ஓவியம்

வாழ்க்கைல எதுக்காவது வருத்தப்பட்டிருக்கீங்களானு கேட்டா ரெண்டு விசயத்துக்கு சொல்லுவேன். ஒண்ணு கிரிக்கெட் தெரியாதது. சின்ன வயசுல எல்லாரும் கிரிக்கெட் பாக்கறப்ப, விளையாட்டுன்றது வெளையாட வேண்டியது, டிவில பாக்கறதுக்கில்லனு வியாக்கியானம் பேசுவேன். சர்ரா பாக்கல சரி, வெளையாடுவியானு கேட்டா எனக்கு புக்ஸ்லதாங்க ஆர்வம், கேம்சுல இல்லனு வாய்லவடா பேசிட்டு சுத்துனேன். எல்லாவனும் நகத்தக் கடிச்சுட்டு டிவி முன்னால உக்காந்துருக்கப்ப நாம மயிரே போச்சுனு அந்த விளையாட்டு ப்ரெஷர் எதுவும் இல்லாம சுதந்திரமா இருக்கோம்னு மெதப்பு வேற. அடுத்த நாள் ஸ்கூல் காலேஜுகள்ல முந்தின நாள் மேட்ச்சப்பத்தி எல்லாவனும் ஆர்வமா பேசுறப்ப, பஞ்ச்சாஃப் லூசர்ஸுன்னு நெனச்சுட்டு அந்த கான்வோ நடக்கற டேபில தவிர்த்துடுறது. 

அப்பலாம் தெரியாது இந்த மெதப்புக்கு பின்னால இந்தா பிடி சூத்தடின்னு காலம் குடுக்கப்போவுதுன்னு. 

இந்தியாவப் பொருத்தவரை, எந்த மனுசனோடயும் பேசனும்னா அதுக்கு அஞ்சு டாப்பிக் முக்கியம். 

1, 2  - கிரிக்கெட், 3 - சினிமா, 4 - கிரிக்கெட், 5 - அரசியல்.

இதுல கிரிக்கெட் பத்தி தெரிஞ்சா இந்தியாவுல எந்த மூலைக்கும் போயி பொழச்சுக்கலாம்.  

சிறு வயது முதல் நம்மைச் சுத்தி இருந்தவங்க பெரும் கிரிக்கெட் ஆர்வலர்களா இருந்ததால அவங்கட்ட பேச எதுவுமே இருந்ததில்ல நமக்கு. பள்ளி கல்லூரி மட்டுமில்லாம வேலைக்கு சேந்தப்பறமும் இது ஒரு பெரிய தலவலியாப்போச்சு. அவனுக என்ன பேசுறானுகன்னே நமக்கு புரியாது. இதுல பெப்பெருஞ்சோகம் என்னன்னா, இருவத்தி நாலு வருசத்துக்கு முன்ன நடந்த ஒரு அஞ்சு நாள் டெஸ்ட் மேட்சுல மூணாவது நாள் போட்ட ஒரு பால ஒருத்தன் எப்புடி சுவிங்கடிச்சான்னு பேசுவானுக. அவனுக ஞாபக சக்தி அபாரமா இருக்கும். இப்பிடி மேட்ச் குறித்த டேட்டா பேசச் சேத்துச் சேத்து மெமரி பவர நல்லா மெருகேத்தி வச்சிருந்தானுக. இது மொத வயித்தெரிச்ச. நாமளும் மேட்ச்சுகள பொச்ச மூடிட்டு கவனிச்சிருந்தா ஞாவக சக்தி கூடிருக்குமேன்னு. இப்ப அடிக்கடி சின்னச்சின்ன விசயங்கூட மறந்து போறப்பலாம் இந்த கிரிக்கெட்டறிவுப் பயிற்சி இருந்துருந்தாலாச்சும் கொஞ்சமேனிக்கி பெட்டராகிருக்குமேனு தோணும். 

வேலைக்கி சேந்தப்ப இத அதிகமா உணர ஆரமிச்சேன். கிரிக்கெட் பாக்க போறது, வேல செஞ்சுட்டே பாக்கறது, அன்னன்னைக்கும் அடுத்த நாளும் டிஸ்கஸ் பண்றதுன்னு கிரிக்கெட் பேசறவனுக தனி குரூப்பா இருப்பானுக. இல்ல இல்ல, கிரிக்கெட் பேசறவனுக குரூப்பா இருப்பானுக, நா தனியான ஒத்தக்கொரங்கா சுத்திட்டிருப்பேன். ஆப் ட் ரைவ், கவர் ட்ரைவ், லெக்கிங் ஸ்டம்ப்பிங்னு என்னன்னமொ சொல்லுவானுக. நா சின்னத்தம்பி ஆறுமணியான கவுண்டர் மோடுல இருப்பேன். 

இந்த கிரிக்கெட்டறிவின்மையால வயித்தெரிச்சலுச்சமடைஞ்சதுன்னா அது கிரிக்கெட் சார்ந்து பெட்டிங் வந்தப்பதான். மேட்ச் எப்புடிப்போகும்னு துல்லியமா கணிச்சு பல ஆயரங்கள நண்பர்களின் நண்பர்கள் சிலர் சம்பாதிச்சப்பதான் அடங்கொவ்வானு இருந்துச்சு. உண்மையிலயே பெருவருத்தம் அன்னைக்கி. 

நம்ம தியரி ஒன்னுதான். எந்த ஒரு திறமையும், பழக்கமும் இது மூனுல எதாச்சும் ஒன்னாச்சும் ஒருத்தருக்கு தரணும்.

1. காசு

2. புகழ்

3. காண்டாக்ட்ஸ் (நெட்வொர்க்)

மூனுத்துல எதுவுமே தரலன்னா அத அப்பிடியே அப்ருட்டா கட் பண்ணி உடுறதுதான் நல்லது. 


அது கெடக்குது. இப்பிடி ஒரு சொல்ல மறந்த கதை இருக்கு கிரிக்கெட்டுக்குப் பின்னால. 


அடுத்தது ஓவியம். இந்த ஓவியர்களப் பாத்து ஆச்சரிய ஆச்சரியமா இருக்கும். எப்பிடிடா இத பண்ண முடியுதுன்னு. ஓருண்மைய சொல்லணும்னா, ஓவியர்கள் பண்றது பூராம் ஏமாத்து வேலைதான். All they create is pure illusion. They fuck with your vision. கண்கட்டி வித்தைதான். ஆனா அந்தக் கண் கட்டிய எப்பிடி பண்ண முடியும்னு அவங்க மூள சொல்லி அத துல்லியமா கை கேட்டு, கை மட்டுமில்லாம அந்த ப்ரஷ்ஷும், பெய்ண்ட்டும் கேட்டு கொண்டு வராங்கன்னு உள்ளபடியே பேராச்சரியந்தான். சும்மா ரெண்டொரு கோடுதான் போடுறாங்க, அது ஒரு உருவமா நமக்குத் தெரியுது. இது எப்பேர்ப்பட்ட மைண்ட் கேம்?

அது ஒரு பக்கம்னா கலர் கலர் பெய்ண்ட்டால பண்ற ஓவியங்கள். அது அடுத்த லெவல் மிராக்கில். இதுல உச்சம் எதுன்னா தண்ணியையும் transparent colorsசையும் வரையுறது தான். ஒன்னுமே இல்லாதத எப்பிடிய்யா வரைய முடியுதுன்னு இருக்கும். இப்ப காலம் கடந்துருச்சு, டைம்ல பின்னால போக முடிஞ்சா பெய்ண்டிங் தான் கத்துக்கிடுவேன். + இசையும். A heartfelt salute to the artists of magic, who freeze fleeting moments in time, and whisper emotions through the strokes of their brush! 

















Comments