒன்று வருமென்று உழைத்துக்கொண்டிருக்கிறேன்.
Comments
Post a Comment
Pass a comment here...