நீயொரு காலை சங்கீதம்...

முதன் முதலில் நாயகன் பார்த்தது அறியாத வயதில் தெரியாத பருவத்தில். ஆனால் அப்போதும் தட் போலிஸ்காரன் ஜலபுலஜங்ஸ் செய்த காட்சி அடடே இதுல என்னமோ இருக்குதுடோய் என அக்சப்ட் செய்த குக்கி போல் மனது பதிந்து வைத்திருக்கிறது. அது கிடக்கட்டும். 

நாம் இன்னும் இளைய பருவத்திலிருந்த போது வீட்டில் ஏகப்பட்ட குஞ்சுகுளுவான்கள். அவை அனைத்தும் காலையில் எழுந்ததும் தாத்தாவிடமிருந்து தலைக்கு ரெண்டு அல்லது நான்கு மேரி பிஸ்கட் வாங்கிக்கொண்டு, கொடுக்கப்பட்ட டீயில் முக்கித்தின்ன ஆரம்பிக்கும். 

அது என்னவோ, ஒரு மழைக்கால (அல்லது மழைக்கால மேகம் கருகருவெனத் திரண்ட காலம்) காலையில் குடித்த இஞ்சிட்டீயின் மணம் இன்னும் நாசித்துவாரங்களில் நிற்கிறது. அந்த இனிப்பு, அடிநாக்கில். அப்போதெல்லாம் காலையில் மற்றும் மாலையில் வாசற்தெளிப்பர் வீட்டிலிருந்த கசினக்காக்கள். 

எங்கள் ரெகுலர் ரொட்டீனானது காலை எழும்பி வாசற்தெளிப்பதைப் பார்த்து, மேரிபிஸ்கட்டைட் டீயில் முக்கி, சனி ஞாயிறு வந்தால் டீவியில் மகாபாரதம் திப்புசுல்தான் பார்த்து... இப்படியே செல்லும். 

கட் பண்ணினால் அறியாப்பருவத்தில் நாயகன் பார்க்க, அதில் அந்த அநியாயமாக சுடப்பட்ட பெண்ணானவள் இவனோடு வந்ததால்தால் இறந்து போனாள், இதுவே அவள் வசித்த வீட்டிலேயே இருந்திருந்தால் பள்ளிக்குப் போய்க்கொண்டு வாசல் தெளித்து டீபிஸ்கட் சாப்பிட்டுக்கொண்டு உயிரோடும் சந்தோஷமாகவும் இருந்திருக்கலாமென அடிக்கடி உறுத்தும். அவள் இருந்தது ப்ராத்தல் என்பதெல்லாம் புரியாத பருவமது. சொல்லப்போனால் ஒன்னாவதோ எதுவோ படித்த காலக்கட்டம். 




அவள் புத்தகம் வைத்திருந்தது பார்த்து அவளும் நம்மளைப்போல ஒரு ஸ்கூல் பிள்ளை, இவனோடு வந்ததால் இறந்துவிட்டாள் என்பது மட்டுமே மனத்தில் பதிந்திருந்தது. பிற்பாடு பிற்பாடுதான் அவ்விடம் ஒரு அடடே இடம் என்பதும், அங்கே இருந்திருந்தால் அதிகாலை வாசலெல்லாம்  தெளித்திருக்க முடியாது, முதலில் அதிகாலைகளையே பார்த்திருக்க முடியாது என்பதும் புரிந்தது. 



இருப்பினும் அது மழலையாக இருக்கையில் தோன்றிய இன்னொசண்ட் ப்ரிஸ்டின் பொக்கிஷ நினைவல்லவா, அது மட்டும் அப்படியே தங்கிப்போய்விட்டது.



*-*

கருத்து:


உலகத்தில் இதுவரை படைக்கப்பட்ட அத்தனைக் கார்களிலும் அழகே அழகான கார்கள் ரெண்டே ரெண்டு தான். ஒன்று அம்பாஸடர், மற்றொன்று டாட்டா சியர்ரா. Change my mind! 


அனுஷ்கா அம்பாஸ்!





சிலுக்கு சியர்ரா!








🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥





Comments