ஒரு லஞ்ச் டேபிலில் ஆசிய மற்றும் தென்னமரிக்க நாட்டிளம் பெண்களோடு பேசிக்கொண்டிருக்க நேர்ந்தது. அவர்கள் பிற்கால நைண்டீஸ் கிட்சுகள். வயது மூப்பெய்தியதன் காரணமாக நம்மிடம் ஒபீனியன் போல் நடத்திக்கொண்டிருந்தனர். பலவாறு பேச்சு சென்று, சோல்-மேட்டுகள் குறித்து திரும்பியது. ஒருவர் சோல் மேட்டென்பதை எப்படி வரையறுப்பீர்கள் எனக் கேட்டனர். சோல் மேட் குறித்தெல்லாம் நமக்குத் தெரியாது, ஆனால் வாழ்க்கைக்கும் ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறோம் என்றால் அவரிடம் என்னாளும் தங்குதடையின்றி பேச முடிய வேண்டும். அதில் பேச்சின்பம் கிடைக்க வேண்டும். அழகு, காமம் எல்லாம் ஒரு கட்டத்தில் நின்றுவிடும். பேச டாப்பிக் இருந்து கொண்டே இருந்தால் தான் வண்டி ஓடும், இல்லாவிடில் ஓடம் சாய்ந்து விடும் என்றேன். சரிதான் என மண்டையை ஆட்டினாள் தென்னமரிக்கை. போலவே ரிலேசன்சிப்பில் சின்னச் சின்ன விசயம் தான் முக்கியம். பெரிய விடயங்களைத் தீர்க்கவோ கடக்கவோ முடியும். ஆனால் சிறு விடயங்கள்தான் குமைந்து குமைந்து ஒரு கட்டத்தில் பெரிதாக வெடிக்கும். ஆகவே அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றேன். இதுதான் நிதர்சனம், மற்றபடி சோல் மேட்டெல்லாம் இருக்கிறதா எனத் தெரியவில்லை என்றேன். அதற்கு அந்த ஆசியை, soul-mate does not exist, only sugar daddies do என்றாள். சாப்பிட்டுக்கொண்டிருந்த சாண்ட்விச் அல்மோஸ்ட் தொண்டையைக் கவ்வ, என்னது என்றேன், No i'm kidding என்றாள். ஆசுவாச மூச்சு விடுவதற்கு முன் or may be I'm not என்றாள். உலகம் போயிங்கில் போய்க்கொண்டிருக்க நாம் (அதாவது நான்) மாட்டு வண்டி சக்கரத்துக்கு இன்னும் ஆயில் போடுகிறோம் எனத் தோன்றியது.
--அந்த வீடியோல வரவங்க பாத்துருந்தாக்கூட ஒரு வியூசுன்னு காட்டிருக்கும். இதெல்லாம் கொடூரம். அனேகமா கொரொனாவ ப்ரொடக்டிவாக்கின குரூப் போல.
Fact of LiFE
Comments
Post a Comment
Pass a comment here...