எல்லாத்தையும் படு ஓப்பனாகப் பேசிவிட்டதாலோ என்னவோ வாயெல்லாம் பல்லாக பதிலளித்துக் கொண்டிருந்தார் மேனர். ஓஸ்ட்டையும் சும்மா சொல்லக்கூடாது. அர்த்தபுஷ்டியாக ஒரு மாதிரி நல்லாவே திறன் காட்டினார். கேரள நாட்டின் பிக்பாஸில் வந்தவராம் (அவரின் பெயர் போட்டு நேவலெல்லாம் தேடியிருக்கிறார்கள் பாவிகள் சர்ச்சிஞ்சின்களில்). இந்தப் பேட்டியின் ஒரு பதிலில் தனது படங்களுக்குப் பெயர்களை தனது ஆசான்களின் படப் பாடல்களிலிருந்து எடுத்திருப்பதைச் சொன்னதும் அந்த ப்ரொக்கோலி கண்கள் விரிய அப்படியா என்று கேட்டுக்கொண்டிருந்தார் பியர்லே மானே.
இதைப்போல தனது படப்பாடல்களிலிருந்தே தனது பிற்காலப் படங்களுக்குப் பெயர் அமையப்பெற்றவர் நடிகர் கார்த்திக். அதுவும் அதே டைரக்டர் என்பதால் இப்படியான ஓர் அமைப்பு போலிருக்கிறது.
அந்தப்பாடல்...
எந்தெந்த படப்பெயர்கள் எனக் கண்டுபிடிக்க முடிகிறதா?
இதே பாடலுக்கு வீடியோ வெர்ஷனும் உள்ளது, படத்தயாரிப்பாளர்களான சத்யஜோதியின் யூடுபு சேனலில் அப்லோட் செய்திருக்கிறார்கள். ஆனால் அதன் டெம்ப்போ அதிகமாக இருக்கிறது. இது என்ன லாஜிக் புரியவில்லை. ஆகவே பாடலில் கிரியேட்டிவ் உரிமையாளரான ராஜாசாரிடமிருந்தே...
-
கருத்து:
நாம் தேடிப்போவதை, துளி துல்லியமாக ஏற்கனவே ஒருத்தன் தேடி வைத்திருப்பது தான் எத்தனை ஆசுவாசம்.
-
இவங்களோட லைஃப், நெட்வொர்க்கப் பத்தி தெரிஞ்சுக்க ஆச. எப்பிடி இவங்கல்லாம் ஒண்ணு கூடுறாங்க, லுக் அலைக் கலைத்தொழிலுக்கு வராங்கனு பாக்கணும். ஏன்னா ஒருத்தர் ஒரு செலிபிரிட்டி மாதிரி இருக்காங்கன்றதுக்காகவே இருக்கற ரெகுலர் வேலையெல்லாம் விட்டுட்டு இப்பிடி ஆடல்பாடல் தொழில தேர்ந்தெடுக்க மாட்டம்ல? இதுல வரும்படியும் அவ்ளவா இருக்காது. சுத்துவட்டாரத்தோட ஏச்சுபேச்சு வேற வாங்கனும். இந்த நபர்களோட பேட்டிகள பாத்ததுல எல்லாருக்கும் பொதுவா இருந்த ஒரு விசயம், எல்லாரிடத்துலயும் சின்ன கிறுக்குத்தனம் ஒட்டியிருக்கு. பெரும்பாலானோர் ப்ரென்சுக ஏத்தி விட்டு வந்துருக்காங்க. இதுலருக்க இன்னொரு சவால், சிலர் சில நடிகரோட எதோ ஒரு படத்துல இருக்க தோற்றத்துலதான் இருப்பாப்ல. வேற கெட்டப் போட்டா சுத்தமா மேட்சிங்கே ஆவ மாட்டிக்கிது. அவங்கல்லாம் அதே கெட்டப்ப கடைசி வரைக்கிம் போட்டாகனும். மக்கள் அந்தப் படங்கள மறந்துட்டா முடிஞ்ச்சு. (ஆனா அந்தப் படப் பாட்டப்போட்டு ரீகாலிங் பண்றாங்கதான்.) போலவே இந்த லுக் அலைக்ல எப்பவும் ஆண் நடிகர்கள்தான் இருக்காங்க. லேடிசே இல்ல. இதுல பாத்த ஒரே லேடிசுன்னா அது ஜெயலலிதா தான். அதுவும் பச்ச கவுன் போட்டு இருக்க போஸ்.
தூள் விக்ரம்
(டங்கா மாரி) தனுஷ்
(ரவுடிபேபி) தனுஷ்
அந்தாளக்கூட ஓரளவு விஜய சேதுபதினு ஒத்துக்கலாம். இந்தாளு ரஜினி மாதிரி இல்ல, SKP காலேஜ் ஓனர் SKP கருணா மாதிரி இருக்காப்டி.
Comments
Post a Comment
Pass a comment here...