இந்தப்படத்த தேட்டர்ல பாத்தேன்னு ஐதிங் பண்றேன். அதுவரைக்கிம் இந்தப் பாட்ட ஆங்கொரு தடவையும் ஈங்கொரு முறையுமே கேட்டிருந்ததால், முதல் முறை தேட்டரில் பார்க்கவும் கேட்கவும் அலாதியாக இருந்தது. அப்போது ஒரு தற்காலிக ஜிப்ரான் ரசிகராக இருந்ததும் இந்தப்பாட்டை அன்னார் டச்சப் செய்ததுபோல் தோன்றவும் மிகுந்த ரசிக்குட்படுத்தப்பட்டது. அதிலும் காலை கியர் போடுவதுபோல் ஒரு ஸ்டெப் போட்டிருப்பார் மக்கள் நாயகன் சசி. அந்த தேட்டரையே எழுதி வைக்கலாம் போல இருக்கும். உண்மைலியே நல்ல ஸ்டெப். அவ்வப்போது நினைப்பதுண்டு. எதற்கு சம்மந்த சம்மந்தமே இல்லாமல் இந்தப்படத்தில் இப்படி ஒரு பாடல், பாவனையை வைக்க வேண்டுமென்று. பிற்பாடு யோசித்ததில், ஒருவேளை இது சௌராஷ்ற்ரா பாய்ஸைப் பகடி பண்ண வைத்ததுவோ என்று. உங்களில் எத்தனை பேருக்கு சௌராஷ் கலைப் பங்களிப்பைக் குறித்து ஆர்வமிருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. ஆனால் நமக்கு அதன்மேல் வருடங்களாகவே தனிப்பட்ட விருப்பமுண்டு. போர் என்பது அடிக்கையில் அவர்களின் கலைப்பங்களிப்புகளை யூடூபில் கண்டுகளிப்பது நம் அவ்வப்போதைய ஆபி.
அவர்களின் ப்ரைவேட் ஆல்பம் (அ) இண்டீ ஆல்பத்தில் நம் ஃபேவரிட் இதுதான்:
செகண்ட் மோஸ்ட் ஃபேவரிட். பீட்ஸ் உங்களை சீட்டில் உக்கார விடாது. கொப்போரப்பா பீட்ஸ் எகைய்ன். முக்கிய ஆக்டரின் வயது மற்றும் பாடி லேங்வேஜைப் பார்த்தால் இது எதோ ஒரு சமூக அறிவுரைப் பாடலாக இருக்க வாய்ப்புண்டு. குரூப் டேன்ஸ்! *நெருப்பு* *நெருப்பு* *நெருப்பு*
இதுவும் குறிப்பிடத்தகுந்த பாடல்.
இந்த லிரிக்சுக்கே எந்த நாட்டு ஜனாதிபதியையாவது அடித்துப்பிடித்து ஒரு ஜனா அவார்டு வழங்கிடல் வேண்டும். மொழி புரியாதோர் சப்டிட்டிலில் பார்க்க.
சசி மதுரைவாசியாதலால் அவருக்கு இது போல இன்னும் பலவற்றைப் பார்த்திருக்கும் வாய்ப்பதிகம். ஒருவேளை இத்தான் சமயம் என்று போகிற போக்கில் சௌ சகோக்களை ஒரு குட்டு குட்டிவிட்டாரா எனும் ஏங்கிலிலும் யோசிக்க வேண்டி இருக்கிறது.
Comments
Post a Comment
Pass a comment here...