மீள்வாச்

சமீபத்தில் பழ பலைய படங்கள் மீள்வாச்சிப்பு செய்யப்பட்டன. ஒருஹாலத்தில் ஆகாவோகோவென கொண்டாடப்பட்டவை காலத்தினால் எதுவும் கலகப்பட்டிருக்கிறதா என்பதையறிய. 

குயீன் (பிரிட்டிஸ் ஆங்கிலேயத்தில் க்வீன்)

படத்தை முதல் முறை பார்த்தபோதே பிடித்துப்போன படம். அதன் பின் ஒன்றிரண்டு முறை பார்த்ததாக ஞாபகம். எதுவுமே துறுத்தாமல் கனகச்சிதமாகப் பொருந்தி வந்த படம். 

படம் ரிலீசானபோது, படத்தின் காண்டண்ட்டில் (குறிப்பாக வசனங்களில்) கங்கனாவின் பங்கெடுப்பும் உண்டு என அறிந்து உள்ளபடியே மகிழ்ந்தேன். அடடா இத்தனை மெச்சூரிட்டியாக, அதுவும் காமடியை ஏண்டில் செய்யும் பெண் படைப்பாளி, கொஞ்சமதிகம் போனால் பெரும்பிழையாகத் தெரியும் இன்னொசன்ஸ் ஆக்டிங்கை இத்தனை எக்சலண்ட்டாக கையாளும் ரதியா என வியந்தேன். சற்று நாளைக்கு ரசிகராகவும் இருந்தேன். பசு ஒன்று பீக்கடையில்தான் விழுவேனென்று விழுந்ததும் இந்த அவிஆரியையா ஆலாபனை செய்தோமென கையைச்சானிடைசரூற்றிக் கழுகி விட்டேன்.

முதன்முறை பார்த்தபோது இதில் ஆம்ஸ்டர்டாமெல்லாம் வந்ததைக் கவனிக்கவே இல்லை. வெறும் பாரிஸ் மட்டுந்தான் நினைவிலுள்ளது. பிற்காலத்தில் அந்த நாட்டிற்குச் செல்வோமென்றெல்லாம் நினைத்ததுகூட இல்லை.

தற்போது பார்த்தபோது ஒரு இவனுக வேற ஊர் ஸ்டேசன பேரிசுனு சொல்லி டகால்டி காட்டுறானுகடோவ்வ் அத நான் கண்டுபுடிச்சிட்டேன்டோவ்வ் முமண்ட் ஆனது.

இது பாரிசில் ஒரு ஸ்டேசனில் நிகழ்வதாய்க் காட்டப்படும். ஆனால் இது நெதர்லாந்தின் ஒரு ஸ்டேசன் Den Bosch என ஆங்கிலத்திலும் 's-Hertogenbosch என டச்சிலும் குறிப்பிடப்படும் ஊரின் ஸ்டேசன். பக்கத்தில் தெரிவது நெதர்லாந்தில் லோக்கல் ட்ரெய்ன். குலோசப் ஷாட்டு வச்சா யாரு கண்டுபுடிக்கப்போறானு நெனைச்சிருப்பாம்போல டைரக்டர். நா புடிப்பேண்டா...







....

லோன் உல்ஃப் எ Thani Oruvan

ஸ்டைலிஷ் வில்லன் என்றதும் எத்தனை பேருக்கு எத்தனை படங்கள் நினைவு வருமோ தெரியவில்லை. சிலருக்கு கனா கண்டேன் நினைவு வரலாம். ஆனால் தனி ஒருவன் தனீ லீகில் இடம்பெற்ற ஒரு படம். இத்தனை பிரில்லியண்ட் வில்லனா, அத்தனை ஸ்டைலா, அடடே டுவிஸ்டா என்றெல்லாம் கொண்டாடப்பட்டது. நானிம் தேட்டரிலேயே சென்று பார்த்து சில சில்லறைகளைத் தவற விட்டேன். 

நேற்று அதை மீண்டும் பார்த்த போது இந்தக் கருமத்தையா தின்னோம் என பேஸ்த்தடித்து விட்டது. வேண்டுமானால் இப்போது மீண்டும் போட்டுப்பாருங்கள். முற்பாதி அத்தனை கிரிஞ்சாகவும் இம்மெச்சூர் ஓவர்டோசாகவும் தெரிகிறது. ஒருவேளை கொரொனா மிருகம் வந்து மூளைக்குள்ளிருக்கும் நமது பட எடைக்கலமியை ஓரேடியாக உயர்த்திவிட்டு விட்டதா தெரியவில்லை. 

அதுவும் அந்தகாலத்தில் என்னா லௌசீன்ஸ்யா என விந்தோதியதெல்லாம் இப்போது பார்த்தால் எரிச்சல் கொப்பளிக்கிறது. அதுவும் லிட்டில் லேடி சூப்பர்ஸ்டார் நயந்தாராவின் லேட்டஸ்ட் ஆக்டிவிட்டீசுக்கப்பறம் அந்த நடிப்பையும் அவரின் திறன் காட்டும் திறனையும் பார்த்தால் பகபகவென இருக்கிறது. ஜெயம் ரவி மோகன் பேசும் டயலாகுகள் பூமி படத்தை ரிப்பீட்டில் பார்த்தாற்போலொரு ஃபீலிங். (பூமி படத்தை தேட்டரில் பார்த்தவன் நான் என்ற பெருமை எமக்குண்டு.) 

இப்போது பார்த்தால் எங்கேஜிங்காகவும் இல்லை, திரில்லாகவும் இல்லை. அப்படி இல்லாவிட்டாலும் பரவாயில்லை, சின்னப்புள்ளைத்தனமாகத் தோன்றுவதுதான் ஆட்சரியமாக இருக்கிறது. என்னடா ஏழு வருசத்துக்கு முன்ன மொத்த பாக்சாபீசும் கொண்டாடின படமா இது என வினோத வியப்பாக இருக்கிறது. அடிவயிற்றில் எப்படி இப்படி ஒரு மாற்றம் எனும் விந்தை விளங்கவே இல்லை. 

இந்தப்படம் ரீரிலீஸானால் சொல்ல வருவது விளங்கும்.

தனியொருவன் டூ எப்ப தருவீங்க தனியொருவன் டூ எப்ப விடுவீங்க என மோகன் ராஜாவைச் சென்றவிடமெல்லாம் பிக்கிப்பிடுங்கும் கூட்டம் இருக்கிறது. ஜெனூனாக ஒரு அட்வைஸ் கொடுப்பதென்றால் ராஜா ஒரு வேளை எழுதியிருந்தால் அப்ரட்டாக கட் பண்ணி விட்டு வேறு புறம் பார்ப்பதே ஃபுல்லுக்குத்தாங்கும்.



-----


அந்நியனை ரீவாட்ச்சும்போது என்னடா பழகிய தெருக்களாகத் தெரிகிறதே என்று பார்த்தால் நெதர்லாந்து... படம் வெளிவந்த காலத்தில் துலிப் தோட்டத்தில் சதா ஆடுவது பெரிஅ பேசுபொருளானது. நமது கவனமெல்லாம் சதாவினிடையிடமே தங்கி தண்ணீர்ப்பந்தலாகினபடியால் மற்ற ஜியாக்ரபிக்களில் கவனம் செல்லவில்லை. 



என்ன சொல்லி பர்மிசன் வாங்கி தெருவெங்கும் நாஸ்தி செய்தார்களோ தெரியவில்லை. 




நாட்டின் பவர் செண்டர் எதுவென்று கோடிட்டுக்காட்டியிருக்கும் விசனரி சுஜாதாசாரை எத்தனை பாராட்டுவது?




Comments