ஏய்

ஏயையோடு நமதக்கப்போர் மிடிந்த பாடில்லை. 

சமயத்தில் சரியான பதில் சொல்லும் ஜிபிமுத்துவிடம் பதிலுக்குப் பதில் பேசி குழப்பியடித்து அதைத் தப்பாக பதிலளிக்கும் வகையில் திருகுவேலை செய்யும் நண்பர்களிருக்கிறார்கள். போலவே, உனது இலவச லிமிட்டு முடிந்து விட்டது. இனிமே ஆடி போயி ஆவணிக்கி வா, அதுவரைக்கிம் எந்தக் கேள்விக்கும் பதிலில்லை, ஓசிக்கி இவ்வளவு போதும் எனச்சொல்லும் ஜிபிடியிடம் அடுத்த ஐந்து நிமிடம் கழித்து வந்து, இதோ ஆவணி வந்துவிட்டது, நானும் வந்துவிட்டேன் என பொய்க்கோழி வேஷம் போட்டு அதன் மிச்ச சொச்ச சர்வீசை சுளுவாக வாங்கிக் கொள்கின்றனர். 

அவர்களைப் பார்த்து, சரி நாமும் டகால்டி வேலை காட்டலாம் என அதனிடம் சற்று பேசினால் நம்மைப் போக விட்டு அடித்தாலும் பரவாயில்லை, எதிரில் நிற்கிறபோதே பொறமண்டையில் அடிக்கிறது. 

பிச்சை புகினும் கற்கை நன்றே எனக்கூறியிருக்கிறனரே, அதனால் எஜுகேசனல் பர்ப்பசுக்காக ஒரு காப்பிரைட்டட் போட்டோவில் தண்ணீர்மதிப்பெண்ணை நீக்கித்தா எனக்கேட்டால், எத்தன பேர பாத்துட்டிருக்கேன் என உமிழ்ந்துவிட்டது. நாசமாத்தான்ஜிபிடி நீ போவாய்.



-
காமிக்ஸ் ஏயை:

அவனவன் திரீ டி படம் எடுப்பது முதல், வாய்ஸ் டப்பிங், ரிவஞ்ச் பார்ன் வரை பாய்ந்துகொண்டிருக்கிறான்கள் ஏயையை வைத்துக்கொண்டு. நாம் எளிய வகையில் பாரம்பரிய டேல்ஸ்களை புதுவித சாரத்தோடு வழங்குவோமென்றெண்ணி, தி ஏக்ஸ் அண்ட் தி வுட் கட்டர் கதையைக் காமிக்சாக்க ப்ராம்ப்ட்டைக் கொடுத்தால் ஏயை செய்து கொடுத்த ஏக்சைக் கவனியுங்கள் நண்பர்களே. இது பார்த்தால் மரவெட்டி யூஸ் பண்ணுவது போல் தெரியவில்லை. எதோ ஒரு பரக்காவெட்டியினது போலுண்டு. இதை வைத்து என்று நான் கதைகளைக் காமிக்சாக்க, காசு சேத்து உலகச்சுற்றுலா செல்ல?



-=-

புல்ஸ் அய்!

-

மலையாள மீடியாத்தானுக வச்ச கேமரா வாங்காம எதிர்ல வர்ற எல்லா லேடி செலிப்ரிட்டிகளையும் பேச வச்சிட்டே இருக்கானுக. நேனோ நொடிப்பொழுதுல காத்துலடிச்சோ இல்ல தெரிஞ்சு தெரியாம விலகியோ தொப்புள் தெரிஞ்சுட்டாப்போதும், அதப் புடிச்சு தம்ப்நெய்லா வச்சு ரீல்ஸ் ஸ்டோரினு க்லிக் பெய்ட் தேத்திர்றானுக. மியூச்சுவல் வரும்படியினால இந்தத் தொழிலும் அமோகமா போயிட்டிருக்கு (காலஞ்சென்ற) நடிகையர்ட்ட(யும்)
---


எத்தனை முறை பார்த்தாலும் சிரிப்பு வரும் மீம் 😂😂😂😂😂


-

நம் ப்ராம்ப்தங்களுக்கு அவுட்புட்டுகள்தான் சரியில்லையே தவிர கேள்விகளைக் கண்டு மெய் சிலிர்த்துத்தான் போயிருக்கிறது ஏய்!



Comments