சில படங்கள் அது வெளியான காலகட்டத்தினால் தப்பித்திருக்கும். காலம் தாழ்த்தி வெளியானால் பொளந்துவிடப்பட்டிருக்கும். பொதுவாக ஆண்டவருக்கு இது ரிவர்சில் நடக்கும். அதாவது காலத்தால் முன்னக்கூட்டியே ரிலீசாகி ஓடாமல் போக, பின்னாளில் வரும் சந்ததிகள் அய்யகோ ஆககோ இதையா பெட்டி அலுவலகத்தில் பெயிலியராக்கினார்கள் எனக் கண்ணைக் கசக்குவர்.
சமீபத்தில் வேவி என்றழைக்கப்படும் வேட்டையாடு விளையாடு மீள்வாட்ச்சிங் செய்தபோது, இது இப்போது ரிலீசானால் லாஃபிங்காகாமல் பார்க்க முடியாது போலும் எனத்தோன்றியது. இல்லையே ரிலீசாகி நல்ல கலக்சன் எடுத்ததே எனக்கூறலாம். அது நாஸ்டால்ஜிக் வாயர்கள் மற்றும் சோமீயில் என்னத்தைப் போட்டாலும் எதுக்கெடுத்தாலும் ஹைப் கிரியேட் செய்து வைப் செய்யும் வீண்விந்தர்களின் வேலை.
படம் முதல் ஆஃப் பட்டாசு. அதில் குழப்பமே இல்லை. நல்ல டென்சன் பில்டப். ஆனால் செகண்டாஃப் கிஞ்சித்தும் இண்டலிஜன்ஸ் இல்லாத, சொல்லப்போனால் போலிஸ்கள் எத்தனை கூவைகளாக இருக்கிறார்கள் எனக் காட்டியிருக்கிறது. போதாதற்கு நிறைய கேன்சல் ஒர்த்தி டயலாகு மற்றும் சீன்கள் வேறு. எப்படி ரீரிலீசில் வோக்குகள் கண்ணில் சிக்காமல் போனதெனத் தெரியவில்லை. ஒருவேளை செஒன்னது மேனன் மற்றும் கமல் என்பதால் இந்த கண்டுக்காமல் விடப்படும் சொகுசு போலும்.
இரண்டாம் பாதி ரைக்கதை ஆகத்திராபை. எந்தளவுக்கென்றால் கடைசியில் ஒரு வில்லனைத் தற்செயலாக ஆக்சிடெண்டில் பிடிப்பார் ராகவன்.இல்லாவிடில் இன்னேரம் ஆராதனாவைப் புதைத்த இடத்தில் சென்னையில் மிகப்பெரிய ஷாப்பிங் மாலே வந்திருக்கும். எந்த புத்திசாலித்தனமுமில்லாத, சலிப்படையச் செய்யும் இதை எப்படி ஓட்டினர் ரெண்டாயிரத்தஞ்சின் ரசிகாஸ் என்பது புவனா ஒரு கேள்விக்குறி.
போலவே கால ஓட்டத்தால் ரீவாட்ச்சிங்கில் நகைப்பு வரச் செய்யும் சீன் இது. ராகவன் சென்றது என்கௌண்டர் போடத்தான். ஆனால் வில்லனில் குரல் கேட்டதும் குபீர். அது விடிவி கணேசனின் குரல்.
On a lighter note, படத்தில் அத்தனைப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இந்த சீனை இனி யாருமே unseen செய்ய முடியாது. Thanks to கொ.ந.பா.
Comments
Post a Comment
Pass a comment here...